ஏப்ரல் 30, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 60

आदिक्षन्मम गुरुराडादिक्षान्ताक्षरात्मिकां विद्याम्
स्वादिष्ठचापदण्डां नेदिष्ठामेव कामपीठगताम् 60

ஆதிக்ஷத் மம குருராடாதி க்ஷாந்தாக்ஷராத்மிகாம் வித்யாம் |
ஸ்வாதிஷ்ட சாபதண்டாம் நேதிஷ்டாமேவ காமபீடகதாம் ||60||

என்னுடைய குருநாதர் அகாரம் முதல் க்ஷகாரம் வரையிலாம் அட்சர வடிவிலான வித்யையின் உருவாக இருப்பவளை, காமகோடி பீடத்திலிருந்து மிக்க இனிதான கரும்பு வில்லை கொண்ட தேவியை மிக அருகிலிருப்பவளாகவே எனக்குக் காட்டி போதனை செய்தார். மூகர் தன்னுடைய குருவின் அருளாலே தனக்கு காமாட்சியின் காட்சி மிக அருகிலேயே கிடைத்ததாகச் சொல்லுகிறார்.

அகர முதலாம் அனைத்தட் சரத்தின் அறிவுருவாய்,
இகத்திலே காமபீடம் ஏறியே கையில் இனிக்கின்ற
தகவாய் கரும்பு தனுசினைக் கொள்தேவி தாயவளென்
புகலாய் அருகெனப் புண்ணிய ஆசானும் போதித்தாரே

ஏப்ரல் 29, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 59

परिणततीं चतुर्धा पदवीं सुधियां समेत्य सौषुम्नीम्
पञ्चाशदर्णकल्पितमदशिल्पां तां नमामि कामाक्षि 59

பரிணதவதீம் சதுர்தா பதவீம் ஸுதியாம் ஸமேத்ய ஸௌஷும்னீம் |
பஞ்சாசதர்ண கல்பித தசில்பாம் தாம் நமாமி காமாக்ஷி ||59||


ஞானிகளுடைய சுழுமுனை (ஸூஷும்நை) வழியிலே நான்குவித வேறுபட்ட (பரா, பச்யந்தீ, மத்யமா, வைகரீ) வாக்கின் உருவங்களை அடைந்தவளும், ஐம்பது எழுத்துக்களாலான சொற்களில் அமைந்தவளுமான, காமாட்சியை நான் வணங்குகிறேன்.

ஞானியர் காட்டிடும் நன்றாம் சுழுமுனை நாடிவழி
தானிருப் பாள்தேவி தன்நால் விதமாய தாமுருவில்
நானிலத் தேவாக்கில்; நல்லைம் பதுகீறும் நல்குவதாம்
தேனினி சொற்களில் தேசாம்கா மாட்சியை சேவிப்பனே

சுழுமுனை - ஸூஷும்னா; கீறு - எழுத்து; தேசு - ஒளி

ஏப்ரல் 28, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 58

पञ्चदशवर्णरूपं कञ्चन काञ्चीविहारधौरेयम्
पञ्चशरीयं शम्भोर्वञ्चनवैदग्ध्यमूलमवलम्बे 58

பஞ்சதச வர்ணரூபம் கஞ்சன காஞ்சீ விஹார தௌரேயம் |
பஞ்ச சரீயம் சம்போ: வஞ்சன வைதக்த்ய மூலம் அவலம்பே ||58||சிவபெருமானை மோகம் கொள்ள வைக்கும் மன்மதனின் திறனுக்கு மூலமாக, காரணமாக இருக்கும் தேவதையை (காமரூபிணியான உருவம்), காஞ்சீபுரியில் விளையாடி லீலைகள் புரிவதில் முன்னிற்பதை, மூவைந்து எழுத்துக்களாலான மூன்று பிரிவுகளாம் வாக்பவ கூடம் (5 எழுத்துக்கள்), மத்ய/காமராஜ கூடம் (6 எழுத்துக்கள்), சக்தி கூடம் (4 எழுத்துக்கள்) என்றிவற்றாலகிய மந்திர வடிவுமான ஒன்றைச் சரணமடைகின்றேன். (ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூபமுக பங்கஜா; கண்டாத: கடி பர்யந்த மத்யகூட ஸ்வரூபிணி; சக்திகூட ஏகதாபன்ன கட்யதோபாக தாரிணீ)

மூவைந் தெழுத்தில் முளைத்தெழு மந்திர மூவுருவை
ஆவலாய் காஞ்சியில் ஆடவே முன்னின்ற அற்புதத்தை
தேவனாம் சம்புவையே தெற்றும் மதனின் திறமைக்கு
மூவா முதலென மூண்டவள் முன்சரண் முற்றிலுமே

ஏப்ரல் 27, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 57

मूकोपि जटिलदुर्गतिशोकोपि स्मरति यः क्षणं भवतीम्
एको भवति जन्तुर्लोकोत्तरकीर्तिरेव कामाक्षि 57

மூகோςபி ஜடில துர்கதி சோகோςபி ஸ்மரதி : க்ஷணம் பவதீம் |
ஏகோ பவதி ஜந்து: லோகோத்தர கீர்திரேவ காமாக்ஷி ||57||


காமாக்ஷியே!  ஊமையாயிருந்தாலும், மிகவும் சிக்கலான துன்பங்களால் வருந்துபவனாக இருந்தாலும், உன்னை ஒருகணம் நினந்தாலே ஒருவன் உலகத்தில் மிகவும் பெருமையும் புகழும் பெற்றவனாக ஆகிறான். சிறிய ஸ்லோகமாகையால் தமிழாக்கதின் இறுதிவரி சரணாகதியாக இட்டு நிரப்பப்பட்டது.

காமாட்சி தாயே கணநேரம் உன்னைக் கருதினாலும்
ஊமையே யாயினும் உள்ளத்தில் மிக்க உளைவுதரும்
தீமையாம் துன்பினால் தேய்ந்தா லுமுலகில் தேசுறவே
ஏமாப்பு செய்யும் இறைவியேநீ யன்றி இலையொன்றே

ஏப்ரல் 26, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 56

आहितविलासभङ्गीमाब्रह्मस्तम्बशिल्पकल्पनया
आश्रितकाञ्चीमतुलामाद्यां विस्फूर्तिमाद्रिये विद्याम् 56

ஆஹித விலாஸ பங்கீம்- ஆப்ரஹ்ம-ஸ்தம்ப-சில்ப-கல்பனயா |
ஆச்ரித காஞ்சீம் அதுலாம்-ஆத்யாம் விஸ்பூர்திம் ஆத்ரியே வித்யாம் ||56||


பிரமன் முதலாய் புழு வரை எல்லா உயிர்களையும் சிற்பமென சிருட்டிக்கும் தன்னுடைய லீலைகளில் பலவித தோற்றங்களை காட்டுபவளும், காஞ்சிபுரியை விரும்பியவளும், பிரமத்தின் முதல் உணர்ச்சியான சிருட்டிப்பதாக தாமே இருப்பதும், ஒப்பற்றதுமாய ஞான உருவம் கொண்டவளை சார்ந்திருக்க விரும்புகிறேன்.

பிரமன் முதலாய் பிறக்கும் புழுக்களீறாய் சிற்பம்போல்
உருவாய் பலசெய்யும் உன்னதக் கைவண் ணமுடையாளும்
பிரமம தன்முதற் பேருணர் வாய பெரும்பொருளும்
புரையற்றாள், காஞ்சீ புரிவாழும் பேரறிவைப் புக்கேனே

புரையற்றாள்- இவளை ஒத்தவொன்றில்லாதவள்; புக்கேனே - சரணமென புகுந்தேனே

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...