நவம்பர் 30, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 72

दधानैः संसर्गं प्रकृतिमलिनैः षट्पदकुलैः
द्विजाधीशश्लाघाविधिषु विदधद्भिर्मुकुलताम्
रजोमिश्रैः पद्मैर्नियतमपि कामाक्षि पदयोः
विरोधस्ते युक्तो विषमशरवैरिप्रियतमे ७२॥

³தானை: ஸம்ஸர்க³ம் ப்ரக்ருʼதி மலினை: ஷட்பத³குலை:
த்³விஜா தீஶஶ்லாகாவிதிஷு வித³த்³பிர் முகுலதாம்
ரஜோ மி்ரை: பத்³மைர் நியதமபி காமாக்ஷி! பத³யோ:
விரோதஸ் தே யுக்தோ விஷம ர வைரி ப்ரியதமே 72

ஐங்கணைக்கிழவன் மாரனின் வைரியின் மனத்துக்கினியாளே! காமாக்ஷீ! இயற்கையிலேயே அழுக்குள்ள வண்டுகளின் சேர்க்கை உடையவையும், அந்தணர் தலைவராம் சந்திரனைப் போற்றுவதில் மொட்டுக்களைப் போல விரும்பாதவையும், தூசி படிந்தவையுமான தாமரை மலர்களோடு உன்பாதங்களுக்கு விரோதம் இருப்பது மெத்த சரியானதே!

மலர்க்கணை ஐந்துடை மாரனின் வைரி மனத்தினிதாய்
இலங்குகா மாட்சீ! இயல்பில் கசடாம் இரதமெலாம்
உலவிட, மொட்டுபோல் உம்பர் தலைமை ஒறுத்துதூசு
நிலவும் மரையோடு நின்பாத மாற்றம், நியாயமுற்றே!


கசடு-அழுக்கு; இரதம்-வண்டு; மொட்டு-மலர் மொக்கு; உம்பர்-அந்தணர்; ஒறுத்து-வெறுத்து; மரை-தாமரை; மாற்றம்-பகை;

நவம்பர் 29, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 71

उपादिक्षद्दाक्ष्यं तव चरणनामा गुरुरसौ
मरालानां शङ्के मसृणगतिलालित्यसरणौ
अतस्ते निस्तन्द्रं नियतममुना सख्यपदवीं
प्रपन्नं पाथोजं प्रति दधति कामाक्षि कुतुकम् ७१॥

உபாதி³க்ஷத்³ தா³க்ஷ்யம் தவ சரண நாமா கு³ருரஸௌ
மராலாநாம் ங்கே மஸ்ருʼண க³தி லாலித்ய ஸரணௌ
அதஸ்தே நிஸ்தந்த்³ரம் நியதமமுனா ஸக்²யபத³வீம்
ப்ரபன்னம் பாதோ²ஜம் ப்ரதி த³தி காமாக்ஷி குதுகம் 71

காமாக்ஷியே! உன்னுடைய பாதமென்னும் பெயருள்ள இந்த குரு, அன்னங்களுக்கு அழகு மென்னடை நடையின் பாங்கைத் திறமையைப் புகட்டியுள்ளார் என்று எண்ணுகிறேன். ஆதலினால் அந்த அன்னங்கள் இப்பாதங்களோடு ஒப்பிடத்தக்க தாமரை மலர்களோடு நட்பு நிலையாகச் செய்துகொள்ள ஆர்வம்கொண்டுள்ளன.

உன்பாத மாம்குரு, ஓதிமங் கள்செய்யும் ஓவியமாம்
மென்னடைப் பாங்கினை மெச்சப் பயிற்றிடும் மெய்யறிந்தேன்;
அன்னநின் பாதம் அனையதாம் அம்புய ஆலமுடன்
நன்னட்பை அன்னங்கள் நாடும்கா மாட்சி நயந்திடுமே!


ஓதிமம்-அன்னங்கள்; ஓவியம்-அழகு; பாங்கு-வழி; அன்ன-அத்தகைய; அனையதாம்-ஒப்பாய; அம்புய-தாமரை; ஆலமுடன்- மலரோடு;  நயமுடன்-விரும்பி;

நவம்பர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 70

निरस्ता शोणिम्ना चरणकिरणानां तव शिवे
समिन्धाना सन्ध्यारुचिरचलराजन्यतनये
असामर्थ्यादेनं परिभवितुमेतत्समरुचां
सरोजानां जाने मुकुलयति शोभां प्रतिदिनम् ७०॥

நிரஸ்தா ோணிம்னா சரணகிரணாநாம் தவ ிவே
ஸமிந்தானா ஸந்த்யா ருசிரசல ராஜன்ய தனயே
அஸாமர்த்²யாதே³னம் பரிபவிதுமேதத் ஸமருசாம்
ஸரோஜாநாம் ஜானே முகுலயதி ோபாம் ப்ரதிதி³னம் 70

மங்களமானவளே! மலையரசன் மகளே! உன் பாதங்களின் செவ்வொளியால் தோல்வியுற்று, அவமானமடைந்து வெகுண்டு எழுந்த மாலை நேரச் செம்மை, அவ்வாறு செய்ய திறனில்லாமல், அதற்கு ஒப்பான தாமரை மலர்களின் ஒளியை கூம்பிக்கொள்ளச் செய்கிறதென்று எண்ணுகிறேன்.

வரையரை யன்பெண்ணே! மங்கள மே!நின் மலரடியீர்
நிரைசிவப் பில்தோல்வி நேர்ந்து வெகுண்டெழு நேமமதன்
இராகம் திறமது இன்றி இணையாம் எரிமலரின்
விராசம் ஒடுக்க விழைவதாய் எண்ணும் விளையுளன்றே!


வரையரையன் -இமவான்; நிரை-முழுதும் விரவிய;  நேமம்-மாலைநேரம்; இராக-செம்மை வண்ணம்; இணையாம்- ஒப்பான; எரிமலர்- செந்தாமரை; விராசம்-ஒளி; ஒடுங்க-கூம்ப; விளையுள்-மனம்;

நவம்பர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 69

करीन्द्राय द्रुह्यत्यलसगतिलीलासु विमलैः
पयोजैर्मात्सर्यं प्रकटयति कामं कलयते
पदाम्भोजद्वन्द्वं तव तदपि कामाक्षि हृदयं
मुनीनां शान्तानां कथमनिशमस्मै स्पृहयते ६९॥

கரீந்த்³ராய த்³ருஹ்யத்யலஸ க³தி லீலாஸு விமலை:
பயோஜைர் மாத்ஸர்யம் ப்ரகடயதி காமம் கலயதே
பதா³ம்போஜ த்³வந்த்³வம் தவ தத³பி காமாக்ஷி ஹ்ருʼ³யம்
முனீநாம் ாந்தாநாம் கத²மனிமஸ்மை ஸ்ப்ருʼஹயதே 69

காமாக்ஷி! உன்னுடைய தாமரைப் பதங்களிரண்டும், மென்னடை லீலையில் சிறந்த யானையையும் வஞ்சிக்கிறது.மாசற்ற தாமரையிடத்தே பொறாமை கொள்ளுகிறது. ஆசையைத் தருகின்றன. ஆயின் வஞ்சிப்பதும், பொறாமையும், ஆசையும் இல்லாத அமைதியான முனிவர்களின் இதயம் இவற்றில் ஈடுபாடு கொள்கிறதே!

விஞ்சியே மென்னடை வித்தையில் மேலாம் வியன்கரியை
வஞ்சிக்கும்; ஆசற்ற வாரிசத் தின்மேல் மறலியுறும்
நெஞ்சில் தருமாசை நின்மரைத் தாளீரில் நின்றமைதி
கொஞ்சுத வத்தோர்க் குளமொன்றி, காமாட்சீ கூடிடுதே!


மறலி-பொறாமை; வியன்-சிறப்பு; வஞ்சிக்கும்-துரோகம் செய்யும்; ஆசற்ற-மாசற்ற, குற்றமில்லாத; வாரிசம்-தாமரை; மரை-தாமரை

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...