நவம்பர் 30, 2015

குறளின் குரல் - 1320

30th Nov, 2015

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் 

யாரினும் யாரினும் என்று.

                           (குறள் 1314: புலவி நுணுக்கம் அதிகாரம்)

யாரினும் காதலம் - மற்ற யாரையும்விட காதல் உடையவர்களாக நாமிருக்கிறோம்.
என்றேனா - என்று சொன்னேனா?
ஊடினாள் 
- அவள் அதற்கு ஊடிவிட்டாள்
யாரினும் யாரினும் என்று - என்னத்தவிர யாரது என்று மீண்டும் மீண்டும் கேட்டு.

மிகவும் இயல்பாக, மற்ற யாவரையும் விட நாம் மிகுந்த காதலை உடையவர்களாக இருக்கிறோம் என்று சொன்னேன் , அதற்கும் அவள் ஊடி,  யாரைவிட, யாரைவிட என்று மீண்டும் மீண்டும் கேட்டு என்னைக் குடைந்துவிட்டாள், என்று காதலன் தன்னுடைய இயல்பான பேச்சில், தம்முடையக் காதலைப் பாராட்டிப் பேசியதுகூட ஊடலுக்கு ஏதுவாகிவிட்டதே என்று அங்கலாய்க்கிறான்.

Transliteration:

yArinum kAdalam enREnA UDinAL
yArinum yArinum enRu

yArinum kAdalam – better than others we have more love
enREnA – I said so, in pride to my lover
UDinAL – Immediately she started the love quarrel, asking
yArinum yArinum enRu – who is it ? who is it?

I just told her casually that love between us was more than others; and even that became an issue, because she began the love-quarrel immediately asking, “who else”, “who else”? – So laments the man about his lovers’ love-quarrel.

“Love between us is more than others”, I said to my beloved, casually;
 and she began love-quarrel asking, compared to who, incessantly!”

இன்றெனது குறள்:

பிறரிலும் காதலுடைத் தோமென்றேன் ஊடல்
பிறந்தது யாரெனக் கேட்டு

piRarilum kAdaluDait tOmenREn UDal
piRandadu yArenak kETTu

நவம்பர் 29, 2015

குறளின் குரல் - 1319

29th Nov, 2015கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் 

காட்டிய சூடினீர் என்று.

                           (குறள் 1313: புலவி நுணுக்கம் அதிகாரம்)


கோட்டுப் பூச் சூடினும் - மரக்கிளையில் பூத்திருக்கும் பூவையெடுத்து மாலையாக்கி அணிந்தாலும்
காயும் - என் காதலி என்னைக் காய்வாள்
ஒருத்தியைக் 
- வேறொரு பெண்ணுக்குக்
காட்டிய சூடினீர் என்று - காட்டவே நீங்கள் அதைச் சூடினீர் என்று.

இக்குறள் தலைவன் கூற்றாக அமைவது என்பது பிற உரையாசிரியர்கள் கருத்து. தலைவன் மரத்தின் கிளைகளிலிருந்து பூவை எடுத்து  மாலையாக்கிச் சூடிக்கொண்டால், அதை தனக்காகச் செய்துகொண்ட ஒப்பனையாகக் கொள்ளாது, வேறொருத்திக்காகச் செய்துகொண்டது என்று குற்றம் சொல்லி அவனைக் கோபிப்பாளாம், அவனோடு ஊடுவாளாம் காதற்தலைவி.

ஆண்கள் பூமாலை அணிவது வழக்கமேயெனினும், தாமே பூ எடுத்து மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுவர் என்பது மிகையான கற்பனையே. அதையே அவன் தலைவிக்குச் சூட்டினாலும்,  அவள் இவ்வாறு செய்வதெல்லாம் இவனை விழையும் பிறபெண்டிரைக் கவர்வதற்காக, அவர்களுக்கு காட்டவே செய்ததாக காதற்தலைவி கருத இடமுண்டு.

Transliteration:

kOTTup pUch chUDinum kAyum oruttiyaik
kATTiya chUDinIr enRu

kOTTup pUch chUDinum – Even if I wear a garland of flowers from the branches of a tree
kAyum – my maiden would get angry
oruttiyaik – for another woman
kATTiya chUDinIr enRu – as if to show (to another woman), I am wearing that.!

Most of the commentary for this verse, is from the perspective of a man. When the lover of the maiden, plucks flowers from the branches of a tree, makes a garland and adorns himself, the maiden would not think of that as done to please her; she would be angry as if he did it to please other woman.

Though, it is normal for men to wear garlands, it is highly improbable that they would pluck flowers on their own, make garland to adorn themselves and borders on excessive imagination;  If he adorns the same to his lover, it is possible for her to think that he is doing that to show off before other women.

“Even if I adorn myself from branch flowers, my woman
  would be angry as if I am trying to impress other women”

இன்றெனது குறள்:


ஒப்பனைப்பூ சூடினும் மற்றபெண்கள் பார்க்கவே
ஒப்பனை செய்ததாய்காய் வாள்

oppanaippU chUDinum maRRapeNgal pArkkavE
oppanai seidadAikAi vAL

நவம்பர் 28, 2015

குறளின் குரல் - 1318

28th Nov, 2015

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை 

நீடுவாழ் கென்பாக் கறிந்து.

                           (குறள் 1312: புலவி நுணுக்கம் அதிகாரம்)

ஊடி இருந்தேமாத் - நாங்கள் ஊடியிருந்தோம்
தும்மினார் - அப்போது அவர் தும்மினார்
யாம்தம்மை 
- நான் அப்போதாவது தன்னை
நீடு வாழ்கென்பாக்கு - நீடு வாழ்க என்று சொல்லி உரையாடுவேன் என்பதை
அறிந்து - தாம் உணர்ந்து.

இதில் தலைவி தன் தலைவனின் கள்ள நோக்கத்தை அறிந்தவளாகப் பேசுகிறாள். இருவரும் ஊடி இருக்கையிலே, அவர் தும்மினாராம். அப்போதாவது தாம் அவரைப்பார்த்து “நீடு வாழ்க” என்று சொல்லி உரையாடத் தொடங்குவோம் என்று எதிர்பார்த்து. தும்முவது என்பது ஒருகணம் மூச்சு நின்று வருவது; இறப்புக்குச் சமம். அதனால் தும்மும்போது இப்போதும்கூட “நீண்ட ஆயுள் உண்டாவதாக” என்று பொருள் வரும்படி,”தீர்காயுசு” என்பர் பெரியோர். இந்த பழக்கம் இந்தியப்பழக்கமாக மட்டும் இல்லாமல், மேற்கத்திய நாடுகளிலும், “கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” (God bless) என்று கூறுகிறார்கள். இது கலாச்சாரங்களைத் தாண்டி வரும் பழக்கம்தான்.

Transliteration:

Udi irundEmAt tumminAr yAmtammai
nIDuvAz kenpAk kaRindu

Udi irundEmAt – We were in love quarrel
tumminAr – then he sneezed
yAmtammai – expecting that I would to say to him
nIDuvAz kenpAkku  - “Long live” (God bless)
aRindu – knowing that. (or expecting that)

In this verse, the maiden speaks understanding her lovers’ mischievous intentions. When both of them had love-quarrel for sometime, her lover sneezed, expecting that the maiden would say, “Long live” or “God bless” to break the silence between them. Sneezing is considered a momentary death, because the  heart is t to stop for a second (though in reality only  the heart rate is adjusted). Looks like it has been at least 2000 year old custom to say “Long live” not only in India, but in western civilizations too.

“When we were in love quarrel, he sneezed; perhaps knowing
  I would say “Long live” to break the uneasy silence brewing”

இன்றெனது குறள்:

ஊடியக்கால் தும்மினார் நான்நீடு வாழ்கென்று
நாடிச்சொல் வேனென்றெண் ணி

UDiyakkAl tumminAr nAnnIDu vAzhgenRu
nADichol vEnenReN Ni.

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...