ஜூலை 31, 2014

குறளின் குரல் - 833

31st Jul 2014

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
                        (குறள் 827: கூடாநட்பு அதிகாரம்)

சொல்வணக்கம் - வணக்கமாக பேசுவதை
ஒன்னார்கண் - பகைவரிடமிருந்து
கொள்ளற்க - எடுத்துக்கொள்ளக்கூடாது
வில்வணக்கம் - வில் வளந்து, வணங்குவதுபோன்றது
தீங்கு - எதிரிக்கு தீமையை செய்வதைக்
குறித்தமையான் - குறிப்பது போன்றதாகும்

பகைவர் வணங்கி இணக்கமாக பேசுவதை ஒருநாளும் நம்பி ஏற்றுக்கொள்ளக்கூடாது.  அது வில் வளைவது, அம்பைக் குறி வைத்த பிறகு எதிரில் உள்ள பகைவரை அழிக்காமல் விடாது என்பதைப் போன்றதாம். வில் வணங்கிற்றே என்று பகைவர் கையில் அது உள்ளதை மறக்கமுடியுமா? அதேபோன்றுதான், பகைவர் பேசும் சொற்கள் வணங்குவது போலே இருப்பினும் அவை தீமை செய்வதற்காகத்தான்.

Transliteration:

solvaNakkam onnArkaN koLLaRka vilvaNakkam
thIngu kuRiththamai yAn

solvaNakkam – workds spoken agreeably, submissively
onnArkaN – from the enemies
koLLaRka – should never be taken at their face value
vilvaNakkam – when the bow is bent (because the arrow is on it)
thIngu – havoc, ill
kuRiththamaiyAn – is what is indicated by that.

When the enemies speak agreeably or submissively, one must not believe it absolutely. It is like a bow bending with an arrow on it. It will not go unbent without destroying its enemy. One shall not be happy and forget that the bow is bend being respectful. Likewise, when words are spoken, exceedingly submissively by an enemy, they have to be treated as inherently havoc causing.

“Words of enemies shall not be taken even if spoken submissively
 It is more like a bow bending – it shall only destroy decisively”


இன்றெனது குறள்:

பகைபணிந்து சொல்லும்சொல் வில்வளைதல் போலாம்
நகைபறிக்கும் தீமை அது

pagaipaNindu sollumsol vilvaLaidhal pOlAm
nagaipaRikkum thImai adu

ஜூலை 30, 2014

குறளின் குரல் - 832

30th Jul 2014

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
                        (குறள் 826: கூடாநட்பு அதிகாரம்)

நட்டார்போல் - நண்பரைப்போல்
நல்லவை சொல்லினும் - நல்லன கூறுவனபோல் சொல்லுகின்ற
ஒட்டார்சொல் - பகைவர்தம் சொல்லில் உண்மையின்மையை
ஒல்லை - விரைவிலேயே
உணரப்படும் - உணர்ந்து கொள்ளலாம்.

கூடா நட்பில் இருக்கும் போலி நண்பர்கள் தேனொழுக இனிமையாக நல்லவர் போல், நன்மையே தருவதுபோல் பேசினாலும், அவற்றின் உண்மையான பயனையோ, உருவத்தையோ விரைவிலேயே உணர்ந்துகொள்ளலாம், என்பது இக்குறள்.  சிலர் நட்புறவில் இருப்பது போல் இருப்பர், நமக்கு நன்மை தருவனவற்றைப் பேசுவதுபோல் பேசுவர். ஆனால் அவருடைய சொற்களின் உண்மைத் தோற்றம் விரைவில் வெளிப்பட்டுவிடும்.

Transliteration:

naTTArpOl nallavai sollinum oTTARsol
ollAi uNarap paDum

naTTArpOl – Like a close friend
nallavai sollinum – even what they say appears good
oTTARsol – such façade friend’s (in fact enemies) word’s true nature not bringing good
ollAi – soon
uNarappaDum – be realized.

Some friends who exhibit outward friendship, but truly are not, with enemity ingrained in their hearts, may speak sweet as if well meaning; but their true nature will be soon revealed, says this verse.

“The words of friendly appearing enenmy, though sound good
  shall be realized soon as not so and under the farce hood”


இன்றெனது குறள்:

நண்பரைப்போல் நன்மைபோல் சொல்லும் பகைவர்சொல்
உண்மையன்று  என்றுணர லாம்

naNbaraippOl nanmaipOl sollum pagaivarsol
uNamyanRu enRuNara lAm

ஜூலை 29, 2014

குறளின் குரல் - 831

29th Jul 2014

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
                        (குறள் 825: கூடாநட்பு அதிகாரம்)

மனத்தின் - உள்ளத்தினால்
அமையாதவரை - உண்மையாக நட்பு கொள்ளாதவரை (மேல்பூச்சான நட்புறவில் இருப்பவரை)
எனைத்தொன்றும் - எச்செயலிலும்
சொல்லினால் - அவர் கூறுகின்ற சொற்களினால்
தேறற்பாற்று அன்று - நம்பி செய்தல் கூடாது.

எச்செயலைச் செய்தாலும், உள்ளார்ந்த நட்புறவு ஒழுகாரின் சொற்களை, அவர் சொல்லுகின்றவாரே கொள்ளுதல் முறைமையல்ல. உள்ளார்ந்த நட்பில்லாதவர்களின் சொற்களில் உண்மையான அக்கறையைவிட வஞ்சமே மிக்கிருத்தலுக்கான வாய்ப்புகள் மிகுதி. நட்பைப் பொருத்தவரை, கூடா நட்பாயவரை, அவர் சொல்லுகின்ற சொற்களை நம்பி செயலில் இறங்குதலை விலக்குதலே அறிவுடைமை என்பதைச் சொல்லும் குறள்.

Transliteration:

Manaththin amaiyA dhavarai enaiththonRum
sollinAl thERaRpARRu anRu.

Manaththin – in heart
amaiyAdhavarai – a person who is not in truthful, trustworthy friendship
enaiththonRum- in any deed
sollinAl – believing that person’s words
thERaRpARRu anRu – never plunge in to do.

Never indulge in anything, believing the words of a person that’s not in truthful friendship and hence is not trustworthy, says this verse. Such untrustworthy façade friendship may have only ill-meaning intentions, and hence it is prudent to avoid whatever they say.

“Do nor trust the words of a façade pal
 That friendship is not from heart after all”


இன்றெனது குறள்:

உள்ளார்ந்து நட்புறவு கொள்ளார்தம் சொற்களை
எள்ளளவும் நம்பக்கூ டாது

uLLArndhu naTpuRavu koLLArtham soRkaLai
eLLaLavum nambakkU DAdhu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...