ஏப்ரல் 30, 2014

குறளின் குரல் - 741


30th Apr 2014

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லத நாடு
                        (குறள் 735: நாடு அதிகாரம்)

பல் குழுவும் - உட்கட்சி பூசல்களால் பலகுழுக்களாக பிரிந்து இருக்கும் ஆட்சியும்
பாழ்செய்யும் உட்பகையும் - உடனிறுந்து கெடுக்கின்ற உட் பகையும்
வேந்து அலைக்கும் - ஓர் அரசை தடுமாற வைக்கும், அலைகழிக்கும்
கொல் குறும்பும் - இறுதியில் ஆட்சியையே கொன்றழிக்கும் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசுகளும்
இல்லத நாடு - இல்லாமல் இருப்பதே சிறந்த நாடு.

ஒரு நாட்டின் கீழ் பல இன, மொழி, சமய, சாதி வேறுபாடுகளால் பிரிந்து பல குழுக்களாக ஒருவருக்கொருவர் ஒத்துச் செல்லாமலிருப்பவர்களும், உடனிருந்தே கொல்லும் நோய்போல அடுத்திருந்தே கெடுக்கின்ற நட்புறவினர் போன்ற பகைவர்களும், ஓர் அரசை, அரசனை தடுமாற வைக்கும், இறுதியில் ஆட்சியையே கொல்லக்கூடிய குறு நில அரசர்கள், அல்லது ஆட்சிக்குட்பட்ட மாநிலத் தலைவர்கள், மற்றும் வலிமைமிக்க தீயோர் போன்றோரும் இல்லாது நீங்கியதே நல்ல நாடாகும்.

குடியரசுகளிலே, கூட்டாட்சி நடக்கும் நாடுகளிலே இவையெல்லாம் இன்றைக்கும் பார்க்கக்கூடியவையே. மத்திய அரசைக் கவிழ்க்கும் மாநில அரசுகளையும், அரசைச் செயல்படவிடாமல் ஆட்சியைக் கொல்லுவதையே குறியாகக் கொண்ட மாநில கட்சித் தலைவர்களயும், ஒரு கட்சியினுள்ளே பல குழுக்களாக பிரிந்திருப்பவர்களையும், தவிரவும் சாதி, சமயம், இனம், மொழி  என்ற பிரிவினைகளால் ஒரு நாட்டின் இறையாண்மையையே கேலிக்குரியதாகவும், கேள்விக்குரியதாகவும் ஆக்குபவர்களையும் இன்றும் நாம் பார்க்கிறோமே!

இக்குறளை நாட்டளவிலும், மாநில அளவிலும் ஆள்பவர்களுக்கும், ஒர் கட்சி அளவிலும் கூட வைத்துப் பார்க்கலாம்.

Transliteration:

palkuzhuvum pAzhseyyum uTpagaiyum vEndhalaikkum
kolkuRumbim illatha nADu

pal kuzhuvum – Being divided by caste, religion, language, race as different groups
pAzhseyyum uTpagaiyum – Having enemies within the system to ruin
vEndh(u) alaikkum – To continuously give trouble to ruler to kill the rule
kol kuRumbim  - regional rulers, factional leaders that of perpetually scheme to destroy
illatha nADu – when devoid the above, a state is prosperous.

A state is known to be in the state of prosperity only when it is devoid of factional, communal aspirations, and not divided into several groups based on caste, religion, language and race; when it does not have the internal enemies that ruin the rule; when it does not have small factional, regional rulers challenging the sovereignty of the nation and are out to dethrone the rule.

In today’s democratic setups existing in many nations, we see such things. Regional rulers trying to topple central governments, regional parties and opposition working to paralyze the rule by creative some havoc or other. Pseudo leaderships based on caste, religion, language and race break the society of citizens for their political gains, robbing people of good governance.

This verse can be seen in the context of central, regional rules and even within the political parties of today in many countries.

“Devoid of factional groups, internal enemies that destroy, and destabilizing,
 looting leaders that are out to dethrone and kill the rule, a state is prospering”

இன்றெனது குறள்(கள்):

ஒற்றுமையில் பல்குழுக்கள் உட்பகை சூதுசெய்
சிற்றரசர் நீங்கியதே நாடு

ORRumaiyil palkuzhukkaL uTpagai sUdhusei
siRRarasar nIngiyadhE nADu

உட்கட்சிப் பூசல்கள் உட்பகை சிற்றரசின்
கொட்டங்கள் நீங்கியதே நாடு

uTkaTchip pUsalgaL uTpagai chiRRarasin
koTTangaL nIngiyadhE nADu

ஏப்ரல் 29, 2014

குறளின் குரல் - 740

29th Apr 2014

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும் 
சேரா தியல்வது நாடு.
                (குறள் 734: நாடு அதிகாரம்)

உறுபசியும் - மிகுந்த பசியும் (பஞ்சத்தினால்)
ஓவாப் பிணியும் - முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோயும்
செறு பகையும் - கொல்லுகின்ற பகைவர்களும்
சேராது இயல்வது - நாட்டை அண்டாமல் காத்து இருப்பதே
நாடு - ஒரு நல்ல நாடாகும்

மக்கள் மிகுந்த பசியால் வாடாமலும், நீங்காத நோய்களால் பீடிக்கப்படாமலும், கொல்லுகின்ற பகையால் சூழப்படாமலும் இருந்தாலே அது நல்ல நாடாக அறியப்படும். 

பசியால் வாடாமல் இருக்க அறம் தழைத்து, மழை பொய்க்காது, உழவு சிறந்து, விளைச்சல் பெருகியிருக்கவேண்டும். முடியாது வளர்ந்துகொண்டே இருக்கும் நோய்கள் மக்களின் தீய பழக்கவழக்கங்களால் ஏற்படுவது. அத்தகைய தீய வழக்கங்களைக் கொண்டோர் வாழாத நாடாக இருக்கவேண்டும். நல்ல அமைச்சர்களும், அரசனும், அரசனுக்குப் பின்னால் வரும் சிறந்த குடிமக்களும், உறுதியுடன் உடனிருப்பதால் கொல்லுகின்ற எத்தகைய பகையும் வெல்லமுடியாததாக இருக்கவேண்டும். இதையே சிலப்பதிகார வரிகளும் “பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி” (சிலம்பு:5:72-3) என்கிறது. சீவக சிந்தாமணியும், “பொன்றுக பசியும் நோயும் பொருந்தலில் பகையுமென்ன” (சீவக:2375) என்கிறது.

Transliteration:

Urupasiyum OvAp piNiyum seRupagaiyum
sErA dhiyalvadhu nADu

Uru pasiyum – Extreme hunger
OvAp piNiyum – Endless diseases
seRu pagaiyum – Enemies surrounding to kill
sErAdh(u) iyalvadhu – Preventing these three 
nADu – is the best state

A state that has the ability to prevent hunger, endless diseases and the destructive enemies that affect the citizens is known as a good state.

For the state to be hunger free, its ruler and the citizens should be charitable to have unfailing rains, abundant crops; for the state to be disease free, its people should not lead unhealthy life and be indulgent in such practices; if the ruler, his ministers and the citizen stand strong together, no enemy state can be ever in war with them. 

“When a land is devoid of extreme hunger, endless diseases, 
 And killing enemies, then the state is known to be prosperous” 

இன்றெனது குறள்:

கடும்பசி நீங்காநோய் கொல்பகை மூன்றும்
தடுத்து சிறந்ததே நாடு

kaDumpasi nIngAnOi kolpagai mUnRum
thaDuththu siRandhadhE nADu

ஏப்ரல் 28, 2014

குறளின் குரல் - 739

28th Apr 2014

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு 
இறையொருங்கு நேர்வது நாடு.
                             (குறள் 733: நாடு அதிகாரம்)

பொறை ஒருங்கு - குன்றுகளெல்லாம் ஒன்றாக (அடுக்கடுக்காக சுமையான நிகழ்வுகள்)
மேல் வருங்கால் - சேர்ந்து மேலே அழுத்தும்போது வரும்போது
தாங்கி - வரும் சுமையனையவற்றை தாங்கி (மாற்று நாட்டார் அகதிகளாக வருவதல் போன்றனைய)
இறைவற்கு - அரசர்க்கு (மக்களாட்சி இருக்கும் நாடுகளில், ஆட்சிக்கு)
இறை ஒருங்கு நேர்வது - வரிகளை முழுவதுமாக குறைவில்லாமல் செலுத்தும்படியான வளமுடைத்ததே
நாடு - ஒரு நாடென்று அறியப்படும்

பாறைகளைக் கொண்ட குன்றுகள் ஒருங்கே சேர்த்து சுமையாக அழுத்துவதையும் போன்ற சுமைகளான அயல் நாட்டிலிருந்து போர், வரட்சி மற்றும் பஞ்சம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டு, தம் நாட்டுக்கு புலம் பெயர்ந்தவர்களையும், அவர்களால் நாட்டின் வளங்களை பகிர்ந்து கொள்ளவேண்டியது நேரினும், அவற்றையெல்லாமும் தாங்கிக்கொண்டு, தம்முடைய ஆட்சிக்கு சேரவேண்டிய வரிகளைத் தவறாமல் தரக்கூடிய அளவுக்கு வளமிக்க குடிகளைக் கொண்டதே நாடு எனப்படும்.

பொறையென்பது சுமை என்பது இக்குறளில் தருவித்துக்கொண்ட பொருள்தான். அத்தருவித்துக் கொண்ட பொருளையும் நீட்டித்து அச்சுமை இன்னவகையானதென்பது, தருவித்துக்கொண்ட பொருளிலிருந்து மீண்டும் தருவித்துக்கொள்ளப்பட்ட பொருள். இக்குறளை மற்ற உரையாசிரியர்கள் வழி நின்று உரை செய்வதே பொருத்தமாகவும் உள்ளது.

Transliteration:

poRaiyorungu mElvarungAl thAngi iRaivaRku
iRaiyorungu nErvadhu nADu

poRai orungu – Pressing burden due to weights of many hillocks, all together
mEl varungAl – if they come over and crush as a burden
thAngi – bearing all of them (simile to destitute that migrate in to the country)
iRaivaRku – to the ruler, government
iRai orungu nErvadhu – pay all taxes without fail (by being so prosperous)
naDu – is a state that is prosperous

Though like the burden of many hillocks together press the citizens of the country, bearing even such a burden, if the citizens of a country are able to pay their tax dues to their rule or ruler without flinching, such country is a prosperous state. The burden of hillocks is a simile used for the burden of destitute that migrate to a country seeking asylum due to problems of famine, oppression, war etc,.  When such a burden is thrown on a country, its resources are depleted considerably. A country that is able to bear such a burden for prolonged periods and still have its citizens pay their taxes without delay is a true state of prosperity.

The word “poRai” is a simile used for the burden of hillocks. That it self is a construed meaning. Extending that simile to the burden due to destitute is a further extension of the earlier simile. It makes sense to do the commentary based on what earlier commentators have done.

“Though the burden like a bunch of hillocks presses its citizens, resources depleted
 Bearing them all, paying all taxes due to the rule is a prosperous state unperturbed”

இன்றெனது குறள்:

சுமைபலவும் சூழ்ந்தும் சுமந்துவரி ஆட்சிக்
கமையத் தருவதே நாடு

sumaipalavum sUzhndhum sumandhuvari Atchik

kamaiyath tharuvathE nADu

ஏப்ரல் 27, 2014

குறளின் குரல் - 738

27th Apr 2014

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால் 
ஆற்ற விளைவது நாடு.
                (குறள் 732: நாடு அதிகாரம்)

பெரும் பொருளால் - மிகுந்த செல்வ வளம் பெற்றிருப்பதால்
பெட்டக்கதாகி - எல்லோராலும் (அயல் நாட்டினராலும்) விரும்பத்தக்கதாகி (பெட்டல் - விரும்புதல்)
அருங் கேட்டால் - கேடு என்பதே மிகவும் அரிதாகி (அதாவது இல்லாமல்) இருப்பதால்
ஆற்ற விளைவது - குறைவில்லா விவசாயத்தினால் விளைபொருள் செழிப்பும் மிக்கதே
நாடு - ஒரு நாடு எனப்படும் (ஒரு நல்ல நாடு என மதிக்கப்படும்)

நல்ல நாடு என மதிக்கப்பெறும் நாடொன்று மிகுந்த செல்வ வளம் பெற்று, அதனால் பிறநாட்டு மக்களும் புலம் பெயர்ந்து குடியமற வருவதற்கு விழையும் நாடாகவும், கேடு என்பதே அரிதாகி, இல்லாமல் ஒழிந்து, விவசாயத்தால் கிடைக்கும் விளச்சலில் சிறந்ததாகவும் இருப்பதேயாம்.

கடந்த குறளையே வேறுவிதமாகச் சொல்லும் குறள் இது. அங்கே மிகுந்த செல்வமுடையவர்கள் இருக்கவேண்டும் என்றார், இங்கே நாடே செல்வச் செழிப்புடன் இருக்க வேண்டும் என்கிறார்.  “அருங் கேட்டால்” என்பது நாட்டின் ஒட்டுமொத்த கேடு இல்லாமையைக் குறிப்பதாகும். கடந்த குறளில் சொல்லப்பட்ட “தக்கார்”  என்ற சொல் நலமிக்க நல்லோரையும், மேன்மையானவர்களையும் குறிக்கும்.அத்தகையவர்கள் இருப்பதால்தான் நாட்டில் கேடின்மை இருக்கும்.  “ஆற்ற விளைவது” என்று இக்குறளில் சொல்வதையே சென்ற குறளில் “தள்ளா விளையுளும்” என்றார். இக்குறளில் வெளிப்படையாகச் சொல்வது, எல்லோரும் விழையும் அளவுக்கு, அதாவது பெட்டலுக்கு தக்கதாய் ஒரு நாடு இருப்பதை. இதையும் குறிப்பாலேயே சென்ற குறளில் உணர்த்திவிட்டார். ஆக இரண்டு குறள்களும் ஒரேவிதமான கருத்துக்களைச் சொல்லவே பின்னப்பட்டுள்ளன.

Transliteration:

perumporuLAl peTTakka dhAgi arungkETTAl
ARRa viLaivadhu nADu

Perum poruLAl – because of being wealthy
peTTakkadhAgi – even for citizens of other countries to desire
arung kETTAl – destruction due to lack of discipline almost nil
ARRa viLaivadhu – yielding extremely good food crops
nADu – such a place is called a country or a state

A land is known as a sovereign state when it is very wealthy that people from other states desire to be there, when the calamitous happenings are far and few, and the crops are bountiful always – says this verse.

This verse is saying the same content of previous verse with different words if we closely look at it. The last verse said we need wealthy people for a state to be called so; this verse talks about a state being wealthy, which is indirectly due to the richness of people of the country. Likewise, without respectable people, referred to as “thakkAr” in previous verse, the calamitous happenings in a country cannot be averted. The calamitous happenings referred to here are not natural ones, but because of the character of the people of the state. Regarding bountiful crops again he has mentioned in both verses.  People desiring the state are referred in this verse more explicitly than the previous verse, where it was just hinted. 

Hence both verses seem to say the same with weaving of different words.

“Being wealthy and desirable due to that, devoid of any calamity
 blessed with bountiful of crops always, is a state of  prosperity”

இன்றெனது குறள்:

செல்வமிக்கு மாற்றாரும் ஆசையுற கேடகன்று
நல்விளைவும் கொண்டது நாடு

selvamikku mARRArum AsaiyuRa kEDaganRu

nalviLaivum koNDadhu nADu

ஏப்ரல் 26, 2014

குறளின் குரல் - 737

74: (Country - நாடு)

[Without a state why is the need for governance or wealth building, or community forming, or the need for ministers to govern? This chapter discusses what make a good country or state. A country is known to be the best for its wealth, produce, low taxes, hunger-free, disease free prosperity; when it is devoid of enemies inside and outside; when it has the wealth of nature in mountains, rivers, lakes and guarded by natural terrain to prevent enemies to invade. ]

26th Apr 2014

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் 
செல்வரும் சேர்வது நாடு.
                (குறள் 731: நாடு அதிகாரம்)

தள்ளா விளையுளும் - குறைவில்லாத விளை பொருள்களும்
தக்காரும் - மேன் மக்களும்
தாழ்விலாச் செல்வரும் - தம் வளமை குன்றாத ஆக்கம் உடைத்தோரும்
சேர்வது நாடு - கொண்டதே ஒரு நாடு எனப்படும்.

ஒரு பரந்த நிலப்பரப்பானது நாடு என்று எப்போது அழைக்கப்படும்? பெரும்பாலான மக்கள், அங்கேயே பிறந்திருந்தாலும், அல்லது புலம் பெயர்ந்திருந்தாலும், பெருமையும், பாதுகாப்பும் கொண்டு, இனம் மற்றும் மொழிகளால் இணைந்து வாழ்வதே நாடு எனப்படும்.  வள்ளுவர் மூன்று குறியீடுகளைச் சொல்லி நாட்டை வரையறுக்கிறார். அவையாவன, பயிர் வளமானது குறைவில்லாத விளைச்சலைக் கொண்டதாகவும்,  மேன்மக்கள், அறிஞர்கள் நிறைந்திருப்பதும், குறைவில்லாத செல்வ வளத்தை கொண்டிருக்கும் செல்வந்தர்கள் நிறைந்து இருப்பதுமான நிலமே மக்கள் நாடிச் செல்லும் நாடாகும்.

Transliteration:

thaLLA viLaiyuLum – abundant harvests always with sustained growth of produces
thakkArum – learned people 
thAzhvilAch chelvarum – wealthy people that can take care of economy of the state
sErvadhu nADu – all these combined form a nation or a state.

When is a vast land called a state or a country? When a large population united by a common language and culture, feel the pride about its land, and as well as protected, in the land they were born in, or migrated to, then it is fit to be called a sovereign state. The three criteria that define a state are: abundant and sustainable produces, a lot of learned people that work towards the betterment of the state, wealthy people that can fun the growth of the state. Only such state shall be called a state or a country.

“Plenty of produce and crops, virtuous, learned men of stature great
 and the men of ample wealth together make what is known as state”

இன்றெனது குறள்(கள்):

குறைவில் விளைபொருள்கள், மேன்மக்கள், குன்றா
நிறையாக்கத் தோருடைத்து நாடு

kuRaivil viLaiporuLgaL, mEnmakkaL, kunRA
niRaiyAkkath thORuDaiththu nADu

நன்னாடாம் நல்விளைச்சல் நல்லோர் நலிவிலா
பொன்னுடைச் செல்வருடைத் தால்

nannADAm nalviLaichchal nallOr nalivilA

ponnuDaich chelvaruDaith thAl

ஏப்ரல் 25, 2014

குறளின் குரல் - 736

25th Apr 2014

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் 
கற்ற செலச்சொல்லா தார்.
                (குறள் 730: அவை அஞ்சாமை அதிகாரம்)

உளரெனினும் - உயிரோடுதான் இருக்கிறார் என்றாலும்
இல்லாரொடு ஒப்பர் - உயிரற்ற பிணமாகி உயிரோட்டம் இல்லாதவரோடு ஒப்பர்
களன்அஞ்சிக் - கற்றவர் நிறைந்திருக்கும் அவைக்களம் அஞ்சி
கற்ற செலச் - தாம் கற்றதை அங்குளோர் உள்ளம் கொள அல்லது பதியுமாறு
சொல்லாதார் - சொல்ல முடியாதவர்

முன்பு, சொல்வன்மை அதிகாரத்தில், இக்குறள் போல் அதி காரமாக இல்லாது, சிறிது உறைப்புக் குறைவாகவே, தாம் கற்றதை நன்கு விரிவாக உரைக்கத் தெரியாதவர், மணமில்லா பூங்கொத்துக்குச் சமம் என்றார் வள்ளுவர் கீழ்வரும் குறளால்.

“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 
உணர விரித்துரையா தார்”

இவ்வதிகாரத்தில், அவைக்கு அஞ்சி, தாம் கற்றதை அவையில் உள்ளவர்களின் உள்ளத்தில் பதியுமாறு சொல்லத் தெரியாத கற்றவன், உயிரோடு இருந்தானாயினும், உயிரற்ற பிணத்துக்கு ஒப்பாகவே கருதப்படுவான் என்று கல்லாரினும் இழிந்து பிணம் என்று, கூறிவிட்டார் வள்ளுவர். நம்மவரே ஆயினும், பிணமானது, அழுகி, துர்வாடை வீசுவதால் அது எரியுண்ணவோ, அல்லது புதைக்கவோ தக்கது. அத்தகையதே அவைக்கஞ்சுவோன் கல்வியும் என்பதும் உணர்த்தப்படுகிறது.

Transliteration:

uLareninum illAroDu oppar kaLananjik
kaRRa chelachchollA dhAr

uLareninum – Though in form is alive  
illAroDu oppar – compare only to corpse 
kaLan anjik – fearful of scholar’s assembly
kaRRa chela – to explain his learning comprehensibly
chchollA dhAr – cannot speak

In an earlier chapter of “articulation” vaLLuvar has said a similar thought in a milder expression, that a person that cannot speak despite his learning is like a fragrance-less flower bunch,

In this chapter, he says though learned, a person that cannot speak comprehensibly in the assembly of scholars, out of fear, compares to corpse, though in form is construed to be alive. There can none be so demeaning to such a person. A corpse rots and starts spreading bad odor and hence will be either buried or burnt. Perhaps vaLLuvar suggests the knowledge of such person is only worthy of that.

Though seen as alive, a learned, fearful to speak comprehensibly
Only compares to corpse to in the midst of scholars assembly”

இன்றெனது குறள்:

கற்றதை நல்லவையோர் கொள்ளச் சொலாருயிர்
உற்றும் பிணத்துக்கே ஒப்பு

kaRRadhai nallavaiyOr koLLach cholAruyir

uRRum piNaththukkE oppu

ஏப்ரல் 24, 2014

குறளின் குரல் - 735

24th Apr 2014

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் 
நல்லா ரவையஞ்சு வார்.
                (குறள் 729: அவை அஞ்சாமை அதிகாரம்)

கல்லாதவரின் - படிக்காத மூடர்களை விட
கடையென்ப - கீழானவாராம்
கற்றறிந்தும் - பல நூல்களைக் கற்றறிந்தவராயினும்
நல்லார் அவை - சான்றோர்கள் நிறைந்த அவையில் பேசுவதற்கு
அஞ்சுவார் - பயப்படுகிறவர்.

பல நூல்களை கற்றறிந்தவராயினும், சான்றோர் நிறைந்த அவைகளிலே  தம் கருத்துக்களை அஞ்சாமல் பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் படிப்பறிவில்லாத மூடர்களைவிட மிகவும் கீழானவரே. 

கற்றிருந்தும் கற்றோர் அவையில் பேசுதற்கு அஞ்சுபவரை கோழைகளென்றும், அவர்களின் அறிவு வீரமில்லா பேடியின் கை வாளென்றும் கூறி, பின்னர் அவர்கள் கற்ற கல்வியால் பயன் யாதென்று வினவி, இக்குறளில் அவர்கள் கல்லாத மூடரைவிட கீழானவர் என்று சொல்லி அவைக்கஞ்சாமையை வலிமையாகச் சொல்லுகிறார் வள்ளுவர்.

Transliteration:

kallA davarin kaDaiyenba kaRRaRindhum
nallA ravaiyanju vAr

kallAdavarin – worse than the uneducated fools
kaDaiyenba – lowly are people,
kaRRaRindhum – though of high erudition
nallAr avai – in the assembly of scholars
anjuvAr – fearful of speaking

Though of high erudition, those who are fearful of speaking in any assembly of scholars are worse and lowly than the uneducated fools, says this verse.

Progressively, calling such educated, but fearful lot as cowards, hermaphrodites with wielding weapons and then asking them what use is it of their erudition, finally, calling them worse than uneducated fools, vaLLuvar is perhaps kinding their pride and trying to emphasize the need to be unfearful.

“Lowly and worse than illiterate fools are the educated
but fearful of assembly of scholars to speak uninhibited”

இன்றெனது குறள்:

கற்றாலும் மூடரிலும் கீழென்பர் அஞ்சியஞ்சி
முற்றவையில் மூடுவாயி னர் 

kaRRalum mUDarilum kIzhenbar anjiyanji

muRRavaiyil mUDuvAyi nar

ஏப்ரல் 23, 2014

குறளின் குரல் - 734

23rd Apr 2014

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார்.
                        (குறள் 728: அவை அஞ்சாமை அதிகாரம்)

பல்லவை கற்றும் - பல துறைகளைச் சார்ந்த அறிவு நூல்களைக் கற்றிருந்தும்
பயம் இலரே - அவற்றால் அவருக்கும், உலகுக்கும் ஒரு பயனும் இல்லாதவர்
நல் அவையுள் - நல்ல கற்றோரின் அவையில்
நன்கு செலச் - அவர்கள் உள்ளம் கொள்ள, பதியுமாறு
சொல்லாதார் - சொல்லத் தெரியாதார்

வள்ளுவர் மற்ற அதிகாரங்களி கையாண்டுள்ள அதே வழிமுறையை இங்கும் பின்பற்றி,  ஒரு கருத்தை வலிமைபடச் சொல்லுவதற்காக மாற்றுவிதமாக கூறுகிறார் -  கடந்த இரண்டு குறள்களின் கருத்துக்களையே இங்கும் வேறுவிதமாக சொல்லுகிறார் வள்ளுவர்.

கற்றோர் நிறைந்த அவையில், அவர்களது உள்ளங்கொள்ளுமாறு பேசத் தெரியாதவர்களுக்கு,
பல துறைகளைச் சார்ந்த அறிவு நூல்களைக் கற்றிருந்தும், அவற்றால் ஒரு பயனும் அவருக்கும், உலகுக்கும் இல்லை என்பதே இக்குறளின் கருத்து. கற்றோர் முன் சொல்லும் திறனோ, மன எழுச்சியோ, துணிவோ இல்லார்க்கு தாம் கற்ற கல்வியிலே உறுதியான பயிற்சி இல்லாமையைத்தான் இது குறிக்கும்
                     
Transliteration:

Pallavai kaRRum payamilarE nallavaiyuL
Nangu selachchollA dAr

Pallavai kaRRum – though of high erudition in many subject areas
Payam ilarE – they are of no use to themselves or to the world (who)
Nall avaiyuL – those who in an assembly of learned
Nangu sela – for them to desire, listen and comprehend
chchollAdAr – cannot speak

vaLLuvar has followed the same technique of reinforcing a thought, by saying it differently through more than one or two verses in a chapter. This verse is a rehash to reinforce the thought of previous two verses.

Though may be of high scholarship in many subject areas, if a person cannot speak convincingly in an assembly of learned for them to desire, listen and comprehend, then such learning is of no use to himself and to the world, says this verse.  Through this verse, vaLLuvar implies, that those who do not have the courage, ability or desire to speak before others only expose their lack of conviction in their education.

What use is it for someone to be well read in many areas of knowledge?
If he cannot speak convincingly before a learned audience with courage!

இன்றெனது குறள்:

பயன்யாதாம் பன்னூல் படிப்பறிவால் கற்றோர்
நயந்துகொளச் சொல்லாத வர்க்கு

payanyAdAm pannUl paDippaRivAl kaRROr
nayandhukoLach sollAdhA varkku

ஏப்ரல் 22, 2014

குறளின் குரல் - 733

22nd Apr 2014

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்.
                        (குறள் 727: அவை அஞ்சாமை அதிகாரம்)

பகையகத்துப் - பகைவர்க்கு முன்னர் இருக்கும் (அஞ்சுவது உணர்த்தப்பட்டது)
பேடி கை - பெண்தன்மை மிகுந்த ஆண், அல்லது அலியின்
ஒள் வாள் - வீர வாளானது, படைக்கருவி
அவையகத்து - கற்றோர் அவையிலே
அஞ்சுமவன் - பேசுதற்கு அஞ்சுகின்றவன்
கற்ற நூல் - கற்று தேர்ந்த நூல் போன்றாம் (இரண்டாலும் பயன் இல்லை)

பகைவரிடம் இருக்கும்போது, அவரைக் கண்டு நடுங்குகின்ற பெண்தன்மை கொண்ட ஆண்கள் (அலிகள்) கையில் இருக்கும் வீரத்தைக் காட்டும் படைக்கருவியானது, கற்றோர் நிறைந்த அவை முன்பாக பேசுவதற்கு அஞ்சுகிற கற்றோன் கற்று தேர்ந்த நூல் போலாம். இரண்டினாலும் உறுபயன் ஒன்றுமில்லை.

ஆண் தன்மை கொண்ட பெண்களைப் பேடன் என்பர். அவர்கள் வீரத்தை விரும்புகின்றவராக இருப்பர். மகாபாரதத்தின் சிகண்டி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு. பேடி என்று சொல்வதால் பெண்மையை விரும்புகிற ஆண்கள் எல்லோரும் கோழைகள் என்பதும் தவறான அனுமானம். பெண்களிலும் வீராங்கனைளை இலக்கியங்கள் பேசுகின்றன. தமிழர்கள் தவறாது பெண்களின் வீரத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லுவது, “புலியை முறத்தால் அடித்து விரட்டிய தமிழ் மறப்பெண்ணைப்” பற்றியல்லவா?

Transliteration:
Pagaiyagaththup pEDikai oLvAL avaiyagaththu
Anju mavankaRRa nUl

Pagaiyagaththup – put before the enemies field
pEDi kai – in the hands of an hermaphrodite
oL vAL – valiant sword (it is useless)
avaiyagaththu – in the assembly of scholars
Anjum avan – that one who fears to speak up
kaRRa nUl – the scriptures and books he has studied (again it is useless)

The valiant sword in the hands of a hermaphrodite who is put in the middle of enemies is useless. Similarly, scriptures and books of any form of knowledge are useless for a deeply-studied person, that cannot speak and express his thoughts in the middle of scholarly assembly.

The common word hermaphrodite used for both forms of transgenders imply males having female qualities or females having male qualities.  The SikhanDi of MahAbhAratA was born a female and became a male to kill Bheeshma and was indeed depicted as a valiant hero in the epic. It is wrong to assume females are not valiant. After all tamil culture boasts of valiant females that drove even tigers with sifting pan and the pages of history have many a female warriors; so it is wrong to make blanket statements that females are less valiant. Regardless the verse conveys the wrong tools in the hands of wrong people.

“Erudition of that who is fearful to speak in the assembly of scholars is useless
 Likewise a sword in the hands of hermaphrodite amidst enemies is as useless.”

இன்றெனது குறள்:


முற்றவைக்கு அஞ்சுவோர்தம் நூலறிவு கோழைகை
உற்றகூர் ஆயுதம் போல்

muRRavaikku anjuvOrtham nUlaRivu kozhaikai
uRRakUr Ayudham pOl

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...