டிசம்பர் 25, 2018

ஸ்ரீஶைல மல்லிகார்ஜுனப் (திருபருப்பதத்தார்) பதிக அந்தாதி)

திருபருப்பதத்தார் பதிக அந்தாதி  (ஸ்ரீஶைல நாதர் மல்லிகார்ஜுனர்)
----------------------------------------------------------------------------------------

பருப்பதத் தார்பாதம் பாடிப் பணிந்தேன்
அருளுற்றேன் ஆருத்ரா அன்று - கருணைப்
பிரமராம்பி கைவிழிப் பேறுற்றேன் - என்றன்
சிரமுற்ற தேசெல்வச் சீர் -1

சீரடைய யாம்பெற்ற சென்மமுன் சேவடியை
ஆரத் தழுவவன்றே ஐயனே - பாரமென
நீரெம்மைத் தள்ளுதல் நீதமன்றே! நீருண்ட
காரெனவே பெய்க கரம் -2

கரம்பெற்ற சீராலே கைதொழவென் கண்கள்
பரனுன் பருப்பதத்தைப் பார்க்கும் - அரனே
வரமென்று நின்திரு வாயிலிலே என்றும்
சிரந்தாழ சீரொன்று செய் -3

செய்வது உம்சேவை! சேவித்தல் உம்பாதம்
மெய்யனே நீயெமை மேன்மைசெய் - வெய்வினை
நொய்மையின் பாழகற்றி நுங்கருணை ஊற்றெனக்குப்
பெய்தருளே பெம்மானே பேறு -4

பேறும்நீ பெற்றியும்நீ பிஞ்சகா நீயன்றி
நாறுவ தார்க்குமே நண்ணுமோ? - வேறுயார்
வீறுடன் எம்மை விளங்கவைக்க? சேகரனே
ஆறும்நீ! ஆற்றாமை ஆற்று! -5

ஆற்றலும் நின்கொடை அன்போ டணைத்தெமை
தேற்றலும் நின்னருட் செய்கையே! - மாற்றமும்
ஈற்றுமில் ஏந்தலே ஈசனே - எம்மிறைநீ
தோற்றத்தின் முன்பாய தொல் - 6

தொல்லோய் அடியார்க்குத் தொண்டாற்றும் தூயனே
அல்லகற்றும் ஞானபானு ஆரியனே - வல்லோனே
சொல்லற் கரியபெருஞ் சோதியே! வேண்டினேன்
வெல்லும் வகையே விரை - 7

விரைகழல் சேர்ப்பாய் விடையமர் தேவா!
நரையன்றி நானேதும் நாடேன் - தரையில்
விரைந்தருள் வேறு விழையேன் எனக்கு,
பரையின் பதியேகண் பார் -8

பார்த்தேன் பருப்பதரைப் பார்த்தென் பிறவியது
சீர்த்தேன் சிறந்தேன் சிவனருளால் - நீர்த்தனவே
மூர்த்தியால் மூண்டவென் முன்வினைகள்! வேதனவன்
வார்கழற்கென் வாய்கூறும் வாழ்த்து. -9

வாழ்த்தும் அவன்பெருமை வானுயரம் கொள்ளாது
தாழ்சடை ஈசன் தயாபரனாம் - ஊழ்வினையால்
கீழ்மையது சேர்ந்தாலும் கேளா தளிசெய்வான்
பாழ்நீங்கும் சேரும் பரு -10

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...