மே 31, 2013

குறளின் குரல் - 409


41:  (Not learning - கல்லாமை)
[After a chapter full of verses, stressing the importance of education, its merits and the larger benefits for society etc., vaLLuvar, stresses the importanceof the same by highlighting the lowly stature of being uneducated by citing another chapter full of verses]

31st May 2013

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
                         (குறள் 401: கல்வி அதிகாரம்)

Transliteration:
aranginRi vaTTADi yaRRE niRambiya
nUlinRik kOTTik koLal

aranginRi  -  without proper setup to play the dice game
vaTTADiyaRRE – like playing dice
niRambiya – without fullness of knowledge
nUlinRik – by studying books that give such knowledge
kOTTikkoLal – to speak before the assembly of learned

To speak before the assembly of learned scholars, one must have studied and be full of knowledge from authentic source books. Without which, it will be a humiliating experience and exposition of ignorance. This is like without proper setup of the stage for game of dice or understanding that the  stage is biased in favour of opponent,, if somebody enters, it will be a sure loss of game for the person who enters the set up.

This example, probably stems from the story of Mahabharatha where, Dharmaa was dragged into the dice play by the trickery of Kauravas and their scheming architect Sakuni, setting up the stage in their favor. The result of which was utter humiliation by losiing everything including the pride of PAndDvAs, their dear wife PanjAli, By referring to the story without touching the story indicates vaLLuvar’s genius and stress on ill effects of being uneducated in one line.

“Attempting before the assembly of learned to speak without full knowledge
 is like playing the game of dice without the properly designed place or stage”

தமிழிலே:
அரங்கின்றி - சொக்கட்டான் ஆடுகிற கட்டங்கள் அமைந்த களமின்றி
வட்டாடியற்றே - சொக்கட்டான் ஆடுவதுபோலாம்
நிரம்பிய - பெருகிய, நுண்ணிய அறிவினைத் தரும்
நூலின்றிக் - நூற்களினைப் படித்து அறிவினை வளர்த்துக்கொள்ளாமல்
கோட்டிகொளல் - கற்றோர் நிறைந்த அவையில் பேசப்புகுவது.

கற்றோர் நிறைந்த அவையிலே ஒருவர் பேசப்புகும்போது நுண்ணிய நூலறிவிலே சிறந்திருத்தல் மிகவும் இன்றியமையாத ஒன்று. இல்லையென்றால் அவ்வாறு பேசப்புகுந்தவரின் குறையறிவு வெட்டவெளிச்சமாகி, அவருக்கு தீரா அவமானத்தையும், மதிப்பின்மையுமே தரும். இது எவ்வாறு என்றால், சரியாக அமைக்கப்படாத சூதாட்டகளத்திலே, அதாவது எதிராளிக்குச் சாதகமாக களம் இருக்கிறதா என்று கூட அறியாத வகையிலே அமைந்த களத்திலே பகடையுறுட்டி ஆடப்புகுதல் போலாகிவிடும்.

இந்த எடுத்துக்காட்டுக்கு, வள்ளுவர் காலத்திய பகடை ஆட்டம் மட்டுமே காரணமாக இருக்கமுடியாது. பாண்டவர்களின் மூத்தவரான தருமர் கௌரவர் அமைத்த சூதாட்டகளத்தின் தன்மையை முற்றிலுல் ஆராயாது சூதாட புகுந்ததினால்,  எல்லாவற்றையும் இழந்து, எதைவைத்து இழக்கக்கூடாதோ, அதாவது தங்களின் மனைவியான பாஞ்சாலியயும் இழந்து அவமானப்பட்டு, வனவாசம் புகநேர்ந்ததைச் சுட்டிக்காட்டி கல்லாமையினால் வரும் இழப்புகளையும், அவமானங்களையும் சுட்டிக்காட்டுகிறார் முதற்குறளிலேயே வள்ளுவர்.

இன்றெனது குறள்:
கற்றோர்முன் நுண்ணியநூற் கற்றலின்றி  பேசலரங்
கற்றாடும் சூதாட்டம் போல்

kaRRormun nuNNiyanUR kaRRalinRi pEsalarang
kaRRADum sUdhATTam pOl

மே 30, 2013

குறளின் குரல் - 408


30th May 2013
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை.                                                       
                        (குறள் 400: கல்வி அதிகாரம்)

Transliteration:
kEDil vizhuchchelvam kalvi oruvaRku
mADalla maRRai yavai

kEDil - Undiminishing
vizhuchchelvam – useful wealth is
kalvi - education
oruvaRku – for someone
mADalla – Not wealth,
maRRaiyavai – other forms of wealth such money, land, gold etc.

This verse is a simple one, preaching a higher value concept in simple words. There is none compared to the undimishing wealth or value the education yields for some; Other forms of wealth such as dwelling, money are indeed not to construed as wealth at all.

None compare to  being educated, a wealth undiminishing
To anyone; other forms of wealth are notne but perishing

தமிழிலே:
கேடில் - அழிவில்லாத
விழுச்செல்வம் - சீரிய செல்வம்
கல்வி - கல்வியாகும்
ஒருவற்கு
 - யாவருக்கும்
மாடல்ல - செல்வமல்ல
மற்றையவை - மற்ற செல்வங்கங்களாகக் கருதப்படுகிற பொன், மணி, பணம் இவையெல்லாம்    

ஒருவருக்கு கல்வி அல்லாது, அழிவற்ற உயர்ந்த செல்வம் ஏதுமில்லை. மற்ற செல்வங்களெல்லாம், செல்வங்களுமல்ல, நிலையானவையும் அல்ல.  இக்கருத்தைத்தான் இக்குறள் சொல்கிறது.மற்ற செல்வங்களாவன, வீடு, நிலம், பணம் போன்றவையாம்.

இன்றெனது குறள்:
கல்வியல்லால் மற்றோர் அழிவற்ற செல்வமொன்றும்
இல்லையாம் இவ்வுல கோர்க்கு

kalviyallAl maRROr azhivaRRa selvamonRum
illaiyAm ivvula gOrkku

மே 29, 2013

குறளின் குரல் - 407


29th May 2013
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு

காமுறுவர் கற்றறிந் தார்.                                                     
                        (குறள் 399: கல்வி அதிகாரம்)

Transliterartion:
thAmin buRuvadhu ulagin buRakkaNDu
kAmuRuvar kaRRaRin dhAr

thAminbuRuvadhu – Knowing that knowledge gives happiness to self
ulaginbuRakkaNDu – and that happiness percolates down to others (by sharing)
kAmuRuvar – Will desire more to learn and share
kaRRaRindhAr – erudite scholars.

This verse expresses a very simple beautiful thought. Happiness earned by giving to others known no bounds. “yAm petRa inbam peRuka ivvayagam” (thirumanthiram 85) is a often quoted line. When a scholar realizes the greatness of knowledge acquired by him is causing happiness to others in the world, the desire to learn more to share will continue to propel them in the path of knowledge pursuit.

Only when such flawless learning will give the mind set to see others happiness and desires to give more of that happiness to others always.

“Seeing own happiness of education also spreads, gives others happiness
 The erudite will seek to acquire more knowledge to share with eagerness”

தமிழிலே:
தாம் இன்புறுவது - தனக்கு இன்பம் பயப்பதாம் கல்வியினால்
உலகு இன்புறக்கண்டு
 - உலகோரும் இன்புறுகிறார்கள் (அக்கல்வியை உலகோருடன் பகிர்ந்து கொள்ளும் போது) என்று காணும் போது
காமுறுவர் - மிகுந்த விருப்பமுறுவர் மேன்மேலும் கற்பதற்கும், பிறரோடு பகிர்ந்து கொள்வதற்கும்
கற்றறிந்தார் - கல்வியிலே சிறந்த பெரியோர்.

இக்குறள் ஒரு எளிய கருத்தை மிகவும் அழகாகச் சொல்கிறது. ஈவதினால் வரும் உவகையும், “யாம்பெற்ற இன்பம் பெருகயிவ் வையகம்” (திருமந்திரப்பாடல் 85) என்கிற எண்ணத்தையும் ஒருங்கே தரவல்லத்து, ஒருவர் தாம் இது உண்மை, இம்மைக்கும் மறுமைக்கும் இன்பம் தரவல்ல அருஞ்செல்வம் என்று அறியும் கல்விச் செல்வம்தாம். கற்றறிந்ததினால் தமக்கேற்படும் உவகையும், அதை மற்றோரோடு பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களுக்கு ஏற்படும் உவககையுமே கற்றோரை மேலும் கற்பதற்கு விருப்பமூட்டுவதாம்.  

மற்றோரின் உவகை கரும்புதின்ன கூலி கொடுத்தது போலாய ஊக்கமாகிறது கற்றவர்களுக்கு. இதனால் பழுதறக் கற்றோர்க்கே மற்றவரது இன்பத்தில் உவக்கின்ற குணமும், அவ்வின்பத்தை பிறர்க்கு மேலும் அளிக்கவேண்டுமென்கிற எண்ணமும் தோன்றும் என்பதும் தெளிவாகிறது.

இன்றெனது குறள்:
கல்வியிலே நாட்டமிகும் அவ்வின்பம் மற்றோர்க்கும்
நல்குதலால் கல்விசிறந் தோர்க்கு

kalviyilE nATTamigum avvinbam maRROrkkum
nalgudhalAl kalvisiRan dhOrkku

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...