ஜூன் 30, 2012

குறளின் குரல் - 80


29th  June, 2012
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
                       (குறள் 70: மக்கட்பேறு அதிகாரம்) 

Transliteration:
Magan thandhaikku AtRum udhavi ivanthandhai
ennOtRAnkol enum sol.

Magan  - the son
thandhaikku  - towards his father
AtRum udhavi – the duty to do
Ivanthandhai – his father
ennOtRAnkol  - what rare penance must he have done?
enum sol – the word as such.

A son’s duty is towards his father that was a catalyst as well as a support towards son’s progress, to live a life extraordinaire, exemplified by the conduct and glory, so that the society wonders what rare penanance must he have done to deserve such a son!

To deviate from the male-dominated thinking of vaLLuvar times, this verse should be gender neutral again, and generalized to mean children’s duty towards parents.

Though not directly linked to, but somewhat relevant, some thoughts here must be registered here. The current truth is that from politics to administration to art scene, in every facet of human life, we see the predominance of male centric thought. From the ancient times, the epics and literature wordwide have also adopted the same framework.

Though we have had poetesses of significant intellect and importance in existence, and have celebrated the feminine goddess as the embodiment of power (“Shakthi”) and the prime one, we have not risen from this abysmal attitude as a society.  We have to note that Maha Kavi Bharati was the first one, even to give a voice for this cause. Surprising it is to see, even though the women emancipation has come into vogue, at least in thoughts, we don’t see many coming forward to even register their thoughts against such age old practices.

A parallel fact is becoming clear. The slave mentality of over thousand years has mixed in Indian blood stream and most citizens don’t even have the backbone to stand up against and challenge the societal atrocities, violations committed against them, exploiting them in the name of politics, governance, religion, opportunities and many such things. Perhaps the women of the society that have been oppressed for ages, have it more in them to be subservient or at least for many more decades or centuries to come. Holistic societal emancipation may be a utopian dream!

But, at least I want to reflect the equality in my alteranate verses!

Son’s duty towards father is to live a person extraordinaire
For words as such ‘what did his father do? a penance rare!’

தமிழிலே:
மகன் – ஒரு மகன்
தந்தைக்கு – தன்னுடைய தந்தைக்கு
ஆற்றும் உதவி – செய்யக்கூடிய பெருங்கடமை
இவன்தந்தை – இவனுடைய தந்தை
என்நோற்றான் கொல் – என்ன அரிய தவம் செய்தானோ?
எனும் சொல் – என்று பிறர் பேசக்கூடிய அளவு உயர்ந்திருத்தல்

ஒரு மகன் தன்னைக் கல்வி கேள்விகளில் சிறந்து, வாழ்க்கையிலோர் உயர்ந்த இடத்தில் இருத்தலுக்கு ஊக்கமாகவும் உறுதுணையாகவும் இருந்த தந்தைக்குச் செய்யக்கூடிய சிறந்த கடமையானது, இம்மகனுடைய தந்தை என்ன அரியதவங்கள் செய்திருப்பானோ என்று அறிஞரும் மற்றனைவரும் வியந்து பாராட்டும்படியாக வாழ்வதுதான்.

வள்ளுவர்கால ஆணாதிக்க சிந்தனை வழக்கினின்று ஒழுகாது, பொதுவாகக் கூற வேண்டுமென்றால், மக்கள் தங்கள் பெற்றோர்களுக்கு ஆற்ற வேண்டிய கடனாகத்தான் இக்குறளை நாம் பொருள் கொள்ள வேண்டும்.

இக்குறளுக்கும் நேரடியாக இல்லாவிட்டாலும், ஓரளவு தொடர்புடைய, சிலவற்றை எழுதியே ஆகவேண்டும்.
நடப்பு உண்மை என்னவென்றால் அரசியல், நிர்வாக, கலை என்று எல்லா வாழ்க்கைத் துறைகளிலும்கூட ஆணாதிக்க சிந்தனைகளே இன்றும் பெரும்பாலும் நடைமுறையில் இருக்கின்றன. ஆணை முன்னிருத்திதான் கதைகளும், காவியங்களும் படைக்கப்பட்டிருக்கின்றன. ஆண்களே பெரும்பாலும் காவியங்களையும், வாழ்வியல் கோட்பாடுகளையும் படைத்திருக்கிறார்கள். 

உலகின் தொன்மையான இலக்கியங்களிலெல்லாம் கூட ஆண் மகனை முன்னிருத்தியே எழுதப்பட்டிருக்கின்றன. இத்துணைக்கும் பெருமைமிக்க பெண்பால் புலவர்கள் இருந்தாலும்கூட. சக்தியை இறைமுதல்வியாகக் கொண்டாடும் நம் சமூகத்தில்தான் இன்னும் இந்த இழிநிலை. இந்த சமத்துவத்துக்குக் கூட முதலில் குரல் கொடுத்தது பாரதி என்னும் மா கவிதான். பெரும்பாலும் பெண் சுதந்திரம் பேச்சளவிலாவது வந்துவிட்ட இன்றைய சூழலில்கூட, பெருமளவில் பெண்கள் யாரும் இதற்கு முன்வரவில்லை என்பதுதான் உண்மை. ஒரு இணை உண்மை புலனாகிறது. ஆயிரமாண்டுகளாக அடிமைப் பட்டுப் பழகிப்போன நம் மக்கள், மந்தை சிந்தனையில்தான் இன்றும், இன்னும் வாழ்கிறார்கள். சாதிப்பிரச்சினையை பெரிசாக ஊதி ஆதாயம் தேடும் அரசியலில் கூட, அதே அளவுக்கு பாதிப்பை உடைய இதற்கு தீர்வு காணும் மனம் இன்றும் இல்லை. இப்படியிருக்க, அடிமைபட்டுப் பழகிய பெண்களுக்கு, சுயசார்பும், சிந்தனையும் எப்படி விரைவில் வரமுடியும். காத்திருக்க வேண்டும்!.

ஆனாலும், மாற்றுக்குறள் எழுதுவதிலாவது, இக்கருத்தை முன்வைப்பதில் மகிழ்ச்சியே!

இன்றெனது குறள்(கள்):
செய்தவமென் இம்மக்கள் தம்தந்தை என்றுலகோர்
மெய்வியத்தல் மக்கள் கடன்

செய்தவமென் இம்மக்கள் தம்பெற்றோர் என்றுலகோர்
மெய்வியத்தல் மக்கள் கடன்

ஜூன் 29, 2012

குறளின் குரல் - 79


29th June, 2012

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
                      (குறள் 69: மக்கட்பேறு அதிகாரம்)

Transliteration:
IndRa pozhudhin periduvakkum thanmaganaich
chAndRon enakkEtta thAi

IndRa pozhudhin – More than the time of giving birth
periduvakkum – will be over joyous
thanmaganaich – her son
chAndRon – is known to be a learned and wise man and acknowledged so by wisemen
enakkEtta  - when she learns, when she hears other wisemen thus speak
thAi – the mother

The ‘umbilical chord relationship’ between a child and its mother until she delivers the child is very special; though the chord is severed, the special bond lasts for the life time.  When a mother learns that her son is in high position, or among the learned, or valiant, there is no bound to her joy.

Tamil literary tradition gives predominance to the bravery and valor; worships the valiant sons of the soil. There are references about a mother severing her bosoms when she learns that about her son’s cowardly act in the battle field, and was killed by enemies’ stab on his back. Sangam work “puRa nAnUru” talks about a mother being proud when she sees her dead son taking the enemies sword on his chest. 

Though to make his son wise and learned is the proverbial duty of a father, all the happiness of his success is mother’s in most literary references and vaLLuvar is no exception to that unwritten (now definitely unacceptable) posture; However it is justified to show the glory of a mother-son special bond.

With the change of times and the scenes both genders are equally capable in pursuit of knowledge; so are in their responsibilities in the societal frame work of today. So, opportunities are given to children of both genders and so the happiness is also for both the parents. My verses today have been written to reflect vaLLuvar as well as order of the day.

More than at the time of his birth, a mother rejoices
When she hears that her son is placed among wise

தமிழிலே:
ஈன்ற பொழுதின் – தான் தன் மகனை பெற்ற காலத்திலும்
பெரிதுவக்கும்  - பெரிதாக மகிழ்வாள்
தன்மகனைச்  - தன்னுடைய மகன்
சான்றோன்- கல்வி கேள்விகளில் சிறந்து, அறிஞர்களால் மதிக்கப்படுகிறவன்
எனக்கேட்ட – என்று அறிகிற, பிற அறிஞர்கள் சொல்லக் கேட்கின்ற
தாய் - தாயானவள்.

தாய்க்கும் குழவிக்குமான தொப்புள்கொடி உறவு முழுவதுமாக அன்பாலே பிணைக்கப்பட உறவு. தன்னுடைய மகன் கற்றறிந்த பெரியவர்கள் நடுவே மதிக்கப்படுகிறான், உயர்ந்த பதவியில் இருக்கிறான், பெரிய வீரனாக இருக்கிறான் என்றெல்லாம் கேட்பதைவிட ஒரு தாய்க்கு மகிழ்வான செய்தி வேறொன்றுமில்லை.

தமிழ் இலக்கியங்களிலே வீரத்துக்கு முதலிடம் கொடுத்து, மாண்டுபோன தன்மகன் புறமுதுகு காட்டி, முதுகிலே வெட்டுபட்டு மாண்டான் என்றறிந்தால், ஒரு தாய் அம்மகனுக்கு பால்கொடுத்த தன்னுடைய மார்பகங்களை அறுத்து எறிந்து மாண்டு போவாள் என்ற காட்சிகள் வருகின்றன. அம்மகன் நெஞ்சிலே வாள்வாங்கி இறந்திருந்தால், “படுமகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிதுவந்தனளே” என்கிறது புறநானூற்றுப் பாடல் ஒன்று.

சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனாயிருந்தாலும், உவகையெல்லாம் தாய்க்கென்றது, தாய்-மகன் என்கிற உறவின் தனிப்பிணைப்பை காட்டுதற்கே.  காலங்கள் மாறி, காட்சிகள் மாறி ஆண், பெண் இருபாலரும் அறிவுப்பாதையில் இணையாக, சமமாகப் பயணிக்கும் இந்நாளிலே, இது இருபாலருக்கும், பொதுவாக பெற்றோர்களுக்கும் பொருந்துமென்பதால், இக்குறளுக்கான எனது குறள் விளக்கமும் இருகருத்திலேயும் எழுதப்பட்டுள்ளது.

இன்றெனது குறள்(கள்):
பெற்றவக் காலையின் பேருவகை தாயடைவாள்
கற்றவன் தம்மகன்னென் றின்

பெற்றவக் காலையின் பேருவகை பெற்றோர்க்கு
கற்றோர்தம் மக்களென்ற றின்

ஜூன் 28, 2012

குறளின் குரல் - 78


28th June, 2012

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
                     (குறள் 68: மக்கட்பேறு அதிகாரம்)

Transliteration:
Thammin thammakkaL aRivudamai mAnilaththu
mannuyirkkellAm inidhu

Thammin  - More than themselves (the parents)
thammakkaL – their children
aRivudamai – being more educated and knowledgeable
mAnilaththu – in this big world
mannuyirkkellAm  - for living all beings
inidhu – is good

Interpretting the word “thammin” (தம்மின்) in this verse is tricky, in this verse. It does not mean that the parents have to make their children better than them and it will be good for the society. Then it presupposes that the parents are already at certain level of knowledge and the children have to be better than them. If there are qualifiers in the verse that are indicative of parents “acknowledged” knowledge level, then may be it could make sense that way.

The verse means thus, children being knowledgeable, is useful to the society more than the parents, which implies it is a selfless service that every parent must do to the society to bring up children that are useful to the society at large. Giving birth to children is not for personal gains, thinking that they wil take care of their parents during their old age.  Obviously when the children are useful to the society their fundamental values are good and hence the parents will be taken care of as part of the society at large too.

“Having children of erudition, more useful to the world
Than themselves is, parents duty for societal good”

தமிழிலே:

தம்மின் – தம்மை விடவும்
தம் மக்கள் – தம்முடைய புதல்வர்களும் புதல்விகளும்
அறிவுடைமை – அறிவில் சிறந்தவர்களாக இருத்தல்
மாநிலத்து - பெருவுலகத்து
மன்னுயிர்க்கெல்லாம் - வாழுமுயிர்களுக்கெல்லாம்
இனிது – இனியவை பயப்பதாகும்

இக்குறளைப் பொருள் செய்யும்போது, “தம்மின்” என்ற சொல்லை ‘தம்மைவிட தம்மக்கள் அறிவுடையராதல்’ என்று பொருள் கொள்ளுதல் தவறு. அது சுய பெருமை காரணம் பற்றி, ஏதோ தாம் அறிவில் சிறந்திருப்பது போலவும், தம்மைவிட தம்மக்கள் சிறந்திருந்தால் அது உலகுயிர்க்கெல்லாம் இன்பம் தருவது என்றாகிவிடும். தம்முடைய அறிவின் அளவை சமூகம் அங்கீகரித்த அளவை குறித்திருந்தால், அதுவும் சிறந்திருந்தால், அதையும் விஞ்சி தம்மக்களுடைய அறிவுடமை இருந்தால் ஒருவேளைஅவ்வாறு சொல்லலாம்.

 எனவே, ‘மாநிலத்து மக்களுக்கெல்லாம் தம்மை விட இனிமையைத் தரும்’ என்று ஒரு பொதுநல நோக்கிலே கூறப்பட்டிருப்பதாகக் கொள்ளவேண்டும். இதில் ஒரு பெற்றோர்க்கு தம்முடைய நலத்தைவிடவும், சமுதாயநலத்தில் அக்கரை இருக்கவேண்டும் என்பதை உள்ளுரையாகச் சொல்லியிருப்பதை கவனிக்கவேண்டும்.

இன்றெனது குறள்:
மன்னுலகம் தான்பயக்கும் பெற்றோர்தம் மக்களினை
மின்னுநல்கற் றோராக்கி  டின்

ஜூன் 27, 2012

குறளின் குரல் - 77

27th  June, 2012

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
                      (குறள் 67: மக்கட்பேறு அதிகாரம்)

Transliteration:
Thandhai magaRkatRu nandRi avaiyaththu
Mundhi iruppach cheyal

Thandhai  - father
magaRkatRu – the duty towards son
nandRi – by doing good
avaiyaththu – in the gathering of wisemen
Mundhi  - secure (by educating him appropriately) an important position
iruppach cheyal – to place

“Sangam anthology’s most important work, “pura nAnUru” sketches the social, political environment and living in detail through the poets of that age. One such song by a poet “ponmudiyAr” says thus: “IndRu puRantharudhal enthalaik kaDanE, sAnROn Akkudhal thandhaikkuk kaDanE” (ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே). It is said through a mother and she says, “It is my duty to bring the son to this word and it is father’s duty to make him a learned”. This echoes the thought of vaLLuvar or it could be otherway around too. Regardless, by today’s societal setup, equality is accorded to both man and his wife (or wife and her man for equality emphasizing people), the duty of upbringing is vested with both parents and the children should be both genders.  Equality does not apply only to the “ duty of giving birth”, still.

But who knows, with all the advancements in science and technology, the future may fabricate or alternate gene pool to come up with an artificial womb for men and make it a possibility for a man to have a child and make it a societal norm too!

Regardless, the duty of parents is to make their children, to be par excellence among the congregation of erudite and be respected by them as one among them. The order of mother, father, teacher and the God is because of this. Mother’s duty is to bring the child to earth; A father’s duty is bring him up with good living habits and to reach him to a good teacher to make him wise; A teacher’s duty is to mould the student and teach him higher principles of live including the knowledge of godhead, apart from the skills to survive successfully. Though mother bears the pain of birthing, and the teacher teaches the life’s skills, it is the father whose duty it is to give their offspring the right path to a right teacher. Hence he is addressed in vaLLuvar’s verse.

My verse for today makes it a duty of parents of their children, which is the right thing to do.

“Father’s duty is to place his son  
As the foremost among wisemen”

தமிழிலே:

தந்தை  - ஒருவரின் தந்தை
மகற்காற்று  - தம் மகனுக்குச் செய்யக்கூடிய
நன்றி – நன்மை பயக்கும் செயல்
அவையத்து – கற்றோர்கள் நிறைந்த அவையிலே
முந்தி - முதன்மையானவனாக
இருப்பச் செயல். – இருக்கச் செய்வதாகும்

ஈன்று புறந்தருதல் எந்தலைக் கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே” என்ற புறநானூற்றுப்பாடல் பொன்முடியாரால் எழுதப்பட்டது. ஆண்பிள்ளைகள் சார்பாகவே எழுதப்பட்டாலும், இது குறளின் கருத்தையொட்டித்தான் இருக்கிறது. ஆனாலும் இன்றைய சமூக வாழ்வியல் மட்டுமல்ல, சரியான சமத்துவ வாழ்வியல் முறைப்படி, கடமை என்பது பெற்றோர்களுக்கும், மக்கள் என்பது இருபாலரையும் குறிப்பதாகத்தான் கொள்ளவேண்டும். சமத்துவம் இல்லாத ஒரு நிலை “ஈன்று புறந்தருதலில்” மட்டும்தான்!

அறிவியல் முன்னேறிக்கொண்டு இருக்கும் வேகத்தில், யார் கண்டது, செயற்கை கருப்பையினை ஆண்களுக்கு வைத்து, “ஈன்று புறந்தருதல் தந்தைக்குக் கடன்” ஆகக்கூட ஆகலாம் வருங்காலத்தில். “நீயொரு குழந்தை நானொரு குழந்தையென்று” பெற்றோர் இருவரும் சமத்துவமாக வாழும் காலமும் வரலாம்.

ஆனால் நல்ல பெற்றோருக்குக் கடமையாக இருப்பது, தம் மக்களை கற்றவர்கள் நிறைந்த சபையிலே இவர் கல்வி கேள்விகளில் முதல்வர் என்று சான்றோர்கள் எல்லாம் வியந்து பாராட்டும் படியாக செய்தலாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற முறையும் (அன்னை, தந்தை, ஆசான், இறை) இதனாலே வந்தது.  இவர்தாம் தந்தையென்று மக்களுக்குச் சொல்பவள் தாய்; மக்களை, நல்ல ஆசானிடத்தில் சேர்ப்பித்து அவர்களுக்கு கல்வி கற்பிக்கக் காரணியும், வாழும் முறைகளைச் சொல்லித்தருபவனும் தந்தை; தம் மாணக்கருக்கு கல்வியும், அறிவும் தந்து, உயர் பொருளாம் இறையை அடைய ஆற்றுப்படுத்துபவர் ஆசான். தாய் பெற்றாலும், ஆசான் வழிகாட்டியாக இருந்தாலும், தந்தையின் பங்கே மக்களை நெறிப்படுத்தி, வாழ்க்கைப் பாதையில் சரிவர செலுத்துவதால், தந்தையின் கடமையை முன்னிருத்தி இக்குறள் பேசுகிறது. ஆனால் இன்றைய வாழ்வியல் உண்மையை ஒட்டியே எனது குறள்!

இன்றெனது குறள்:
பெற்றோரின் நற்கடமை தம்மக்கள் கற்றோர்முன்
உற்றோராய்  நிற்கச் செயல்

ஜூன் 26, 2012

குறளின் குரல் - 76


26th June, 2012

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
                      (குறள் 66: மக்கட்பேறு அதிகாரம்)

Transliteration:
Kuzhal inidhu yAzhinidhu enbatham makkaL
Mazhalaich chol kELAdhavar

Kuzhal inidhu – Music of flute is sweet
yAzhinidhu  - Music of lute is sweeter
enba – music enthusiasts or self proclaimed connoiseurs
tham makkaL – their won children’s
Mazhalaich chol – sweet babble of their little children
kELAdhavar – when they don’t care to hear or don’t have the progenial gift

Here is another verse which is often cited in speeches as well as in written articles. The children’s babble or baby talk is sweeter than the music of flute and lute to parents, is the gist of this verse.  Great orators’s speech of great literary values and the expert musical display by exponents of music pale compare to a child’s babble when it comes to the listening pleasure to parents.

Little babies try out with their voice, the sounds, for nearly a year before saying their first word. The combination of unique sounds and patterns of their growing up environment has definitive influence in the way they develop their speech and musical cognition.  Not sure if literary tradition and works of other languages have celebrated the baby’s babble as much as Tamil literature. Many of them from Sangam to contemporary literary works have mentioned this comparison of babble to music produced by lute and the flute.  
Kamban has said, the sweetness of flute and lute, have been given to them, by the sweetness of baby’s babble. He also says that the musical instruments like yAzh(lute), kuzhal(flute) and vINa (Another form of lute) will be shamed before  a child’s babble. vaLLuvar himself has said in a different place, it is sweeter than nectar, which has been echoed in another tamil work called, “iniyavai nArppadhu”.

Another subtle idea conveyed through this verse is this: simple natural pleasures of life are more valuable than created pleasures of the world. Inward looking reveals great manythings than outward looking is another thought conveyed, at least as I see it.

Since there are plenty of musical instruments of different kinds these days, I have tried to generalize the thought in the new verse and also tried to keep the old thought in a different verse.

“Flute and lute are sweet only to ears of people,
  not blessed with sweetness of progenial babble”

குழல்இனிது – குழலின் இசை இனிமையானது
யாழ்இனிது – யாழின் இசை இனிமையானது
என்ப – என்று இசை விரும்பிகள் அவரவர் விருப்பினை உரத்துச் சொல்லவும், மறுத்துச் சொல்லவும் செய்வர்
தம் மக்கள் - தம்முடைய குழந்தைகளின்
மழலைச் சொல் – இனிய மழலைப் பேச்சினை (முன்னர் கூறியதுபோல், அமுதை விடவும்)
கேளாதவர் – கேட்காதவர்கள், அல்லது அப்பேற்றினை பெறாதவர்கள்

இதுவும் பலராலும் மேற்கோளாகப் பேசப்படும் ஒரு குறள்.  குழவியரின் மழலையமுதம் கேட்கும் பேற்றினைப் பெற்றவர்களுக்கு, மற்ற இசைக்கருவிகளால் இசைக்கப்பெரும் மிக இனிமையான இசையும் கூட பெரிதெனத் தெரியாது. மிகச்சிறந்த பேச்சாளார்களின் இலக்கணமும், இலக்கியமுமடங்கிய சொற்பொழிவுகளிலோ, இசை விற்பன்னர்களின் இசைநுணுக்கங்கள் நிறைந்த இசைக்கச்சேரிகளிலோ இல்லாத இன்பம், குழந்தைகள் பேசும் மழலை மொழியைக் கேட்போருக்கு உண்டு.

கம்பர் ஊர்தேடு படலத்தில் சொல்வது: “குழலும் வீணையும் யாழுமென்றினையன குழைய மழலை மென்மொழி” என்று. அவரே உண்டாட்டுப் படலத்தில், “யாழ்க்கும் மின்குழற்கும் இன்பம் அளித்தன் இவையாம் என்னக் கேட்குமென் மழலை” என்பார். முதலில் குழல், வீணை, யாழ்போன்ற இசைக்கருவிகளி தோய்ந்த இவையெல்லாம் குழையும்படி, வெட்கும்படி இருக்குமாம் மழலை மொழி அதுவும் மென் மொழியென என்கிறார். பின்னர் யாழ், மின்னுகின்ற குழற்குமே இனிமையை தந்ததே குழவியரின் மழலை மென் மொழி என்கிறார். 

புறநானூற்றிலும் தந்தையர்க்கு, புதல்வர்தம் மழலை யாழினும் இனிது என்று காணப்பெறுகிறது. இனியவை நாற்பது பாடல் ஒன்றிலும் “குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே”

குறள்விளக்கமாகக் குறள் எழுதும்போது, இன்று இசையுலகில் பல்வேறு துளை, மற்றும் கம்பிக்கருவிகள் உள்ளதால், பொதுவாகவும் எழுதவேண்டுமென்றதால், வள்ளுவரை ஒட்டியும், இன்றைய இசைத்துறை இயல்பை ஒட்டியும் எழுதியுள்ளேன்.

இன்றெனது குறள்(கள்):
தன்மக்கள் சொல்மதலை கேளாரே யாழ்குழலின்
இன்னிசையைக் கொண்டாடு வர்

தன்மக்கள் சொல்மதலை கேளார் இசைக்கருவி
தன்னிசையைக் கொண்டாடு வர்

ஜூன் 25, 2012

குறளின் குரல் - 75

25th  June, 2012

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.
                     (குறள் 65: மக்கட்பேறு அதிகாரம்)

Transliteration:
makkaLmei  thInDal  uDaRkinbam matRuavar
soRkETTal inbam sevikku

makkaLmei  -  body of own children
thInDal  - hugging (the children in utmost affection)
uDaRkinbam  - feels good and pleasant to parents
matRuavar – also their
soRkETTal  -listening to (their) babble
inbam – is sweet and pleasant
sevikku – to ears.

Poet BharathiyAr in his “Chinnanchiru kiLiyE” song sees Kannan as “Kannamma”, the child. He feels like just lifting and hugging that little child who comes before him dancing; when he kisses on her head, he feels so proud like her parent; when he embraces her, he gets ecstatic with overwhelming parental love. The expression of his parentlal bliss has been so well captured in his words.  To feel rapturous over a child is an acceptable state for every parent not to be construed as vain-pride.

Hugging the children that come to parents running with their baby gait, is about giving the feeling of safety and showering unbridled affection. The expression gives an indescribable pleasure that is only experienceable, not explainable. Their babble is greater treat to ears and vaLLuvar will liken it to nectar in the following verse.

Unlike other religion, the Hindu religion allows the devotee to see the Godhead as a parent, friend, lover, and a child, which gives a closeness and bonding. Repeatedly many poets have addressed the Godhead as one of the above. Also, we see the God in the child. Our cultural mindset has always been broad to let us think ourselves as world citizens, not confined to any man made regional boundaries, and everyone is our relative. Wherever we look, we see the manifestation of God, and more than anybody, a child is considered close to God because of his viceless, all forgetting, forgiving nature.  In essence, a child is an embodiment of such broad thinking. Hence their closeness is closeness to God for parents and may be that’s the reason their embrace is a pleasure and their words are treat to ears.

As said earlier, vaLLuvar must have been a proud parent and enjoyed the parenthood to express with such finesse.

“Sweet it feels to parents, the tender hugs of the child
So it is, to hear the sweet babble uttered by the bud.”

தமிழிலே:
மக்கள்மெய் – குழந்தைகளை உடலோடு அள்ளி
தீண்டல் – தாயன்பின் மிகுதியிலேஅணைத்து ஆரத்தழுவுதல்
உடற்கின்பம் – பெற்றோர்களின் உடலுக்கு இன்பத்தைத் தரக்கூடியது (
மற்றுஅவர் – தவிரவும் அவர்களின்
சொற்கேட்டல் – மழலைச் சொல்லைக் கேட்பது
இன்பம் - இனிமையானது
செவிக்கு – செவிகளுக்கு (பெற்றோர்களின்)

அள்ளி அணத்திடவே என்முன்னே ஆடிவருந்தேனே’, ‘உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கிவளருதடி’, ‘உன்னைத்தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தம் ஆகுதடி’ என்றெல்லாம் பாரதியார், உள்ளத்தில் பொங்கிவரக்கூடிய தாயன்பிலே (வாத்ஸல்யம்), கண்ணனை, கண்ணம்மாவாக பாடியிருப்பார். உன்மத்தம் என்பது சாதாரண வழக்கிலே கூறுவதுபோல ஒரு கிறக்கதையும், மயக்கத்தையும் கொடுப்பது. தன்படைப்பைத் தானே உச்சிமுகந்துகொள்ளும் ஒரு அனுபவம். இது பெற்றோர்களுக்கே உண்டான ஒத்துக்கொள்ளக்கூடிய, தற்பெருமை என்று சொல்லமுடியாத ஒரு மகிழ்ச்சி நிலை!

தத்தித் தளர்நடையிட்டு வரும் குழந்தைகளை, வாரியணைத்து நெஞ்சாரத் தழுவுதல், குழந்தைகளுக்குப் பாதுகாப்பு உணர்வை அளிக்கும், பெற்றோர்களுக்கு பாச நெகிழ்வைத்தரும்.  அத்தகைய தழுவலானது, பாசநெகிழ்வோடு, அவர்கள் உடலுக்கும் ஒரு இன்பத்தைக்கொடுக்கும். இந்த உணர்வை பெற்றோர்கள் அனுபவிக்கமட்டுமே முடியும், சொற்களில் விவரிக்க இயலாது.  அதேபோல, இளம் குழவிகள் பேசும் மழலை மொழிகளோ, செவிகளுக்கும் பேரின்பத்தைத் தரக்கூடியது.

வேறு எந்த மதத்திலும் இல்லாத ஒரு வித்தியாசமான வழிபாட்டுமுறை இந்து மதத்திலே உண்டு. இறைவனை தந்தையாக, தாயாக, தோழனாக, நாயகனாக, நாயகியாக, குழந்தையாக உருவகித்து, வழிபடுதல் ஒருவித அணுக்கத்தை இறைவனோடு ஏற்படுத்துகிறது. குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றே பார்ப்பது நம்மில் ஊரிய ஒன்று. யாதும் ஊரே, யாவரும் கேளிர், என்பது போல், பார்க்கும் இடங்களில் எல்லாம் பரம்பொருள், பார்க்கும் உருவும் இறையே என்னும் போது, குழந்தைகளின் பாச அணைப்பு, இறைவனின் நெருக்கத்தைத் தருவதாகவே உணருவர் பெற்றோர். பாரதியின் கண்ணன்/கண்ணம்மா பாடல்களும் அத்தகையவயே. மற்ற எந்த உருவகத்தைவிடவும், குழந்தையென்ற உருவகம், பெற்றோருக்கு,  உரிமையும், பெருமிதமும் தருகிறது.

முன்குறளிலே சொன்னது போல, வள்ளுவர், பெற்றோனாக இருந்து, தான் மகிழ்ந்து அனுபவங்களைத்தான் எழுத்தில் வடித்துள்ளார் என்பது இக்குறளாலும் உறுதிப்படுகிறது.

இன்றெனது குறள்:
மெய்க்கமுதாம் தங்குழவி மெய்த்தழுவல் – கேள்விக்கு
மெய்யமுதாம் அம்மழலைச் சொல்

ஜூன் 24, 2012

குறளின் குரல் - 74


24th  June, 2012

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
                     (குறள் 64: மக்கட்பேறு அதிகாரம்)

amizhdhinum AtRa inidhE tham makkaL
siRukai aLAvia kUzh

amizhdhinum  AtRa   -  more than nectar
inidhE  - sweet
tham makkaL – their own little children’s
siRukai – baby hands
aLAvia – played with
kUzh - food

This verse gives clues to the delicate sense of aesthetics of vaLLuvar. Usually whatever their liitle children (babies) do, parents are at awe and enjoy every bit of it. From the time a child turns, crawls, takes his/her first baby steps, every step of  growing up is thoroughly enjoyable to everyone, especially to parents. It is a true blessing to have children in one’s life.

This gives another clue to the question, if vaLLuvar had any children. If he had a wife in vAsuki (could be completely a fictional character), he sure must have had children. Next two verses ("makkaL mei thInDum",  “kuzhal inidhu yAzh inidhu” ) give ample clues to the fact he indeed had children and the expressions are definitely from his own personal experience. Who knows whatever happened to his progeny and his successive generations? Did they live gloriously too and made their parents proud? Were they successful poets like vaLLuvar?

When their little children mess up and play with food with their little, tender fingers, the messed up food tastes even better than nectar and is not discarded as waste. We all know, if the same is done slightly grown up children, then it is matter of irritation. So he has used the word “siRu kai”, meaning tender baby hands. This verse and the following two verses are especially wriiten about little babies in this chapter.

What is obvious is that vaLLuvar had the heart of a little child with excitement and awe at these little things and had the ability to express them so beautifully.

“Food messed up and played with baby’s hands taste
 Better than even the Nectar and to parents, is no waste”

தமிழிலே:
அமிழ்தினும் ஆற்ற – அமுதத்தை விட மிகவும்
இனிதே - இனிமையானது
தம் மக்கள் – தன்னுடைய சிறு குழந்தைகளின்
சிறுகை  - பிஞ்சுக் கைகள்
அளாவிய – அளைந்து விளையாடிய
கூழ் – கூழானது.

இக்குறளிலே வள்ளுவரின் நுணுக்கமான அழகுணர்ச்சியும், இரசிக்கும் மனமும் தெரியவருகிறது. குழந்தைகளின் எல்லாவிதச் செயல்களுமே பெற்றோர்களுக்கு பிடித்தமானவை. அவர்கள் கவிழ்ந்துகொள்ளும் பருவம், தவழும் பருவம், தத்தித்தத்தி தளர்நடை போடும் பருவம் என்று ஒவ்வொரு கட்ட வளர்ச்சியுமே இரசித்து மகிழ்வது பெற்றோர்களின் தவப்பயன் எனலாம்.

அதிலும் தன்னுடைய சிறு குழந்தையின் பிஞ்சு விரல்கள் சோற்றில் அளைந்து விளையாடும் போது, அவ்விரல்கள் அளைந்த கூழும் அவர்களுக்கு அமுதையும் விட இனிமையானதாக இருக்கும். சற்றே வளர்ந்தபருவத்துப் பிள்ளைகள் இதையே செய்தால், அவற்றை பெற்றோர்கள்கூட பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். அதனாலேயே “சிறுகை”, என்றது.

இக்குறளின் மூலமும், அடுத்து வரும் இரு குறள்கள் (“மக்கள் மெய்த்தீண்டல்”, “குழலினிது, யாழினிது”) மூலமும் வள்ளுவருக்குக் குழந்தைகள் இருந்தது தெளிவாகிறது. வாசுகி என்னும் மனவி இருந்தாளென்றால், இவர்களுக்குக் குழந்தைகளும் இருந்திருக்கவேண்டும். வள்ளுவனின் சந்ததியினர்கள் என்னவானார்கள்? வாழ்வாங்கு வாழ்ந்தார்களா? தம்தந்தை எந்நோற்றான்கொல் எனும்படி செய்தார்களா என்ற கேள்வி எழுகிறது.

தானே உணர்ந்து தெளிந்தால்தான்மட்டுமே, இவ்வளவு அழகாக அவற்றைப்பற்றி கூறியிருக்க முடியும். தவிரவும், குழந்தைகளின் குறும்புகளை இவ்வளவு நூணுக்கமாக இரசிக்கவும் ஒரு குழந்தை மனமும்  வேண்டும். அது வள்ளுவனுக்கு நிச்சயமாக் இருந்திருக்கிறது.

இன்றெனது குறள்:
தன்குழவி தன்சிறுகை சோற்றின் துழவிதரும்
இன்னமுதிற் கீடுண்டோ சொல்!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...