மார்ச் 15, 2018

இப்படி எப்படி - கவியரங்கக் கவிதை.

ஜனவரி மாதம், கவிவேழம் இலந்தை இராமசாமியவர்களின் ஆன்ற தலைமையில் நடந்த இணையக் கவியரங்கத்திற்காக எழுதிய கவிதை..

------------------------------------------------------------------------
கவியரங்கம் - 44

தலைப்பு: : இப்படி எப்படி?

தொடக்கநாள்: 28-திசம்பர்-2017
இட்டநாள்: 11-சனவரி-2018

-------------------------------------------------------------------

வேழமுகன் போற்றி!

வேழமுகம் போற்றி வினைகள் துவங்குவோர்க்குப்
பாழாமோ ஏதுமிந்த பாரினிலே? - வாழுமிந்த
வையத்தில் செந்தமிழாய் வந்துளத் தேகுதுதிக்
கையனே, நீயன்றோ காப்பு!

கவிவேழம் போற்றி!

ஆழப் பயின்றறிவில் ஆன்றதலை மைக்கவி
வேழம்நம் பாப்பயிர்க்கு வித்தாவார் - சூழும்
கவிவாணர் பூத்திங்குக் காய்த்துக் கனிய
உவந்தே இடுவார் உரம்!

கவிக்குலத்தோர் போற்றி!

செந்தமிழ்த் தேறலால் தீங்கவிகள் யாத்திடும்
சந்தவசந் தக்கவிச் சான்றோரே! - அந்தமின்றி
வந்துநாளும் இவ்வரங்கில் வட்டிக்கும் பாக்குலமே!
தந்தேன் உமக்கெல்லாம் தாழ்!

இப்படி எப்படி?

இப்படி எப்படி என்றே வியக்க
அப்பா! எத்தனை அதிசயம் உலகில்?
இப்படி எப்படி என்றே விதுப்புற
தப்பாய் எத்தனை தாரணி தன்னில்?
இப்படி எப்படி என்றே நினைக்க
சிப்பியின் முத்தாய் சிந்தனைக் குவியலைச்
செப்ப முடைத்தாய் செதுக்கிப் புதுக்க
இப்பா வரங்கில் எத்தனைக் கவிஞர்? ....(1)

சங்கத் தமிழ்ப்பா சாற்றுங் கவிக்குலம்
இங்கே திரண்டு எழுதும் கவிதைகள்
பங்கில் உமையொரு பாகன் கூரைகீழ்
தங்கத் தாமரை தடாகம் தன்னிலே
பொங்கும் புனல்மேல் பொலியும் பலகையாய் 
நங்கவி யாப்பை நன்றெனில் ஏற்கும்!
மங்கிய தென்றால் மயக்கம் நீக்கித்
பங்கம் வராமல் பகரே செய்யும்!....(2)

இவர்கள் வாக்கில் எத்தனைப் பொருட்கள்!
உவக்கச் சிலவாம், உவட்டும் சிலவாம்!
கவர்ந்து உள்ளம் கனியச் சிலவாம்!
சிவந்து கண்கள் சினக்கச் சிலவாம்
பவத்தில் காணும் பருப்பொருள் எல்லாம்
சிவமே என்னும் சிந்தனை சிலவாம்!
அவமே ஆயினும் அழகாய் கவிதைத்
தவமாய் தமிழால் தழைக்கும் புலமாம்!....(3)

நாட்டு நடப்பினில் நாளும் வெதும்பி
நாட்டம் வாழ்வில் நலிந்த மனங்களை,
ஈட்டும் வழியெதும் இல்லா தொழிந்து
கேட்டில் உழன்று கிழியும் உடல்களை,
ஆட்டம் போட்டு அரசியல் செய்து
வேட்டை யாடிடும் வீணர் கும்பலை,
ஓட்டை விற்கும் ஒழுக்க கேட்டைச்
சாட்டை கொண்டு சாடும் கவிகள்!....(4)

சூட்டிகை யில்லா சுதந்திர மக்களை,
தீட்டென தீயத் தீண்டா மையெனும்
பூட்டினை இன்னும் போடுவார் தம்மை,
பாட்டிலே பிறமொழிப் பதங்கள் சேர்த்து
‘நோட்டுக்’ காக நுவல்திரைக் கவிகளை
மேட்டுக் குடியின் மேதமை யென்று
நீட்டி முழக்கும் நிருமூ டிகளைக்
காட்டிக் கசையடிக் கனலாய் கவிகள்!....(5)

இத்தரை மீதினில் எத்தனை மதங்கள்? 
நித்தமும் அவற்றால் நேர்பவை காணின்,
சித்தரும் முத்தரும் சீரறி வாளரும்
வித்தகச் சாத்திர வேதவல் லோர்களும்
பித்தம் நீக்கப் பிறந்து இவணா?
புத்தர் பிறந்ததும் போதியின் கீழதில்
உத்தம ஞானம் உணர்ந்துப் பெற்றதும்
சத்தியம் தானா? சாத்தியம் தானா?....(6)

எங்கே நேர்மை? எங்கே ஒண்மை?
எங்கே உண்மை? எங்கே தூய்மை?
எங்கே எங்கே எங்கே என்றே
அங்கும் இங்கும் அலையும் மனங்கள்
சிங்க மாகச் சீறும் குரல்கள்
அங்கதப் பேச்சு, அங்க லாய்ப்புகள்!
இங்கே எப்படி இப்படி யாச்சென,
கங்குல் நிலைக்காய் கதறும் கவிகள்!....(7)

கவிகள் வாக்கில் கனலுண் டானால்
கவிதை பூக்கள் கனன்றெழு மானால்
புவிமேல் சத்தியம் புன்மைகள் மாயும்!
கவிந்த இருளும் கன்மக் கேடும்
அவியும்! அளிசெய் ஆதவன் அருளால்
சவியுடன் மீளும் சகமும் ஒருநாள்!
கவிவல் லோரே! கருமாய் அதனால்,
கவியாப் பீரே! கவியாப் பீரே!....(8)

இப்படி எப்படி என்பது வேதனை!
இப்படி எப்படி என்பது வியப்பு!
இப்படி எப்படி என்பது சீற்றம்!
இப்படி எப்படி என்பது சிந்தனை!
செப்படி வித்தை செய்வது இல்லை!
தப்படி வைத்தால் தப்புவ தென்னாம்?
அப்படி யன்றி, அதனால் கேட்போம் 
இப்படி எப்படி என்றே கவிதையில்!....(9)

மார்ச் 14, 2018

ஸ்டீஃபன் ஹாக்கிங் (1942-2018)

ஸ்டீஃபன் ஹாக்கிங்!
(ஜனவரி 1942- மார்ச் 2018)

நேரத்தின் சுருக்கமான வரலாற்றை 
...நிறையாக ஆராய்ந்து நூலாக்கி
சீரான விஞ்ஞான விளக்காக  
...செப்பமுற செய்தஸ்டீஃ பன்ஹாக்கிங்
பாரேத்தக் கோட்பாட்டு  இயற்பியலில் 
...பரிமளித்த விஞ்ஞான மேதையாக
பேரேற்று  வாழ்ந்துலகில் இன்றுசென்றார்,
...பெரும்பயணத் தாரகையாய் விண்வெளியில்!

ஞாலத்தின் தொன்றுதொட்ட ஞானவேள்வி
...ஞானியர்விஞ் ஞானியர்கள் தம்வழியில்
காலத்தின் துவக்கத்தை, எல்லையில்லா
...ககனத்தைக் கணிக்கின்ற வானவேள்வி!
சீலநெறிச் செல்வரோடு ஸ்டீபனைப்போல்
...சிந்திக்கும் அறிவியலார் செய்ததெல்லாம்
தூலமில்லா துரியத்தின் துளைபுகுந்து
...துன்னியுணர் வெய்துகின்ற சோதனைதாம்!

காலமெல்லாம் கடந்தவந்த கண்ணுதலான்
...கருத்தினைத்தான் யாரறிவார்? யார்கணிப்பார்?
ஆலத்தின்கீழ் அமர்ந்தந்த நால்வருக்கு
...அமைதியாக உபதேசம் செய்துவித்த
காலகாலன் கங்கைநாதன் கண்மலர்ந்து
...கனிவுடனே வரவேற்று ஒருவேளை
சாலவுரைப் பானோயிம் மாயையெல்லாம்?
...சற்றும்யாம் அறியோமே  பராபரமே!

மார்ச் 01, 2018

கமலஹாசன் கவிதைக்குப் பதில் கவிதை...

கமலஹாசன் ஒரு விஜய் டீ.வி. பேட்டியில், (பேட்டி எடுத்தது, அவருடைய அண்ணன் மகள் அனுஹாசனே) தன்னுடைய கடவுள் மறுப்புக் கொள்கையை முன்னெடுக்கும் விதமாகவும், தன்னுடைய தமிழ்ப் புலமையை பறைசாற்றும் விதமாகவும் ஒரு கவிதை சொல்லியிருந்தார். ஓரிரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு முன்பிருக்கலாம்.. அதை கேட்டதன் விளைவாகப் பிறந்தது இந்த கவிதை. இதை முகநூலிலே இட்டிருந்தேன்.. எத்தனைப்பேர்கள் என்னைப்போல் கொத்தித்திருக்கிறார்கள் என்று தெரியவந்தது.. இப்போது சமீபத்தில் சன் டீவி நட்சத்திர விருது வழங்கும் விழாவிலும் இளையராஜாவின் வாழ்த்துக்கு இதேபோன்று ஒரு மேதாவித்தனமாக ஒரு பதிலைச் சொல்லியிருந்தார்... அதற்கும் சேர்த்து அக்கவிதையை என்னுடைய பதிவுப்பக்களிலும் இடுகிறேன்.. எப்போது வேண்டுமானலும் படித்துக்கொள்ளலாமே..
--------

Well, I had posted a reply poem to Kamalahasan's poem on "GOD". While I grew up loving him as an actor of high talent, I have never been a fan of his conduct in personal life and have viewed him as a person of lowest morality. Of course, his die hard fans would trash me for saying so. Never mind, my opinion is mine and I will never thrust on anyone nor be thrusted anyone's view also. 
While it is perfectly OK for him to be the atheist that he wants to be (which is his belief) and from time to time confuse people by his stunted delivery of whatever he wants to convey. Interviewed by his own niece Anu Hasan for Vijay TV (probably in 2012), he delivers a Tamil poem, probably to put forth his reasons for why he is a non-believer and to ridicule the millions of people that believe in the existence of the GOD... 
Obviously an attempt to show case his poetic prowess. Well, he has a way with words to set them to meter and also has the years of acting experience to say with the required intonation to make an impactful delivery.. 
But what could be his purpose? Even assuming the freedom of speech, is he expecting to imply more than 90% believers of his own state, that he is hoping to rule (as CM), are fools? As such he speaks in a "put on" accent (he is never natural and casual when he addresses people) and in a language simple people of Tamil country cannot understand. Anyways I felt like writing a reply to him in a similar poetic format and put out a video.. 
Well I am not Kamal and don't have the talents of this huge actor; But I believe in the existence of higher being than us in the Universe and never have the arrogance that I have seen it all to refute the divine presence in the Universe.. Well even there is none, so what? It gives me a sense of purpose, discipline and something to hope for in life. So here is my attempt in a video..


பெரியவா ஜெயேந்திர ஸரஸ்வதி அஞ்சலி

28,பிப்ரவரி, 2018, காலை 7.30, மார்கன் ஹில், கலிஃபோர்னியா.

நேற்று செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து நிலையில்லாமல் இருந்த மனத்திற்கு அனந்த் அவர்களின் அற்புத அனுபவத்தில் முகிழ்த்த கவிதை நயமிகு அஞ்சலியாக இருந்தது. 

சிறுவனாகவும், வளர்ந்தபிறகும், காஞ்சியிலும், கலவையிலும் நான் மஹாப் பெரியவரோடு, புதுப்பெரியவரை தரிசனம் செய்த நாட்களும், பின்பு ஒரு தீபாவளித் திருநாளில் (80-ல்) அவரை என்னுடைய ஆத்ம குருநாதர் டி.என்.எஸ்ஸோடு, சென்று தரிசித்ததும், அண்மையில் என்னுடைய பெண்ணின் திருமணப் பத்திரிக்கையை அவர்கையில் கொடுத்து ஆசி பெற்றதும் நினைவுக்கு வந்தன. அனந்தர் அளித்த கவிதை நடையிலேயே பிறந்தது இவ்வஞ்சலிக் கவிதை..

சந்திர சேகர ஜகத்குரு வழியினில் சந்ததம் நின்றவராம்
  சங்கர நெறியினை தன்வழி யாகவே தரணியில் தந்தவராம்
அந்தமில் உறுதியை ஆஶ்ரம வாழ்வினில் அனுதினம் கண்டவராம்
   அகிலம் முழுவதும் அரன்குடி கீழெனும் அருள்வழி தந்தவராம்
சிந்தனைச் சீலமும் செயல்களில் தூய்மையும் சீரென நின்றவராம் 
   சீவனை ஈஸ்வர சேவைக் கென்றே தினமும் தந்தவராம்
நிந்தித் தார்க்கும் நிறைபுகழ் வோர்க்கும் நிறையென நின்றவராம்
  நெஞ்சினில் யார்க்கும் நேரிய கருணை நினைந்திடு மறையவராம்

இந்திர சரஸ்வதி எனும்யதிப் பேரொடு இணைஜெயம் கொண்டவராம்
  ஈர்த்திடும் தேஜஸ் இணையில் ஆளுமை இணைந்தே பிறந்தவராம்
முந்தை பிறப்பதில் முடியாச் சேவைகள் முடித்திட வந்தவராம்
  முற்றுந் துறந்த முனிநிலை ஏற்றதில் மூழ்கி  முடித்தவராம்
விந்தை உலகோர் வேதனை செய்தும் விளைந்திடு குறையிலராம்
  வேதன் தந்த வேடத் தீதொரு விளையாட் டென்றவாரம்
கந்தை கமண்டலம் கடுநிய மத்தொடு காத்தவோர் நேரியராம்
  கண்ணீ ரோடவர் கழல்கள பணிந்து கறைகள் கரைத்திடுவோம்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...