ஜூலை 31, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 51

काषायमंशुकमिव प्रकटं दधानो
माणिक्यकुण्डलरुचिं ममताविरोधी
श्रुत्यन्तसीमनि रतः सुतरां चकास्ति
कामाक्षि तावककटाक्षयतीश्वरोसौ 51

காஷாயமம்ஶுகமிவ ப்ரகடம் ததானோ
மாணிக்ய குண்டலருசிம் மமதாவிரோதீ |
ஶ்ருத்யந்த ஸீமனி ரத: ஸுதராம் சகாஸ்தி
காமாக்ஷி தாவக கடாக்ஷ யதீஶ்வரோஸௌ ||51||

ஹே காமாக்ஷி! உன்னுடைய கடைக்கண்ணாம் தவபுங்கவர் உனது மாணிக்கக் குழைகளுடைய சிவந்த ஒளியினால், காவியுடை தரித்தவர்போல், மமதை கூடிய எண்ணத்துக்கு எதிரியாக இருந்துகொண்டு வேதமுடியாம் உபநிடதக் கருத்தினில் ஈடுபட்டவராக மிகவும் விளங்குகிறார்!

உன்கடைக் கண்ணாம் உயர்தவ புங்கவர் உன்னுடைய
மின்னிடும் மாணிக்க மிஞ்சிகை கள்மீது மேவுமொளி
தன்னால் சிவந்த தவவுடை யார்போலே தற்செருக்கின்
ஒன்னாராய், காமாட்சீ ஒண்பொருள் வேதாந்தம் ஒன்றினாரே!    


தவபுங்கவர் - தவத்திலுயர்ந்தோர்; மிஞ்சிகை - குண்டலம், குழை; ஒன்னார் - எதிரி

ஜூலை 30, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 50

व्रीडनुवृत्तिरमणीकृतसाहचर्या
शैवालितां गलरुचा शशिशेखरस्य
कामाक्षि कान्तिसरसीं त्वदपाङ्गलक्ष्मीः
मन्दं समाश्रयति मज्जनखेलनाय 50

வ்ரீடனு வ்ருத்தி ரமணீக்ருத ஸாஹசர்யா
ஶைவாலிதாம் களருசா ஶஶிஶேகரஸ்ய |
காமாக்ஷி காந்திஸரஸீம் த்வதபாங்கலக்ஷ்மீ:
மந்தம் ஸமாஶ்ரயதி மஜ்ஜன கேலனாய ||50||

ஹே காமாக்ஷி! உனது கடைகண்ணாம் சீதேவி, வெட்கம் என்னும் தோழி தன்னைத் தொடர, நீராடலுக்காக சந்திர சேகரரின் கழுத்தின் அழகினால் பாசி படர்ந்ததுபோலுள்ள ஒளியாம் குளத்தை அடைகிறாளே!

காமாட்சீ நின்றன் கடைக்கண் திரும களாளிலச்சை
தாமது தோழிபோல் தன்னைத் தொடர்ந்திட, தாம்குளிக்க
வாமத் துனைகொள் மதிசேக ரர்தம் மணிகழுத்தின்
காமரால் பாசிகொள் காந்தி குளமதைக் கண்டனளே!


திருமகளாள் - ஸ்ரீதேவி, இலச்சை - நாணம்; காமர் - அழகு

ஜூலை 29, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 49

मार्गेण मञ्जुकचकान्तितमोवृतेन
मन्दायमानगमना मदनातुरासौ
कामाक्षि दृष्टिरयते तव शङ्कराय
सङ्केतभूमिमचिरादभिसारिकेव 49

மார்கேண மஞ்ஜு கச காந்தி தமோவ்ருதேன
மன்தாயமான கமனா மதனாதுராஸௌ |
காமாக்ஷி த்ருஷ்டிரயதே தவ ம்கராய
ஸம்கேத பூமிமசிராதபிஸாரிகேவ ||49||

காமாக்ஷியே!  ஒளிமறைவாய் ஓரிடத்தில் தன் நாயகனைச் சேரச் செல்லும் வேசாரியைப் போல, அழகிய கருங்கூந்தலாகிய இருட்டில், மெதுவாக, யாருமறியாமல், மெதுவாக நடந்து செல்பவளாக, காமத்தால் பீடிக்கப்பட்டவளாக, உன் கடைக்கண் பார்வை, சங்கரரைச் சேருகிறது.

உன்கடைக் கண்கள், உருவிலி லீலைகள் உந்துவதால்,
மின்னும் குழற்கொத்தில் மேவும் இருள்வழி, மெல்லமெல்ல
மன்னும்வே சாரி, மறைவாய் ஒளிந்துதம் மாரனிடம்
தன்படி, காமாட்சீ, தன்பிடி யாய்செல்லும் தன்மையதே!


உருவில் - மன்மதன்; குழற்கொத்து - கூந்தல்; வேசாரி - வேசை; தன்படி - தாமாகவே; தன்பிடி - சிவனுக்கு அருகிருத்தல்; சாமீப்யம்;

ஜூலை 28, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 48

साम्राज्यमङ्गलविधौ मकरध्वजस्य
लोलालकालिकृततोरणमाल्यशोभे
कामेश्वरि प्रचलदुत्पलवैजयन्ती-
चातुर्यमेति तव चञ्चलदृष्टिपातः 48

ஸாம்ராஜ்ய மங்கல விதௌ மகரத்வஜஸ்ய
லோலால காலிக்ருத தோரணமால்ய ஶோபே |
காமேஶ்வரி ப்ரசலதுத்பல வைஜயந்தீ-
சாதுர்யமேதி தவ சஞ்சல த்ருஷ்டிபாத: ||48|

காமேசுவரியே! ஆடும் அளக வரிசையாம் தோரண மாலைகளால் அழகு கூடிய, மன்மதனின் அரசு மகுடாபிடேக மங்கள வைபவத்தில் உன்னுடைய அசையும் கண்கள், நீலோத்பல மாலைகளின் அழகை அடைகிறது!

ஆடும் அளக அணிதோ ரணமாலை ஆரியோடு
கூடும் அனங்கன் குடியின் முடிசூட்டிக் கொள்ளுமந்த
ஈடில் சுபத்தில் இனிதே அசையுன் இருவிழியில்
ஊடும் கரும்பூ உருமாலை, காமாட்சீ, ஒண்ணழகே!

அளகம் - கூந்தல்; அணி - வரிசை; ஆரி, உரு -அழகு; சுபம்-மங்கலம்; அனங்கன்-மன்மதன்; கரும்பூ - நீலோற்பல மலர்; ஒண் - மேன்மை

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...