அக்டோபர் 17, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே - 1

நேற்று சாரதா பதிப்பக வெளியீடான என்ற கல்கியின் சிறுகதை, குறுநாடகமென்று கலந்தாங்கட்டியாகத் தொகுக்கப்பட்டு, “பாங்கர் விநாயகர்என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். இந்த புத்தகத்தில் விடுதலை இயக்க காலத்தில் திருச்செங்கோடு காந்தியாஸ்ரமத்தில் கல்கி தங்கி, அவர்களுடைய மதுவிலக்கு பிரசாரப் பத்திரிக்கைக்காக எழுதியவைத் தொகுக்கப்பட்டுள்ளன.

இதற்காக எழுதப்பட்ட ஒரு நீண்ட முன்னுரையே மிகவும் சுவாரசியமானது.. இராஜாஜி போன்ற மாமனிதர்களை நாம் எவ்வளவு எளிதாக மறந்துபோனோம் என்பதை நினைவுறுத்திஉள்ளத்தையும்தான்நம்மை வெட்கப்பட வைக்கிறது.. பல அரிய விஷயங்களை எளிதாகச் சொல்லும் இக்கதைகளும் நாடகங்களும் எத்தனை உத்தமர்கள் வாழ்ந்த நாடு நம்நாடு என்பதையும் நமக்குச் சொல்லுகின்றன. கூடவே அயோக்கியர்களும், களவாணிகளும் நம்மவரிலேயே எத்தனைப்பேர் இருந்திருக்கின்றனர் என்பதையும் தெள்ளத்தெளிவாகக் கூறுகிறது..

இதில் ஒரு மாதப்பத்திரிக்கையில் இராஜாஜியின் மேல் குற்றஞ்சாட்டி ஒரு செய்தி வந்ததாம்.. அதாவது.. “இராஜாஜி கதர் இயக்கத்துக்காகச் சேர்ந்த பணத்தைக் கொண்டுபோய்க் கொடைக்கானல் மலையில் சுகவாசம் செய்துவிட்டு வந்தார்”.. என்பதுதான் அந்த செய்திஅந்த செய்தி இராஜாஜியின் கவனதுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, அந்த பத்திரிக்கையின்மேல் வழக்குத் தொடரப்போவதாகச் சொன்னாராம்செய்தியைக் கொண்டுவந்தவர் திடுக்கிட்டு, “ மிக அழகாய் இருக்கிறதுஅந்த பத்திரிக்கையை எத்தனைப் பேர் படித்திருக்கப் போகிறார்கள்? படித்தாலுமே யார் நம்பப் போகிறார்கள்? அந்த பத்திரிக்கையின் மேல் கேஸ்போட்டால், தானாக மூடப்போகும் பத்திரிக்கைக்கு அநாவசியமாக விளம்பரமல்லவா கிடைத்துவிடும் என்றாராம்.

இது என்ன அக்கப்போராக இருக்கிறதே என்கிறீர்களா.. அதற்கு இராஜாஜி சொன்ன பதிலையும் படித்துவிடுங்கள்..

அப்படி அந்த பத்திரிக்கைக்குப் பிரபலம் வந்தால் வந்து விட்டு போகட்டும். என்னுடைய நல்ல பெயரைக் காப்பாற்றிக்கொள்ளவோ, யாராவது அவதூறை நம்பப்போகிறார்கள் என்றோ நான் கேஸ் போடவில்லை..  பத்திரிக்கை நடத்துபவர்கள் இந்த மாதிரி பொறுப்பற்ற முறையில் பொய் அவதூறு சொல்ல இடங்கொடுப்பது தேச நன்மைக்குப் பாதகமாகும். என்னுடைய வேலையை இது பாதிக்கப்போவதில்லை.. ஆனால் மற்றவர்களைப் பற்றி இம்மாதிரியெல்லாம் எழுதினால், பொது ஊழியம் செய்வதே முடியாத காரியமாகிவிடும். ஆகையால் வழக்குத் தொடர்ந்தே தீரவேண்டும்என்றார்..”

அந்த வழக்கு விசாரணைக்கு வந்து, அதில் இராஜிக்கே சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தது.. ஏனெனில் இராஜாஜி அதுவரை கொடைக்கானலுக்கேப் போனதில்லையாம்!

இப்போது ஊடகங்கள் பல்கிப் பெருகிவிட்டன. ஒருவிதத்தில் மக்களுக்குச் செய்திகளும், பலதரப்பட்ட வர்களின் பார்வைகளும் தெரிய வருகிறது என்றாலும்.. எதையுமே சரிபார்த்து உறுதி செய்ய யாருக்குமே நேரமில்லை, தைரியமில்லை. ஆக மொத்தம் உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் மெல்ல மெல்ல நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடக்கிறது..

ஒருபுறம் கட்சிகளை சார்ந்த ஊடகங்கள் (பத்திரிக்கை, தொலைக்காட்சி) மூளைச் சலவை செய்வதையே முழுநேரத் தொழிலாகவும், மக்களைத் தொடர்ச்சியாக பயமுறுத்துவதையே ஏற்றுக்கொண்ட கொள்கையாகவும் செயல் படுகின்றன.

சமூக வலைத்தளங்கள் பல்கிப்பெருகி, ஆபாசக் களஞ்சியங்களாகவே ஆகிவிட்டன. ட்விட்டர், வாட்ஸாப், ஃபேஸ்புக், யூட்யூப் இன்னும் இத்தியாதி இத்யாதி இணையதள செயலிகளெல்லாம் இணையே இல்லாத சமூக எதிர்மறை வினைக்களங்களாகவும், பெருகி வரும் விதம்விதமான குற்றங்களுக்குக் காரணிகளாகவும் மாறிவிட்டன.. இன்னும் புதுப்புது விதங்களில் நம்பிக்கையின்மை, சமய, இன, நிலைப்பாடுகளையொட்டி வெறுப்பை விதைத்து இழிவை வளர்க்கின்றன. அழிவைத்தான் அறுவடைச் செய்யப்போகிறோம்

#metoo இயக்கத்தினால் நன்மை விளைந்து காமக்கசடுகள் கழியுமென்று பார்த்தால், எதை நம்புவது, எதை நம்பாமல் இருப்பது என்றே தெரியாவண்ணம்என்னென்னவோ முளைக்கின்றன. வெட்ட வெட்ட முளைக்கும் அசுரத்தலைக்கள்போல்.. 

ஆள்பவர்களின் சிந்தனைகளைப் பற்றி நமக்குத் தெரியவில்லை.. தேர்தலில் உரக்கப் பேசுபவர்களும், பதவிக்கு வந்த பிறகு ஆழ்நிலைத் தியானமும் மௌனமும் பழகுகிறார்கள்.. ஆரவாரப் பேய்களாக மற்றவர்கள் கூவுகிறார்கள்..

எவர்களைக் குற்றஞ் சாட்டி ஆட்சியைப் பிடித்தார்களோ, அவர்களில் ஒருவரையும் நீதியால் தண்டிக்கமுடியவில்லை.. எல்லோருமே உழல் வலைப் பின்னலில் ஒருவரோடு ஒருவர் பின்னிப் பிணைந்திருக்கிறார்களோ என்னவோ? ஒருவர் முதுகள் இன்னொருவர் குத்தரிவாளை வைத்து, அணைத்துக்கொள்ளும் கயவர்களாக இருக்கிறார்கள்.. 

மதவியாபாரிகள், மதவிபச்சாரிகள், என்று அரசியல், சமயம், பொதுவாழ்க்கை எல்லாவற்றிலும் விரவி, அடிமுதல் நுனிவரை கயமை, கபடு, ஆசாரமின்மை, நெறி பிறழ்தல், நீதியின்மை, அரசியல் பிழைத்தல் என்று கிருமியாக வியாபித்து, விஷமாக சமூகங்கள் மெல்ல ஆனால் உறுதியாக மரித்துக்கொண்டிருக்கின்றன.

ஸம்பவாமி யுகே யுகேஎன்று சொன்ன கண்ணனோ, எங்கிருந்தோ புன்னகைத்துக் கொண்டிருக்கிறான்.

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...