ஜனவரி 31, 2015

குறளின் குரல் - 1017

102: (Sense of Shame or Modesty - நாணுடைமை)

[The word “nAN” has several meanings in Tamil lexicon. Most well known are string that is tied across the bow, the shame and modesty. Though modesty and sensitivity to shame are closely connected, they are not one and the same. This chapter is about being sensitive to shame, shameful activities and situations that bring shame to a person.]

31st Jan 2015

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.
                    (குறள் 1011: நாணுடைமை அதிகாரம்)

கருமத்தால் - ஒருவர் இழி செயல்களுக்காக
நாணுதல் நாணு - நாணுவதே பொதுவாக நாணம் எனப்படும்
திருநுதல் நல்லவர் - அழகிய நெற்றிகளை உடைய குலமகளிர்
நாணுப் பிற - கொள்ளும் நாணம் குண நலமாகிய பிற வகையைச் சார்ந்ததாகும்

பொதுவாக இழிந்த செயல்களுக்காக நல்லவர்கள் கொள்வதே நாணம் என்றறியப்படும். இவ்வகை நாணம் பண்புக்கேட்டுக்காகக் கொள்ளப்படுவது. ஆகனால் அழகிய நெற்றிகளை உடைய மங்கலம் நிறை குலமாதர்கள் கொள்ளும் நாணம், “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” எனக்கூடிய,  பண்பு நலங்களுள் ஒன்றாகிய நாணமாம்.

நாண் என்றால் என்ன என்பதை வரையறுத்து இவ்வதிக்காரக் கணக்கைத் துவக்குகிறார் வள்ளுவர்.

Transliteration:

karumaththAl nANudal nANuth thirunudal
nallavar nANup piRa

karumaththAl – for evil deeds
nANudal nANuth – being shameful is the generally known shame.
thirunudal nallavar – ladies for good families with beautiful foreheads
nANup piRa – what they have is not shame, but modesty, other way “nAN” is defined

What is defined by the word “nAN” is “shame” that good people have for evil deeds they become party to. This feeling of shame is for lack of virtue. But another meaning of “nAN” is “modesty”, which is a virtue that adorns the ladies of beautiful foreheads from good families; it is one of the four attributes defined for the totality of women of virtues.

Thus defining the grammar of the word “nAN”, vaLLuvar begins this chapter.

“Feeling abashed with shame for inappropriate deed
 is different from the modesty of women of great breed”


இன்றெனது குறள்:

மங்கையர் நாணமும் மற்றோர் இழிசெய்யும்
சங்கையால் நாணமும் வேறு
                         (சங்கை - ஒன்றைக் கருதிய உள்ளெண்ணம்)

mangaiyar naNamum maRROr izhiseyyum
sangaiyAl nANamum vERu.

ஜனவரி 30, 2015

குறளின் குரல் - 1016

30th Jan 2015

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து.
                                    (குறள் 1010: நன்றியில்செல்வம் அதிகாரம்)

சீருடைச் செல்வர் - புகழ் பெற்ற செல்வத்தினை உடையவர்கள்
சிறு துனி - சிறிதளவு வெறுப்புற்று ஈயாதொழியினும்
மாரி  - மழை தரும் மேகமானது
வறங் கூர்ந்தனையது உடைத்து - நீரற்று வறண்டார்போல் பெய்யாமைக்கு ஒப்பாகும்

நீருண்டமேகம், தன் கொடையாகிய மழையைப் பெய்யாது பொய்க்குமானால், மேகத்தால் ஒரு பயனும் இல்லை. அதேபோன்று, பெருஞ்செல்வத்தினை உடையவர்கள் ஈவதற்கு சிறிதளவே வெறுப்புற்றாலும், அவர்கள் செல்வம் நன்மை பயவாத செல்வமேயாகும். 

சாலமன் பாப்பையா அவர்களின் உரைவழி நின்று பொருள் கொண்டால், செல்வர்க்கு சிறிது காலமே வறுமை ஏற்பட்டாலும், அது மேகமானது நீர் வற்றியது போலாம், என்றாகிறது.

இக்குறளுக்கான பரிமேலழகர் உரை, மூலக் குறளை விடவும் விளங்கக்கடினமாக உள்ளது.

“துனி” என்ற சொல்லுக்கு வறுமை என்றும், வெறுப்பு என்றும் பொருள் இருப்பதால் எதைக் கொள்வதென்ற குழப்பம் வரும்; புகழ்மிக்க செல்வத்தினை உடையவர்க்கு சிறு வறுமை வருவது எப்படி அவர்கள் ஈகையை பாதிக்கும் என்பது தெளிவாகவில்லை. நீர்முகந்த மேகமும் உண்டு, நீரற்ற மேகமும் உண்டு. நீர்முகந்த மேகம் நின்று பொழியும், காற்றினால் எளிதில் கலைக்கப்படாது. நீரற்ற மேகம் என்பது வலுவற்றது,  வற்றியது, காற்றால் அடித்துச் செல்லப்படுவது, அது பொழிவதில்லை. நீர்முகந்த மேகத்தில் சிறிது குன்றினாலும், மழை பொழிவதுண்டு. நீரற்ற மேகம் ஏற்கனவே வற்றியதுதானே, மழையும் பொழியாததுதானே!

சாலமன் பாப்பையா அவர்களின் உரை தெளிவாக உள்ளது. ஆனால் அது எவ்வாறு நன்மையில்லாத செல்வமென்னும் அதிகாரத்துக்குப் பொருந்துகிறது என்பதில் தெளிவில்லை.

Transliteration:

sIruDaich selvar siRuthuni mAri
vaRngkUrn danaiyadu uDaiththu
sIruDaich selvar – That who possess glorious wealth
siRuthuni – even his little aversion (to the act of benovelence )
mAri – the clouds that bring rain
vaRngkUrn danaiyadu uDaiththu – as if dried and won’t rain

The pregnant clouds, if fail to pour, are of no use; Likewise, people of glorious wealth, even if they are a little averse to the act of benevolence, their wealth is of no useful purpose. Parimelazhagars’ commentary is confusing more than the verse itself. The word “Thuni” means both hatred and poverty.

If we go with Salomon Pappayyas’ commentary, if the benovlent wealthy becomes poor even for a short while, then it would be like clouds depleted of rains. It is not clear as how being poor a little would affect somebody being charitable.  Also the comparison cloud is rather cloudy. The pregnant clouds have the standing power to pour; only lighter clouds will float and fail to give their bounty. Comparison itself is confusing.

Prof. Pappayyas’ commentary is very clear, but does not fit with the chapter heading.

“It is like pregnant clouds fail to give their gift of rains
 When wealthy with abhorrence not share their gains”


இன்றெனது குறள்:

தண்மேகம் தான்பொழியாத் தவ்வுதல்போல் சீர்செல்வர்
ஒண்பொருளை ஈயவெறுத் தல்

thaNmegam thAnpoziyAth thavvudalpOl sIrselvar
ONporuLai IyaverRuth thal

ஜனவரி 29, 2015

குறளின் குரல் - 1015

29th Jan 2015

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர்.
                                    (குறள் 1009: நன்றியில்செல்வம் அதிகாரம்)

அன்பொரீஇத் - யாரிடத்திலும் அன்பிலாது ஒழிந்து
தற்செற்று - தன்னையும் வருத்திக்கொண்டு
அறநோக்காது - அறவழி ஈதென்று பாராதான்
ஈட்டிய ஒண்பொருள் - சம்பாதித்த மேன்மையான செல்வத்தினை
கொள்வார் பிறர் - யாரோ தகுதியில்லாத பிறரே கொள்வர் (தீயோர் என்று உய்த்துணரவேண்டும்)

பிறரிடம் அன்போடு இருந்துவிட்டால் தன்னுடைய செல்வத்தைக் கொண்டு ஏதேனும் செய்ய வேண்டியிருக்குமே என்று அஞ்சி, அதை அறவே தவிர்த்து, செல்வம் குன்றாதிருக்க தனக்காகவும் செலவழித்துக் கொள்ளாது, அதன் காரணமாக தம்மையும் வறுத்திக்கொண்டு,  வறியவர்க்கு ஈதலே அறமென்பதையும் பாராது இருப்போனுடைய ஈட்டிய பெரும் பொருளை, அவனுக்குப் பிறகு யாரோ கொண்டு போகப் போகிறார். மீண்டும் ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் என்பதை நினைவு கொள்ளவேண்டும்.

இக்குறளின் கருத்து முந்தைய குறளின் கருத்துக்கு மாறுபட்டு இருக்கிறது. விரும்பப்படாதவன் செல்வமானது நச்சுமரத்தின் பழம் போன்றது என்றார். இக்குறளின் சொல்லியிருப்பவரையும் ஒருவரும் விரும்ப மாட்டரே! அப்போது அவருடைய செல்வத்தை யாரே கொள்வர்?

சென்ற குறளின் கருத்திலே ஒரு திருத்தம் வேண்டும். நல்லவர், அல்லது நற்செயல்களுக்கு எவரும் அத்தகைய செல்வத்தை “நச்ச” மாட்டார் என்பதே உண்மை. நாலடியார் பாடலொன்று கூறுவதைப் போல் யாரோ பயன்கொள்வர், நாலடியார் பாடலின் எடுத்துக்காட்டு பொருந்தாத ஒன்றாக இருந்தாலும்.

“கொடுத்தலும், துய்த்தலும் தேற்றா இடுக்குடை
உள்ளத்தான் பெற்ற பெருஞ் செல்வம், இல்லத்து
உருவுடைக் கன்னியரைப் போல, பருவத்தால்,
ஏதிலான் துய்க்கப்படும்.”

Transliteration:

anborIith thaRseRRu aRanOKKAdu ITTiya
oNporuL koLvAr piRar

anborIith – Not being compassionate to anyone
thaRseRRu – self denying the comforts of own wealth
aRanOKKAdu – not seeking the virtuous ways to spend the wealth
ITTiya oNporuL – wealth so earned
koLvAr piRar – will only be taken by others

Not showing compassion to others, for the fear of having to spend even a little bit of his earned wealth on them, not even spending on self for the fear of depleting the heap even a little bit, and thus denying pleasures to self and not even seeking virtuous ways of spending on poor and “have-nots”, all such earnings will only be taken by others, perhaps by totally undeserving bad elements of the society.

What is conveyed in this verse is contrary to the earlier verse, where vaLLuvar said, wealth of a person who is not liked by anyone, is like the fruits of a poisonous tree. After all none will like a person identified in this verse also and why would anybody touch his wealth? But the truth is the previous verse needs to be a little amended. That metaphor was nice, but did not go with the reality. The reality is that such wealth would be looted by bad elements after all.

A nAlaDiyAr verse says the same as this verse. It uses a totally meaningless metaphor, though.

“Wealth earned by anyone without compassion, self-denying of pleasures
 And is devoid of virtuous ways, will be taken totally by underserving others”

இன்றெனது குறள்:


அன்பொழிந்து தான்வருந்தி மற்றறமும் பாராதான்
தன்னீட்டம் கொள்வர்தீ யோர்

anbozhindu thAnvarundi maRRaRamum pArAdAn
thannITTam koLvarthI yOr

ஜனவரி 28, 2015

குறளின் குரல் - 1014

28th Jan 2015

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று.
                                    (குறள் 1008: நன்றியில்செல்வம் அதிகாரம்)

நச்சப்படாதவன் செல்வம்  - யாராலும் விரும்பப்படாதவனது செல்வமானது.
நடுவூருள் - ஊரின் நடுவே
நச்சு மரம் - விட விருட்சம்
பழுத்தற்று - காய்த்து, பழங்களைக் கொண்டது போலாம்.

ஊரிலே யாராலும் விரும்பப்படாத ஒருவனுடைய (எல்லோராலும் வெறுக்கப்படுவனது) செல்வம் ஊரின் நடுவே பொதுவாக உள்ள நச்சு மரமானது பூத்து, காய்த்து பழங்களோடு விளங்குவது போலாம். மரம் பொதுச் சொத்தாக இருந்தாலும், அப்பழங்களை யாரோ விரும்பி எடுத்துக்கொள்வர்?  அதேபோல் யாரலும் விரும்பப்படாதவன் பெற்ற செல்வமும்; யாரும் அவனை உதவி கேட்டுகூட அண்டமாட்டார்.

Transliteration:

Nachchap paDadavan selvam naDuvUruL
Nachchu marampazhuth thaRRu

NachchappaDadavan selvam – A person that is hated by everyone (not liked by anybody)
naDuvUruL –In the middle of the town
Nachchu maram – a poisonous tree
pazhuththaRRu – fruits a plenty

A person that is not liked by anybody in a town, is like a posinous tree in the middle of the town that fruits. Who would desire those fruits? None.  Likewise, none will desire to seek any help from such miser despite his enormous wealth.

“Like a poisonous tree that fruits in the middle of the town,
 A person unliked by all, no help be sought from, by anyone”


இன்றெனது குறள்:

ஊர்நடுவில் நச்சுமரம் காய்த்துபழுத் தாற்போலாம்
யார்க்குமே வேண்டான்செல் வம்

UrnaDuvil nachchumaram kAiththupazhuth thARpOlAm
yArkkumE vENDansel vam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...