பிப்ரவரி 28, 2013

குறளின் குரல் - 321


28th February 2013

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
                       (குறள் 313:  இன்னாசெய்யாமை அதிகாரம்)

Transliteration:
seyyAmal seRRArkkum innAdha seidhapin
uyyA vizhumand tharum

seyyAmal – when a person has not done any harm to others
seRRArkkum  - if another driven by rage towards this person (and causes harm)
innAdha – harm (as reactionary reprisal)
seidhapin – if caused, that will
uyyA – untranscendable
vizhumand tharum – bring hardship

This verse is definitely meant for ascetics, renounced.  When unprovoked, someone is angered, if that anger causes a person to be enranged to cause harm, that rage will render the person in unsurupassable hardship.

Rather confusing verse in its strucure, it has given considerable hardship to earlier commentators. Most commentaries appear to be sumises of what might have been intended by vaLLuvar. Based on Parimelazhagar’s inferential interpretation, we must believe that this verse preaches extreme goodness to renounced. When someone is not angry with us, there is no reason to even think harm for that person. When someone (person1) has not done anything to bring the wrath of other person (person 2), if harm is done to that person 1 by person 2, then person 2 will end up being in unsurpassable hardship and ensuing sorrow.

mANakkuDavar, another prominent and celebrated commentator interprets this in a simple way. “Even if somebody does harm without any reason or basis, doing harm to that person should be avoided, or else it will bring unsurpassable hardship”.

Even unprovoked, if someone is angered, harm caused
 in rage’ll bring only unsurpassable harm to the enraged”

தமிழிலே:
செய்யாமல் - தாம் எந்தவித துன்பமும் ஒருவருக்குச் செய்யாதபோதும்
செற்றார்க்கும் - தம்மீது சினந்து தமக்கு வருத்தத்தைத் தருகின்றவர்களுக்கு
இன்னாத - துன்பம் (எதிர்வினையாகச்)
செய்தபின் - செய்தால் அது
உய்யா - அது தமக்கே  உய்வே இல்லாத, கடந்து செல்லமுடியாத
விழுமந் தரும் - துன்பத்தினைத் தரும்

இக்குறள் துறவிகளுக்காகவே எழுதப்பட்டது! தாம் ஒரு துன்பமும் ஒருவருக்குச் செய்யாதபோது, அவ்வொருவர் தன்மேல் சினமுற்று, அச்சினம் தமக்குத் துன்பம் கருதும்போது, பொறுக்கவியலாத சினம் வருவது இயற்கை. அதற்காக, சினந்து எதிர்வினையாக தமக்குத் துன்பம் கருதியவருக்குத் துன்பம் கருதினால், அது மீண்டும் தமக்கே கடக்கமுடியாத துன்பத்தைத் தந்துவிடும்.

ஏறக்குறைய கழுத்தைச்சுற்றி மூக்கைத்தொடும் குறளாக உள்ளது இக்குறள். துறவினருக்குத் தேவை பொறுமையும், அமைதியும். அவற்றை அவர்கள் எப்போதும் இழக்கக்கூடாது. தம்மீது சினம் இல்லாதவர்களுக்கு தீமை செய்யாதிருப்பது எல்லோர்க்குமே விதிக்கப்பட்டவொன்று.  தாமொன்றும் செய்யாமலேயே, தம்மேல் சினந்து துன்பம் விளைவிப்பவர்களுக்கும் தீமைதரும் துன்பம் விளவிக்காமல் இருப்பதே துறவிகளின் இலக்கணம். வாழ்க்கையின்பங்கள் மட்டுமல்லாது, பாவத்தில் சேர்க்கும் சினம் முதலியவற்றை அறவே துறவிகள் துறக்கவேண்டும். இந்த அடிப்படையை மீறி எதிர்வினையாற்றும் துறவினருக்கும், துறவினால் பெற்ற தவவலிமை இழந்து, அவப்பெயரும், பின்வரும் பிறவிகளிலும் கடக்கவியலாத துன்பங்களையே தரும்.

மற்றொரு போற்றப்படுகிற உரையாசிரியரான மணக்குடவர், மிகவும் எளிதாகப் பொருள் கூறுகிறார். “எவ்விதகாரணமுமில்லாமல், தமக்கு துன்பம் செய்தவருக்கும் பொல்லாங்கு செய்தலை அறவே தவிர்க்க வேண்டும்”. இல்லையெனின் அதுவே, மீளமுடியாத துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

“நேர்த்தின்னா மற்றவர் செய்தக்கால் தாமவரைப் பேர்த்தின்னா செய்யாமை நன்று” என்ற நாலடியார் பாடல் சொல்வதற்கு மேலான கருத்தைச் சொல்கிறது இக்குறள்.

இன்றெனது குறள்:
தன்பால் சினந்தின்னா செய்தார்க்கும் துன்புசெயின்
என்றுமுய்யா துன்பில் இடும்
thanpAl sinandhinnA seidhArkkum thunbuseyin
enRumuyyA thunbil iDum

பிப்ரவரி 27, 2013

குறளின் குரல் - 320


27th February 2013

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
                       (குறள் 312:  இன்னாசெய்யாமை அதிகாரம்)

Transliteration:
kaRuthinnA seythavak kaNNum maRuththinnA
seyyAmai mAsaRRAr kOL

kaRuthinnA – With darkness in heart either with jealousy or with rage, harm to others
seythavak kaNNum – when somebody does
maRuthth(u) – negating the thought of doing a counter harm
innA seyyAmai – and not doing harm as counter action
mAsaRRAr kOL – is the resolve of the people of blemishless hearts

When someone, does harm with darkness of jealousy or anger set in their heart, not entertaining the thought of counter harm is the blemishless minds’ resolve and determind stance.

The metaphorical darkness of heart is by jealousy or rage in a person’s mind. Previousluy we have seen in the first verse of chapter on “not being envious”, emphasizing the jealous free heart as a virtuous stance. (“ozhukkAragak koLga oruvan than nenjaththu azukkARu ilAdha iyalbu”). In the previous chapter on “Not having anger” he had said, even if somebody would do harm like a showering of flames of fire, not having a counter range was good” thorugh this verse: “iNar eri thoYvanna innA seyinum puNarin veguLAmai nanRu

“Darkness in heart set by anger, or jealousy, if someone does harm
 Not considering counter harm is blesmishless minds’ resolute norm”

தமிழிலே:
கறுத்து இன்னா - உள்ளங் கறுத்து, அதாவது பொறாமையினாலோ, சினத்தாலோ பிறர்க்கு துன்பம்
செய்த அக்கண்ணும் - ஒருவர் செய்த அப்பொழுதிலும்
மறுத்து  - அவருக்கு எதிராக துன்பம் செய்யும் எண்ணத்தை தன்னுள் எழாமல் மறுத்து
இன்னா செய்யாமை - எதிர்வினையாகத் துன்பம் செய்யாமல் இருப்பதே
மாசற்றார் - குற்றமில்லா மனத்தினரின்
கோள் - கொள்கை, முடிவு, உறுதி.

பிறர் தமக்கு, அவருள்ளமானது, பொறாமையாலே, சினத்தினாலோ, இருண்டு துன்பம் தரும் செயல்களைச் செய்தபோதும், அவர்க்கெதிராக தாமும், சினத்திற்காட்பட்டு எதிர்வினையாக துன்பம்தரும் செயல்களைச் செய்யாதிருப்பதே குற்றமற்ற மனத்தித்தினர்கள் கொள்கை, உறுதி.

உள்ளம் கறுமையடைவது ஒன்று சினத்தால், மற்றொன்று பிறர்மேலுள்ள அழுக்காறினால், பொறமையால்.  முன்னரே கண்ட அழுகாறாமை அதிகாரத்தின் முதற்குறளிலேயே, நெஞ்சில் பொறாமையற்று இருத்தலை ஒருவர் தம்முடைய ஒழுக்கநெறிக் கொள்கையாகக் கொள்ளவேண்டியதை வலியுறுத்தியிருப்பார் வள்ளுவர் (“ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து அழுக்காறு இலாத இயல்பு”). ஒருவர் தமக்கு நெருப்பை அள்ளிக்கொட்டியதுபோல் துன்பம் செய்தபோதும் அவரிடம் சினவாமைப்பற்றி சென்ற “வெகுளாமை” அதிகாரத்தில் “இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று” என்ற குறளில் சொல்லியிருப்பார் வள்ளுவர்.

இன்றெனது குறள்:
இருண்டுள்ளம் இன்னாசெய் வோர்க்கெதிராய் இன்னா
கருதாக்கோள் நீர்மைநெறி யோர்க்கு

iruNDuLLam innAsei vOrkkedhirAi innA
karudhAkkOL nIrmaineRi yOrkku

பிப்ரவரி 26, 2013

குறளின் குரல் - 319



32:  (Not hurting - இன்னா செய்யாமை)
[This chapter on nor hurting or doing harm to others has two verses which are oft-quoted by most speakers. This chapter comes after the chapter of “avoiding wrath”. In fact previously we have also seen a chapter on “Avoiding Jealousy”. Usually both anger and jealousy are the reasons for somebody’s anger towards others. Since vaLLuvar has given ample reasons for avoiding both in previous chapters, in this chapter he gives reasons for not doing harm to others, and who will not consider harm etc,.]


26th February 2013

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
                       (குறள் 311:  இன்னாசெய்யாமை அதிகாரம்)

Transliteration:
siRappInum selvam perineum piRarkkinnA
seyyAmai mAsaRRAr kOL.

siRappInum – (sirappu + Inum) –  that which brings glorious
selvam perineum – wealth (by being vicious and doing harm to others), even if acquired
piRarkk(u) – to others
innA seyyAmai – not  doing harm is
mAsaRRAr – blemishless people’s
kOL – resolve

A verse similar to the first verse in the “Emphasizing Virtue” chapter – “siRappInum selvamum Inum aRaththInungu Akkam evanO uyirkku?” as if he has recycled the same verse in a different context with the first part sounding exactly the same. After all, not doing harm to others is also an important virtue and what he asked as a question, here he gives as a resolve of blemishless people.

By doing harm to others, some may see excellent benefits and wealth; but being selfless and not considering or doing harm to others, for personal gains is the resolve and stance of blemishless minds. This is the sum total of this verse. As vaLLuvar has said in a differernt verse, we have seen earlier, “manaththukkaN mAsilan Adhal anaithtu aRan” (being blemishless in mind is all virtue in one!), those who do not mean or do harm to otherse are blesmishless and stick to virtuous conduct.

Even if excellence, wealth are plenty acquired, not doing harm
To others is the resolve of blesmishless minds of virtuous form”

தமிழிலே:
சிறப்பீனும் - (சிறப்பு ஈனும்) - ஒருவருக்கு பல சிறப்புகளைக் கொடுக்ககூடிய
செல்வம் பெறினும் - செல்வங்களை (மற்றவர்களுக்கு தீயவை செய்வதால்) ஒருவர் பெற்றாலும்
பிறர்க்கு  - மற்றவர்களுக்கு
இன்னா செய்யாமை - தீயன, தீங்கு செய்யாதிருத்தல்
மாசற்றார் - குற்றமில்லா பண்பினர்களின்
கோள் - கொள்கையாக, நெறியாகக் கொள்வர்.

முன்பே நாம் படித்திருக்கிற அறன் வலியுறுத்தல் அதிகாரத்தின் முதற்குறளாம், சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு” என்ற குறளை மறுபயனாக்கம் செய்தார்போன்ற குறளிது. இன்னா செய்யாமை என்பதும் அறமாகலின், அங்கே கேள்வியாகக் கேட்டதை, இங்கே கொள்கையாக, உறுதிப்பாடாகச் சொல்லுகிறார்.

பிறர்க்குத் தீங்குசெய்தலால் ஒருவருக்கு சில சீர்மைதரும் விளவுகள் இருக்கலாம். அது பலவித செல்வங்களையும் தரலாம். இருப்பினும் பிறர்க்குத் தன்னலம் கருதாமல், துன்பம் தரும் தீங்கினை நினையாமலிருப்பதே மாசற்ற மனத்திட்பமும், வினைத்திட்பமும் உடையவர்களது கொள்கை, உறுதி என்கிறார் வள்ளுவர். மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன் என்றும் பிறிதொரு குறளில் சொல்லியிருப்பதால், இன்னா செய்யாதார், மாசற்றவரென்றும், அறவழி நிற்பவரென்றும் பொருளாகிறது.

இன்று ஒரே பொருளைத்தரும் குறள்களை இரண்டு விதமாக எழுதியுள்ளேன். ஈற்றடி ஒன்றேதான்! முதற்குறளின் பொழிப்பு மோனை மனனம் செய்ய எளிது!)

இன்றெனது குறள்(கள்):
நீர்மை நெறியோர் நினையார்தீங் கையார்க்கும்
சீர்மைதருஞ் செல்வமுறி னும்
nIRmai neRiyOr ninaiyArthIng gaiyArkkum
sIrmaitharunj chelvamuRi num

நீர்மைநெறி போற்றுவார் தீயசெய்யார் யாவர்க்கும்
சீர்மைதருஞ் செல்வமுறி னும்
nIRmai neRipORRuvAr thIyaseyyAr yAvarkkum
sIrmaitharunj chelvamuRi num

(நீர்மை - மாசற்றல், குற்றமின்மை; சீர்மை - சிறப்பு, உயர்வு; செல்வமுறினும் - செல்வம் உறினும் -> செல்வம் பெற்றாலும்)

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...