ஜனவரி 31, 2014

குறளின் குரல் - 652

31st Jan 2014

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.
                        (குறள் 646: சொல்வன்மை அதிகாரம்)

வேட்பத் - இவர் பேச்சைக் கேட்கவேண்டும் என்று பிறர் விழையத்
தாம் சொல்லிப் - தாம் பேசுதலும்
பிறர் சொல் - மற்றோர் சொல்லும் சொற்களின் பயனைச் சொல்வோர் இன்னார் என்று கருதாது
பயன்கோடல் - அவற்றால் உறும் பயனைத் தெளிவதும்
மாட்சியின் - அமைச்சுத் தொழிலிலே
மாசற்றார் - குற்றமற்று இயங்குவோரின்
கோள் - உறுதிப்பாடு.
      
இக்குறள் குற்றமற்று அமைச்சுத்தொழிலைச் செய்வோரின் உறுதிப்பாடு என்ன என்பதைச் சொல்லுகிறது. அத்தகையோர் மற்றோர் விரும்பும் வகையிலே பேசுவர். இன்னார் என்று கருதாது பிறர் பேசுவதில் உள்ள குற்றங்களைக் களைந்து, கொள்வதைமட்டும் கொள்வர்.

ஏற்கனவே இக்குறளின் கருத்தையே அறிவுடைமை அதிகாரத்தில், எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு  என்ற குறளிலும் வள்ளுவர் சொல்லியிருப்பது நினைவுகூறத் தக்கது. அக்குறளின் கருத்தை வேறு சொற்களில் கூறுவதே இக்குறள்.  இதே கருத்தைக் கூறும் பழமொழிப் பாடலொன்ற்று உண்டு. அது, “கேட்பாரை நாடி, கிளக்கப்படும் பொருட்கண் வேட்கை அறிந்து, உரைப்பார், வித்தகர்”.

Transliteration:

vETpathtAm sollip piRarsol payankODal
mATchiyin mAsaRRAr kOL

vETpath – For others to desire to listen to
tAm sollip – of such articulation
piRar sol – regardless who says, when others say something
payankODal – only taking the substance, discarding undesirable
mATchiyin – one who is a minister
mAsaRRAr – and does his work flawessly
kOL – their resolves and carriage.

This verse talks about the resolve and carriage required of a minister who is flawless in work. For others to desire and listen, would speak, such ministers; they would also consider what others say, discarding what is not right and taking only what makes sense regardless who those others are.

Already another verse (“eNporuLa vAgach selachchollith tAn piRarvAi nuNporuL kANba daRivu”,) conveying exactly the same thought has been done in a different chapter of “having intellect”. Only the words are different.  A verse from Pazhamozi nAnUru (“kETpArai nADi kiLakkappaDum poruTkaN vETkai aRindu, uraippAr viththagar”) expresses the same thought

“A flawless minister would speak words for others to desire!
 Would listen to others if the essence of its purpose is higher”


இன்றெனது குறள்:

மற்றோர் விரும்புபேச்சும் மற்றோர்சொல் கொள்பாங்கும்
குற்றமற்று உற்றோர் அமைச்சு

maRROr virumbupEcchum maRROrsol koLpAngum
kuRRamaRRu uRROr amaichchu

ஜனவரி 30, 2014

குறளின் குரல் - 651

30th Jan 2014

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
                              (குறள் 645: சொல்வன்மை அதிகாரம்)

சொல்லுக - பேசுக (அமைச்சர்களுக்குச் சொல்லப்படுவது)
சொல்லைப் - பேசுகிற சொற்களை
பிறிதோர் சொல் - மற்றொருவர் பேசுகிற சொற்கள்
அச்சொல்லை - அவ்வாறு அமைச்சர் பேசும் சொற்களை
வெல்லுஞ் சொல் - வெல்லும்படியான சொற்கள்
இன்மை - அல்ல என்று
அறிந்து - தெரிந்து, உணர்ந்து.

ஓர் அமைச்சர் பேசக்கூடிய சொற்களானது, மாற்றாக மற்ற எவரும் ஒரு சொல்லையும் பேசமுடியாத அளவுக்கு பொருட் செறிவுடனும், செயலாற்றல் மிக்கதாகவும் இருக்க வேண்டும் என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. இக்குறளே இக் கருத்துக்கு ஒரு தலை சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குவது தெளிவு. வள்ளுவரின் இக்குறட் சொற்களுக்கு மாற்றுச் சொற்கள் ஏதேனும் இருக்கமுடியுமா?

Transliteration:

Solluga sollaip piRidOrsol achchollai
Vellunjsol inmai aRindu

Solluga – speak (said specifically for people serving as ministers)
sollaip – such that the words spoken
piRidOr sol – what others speak
achchollai – the words of ministers
Vellum sol – win over (the words of ministers)
inmai – cannot (win over)
aRindu - knowing

The words uttered by a minister shall not have other contrary words that win over. Such shall be the power of articulation and the value of his words. Even this verse, stands as a testimony to such power. Who would argue against what is conveyed in this verse by vaLLuvar?

“Speak the words such that none
  Spoken by others can ever win”


இன்றெனது குறள்:

மாற்றொரு சொல்மறுக்கா வண்ணம் அமைச்சர்தம்
கூற்றினிலே கூர்மைவேண் டும்

mARRoru solmaRukkA vaNNam amaichchartham
kURRinilE kUrmaivEN Dum

ஜனவரி 29, 2014

குறளின் குரல் - 65029th Jan 2014

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.
                        (குறள் 644: சொல்வன்மை அதிகாரம்)

திறனறிந்து - தாம் சொல்லக்கூடிய சொல்லின் வலிமையையும், விளையும் நன்மைகளையும் அறிந்து
சொல்லுக - சொல்லவேண்டும்
சொல்லை - அச் சொற்களை
அறனும் - உயர்வான தருமமும்
பொருளும் - சிறந்த ஆக்கமும்
அதனின் உங்கு - அத்தகைய சொல்வன்மைக்கு மேற்பட்டது
இல் - எதுவும் (அறமும், ஆக்கமும்) இல்லை.

“திறனறிந்து” என்ற சொல்லுக்குப் பரிமேலழகர் உரையில் “சொல்வார்” மற்றும் “கேட்போரின்” தகுதிகளை அறிந்து சொல்வது என்று சொல்லி, பின்பு அத்தகுதிகளாக குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம், உருவம், பருவம் என்று கூறுகிறார். இவற்றுள் கல்வி, ஒழுக்கம், பருவம் இம்மூன்றும் அனைவரும் ஒப்புக்கொள்வனவே. குடிப்பிறப்பு, செல்வம், உருவம் போன்றவற்றை திறமாக யாரும் ஏற்கமாட்டார்கள், அவை பிரிவினை உண்டாக்குபவை. குறள் சொல்லும் கருத்தையே நீர்த்துப்போகச் செய்வன.

திறனாவது தாம் சொல்லும் சொல்லின் வலிமை, அது ஏற்படுத்தும் நல்ல விளைவுகள். இவ்வதிகாரமும் அமைச்சர்களுக்கே சொல்லப்படுவதால்,  அத்தகைய சொற்களையே அமைச்சரானவர் பேசவேண்டும். அத்தகைய சொற்களைவிட உயர்வான தருமமும், சிறந்த ஆக்கமும் வேறு எதுவும் இல்லை என்பதே இக்குறள் சொல்லும் கருத்து. முன்னரே சொல்லியபடி ஆக்கமும் கேடும் சொல்லாலே வருவதால் அமைச்சர்கள் அவற்றை அளவறிந்து சொல்லவேண்டும் என்பதை மீண்டும் உறுதி செய்கிற குறள்.

ஆக, குறள் சொல்லும் கருத்து இதுவே: சொல்லுகிற சொற்கள் சாதிக்கப்போவதை அறிந்து ஒருவர் (அமைச்சர்கள்) சொல்லவேண்டும். அதற்கு விஞ்சிய தருமமும், வளமும் எவையுமில்லை.

Transliteration:

thiRanaRindu solluga sollai aRanum
poruLum adaninUngu il

thiRanaRindu – Knowing the strength of the words spoken and good they yield
solluga – must speak
sollai –  any word
aRanum – elevated virtues
poruLum – all the wealth
adaninUngu – better than that articulative power
il – there is none.

Parimelazhagar’s commentary for the word “thiRanaRindu”  in this verse is not entirely acceptable. He says that it means knowing the qualifications of both the speaker and the listener. The alluded qualifications are: Birth in a good lineage, education, discipline, wealth, looks and the age! Though education, discipline and age are acceptable criteria and qualifications, they are required of both the speaker and the listener, others are not accpetable and can cause quite an uproar and unrest in today’s context of how the worlds view has evolved; also will dilute the very essence of the verse.

The ability is the strength or character of words spoken, and the good and productive effects they can bring in.  Since this chapter is also focused on ministers, the verse implies such power articulation for ministers. There is none better than this that stand as virtue and wealth.  As said in an earlier verse both wealth and ill come from words used, a minister must measure words spoken.

So the verse says, words spoken must be spoken understanding the potency of what changes they can bring about, as there is no better virtue and wealth than this.

“Speak understanding the potency of the words
 As there is no virtue or wealth better in all worlds”

இன்றெனது குறள்:

சொல்லின் வலிதேர்ந்து சொல்வதினும் சீர்த்தவறம்
இல்லை பொருளுமில் லை.

Sollin valithErndu solvadinum sIrththavaRam
Illai poruLumil lai

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...