மே 31, 2015

குறளின் குரல் - 1137

31st May, 2015

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி.
                        (குறள் 1131: நாணுத்துறவுரைத்தல் அதிகாரம்)

காமம் - தீவிர காதலில்
உழந்து வருந்தினார்க்கு - மூழ்கி, (காதலிக்கப்பட்டவரிடம் கிடைக்காமல்) வருந்தும் ஆணுக்கு
ஏமம் - துணையென்பது
மடலல்லது - மடலேறுதல் (பனையோலையால் செய்யப்பட்ட குதிரை)
இல்லை வலி - இல்லையாம் வன்மை மிக்கது

தீவிரமாக ஒரு பெண்ணைக் காதலித்து, (காமத்தை பெரும்பாலும் உரையாசிரியர்கள், உடலுறவு என்ற அளவிலேயே சொல்லியிருந்தாலும், தீவிர காதல் என்பது, பண்பாட்டுக்கு ஏற்புடையதாக இருக்கும்). அது காதலிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கிடைக்காமல் போகும் ஆணுக்கு ஏற்ற துணையென்பது, ஆணுக்கு இழிவுதரும், மடலேறுதல் எனப்படும் பழந்தமிழர் வழக்கமான, பனையோலை குதிரையேறி ஊரரிய அவன் காதலை வெளிப்படுத்தும் செயல்தான். அதை விட வலிமையான உபாயம் வேறு இல்லை.

மடலேறுதலை விக்கிமூலம் இவ்வாறு விளக்குகிறது.

“மடல் ஊர்தல் (மடலூர்தல்) என்பது சங்ககால வழக்கங்களில் ஒன்று. இதனை மடலேறுதல் என்றும் கூறுவர். தலைவன் தான் விரும்பிய தலைவியை அடைவதற்காக மடலூர்தல் வழக்கம். காதலில் தோல்வியுற்ற சங்ககாலத் தலைவன், ஊரார் தன் காதலை உணரும் பொருட்டு மேனியில் சாம்பலைப் பூசிக் கொண்டு யாரும் சூடாத எருக்கு போன்ற மலர்களைச் சூடிக் கொண்டு பனைமரத்தின் அகன்ற மடல்களால் செய்யப்பட்ட குதிரை ஒன்றில் ஊர்ந்து காண்போர் கேட்கும் வண்ணம் தலைவியின் பெயரைக் கூவிக்கொண்டு செல்தல் ஆகும். இது இழிவான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தன்னைச் சந்திக்க மறுக்கும் தலைவியிடம் தோழி மூலம் நான் மடலேறி விடுவேன் என்ற காமம் மிகுந்த தலைவன் சொல்வது உண்டு. காமம் மிகுந்த ஆடவர்க்கு மட்டுமே மடலேறுதல் உண்டு. பெண்கள் மடலேறியதாய் சங்கப்பாடல்கள் இல்லை. என்ன நிலை சேர்ந்தாலும் பெண் இந்த வழக்கத்தை மேற்கொள்வது இல்லை. ஆனால் பக்தி பாவத்தில் தங்களைப் பெண்களாய்த் எண்ணிப் பாடிய ஆழ்வார்கள் சிலர், பெண்டிர் மடலேறியதாய்ப் பாடி உள்ளனர். ஒரு முறை மடலேறிய தலைவன் காதலி திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் மறுமுறை மடலேறுவதில்லை. தன் வாழ்வை முடித்துக் கொள்வான்.

தலைவியை அடைய முடியாத தலைவன், உடம்பெல்லாம் திறுநீறு பூசிக் கொண்டு, கையில் தலைவியின் ஓவியம் கொண்ட கிழியுடன் நாற்சந்தியில் பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை மீதேறி நிற்க, பிறர் அதனை இழுத்துச் செல்வர். தலைவன் தலைவி நினைவாகவே இருப்பான். பனை மட்டையால் செய்யப்பட்ட குதிரை வடிவம் ’மடல்’ ஆகும்.

இந்நிகழ்வால் தலைவன் தலைவியை அடைய முடியாமல் தவிப்பது ஊராருக்குத் தெரிய வந்து, தலைவனின் துயர் காணும் ஊரார், அவனுடன் தலைவியைச் சேர்த்து வைக்க எடுக்கும் முயற்சியால் தலைவன் தலைவியை அடைய வாய்ப்பு ஏற்படும்.

மடல் கூறல், மடல் விலக்கு என இருநிலைகளை நம்பி அகப்பொருள் முன் வைக்கிறது. தலைவன் தலைவியை அடைய மடல் ஏறுவேன் என்று கூறுவது மடல் கூறல். தலைவனை மடல் ஏறவேண்டாம் எனத் தடுப்பது மடல் விலக்கு”

திருக்குறளில் பல இடங்களில் மடலூர்தலைப் பற்றி பேசப்படுகிறது.

Transliteration:

kAmam uzahndu varundinArkku Emam
maDalalladu illai vali

kAmam – In love
uzahndu varundinArkku – immersed and tormented by her love
Emam – what is safety
maDalalladu – riding a horse made of palmyra leaves
illai vali – none efficient.

When a man has been in intimate relationship (conjugal) with his maiden and later, is not able to get that, there is no other way, except riding the horse made of palmyra leaves for professing his love in public. This act that existed in old-tamil culture dating Sangam period, was considered demeaning to  a male; but there was none other stronger means to express his love.

“Madal Urdal”, was an act that a man in love did to win his lovers hand, if his love failed for whatever reason. For the townsmen to know his love, he would anoint himself with ash, mostly untouched flower yarcum, and ride a toy horse made of palmyra leaves, shouting his lovers’ name in public in a procession. Such self-demeaning act was employed or a threat that he would such an act was the usual tact of men in excessive love.

This seems to have been a popular act during VaLLuvars’ time or from before him too. He has used the same in many verses.

 “Immersed deeply in intimate love with maiden and not reciprocated the same
 for a man, none more efficient than riding a polmyra horse, shedding shame”

இன்றெனது  குறள்:

மடலேற லின்வன்மை யாம்துணை இல்லை
உடற்றுகா மத்துழன் றார்க்கு

(உடற்று - வருத்தும்)

madalERa linvanmai yAmtuNai illai

uDaRRukA mattuzan RArkku

மே 30, 2015

குறளின் குரல் - 1136

30th May, 2015

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.
                        (குறள் 1130: காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)

உவந்து றைவர் - மகிழ்ச்சியுடன் இருக்கின்றார் (என்னுடைய காதலர்)
உள்ளத்துள் என்றும் - எப்போது என் உள்ளத்திலேயே
இகந்து உறைவர் - என்னை நீங்கி இருக்கிறார்
ஏதிலர் - அன்பில்லா என் காதலர்
என்னும் இவ்வூர் - என்று பழித்துச் சொல்லும் இவ்வூரானது.

காதலி, தன்னுடைய காதலர் தன்னுடைய உள்ளத்திலேயே நீங்காது உறைகிறார் என்றும், ஆனால் அது புரியாத இவ்வூரானது, அவர் என்னொடு இருப்பதை இகழ்ந்து வேறு எங்கோ இருக்கிறார், அன்பில்லாமல் என்று அவரைத் துற்றிச் சொல்லும். உலகம் உண்மை அன்பை உணராமையையும், அத்துடன் அவர் நீங்கா நெஞ்சகத்துறைந்தது அறியாமையும் ஒருங்கே கூறுகிறார் வள்ளுவர். “உவந்து உறைவார்” என்றமையால், காதல் அன்பின் மிகுதியில் தாமாகவே வந்து நெஞ்சு நிறைந்ததையும், தலைவியின் வற்புறுத்தலினால் அல்ல என்பதையும் அவள் தெரிவிக்கிறாள்.

Transliteration:

uvanduRaivar uLLattuL enRum ikanduRaivar
Edilar ennumiv vUr.

Uvand(u) uRaivar – He resides happily (says the maiden)
uLLattuL enRum - in my heart forever
ikand(u) uRaivar – (but) he has left me in despise
Edilar – being loveless
Ennum ivvUr – says the world! (after all what do they know about his love!)

Maiden in love says tha her love resides in her heart happily forever. “Not knowing this, the world blames him (as if they would know him better than I do) that he is loveless and has left me in despise. Regardless of what the world thinks of him, he with abundant lover on his own, come to stay in my heart happily”, says the maiden in love. She strongly feels that the world would not know his love for her afterall. The world “uvandu” implies his love for her – no that she has forced him to stay, but he on his own accord has come to stay in her heart.

“Not knowing that my lover forever resides in my heart happily,
 the world thinks, he is loveless and in despise left, mercilessly”

இன்றெனது  குறள்:

உள்ளத் துவந்து உறைந்தாரை இல்லார்போல்
எள்ளி இகழுமே ஊர்


uLLat tuvandu uRaindArai illArpOl
eLLi igazhumE Ur.

மே 29, 2015

குறளின் குரல் - 1135

29th May, 2015

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.
                        (குறள் 1129: காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)

இமைப்பின் - நான் கண்ணை இமைத்துவிட்டால்
கரப்பாக்கு - தெரியாமல் மறைந்துவிடுவார் (கண்ணில் இமைக்கும் நேரத்துக்கு)
அறிவல் - என்று நான் அறிவேன்
அனைத்திற்கே - ஆனால் அதற்கே
ஏதிலர் - அன்பிலான் (காதலனை)
என்னும் இவ்வூர் - என்று சொல்லும் (தூங்கா நோய் தந்தான் என்று) இவ்வூரானது.

கண்ணிலேயே நான் கட்டி வைத்திருக்கும் என் காதலர், கண்ணிமைக்கும் நேரமெல்லாம் காணாதொளிவாரே என்று நான் அறிவேன். ஆதலில் கண்ணை இமைக்காமல் கூட, அதாவது தூங்காமலே இருக்கிறேன். ஆனால் அதற்கே இவ்வூரானது எனக்குத் தூங்கா நோய் தந்தானென்று என் காதலரை தூற்றும் என்று காதலி சொல்கிறாள் இக்குறளின்.

காதல் மிகுதியால், சரியாக உண்ணாததையும், கண்ணில் மையிடாததையும் கூறிய வள்ளுவர், இக்குறளில் கண்ணில் நிறைந்த கண்ணாளனைக் கட்டி வைப்பதற்காக தூங்கா நோயில் ஆழ்ந்தாள் காதலி என்றும் கூறுவது காதல் தலைமகளை அது படுத்தும் பாட்டினை புலப்படுத்துகிறது.

Transliteration:

Imaippin karappAkku aRival anaithiRkE
Ethilar ennumiv vUr

Imaippin – if I blink my eyes as it is normal to do so
karappAkku – he will abscond from my eyes for that duration
aRival – so I know..
anaithiRkE – But for that alone
Ethilar – as if loveless (the lover)
ennumiv vUr – will accuse him this town

Fearing mylover, that I have binded in my eyes, would disappear for the duration, I blink, I would not blink and hence sleepless. But even for that the people of the town would blame only my lover as loveless; saying so the maiden professes her love for her man.

With excess of love the maiden has already not anointed her self eye-pigment, nor eat properly, as expressed in the previous verses. In this verse, by being sleepless, VaLLuvar conveys how much of a “trouble-maker”, the love to a maiden is!

“Fearing my lover would dissaper, I wouldn’t blink my eyes even for short duration,
 But the people of town would blame him for that, that he lacks love and adoration”

இன்றெனது குறள்:

அறிவேன் இமைக்க மறைவார் அதற்கே
வறியரன்பில் என்றுதூற்று மூர்

aRivEn imakka maRaivAr adaRkE

vaRiyaranbil enRuthURRu mUr

மே 28, 2015

குறளின் குரல் - 1134

28th May, 2015

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.
                        (குறள் 1128: காதற்சிறப்புரைத்தல் அதிகாரம்)

நெஞ்சத்தார் - என் நெஞ்சிலே இருக்கிறார்
காதலவர் - என் காதலர்
ஆக வெய்துண்டல் - ஆக வெம்மையான பொருளை உண்ணுவதை
அஞ்சுதும் - அஞ்சுகிறேன்
வேபாக்கு அறிந்து - அது என் நெஞ்சில் நிறைந்தவரைச் சுட்டுவிடுமே என்பதறிந்து.

என்னுடைய காதலர் என் நெஞ்சிலேயே இருக்கின்றார். அதனால் நான் வெம்மையான உணவினை உண்ணவும் அஞ்சுகிறேன், எங்கே அவரைச் சுட்டுவிடுமோ என்று, என்று காதலி இக்குறளில் கூறுகிறார். காதல் வயப்பட்டவள், கண்ணுக்கு மையெழுதாமல், உண்ணாமல் இருப்பதை காதலனின் மீது இருக்கும் அன்பினால் என்று இவ்விரண்டு குறள்களினாலும் காரணம் கற்பிக்கிறார், வள்ளுவர்.

Transliteration:

nenjattAr kada lavarAga veiduNDal
anjudum vEpAk kaRindu

nenjattAr – resides in my hearts
kadalavar – my dear lover
Aga veiduNDal – so earing the hot food
anjudum – I fear
vEpAkk(u) aRindu – what if it burns my lover

My dear lover resides in my heart. So, I do not even try eating hot food fearing if it would burn my lover, even inadvertently. Through these past two verses, VaLLuvar establishes the reasons for why a maiden in love does anoint herself with pigment in her eyes or does n’t eat properly.

“My lover dwells in my heart; fearing if it would burn
 I don’t indulge in hot food, says maiden, away I turn!”

இன்றெனது குறள்:

வெய்துண்ண அஞ்சுவேன் நெஞ்சுறைக் காதலர்
மெய்சுடு மென்ப தறிந்து

veyduNNa anjuvEn nenjuRaik kAdalar

meisudu menba daRindu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...