ஏப்ரல் 30, 2013

குறளின் குரல் - 383


30th April 2013

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
                              (குறள் 375: ஊழ் அதிகாரம்)

Transliteration:
Nallavai ellAan thIyavAm thIyavum
nallavAm selvam seyaRku

Nallavai ellAan – sometimes, even the good things done (ill fate)
thIyavAm – will translate to bad outcomes in the pursuit of making wealth
thIyavum – if the time and the fate is good, even the bad things done
nallavAm – will translate to good outcomes and will build wealth
selvam – wealth
seyaRku - in the pursuit of making

In the pursuit of wealth making, though the place, time and the work are in good stand, if the fate is bad, they cannot make their wealth grow. Even if the above three are not good, if the fate is good, the wealth will grow.

This verse can be interpreted differently too. In the pursuit of making wealth, even if someone does all good still it can yield bad out come due to fate. Likewise, even if someone does all bad deeds, if the time and place are right, then the bad deeds will turn to good results to yield wealth.

Though it may appear that to make wealth good or bad deeds done by someone do not count, this verse underlines the influence of  “fate” which is determined by ones good or bad deeds in previous birth. The good and bad deeds of birth will have their own effects, again as fate in the following births. As silappadikaaram has one of its three major tenets, “fate follows someone through births”.

Despite good deeds done, for some only bad befalls due to fate;
Others, even if they intend and do bad, have fortune of estate

நல்லவை எல்லாஅந் - சில நேரங்களில் நல்லவை எல்லாம் செய்தாலும்
தீயவாம் - அவை தீயவையாயாகி செல்வம் செய்யாதழிக்கும்
தீயவும் - நேரம் நன்றாக இருப்பின், தீயவையாக செய்தாலும்
நல்லவாம் - அவை நல்லவையாக மாறி செல்வத்தைக் கொணரும்
செல்வம் - செல்வத்தை
செயற்கு - ஆக்குதற்கு செய்யும் முயற்சியில்

செல்வத்தை ஆக்கும் முயற்சியில், இடம், காலம், தொழில் எல்லாம் முறையாக இருந்தாலும், ஒருவருடைய ஊழ்வினை தீயதாக இருந்தால், அவர்களால் செல்வத்தை பெருக்கமுடியாது. ஒருவருக்கு மேலே கூறப்பட்ட மூன்றும் சரிவர இல்லையென்றாலும், அவர்களுடைய ஊழ்வினை நல்லதாக இருந்தால், அவர்களது செல்வம் பெருகும் என்பதே இக்குறளின் கருத்து.

இக்கருத்தையே இவ்வாறு சொல்வதும் உண்டு: செல்வத்தை ஆக்கும் முயற்சியில் நல்லவை எல்லாம் செய்தாலும் சில நேரங்களில் அவை தீயவையாயாகி செல்வம் செய்யாதழிக்கும். நேரமும் காலமும் நன்றாக இருந்தால், தீயவையாக செய்தாலும், அவை நல்லவையாக மாறி செல்வத்தைக் கொணரும்!

செல்வம் செய்தற்கு நல்வினையோ தீவினையோ காரணமில்லை என்பது போல தோன்றினாலும், இக்குறள் அடிக்கோடிடுவது, ஊழ் என்பதன் வலியை. அது நமது முற்பிறப்பின் செய்கைகளால் நிறுவப்பட்டவொன்று. இப்பிறப்பின் நற்செய்கைகளும் தீயசெய்கைகளும் பின்வரும் பிறப்புகளின் ஊழாகத் தொடரும். சிலப்பதிகாரத்தில் சொல்லப்பட்ட “ஊழ்வினை உறுத்து வந்தூட்டலை” நினைவு கொள்ளவேண்டும்.

இன்றெனது குறள்:

ஊழாக்கும் தீதினை நன்றாய் திருவுக்காய்
பாழாக்கும் நன்றினைத்தீ தாய்

UzhAkkum thIdhinai naRAi thiruvukkAi
pAzhAkkum nanRinaiththI dhAi

ஏப்ரல் 29, 2013

குறளின் குரல் - 382


29th April 2013

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
                              (குறள் 374: ஊழ்அதிகாரம்)

Transliteration:
iruvERu ulakaththu iyaRkai thiruvERu
theLLiya rAdhalum vERu

iruvERu – to be of two different ways (based on fate)
ulakaththu – of the world
iyaRkai – it is the nature
thiru vERu – To be wealthy is a different fate (may not be knowledgeable)
theLLiyarAdhalum vERu – To be knowledgeable is again a diiferent fate

“Knowledge is the source of earning and accumulating wealth” - is the common knowledge. But when we see that erudite being poor and the rich devoid of brilliance of knowledge, we understand this to be two different folds of what we term as fate.

Fate acts contrary to what we expect and also is primarily construed to be the consequence of our deeds of earlier births. This also indirectly says that there is none more powerful than fate.

There are verses in pazhamozhi and nAlaDiyAr stressing the same theme. A verse says, in the world surrounded by oceans, the blessings for wealth and knowledge seem to be because different fates. After all we see intelligent and knowledgeable live the life of poor where as ignoramus live wealthy.

Another verse succinctly says that it because of the deeds of earlier births, we see such abberations and contrary to personal traits in present life

It is the nature of the world that fate has two different folds
Rich without knowledge and knowledgeable without riches

தமிழிலே:
இருவேறு - இரண்டு வேறு ஊழ் பயன்கள் இருப்பது
உலகத்து - உலகத்தினுடைய
இயற்கை - இயற்கையும், நியதியுமாம்
திரு வேறு - இதில் செல்வம் சேருவதற்கான விதி என்பது ஒன்று
தெள்ளியராதலும் வேறு - அறிவுடையராக இருத்தல் என்பது மற்றொரு விதமாய விதி

அறிவுடமையே பொருள் ஈட்டுவதற்கும் செல்வம் சேருவதற்குமான காரணம் என்பது எல்லோருக்கும் அறிந்தவொன்று. ஆனால் அறிவுள்ளவர்களிடல் திருவில்லாததும், திரு உள்ளவர்களிடம் அறிவு இல்லாததும், இரு வேறு விதமான உழ்வினையால்தான் என்பதும் இவ்விதம் ஊழ் பொதுவாக அறிந்த கோட்பாடுகளுக்கு மாறாக இயங்குவது இயற்கையானது என்றும் கூறுகிறது இக்குறள். இக்குறளும் ஊழின் பெருவலி யாவுள என்பதை வலிந்து அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்நிலையை எடுத்துக்காட்டும் பழமொழிப் பாடலொன்று இவ்வாறு கூறும்:
“உரைசான்ற சான்றோர் ஒடுங்கி யுறைய நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல்”

நாலடியாரில் நன்றியில் செல்வம் என்னும் அதிகாரத்தில், வரும் இரண்டு பாடல்கள் இக்குறளின் கருத்தையொட்டி வருகின்றன.

புணர்கடல்சூழ் வையத்துப் புண்ணியமோ வேறே
உணர்வ துடையா ரிருப்ப - உணர்விலா
வட்டும் வழுதுணையும் போல்வாரும் வாழ்வரே
பட்டும் துகிலும் உடுத்து.

இப்பாடலின் கருத்து: கடல்கள் சூழ்ந்த இவ்வுலகில் செல்வத்துக்குரிய புண்ணியம் என்பது அறிவுக்குரிய புண்ணியத்தினின்றும் வேறாகவே இருக்கிறது. எவ்வாறெனின், கல்வி அறிவுடையார் ஒரு பொருளுமின்றி வறுமையுற்று இருக்க, கறி முள்ளியும் கத்தாழையும் போன்ற அற்பர் விலையுயர்ந்த பட்டாடையும் பருத்தி ஆடையும் உடுத்து வாழ்வர்.  இப்பாடலின் உள்ளுரைக் கருத்து: கறி முள்ளியும் கத்தாழைச் செடியும் மிகுதியாக இருப்பினும் அவை, கொள்வாரை முள்ளால் குத்துவன. அதுபோல பழைய புண்ணியத்தால் செல்வம் பெற்று வாழினும் அறிவிலாரிடம் ஈகைத் தன்மையும் இல்லை என்னும் பாடல் இது.

நல்லார் நயவர் இருப்ப நயமிலாக்
கல்லார்க்கொன் றாகிய காரணம் - தொல்லை
வினைப்பய னல்லது வேனெடுங் கண்ணாய்
நினைப்ப வருவதொன் றில்.

இப்பாடலின் கருத்து: இவ்வுலகில் நல்ல அறிவுடையோரும் நல்ல குணமுடையோரும் வறியராக இருப்ப, அவ்வறிவும் குணமும் அற்ற கீழோர் செல்வராக இருப்பதற்குக் காரணம் பழைய வினைப் பயனேயன்றி, எப்படி ஆராய்ந்து பார்த்தாலும் வேறு காரணம் இல்லை. அறிவொழுக்கம் அற்றவர் செல்வராக வாழ்வதற்குக் காரணம் ஊழ்வினையே! ஆயினும் அவரிடம் இரக்கத் தன்மையின்மையால், செல்வம் பெற்றும் ஒரு பயனும் இல்லை என்பது கருத்து.

இன்றும் ஒரு கருத்து, இரண்டு குறள்கள் ஆனால் கருத்தைப் பொருத்தவரை இரண்டும் ஒரே துருவத்தில்தான்.

இன்றெனது குறள்(கள்):
செல்வமும் சேரும் அறிவும் இருதுருவாய்
செல்வ தியற்கையுல கில்
selvamum sErum aRivum irudhuruvAi
selva dhiyaRkaiyula gil

திருவும் துலங்கும் அறிவுமிரு திக்கில்
இருப்ப தியற்கையுல கில்
thiruvum thulangum aRivumiru dhikkil
iruppa dhiyaRkaiyula gil

ஏப்ரல் 28, 2013

குறளின் குரல் - 381


28th April 2013

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்.
                              (குறள் 373: ஊழ் அதிகாரம்)

Transliteration:
nuNNiya nUlpala kaRpinum maRRumthan
uNmai yarivE migum

nuNNiya – Containing extremely subtle concepts
nUl pala – many knowledge giving books
kaRpinum – even if one learns them
maRRumthan – even after that (because of the fate)
uNmaiyarivE – whatever was his brain’s capacity earlier
migum – would only be there

Regardless of how much one has studied subtle, sophisticated knowledge, the force of fate keeps one in the state of what the individual is bestowed with or destined for – so says this verse. If the fate is destructive one, it wont even let someone utilize the learning when needed.

Afterall we are all familiar with the story of Karna , whose acquired knowledge of how to use Brahmastra, so deservingly learned from Parashurma was not useful at the crucial moment as he forgot the invocatory mantra. He could not use it against Arjuna, which would certainly destroyed Arjuna and changed the course of war.  Such incidents show that “learning”  loses to cruel fate and this we can experience in our personal lives too.

Another example of “iLangO” adigaL who inorder to disprove the predicted destiny, relinquished  what could have been his throne to become a monk is a recorded incident in the pages of history.

Though this chapter and this verse imply that there is none mightier than the fate, another saying that one can conquer fate with brain (knowledge) – “vidhiyai madhiyAl vellalAm” is also in vogue as long the this duel of fate over learning has existed.

Though learned in many subjects of subtle nature,
 The force of fate will only keep what fits the stature”


தமிழிலே:
நுண்ணிய  - நுட்பமான கருத்துக்களைக் கொண்ட
நூல்பல - நூல்கள் பலவற்றையும் தேடி
கற்பினும் - ஆழ்ந்து கற்றாலும்
மற்றுந்தன் - அதற்குப் பின்னும் (ஊழின் வலிமையால்)
உண்மையறிவே - அவருக்கு எந்த அளவுக்கு அறிவு இருந்ததோ, அதுவே
மிகும் - எஞ்சியிருக்கும்

ஒருவர் எந்த அளவுக்கு நுட்பமான அறிவைத் தரும் நூல்களைப் படித்தாலும், ஊழின் வலி அவருக்கு எந்த அளவுக்கு அறிவு இருந்ததோ, அதுமட்டுமே எஞ்சியிருக்கும்படி செய்யும் என்கிறது இக்குறள். கெடுக்கும் ஊழாயிருப்பின் அது கற்றதையும் சரியாகப் பயனாக்கிக் கொள்ள இயலாது செய்து, அவருக்கு இயல்பாம் அறிவிலேயே அவரை நிறுத்திவிடும்.

அதற்கு உதாரணமாக கர்ணன் பரசுராமரிடம் பெற்ற சாபத்தைச் சொல்லலாம். அச்சாபத்தினால், பிரம்ம அத்திரத்தை தகுந்த நேரத்தில் மகாபாரதத்தில் தன்னுடைய  எதிரியாம் அருச்சுனம் மேல் எறியமுடியாமல் போனது. கற்றுத் தேர்ந்தது ஊழ் வலியின் முன் பயனற்று போனது,

இரண்டாயிரம் வருடங்களுக்குள்ளான சரித்திரப்பதிவில், இளங்கோ அடிகள் தனக்குத்தான் என்று கணிக்கப்பட்ட மணிமுடியைத் துறந்து, துறவியான கதை நாமெல்லோரும் அறிவோம். இதில் கணித்தவருடைய அறிவை, மற்றவருக்கு விதிக்கப்பட்ட பாதை, மாற்றியது.

நாலடியாரின் பாடல் “கனம் பொதிந்த நூல்விரித்துக் காட்டினும் கீழ்தன் மனம் புரிந்தவாறே மிகும்” என்கிறது. பழமொழிப்பாடல், “பொறியின் வகைய கருமம் அதனால் அறிவினை யூழே அடும்” என்கிறது.  இப்பாடல் கல்வியினும் ஊழின் வலி பெரிது என்கிறது. இதற்கு மாற்றாக “விதியை மதியால் வெல்லலாம்” என்னும் கூற்றும் வழக்கத்தில் உண்டு.

இன்றெனது குறள்:

ஆழ்ந்துணர்ந்து நுண்நூல்கள் கற்றாலும் உள்ளறிவே
ஊழ்வலியால் கொள்ளப் படும்

AzndhuNarndhu nuNnUlgaL kaRRAlum uLLaRivE
UzhvaliyAl koLLap paDum

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...