ஜூன் 29, 2015

குறளின் குரல் - 1167

117: (Weakening, sallowed and wailing - படர்மெலிந்திரங்கல்)

[This chapter is about the wailing of the lady in love who is pining due to her lovers going away. When her lover leaves her either on work or otherwise, the lady in love, not being able to endure the separation, her body is sallowed and she becomes thin; she complains of her state in self-pity in several ways, perhaps to her companion]

30th Jun, 2015

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும்.
                    (குறள் 1161: படர்மெலிந்திரங்கல் அதிகாரம்)

மறைப்பேன் மன் யான் - நானென்னவோ மறைக்கத்தான் செய்கிறேன்
நோயை - என் காதல் நோயை
இஃதோ - இந்த நோயோ
இறைப்பவர்க்கு - நீரை இறைக்க இறைக்க, அவ்வாறு செய்பவர்க்கு
ஊற்றுநீர் போல - பெருகிவரும் ஊற்று நீர் போல
மிகும் - பெருகுகிறதே (மறைக்க மறைக்க)

காதலன் பிரிந்து சென்றதனால் வருந்துகிற காதலியைப் பார்த்து, உன்வருத்தத்தை ஊரார் அறியும் படிக் காட்டாதே என்னும் தோழிக்கு, அவள் கூறுகிறாளாம். நான் என்ன செய்வேன்? அவனைப் பிரிந்து வாடுகிற காதல் நோயை நான் மறைக்கத்தான் முயல்கிறேன். ஆனால் அதுவோ இறைக்க இறைக்க ஊறும் ஊற்று நீரைப் போல, மறைக்க மறைக்கப் பெருகுகிறதே தவிர அருகக் காணோமே என்று அலமந்து புலம்புகிறாளாம் காதல் தலைவி!

Transliteration:

maRaippEnman yAnihdO nOyai iRaippavarkku
URRunIr pOla migum

maRaippEn man yAn – I am hiding it (what)
nOyai – my love sickness (due to separation from my lover)
ihdO – but this sickness
iRaippavarkku – like how as more and more is drained
URRunIr pOla - the more water springs from the stream
migum – it only grows more.

In this verse, the maidens’ companion tells her not to show her pain and love sickness for the town to know. She replies, feeling more sorrowful, and says thus: “What can I do? I am trying to hide the pain of love sickness to the best of my ability; but like how water springs more from a stream, the more we drain it, my love sickness only grows more, the more I try to hide it!”

“What am I to do? The more I try and hide my love sickeness and its pain,
 more it grows like water springs more from a stream, the more we drain!


இன்றெனது  குறள்:

என்செய்ய யான்மறைத்து இந்நோயோ ஊற்றுநீராய்
துன்பம் பெருக்குதே மிக்கு

enseyya yAnmaRattu innOyO URRunIrAi
thunbam perukkudE mikku

குறளின் குரல் - 1166

29th Jun, 2015

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
                        (குறள் 1160: பிறிவாற்றாமை அதிகாரம்)

அரிதாற்றி - உடன்பட கடினமாகிய தலைவன் பிரிவிற்கே உடன்பட்டு
அல்லல்நோய் நீக்கிப் - பிரிவினால் வந்துறும் காம நோயாம் அல்லலையும் நீக்கி
பிரிவாற்றிப் பின் - அப்பிரிவினையும் பொறுத்து
இருந்து வாழ்வார் பலர் - உயிரோடு வாழுகின்ற பெண்கள் பலர் உள்ளனர்.

காதற் தலைவன் பிரிகிறேன் என்று சொல்வதைக் கேட்டு அதற்கு உடன்படுவதே மிகவும் கடினமான ஒன்று. அதையே செய்துவிடுகிறார்கள் சிலர்; தவிரவும் பிரிந்த பின் தலைவனோடு இருந்த நாட்களை, வீசும் தென்றல், யாழ், குளிர் மதி போன்றவை நினைவூட்டிக்கொண்டே இருந்து, அதனாள் வீழும் காதல் நோயையும் தம்மிடமிருந்து நீக்கி, பிறகு, தலைவன் பிரிந்தபோது, அப்பிரிவைத்தாங்கியும் உயிரோடு வாழ்கிற பெண்கள் பலர் உள்ளனர். ஆயினும் நீயோ பிரிவை ஆற்றமுடியாத அளவுக்கு உன் தலைவனை நேசிக்கிறாய், என்று தோழி காதற்தலைவியிடம் சொல்லுகிறாள்.

தலைவனோடு இன்பத்தில் ஆழ்ந்திருந்த தலைவிக்குத் தலைவன் “பிரிகிறேன்” என்று சொல்வதைக் கேட்பதே அரிது; அதற்குள்ளாகவே உயிர்போய்விடும்; அவ்வாறு பிரியின், சென்றவர்க்கு என்ன ஆகுமோ? அவர் வரும் வரை நான் உயிரோடு இருப்பேனா என்று பசலையில் வருந்தி மெலிந்து தேய்வதும் இயற்கை. இதையும் தாண்டி அப்பிரிவைப் பொறுத்து உயிர் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களது காதலின் வன்மையின்மையைத்தானே காட்டுகிறது? ஆனால் இவளோ இவற்றுள் ஒன்றையும் பொறுக்கமாட்டாதவள் என்று தோழி உணர்த்துகிறாள்.

Transliteration:

aridARRi allalnOi nIkkip pirivARRip
pinirundu vAzhvAr palar

aridARRi – Accepting his saying “separation” that in itself is difficult to bear
allalnOi nIkkip – and even be rid of the love sickness and its pains
pirivARRip pin – and even tolerating his separation
irundu vAzhvAr palar – many women live.

Even to listen to her lover saying that he was “leaving” would be difficult; some ladies do that very easily; further they even get rid of the love sickness, despite the moon, breeze and the sweet music of lute that remind her of him constantly;  they even tolerate the separation of their beloved ones.  But you’re not like them; you cannot tolerate even the very word of separation, let alone the love sickness. You love him so dearly! If he leaves her she  would not live to see his return as said in the very first verse of the chapter! This is what is implied in this verse by the maidens’ friend.

“Tolerating that which is difficult, lusts’ distress driven away
 even tolerating the separation, live many women, everday”


இன்றெனது  குறள்:

செலவிட்டு அத்துன்பம் நீக்கியதைத் தாங்கி
உலப்பிலாப் போல்வாழ்வோ ருண்டு

selaviTTu aththunbam nIkkiyadaith thAngi
ulappilAp poLvAzvO ruNDu.

ஜூன் 28, 2015

குறளின் குரல் - 1165

28th Jun, 2015

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.
                        (குறள் 1159: பிறிவாற்றாமை அதிகாரம்)

தொடிற் சுடின் அல்லது - தொட்டால் சுடுவதல்லாமல்
காமநோய் போல - காதல் நோய் போல
விடிற் சுடல் ஆற்றுமோ தீ - காதலன் நீங்கும் பிரிவால் சுடுகிறதே, அது போலாகுமா நெருப்பானது?

நெருப்பு சுடும் வல்லமையுள்ளதுதான். ஆனால் அதைத் தொட்டால் தானே சுடுகிறது? காதல் நோய் எப்படிப்பட்டது தெரியுமா? அது என் காதலன் என்னை விட்டு நீங்கும் போது சுடுகிறதே. அது தீயினும் கொடியதாயிற்றே! என்று தோழியிடம் காதற்தலைவி புலம்புவதாக ஒரு அழகான கற்பனை.

Transliteration:

thoDirchuDin alladu kAmanOi pOla
viDiRchuDal ARRumO tI

thoDir chuDin alladu – but for burning only when touched
kAmanOi pOla-  like the diease of love
viDiR chuDal ARRumO tI – will the fire burn, when separated?

What is new in fire burning? Only when touched it burns; do you know how the sickness of love is? When being separated (from the lover), it burns, complains the maiden to her friend. A nice imagination of vaLLuvar!

“What is new in fire burning, that too when touched!
 Does it burn like the love sickness, when separated?


இன்றெனது  குறள்:

தொட்டால் சுடுகின்ற தீவாட்டும் காமம்போல்
விட்டால் சுடவல்ல தோ?

thoTTal suDuginRa tIvATTum kAmampOl
viTTal suDavalla dO?

ஜூன் 27, 2015

குறளின் குரல் - 1164

27th Jun, 2015

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.
                        (குறள் 1158: பிறிவாற்றாமை அதிகாரம்)

இன்னாது - துன்பமே
இனன் - சூரியன் (இதை தம்மினத்தோரான தோழியர் என்பார் பல உரையாசிரியர்கள்)
இல் ஊர் வாழ்தல் - இல்லாத ஊரிலே வாழ்வதென்பது
அதனினும் இன்னாது - அதைவிட துன்பமானது
இனியார்ப் பிரிவு - உள்ளத்துக்கு இனியவரான காதலரின் பிரிவு.

இனன் என்ற சொல்லை இனம் என்றளவில் கொண்டு தோழியரென்றும், தம்மினத்தவர் என்றும் பரிமேலழகர் முதல் பல உரையாசிரியர்கள் செய்துள்ளனர். அவ்வாறு கொண்டாலும் பொருள் வருமாயினும், வள்ளுவர், இனன் என்பதை ஆதவன், சூரியன் என்ற பொருளிலேயே ஆண்டிருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது, சூரியனில்லாத ஊர் இருள் சூழ்ந்து வாழ்தற்கு துன்பமாகுமாப்போல், தமக்கு இனியரானவரின் பிரிவானது, அதனினும் துன்பம் தருவது என்று காதற்தலைவி புலம்புவதாகக் கூறுகிறார். தன்னுடைய காதலரை சூரியனுக்கு ஒப்பாக காதலி நினைப்பதும், அவரது இருப்பே வாழ்வில் வெளிச்சமென்று உணர்வதும் சரிதானே? அதேபோல், காதலனின் பிரிவும் இருளினும் துன்பமானது என்று நினைப்பதும் சரிதானே?

காதல் வயப்பட்ட பெண்ணுக்கு இனத்தை விட அல்லது தோழியரைவிட காதலனே உற்றவன் என்பதால் மற்ற உரையாசிரியர்கள் கருதுவதும் சரியாகவே தோன்றினும், மேற்கூறிய பொருளே பொருந்துகிறது.

Transliteration:

innAdu inanilUr vAzdal adaninum
innAdu iniyAr pirivu

innAdu – painful it is
inan – sun (most commentators interpret as the kith and kin or friends of the maiden)
il Ur vAzdal – living in the city devoid of (sun or kith and kin or friends)
adaninum innAdu – more painful that that is
iniyAr pirivu – the separation of that who is sweet to the heart.

Almost all the commentators including Parimelazagar, have interpreted the word “inan” as kith and kin or as the friends of the maiden, miserable with sepatation. Though we can interpret the word to mean as the say, it makes perfect sense to understand the word to refert to “sun”, which gives light. A town devoid of sun is dark and gloomy and hence is miserable. Here vaLLuvar alludes that the maiden feels, the separation from her beloved is gloomier than that. It is understandable that the maiden feels that her lover brings light to her life and hence can be equated to sun; likewise her feeling that his separation brings gloom more severe than sun not being there, also is meaningful.

As others intepret, the maiden feels that, more than not having kith and kin or friends, gloomier and painful it is to be separated from the lover. Though a nice interepretation, probably not what VaLLuvar intended.

“Miserable it is to live in a town devoid of sunlight
 Worse than that is the separation of sweetheart”


இன்றெனது  குறள்(கள்):

துன்பாம் கதிரோனில் ஊர்வாழ்தல் மிக்கதிலும்
துன்பெந்தன் அன்பர் பிரிவு

thunbAm katirOnil UrvAzhdal mikkadilum
thunpendan anbar pirivu

துன்பாம் இனத்தோரில் ஊர்வாழ்தல் மிக்கதிலும்
துன்பெந்தன் அன்பர் பிரிவு

thunbAm inattOril UrvAzhdal mikkadilum
thunpendan anbar pirivu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...