ஜூன் 29, 2015

குறளின் குரல் - 1166

29th Jun, 2015

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.
                        (குறள் 1160: பிறிவாற்றாமை அதிகாரம்)

அரிதாற்றி - உடன்பட கடினமாகிய தலைவன் பிரிவிற்கே உடன்பட்டு
அல்லல்நோய் நீக்கிப் - பிரிவினால் வந்துறும் காம நோயாம் அல்லலையும் நீக்கி
பிரிவாற்றிப் பின் - அப்பிரிவினையும் பொறுத்து
இருந்து வாழ்வார் பலர் - உயிரோடு வாழுகின்ற பெண்கள் பலர் உள்ளனர்.

காதற் தலைவன் பிரிகிறேன் என்று சொல்வதைக் கேட்டு அதற்கு உடன்படுவதே மிகவும் கடினமான ஒன்று. அதையே செய்துவிடுகிறார்கள் சிலர்; தவிரவும் பிரிந்த பின் தலைவனோடு இருந்த நாட்களை, வீசும் தென்றல், யாழ், குளிர் மதி போன்றவை நினைவூட்டிக்கொண்டே இருந்து, அதனாள் வீழும் காதல் நோயையும் தம்மிடமிருந்து நீக்கி, பிறகு, தலைவன் பிரிந்தபோது, அப்பிரிவைத்தாங்கியும் உயிரோடு வாழ்கிற பெண்கள் பலர் உள்ளனர். ஆயினும் நீயோ பிரிவை ஆற்றமுடியாத அளவுக்கு உன் தலைவனை நேசிக்கிறாய், என்று தோழி காதற்தலைவியிடம் சொல்லுகிறாள்.

தலைவனோடு இன்பத்தில் ஆழ்ந்திருந்த தலைவிக்குத் தலைவன் “பிரிகிறேன்” என்று சொல்வதைக் கேட்பதே அரிது; அதற்குள்ளாகவே உயிர்போய்விடும்; அவ்வாறு பிரியின், சென்றவர்க்கு என்ன ஆகுமோ? அவர் வரும் வரை நான் உயிரோடு இருப்பேனா என்று பசலையில் வருந்தி மெலிந்து தேய்வதும் இயற்கை. இதையும் தாண்டி அப்பிரிவைப் பொறுத்து உயிர் வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அது அவர்களது காதலின் வன்மையின்மையைத்தானே காட்டுகிறது? ஆனால் இவளோ இவற்றுள் ஒன்றையும் பொறுக்கமாட்டாதவள் என்று தோழி உணர்த்துகிறாள்.

Transliteration:

aridARRi allalnOi nIkkip pirivARRip
pinirundu vAzhvAr palar

aridARRi – Accepting his saying “separation” that in itself is difficult to bear
allalnOi nIkkip – and even be rid of the love sickness and its pains
pirivARRip pin – and even tolerating his separation
irundu vAzhvAr palar – many women live.

Even to listen to her lover saying that he was “leaving” would be difficult; some ladies do that very easily; further they even get rid of the love sickness, despite the moon, breeze and the sweet music of lute that remind her of him constantly;  they even tolerate the separation of their beloved ones.  But you’re not like them; you cannot tolerate even the very word of separation, let alone the love sickness. You love him so dearly! If he leaves her she  would not live to see his return as said in the very first verse of the chapter! This is what is implied in this verse by the maidens’ friend.

“Tolerating that which is difficult, lusts’ distress driven away
 even tolerating the separation, live many women, everday”


இன்றெனது  குறள்:

செலவிட்டு அத்துன்பம் நீக்கியதைத் தாங்கி
உலப்பிலாப் போல்வாழ்வோ ருண்டு

selaviTTu aththunbam nIkkiyadaith thAngi
ulappilAp poLvAzvO ruNDu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...