நவம்பர் 30, 2014

குறளின் குரல் - 956

1st Dec 2014

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து.
                                    (குறள் 950: மருந்து அதிகாரம்)

உற்றவன் - நோயுற்றவன்
தீர்ப்பான் - அதை தீர்க்கும் மருத்துவன்
மருந்து - நோய்க்குண்டாய மருந்து
உழைச் செல்வானென்று - அருகிருது உதவும் துணை என்று
அப்பால் நாற்கூற்றே - மருத்துவத்தின் நான்கு கூறுகளைக் கொண்டதே
மருந்து - மருத்துவமாகும்

இக்குறளின் ஈற்றுச் சீரான “மருந்து” என்ற சொல், மருத்துவத்துறையைக் குறிப்பதாகும். இத்துறையின் நான்கு கூறுகளாவன: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவர். நோய் தீர்க்கும் மருந்து மற்று, நோயின்போது உறுதுணையாக இருந்து உதவி, பணிவிடை செய்பவரும் ஆகும்.   

சற்றே குழப்பமான குறள்; எப்படிப்பார்த்தாலும், சொற் சிக்கனத்தினால், வள்ளுவர் வெகுவாகக் குழப்புகிற குறள். மருந்து என்றே கொண்டால், நோயாளி எப்படி மருந்தாவான்?  கூறுகளே என்று கொண்டாலும் நோயாளி எப்படி மருத்துவத்தின் கூறுகளில் ஒன்றாகும். மருத்துவத்தின் ஏதெனும் ஒரு கூறினால், உதவப்படுபவரே நோயாளி.. அவறே கூறாகவும் ஆக இயலாது.

என்னத்தான், பரிமேலழகர் மேலும் குழப்பும் விதமாக உரையெழுதினாலும், இக்குறள் இடைச் செருகலாகவே தோன்றுகிறது.

Transliteration:

uRRavan tiRppAn marunduzhai solvAnenRu
appAl nARkURRE marundu

uRRavan – person of disease
tiRppAn – those who treat and cure the patient.
marund(u)- the medicine
uzhai solvAnenRu – person that help by being close to the patient
appAl nARkURRE – the four division of medicine
marundu – know as the faculties medicine

The last word in this verse “marundu” seems to imply the field of medicine in totality. The four elements that make the field are, the patient, the practicing physician, the curing medicine, and the an aid that helps the patient while being treated. The aid could be construed to be the modern day nursing aids.

The verse is confusing indeed perhaps due to the economy of words that vaLLuvar either intentionally or otherwise has employed. The find word means medicine. How can that be a patient? The metaphorical references of a physician, and the nursing aids themselves being medicine is somewhat acceptable.  Even assuming that he is talking about the four part of the field of medicine, patient does not fit in that scheme either. If he is referring the to system, holistically, even then the patient is not part of the system; he is only the availer of the system.

Parimelazhagar’s commentary shows his imagination well, but not the intent of the verse.

“The Patient, the physician, the remedies, and the patients aid,
 are the four divisions of medical science that practioners abide”

இன்றெனது குறள்(கள்):

மருந்தென்ப நோயுற்றான், தீர்ப்பான், மருந்து,
அருந்துணை என்றநான்கு மாம்

marundenba nOyuRRAn tIrppAn marundu
arunthuNai enRanAngu mAm.

மேலே எழுதப்பட்ட குறள், மூலக்குறளை ஒட்டிய குழப்பத்தையே காட்டுகிறது; அதனால் கீழ்வரும் குறளும்.

மருத்துவத்தின் கூறென்ப நோயுற்றார், தீர்ப்பார்
மருந்துமுற்ற கூட்டுமாய நான்கு  

maruththuvaththin kURenba nOyuRRAr tIrppAr

marundumuRRa kUTTumAya nAngu

நவம்பர் 29, 2014

குறளின் குரல் - 955

30th Nov 2014

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
                                    (குறள் 949: மருந்து அதிகாரம்)
உற்றான் - நோயுற்றார்
அளவும் - வயது, பருவம் இவற்றை அறிந்து
பிணியளவும் - அவருற்ற நோயின் தன்மையும், வலியுமறிந்து
காலமும் - நோய் தணிக்க தமக்கு இருக்கும் நேரம், மற்றும் தகுந்த நேரம் இவற்றை
கற்றான் - நூலறிந்த கற்றுச் சிறந்த மருத்துவன்
கருதிச் - தம் கருத்தில் கொண்டு
செயல்- மருத்துவம் செய்யவேண்டும்

ஒரு தேர்ந்த மருத்துவர், நோயாளியின் வயது, அவருற்ற நோயின் வலிமை, அவரது நோய் தணிக்க தனக்கிருக்கும் நேரம் இவற்றைக் கருத்தில் கொண்டு அவருக்கு மருத்துவம் செய்யவேண்டும்.  பிணி ஒன்றே ஆயினும் ஒருவரின் வயது, அவருடை உடலின் தற்போதைய நிலைமை, அவருக்கு எந்தவிதமான மருத்துவம் ஏற்கும் என்பதை அறிந்து, மருத்துவம் செய்வதற்கான கால அளவு இவற்றை உணர்ந்து மருத்துவம் செய்பவரே சிறந்த மருத்துவர்.

“அறுவை சிகிச்சை வெற்றிகரம், ஆனால் நோயாளி மரணம்” என்ற அளவில் மருத்துவர்கள் செயல்படக்கூடாது. நல்ல மருத்துவரே நல்ல மருந்துமாவார் என்பதைக் கூறும் குறளிது. இக்குறளின் குறிக்கப்படும் கால அளவு என்பது, மருத்துவம் செய்ய ஏற்ற நேரத்தையும், இருக்கின்ற கால அளவையும் குறிப்பதாகும். காலம் தாழ்த்திச் செய்வதோ, அல்லது காலத்திற்கு முன்பாகவே செய்வதோ, இரண்டுமே மருத்துவத்தில் தவிர்க்கப்படவேண்டியன.

Transliteration:

uRRAn aLavum piNiyaLavum kAlamum
kaRRAn karudich cheyal

uRRAn – that who is afflicted by disease, the patient
aLavum – his/her age
piNiyaLavum – the extent of the disease
kAlamum – the time available to cure for appropriate for treatment
kaRRAn – an expert doctor
karudich – will consider all such factors and
cheyal – give the right treatment/medicine to the patient

An expert and learned doctor shall consider all the factors such as the age of the patient (vital in deciding what type treatment will be agreeable), the extent of the disease in the patient, and the time available to the treatment for it to be effective for the patient;

Operation success, but patient died” cannot be the way a learned doctos shall function. A confident, reliable, learned doctor himself is half the cure and also a perfect medicine for a patient. The time measure mentioned in this verse implies both the time available as well as appropriate time to do the treatment for it to be effective.

“An expert shall consider all factors such as patients’ age, extent of illness
and available and appropriate time for treatment to restore them to fitness”

இன்றெனது குறள்:

நூலறிந்தோர் நோயுற்றார் தம்வயதும் நோய்வலியும்
காலமும் நோக்கிச் செயல்

nUlaRindOr nOyuRRAr thamvayadum nOivaliyum

kAlamum nOkkich cheyal

நவம்பர் 28, 2014

குறளின் குரல் - 954

29th Nov 2014

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
                                    (குறள் 948: மருந்து அதிகாரம்)

நோய்நாடி - பிணியானது இன்னதென்று உடற் குறிகளாலும், வெளிப்பாடுகளாலும் அறிந்து
நோய்முதல் நாடி - அப்பிணியின் மூலகாரணம் என்பதை ஆராய்ந்து அறிந்து
அதுதணிக்கும் வாய்நாடி - பின்னர் அப்பிணி தீர்க்கும் வழியினையும் இன்னதென்று அறிந்து
வாய்ப்பச் செயல் - தக்க மருத்துவமும், மருந்தும் தந்து பிணியை நீக்க வேண்டும்

ஒருவர் பிணியால் பிணிக்கப்பட்டால், அது இன்னதென்று தோன்றும் உடற்குறிகளாலும், உடலிலிருந்து வரும் வெளிப்பாடுகளாலும் (வியர்வை, மலம், மூத்திரம், சளி, தோல் நிறம்) அறிந்து கொண்டு, அப்பிணி உற்றதற்கான வேராகிய மூல காரணத்தையும் ஆய்ந்தறிந்து, பின்னர் அதை வேரோடு அறுத்தலுக்குண்டாய மருந்தினையும் தந்து நீக்குதலே மருந்தின் இயல்பாகவும், மருத்துவர் திறமையாகவும் இருக்கவேண்டும்.

தணிக்கும் வாய்நாடி என்பது தொன்மையான இந்திய மருத்துவமுறைகளாம் ஆயுர் வேதம், சித்த வைத்தியம் போன்றவற்றில் விரிவாக, ஒவ்வொரு நோய்க்கும் சொல்லப்பட்டுள்ளன. உதிரம் நீக்கல், அறுவை, மற்றும் சுடுதல் போல பல வழிகளை இம்முறைகளை அம்மருத்துவ நூல்களை படிப்போர் அறிவர்.

இக்கருத்தை நற்றிணை மற்றும் நீலகேசி பாடல் வரிகள் இவ்வாறு கூறுகின்றன.

“அரும்பிணி உறுநர்க்கு வேட்டது கொடாது மருந்தாய்ந்து கொடுத்த அறவோன் போல” (நற்றிணை)

“நோயைத் துணிந்தே உறுநோய்முதல் நாடி அந்நோய்க்கு ஆய மருந்தே அறிந்தூட்டும்” (நீலகேசி)

Transliteration:

nOinADi noimudal nADi aduthaNikkum
vAinADi vAippach cheyal.

nOi nADi – knowing what the disease by physical examinations and bodily signs
noimudal nADi – and understanding the root cause of the same
aduthaNikkum vAinADi – the finding the appropriate way to cure,
vAippach cheyal – treatement and medicine should be give to remove the ailment.

A disease must be identified by its external manifestations like skin color, eyes, tongue changes, including the excretions and secretions; then the root cause of the same must be researched well and proper course of medicine and other treatment forms must be undertaken to cure the sickness; such must be the nature of medicine and the skills of a doctor.

Olden ways of Indian medicine systems such as Sidda vaidya and AyurvedA have elaborate treatises that discuss several diseases, their signs, cures etc., including transfusion, burning wounds, and surgical procedures in some cases.

There are citations that allude to the theme of this verse in literary works nIlakEsi and NaRRiNai.

“Know the disease, its root cause and the procedures
 to cure the same by appropriate medicine and sutures”

இன்றெனது குறள்:


பிணியும் அதன்வேரும் மற்றதை போக்கும்
பணிவழியும் தேர்ந்துச் செயல்

piNiyum adanvErum maRRadai pOkkum
paNivazhiyum tErndu seyal

நவம்பர் 27, 2014

குறளின் குரல் - 953

28th Nov 2014

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும்.
                                    (குறள் 947: மருந்து அதிகாரம்)

தீ அளவு - பசியின் அளவு
ன்றித் - (அறியாதது மட்டும்) அல்லாமல்
தெரியான் - (உண்ணும் காலமும்) தெரியாது ஒருவன்
பெரிது உண்ணின் - மிகுந்த அளவில் உண்ணுவானே ஆனால்
நோய் - வியாதிகளை
அளவின்றிப் படும். - இவ்வளவென்று சொல்லமுடியாத அளவுக்கு பட்டுழல்வர்.

பசியின் அளவு இன்னதென்று தெரியாமலும், எப்போது உண்ணுவதற்கு ஏற்றகாலமென்று தெரியாமலும், ஒருவன் பெரும் தீனி உண்பானாயின், அவன் அதன் காராணமாகவே இன்னளவு என்று கூறவியலாத அளவுக்கு வியாதிகளுக்கு ஆட்பட்டழிவான் என்று அளவும், நேரமும் அறிந்தே உண்ணவேண்டியதை வலியுறுத்துகிறார் வள்ளுவர் இங்கே.

முதுமொழிக் காஞ்சி, “உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது” என்பதும், ஆத்திச் சூடி,  “மீதூண் விரும்பேல்” என்பதும் இக்குறளின் கருத்தையொட்டி, உணவை மிகுந்த அளவில் உண்ணக்கூடாது என்பதை வலியுறுத்துத்தவேதான்.

Transliteration:

tIyaLa vanRit teriyAn periduNNin
nOyaLa vinRip paDum

tI aLavu – without knowing the heat of hunger (extent of hunger)
anRit – not only that
teriyAn – not knowing the time duration required between two meals
perid(u) uNNin – if a person eats excessively
nOi - Diseases
aLavinRip paDum – will be subject to it without measure.

Without knowing the extent of hungers’ heat, and the time to eat each meal, if a person eats excessively, gluttonously he shall be subject to immeasurable diseases and destroyed, says this verse underscoring the importance of eating in time and when the intensity of hunger is right enough to feed self.

The following Mudumozhi kAnchi and Athichoodi lines stress the importance of not eating gluttonously: “uNDi veyyOrkku uRupiNi eLidu” (Mudumozhi Kanchi); “mIdUN virumbEl” (Attich chUDi).

“Gluttonous eating not knowing the extent of heat of hunger
 nor the time, shall get one diseases immeasurable to linger”

இன்றெனது குறள்:

பசியளவை எண்ணார் பெரிதளவில் உண்பார்
நசித்தழிவார் நோய்வாயிற் பட்டு

pasiyaLavai eNNAr peridaLavil uNbAr

nasitthazhivAr nOivAyiR paTTu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...