அக்டோபர் 31, 2014

குறளின் குரல் - 925

31st Oct 2014

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.
                             (குறள் 919: வரைவில் மகளிர் அதிகாரம்)

வரைவு இலா - ஒழுக்க நெறிமுறைகள் ஏதுமில்லாத
மாண் இழையார்- மதிப்புக்குரியனவற்றை செய்யாத விலைமாதர்
மென்தோள் - மென்மையான தோள்களே
புரை இலாப் - பெருமை இல்லாத
பூரியர்கள் - இழிமக்கள்
ஆழும் - அழுந்தக்கூடிய
அளறு - சேறு நிறைந்த சகதிக் குழியாகும்

ஒழுக்க நெறிமுறைகள் இல்லாத, மதிப்புக்குரியனவற்றை செய்யாத விலைமாதரின் மென் தோள்களில் முயங்கிக் கிடப்பதே பெருமை இல்லாத இழிமக்கள் அழுந்தக்கூடிய சகதிக் குழியாகும். வரைவில் மகளிரைச் சேர்பவர்கள் அழுக்கிலே அமிழ்ந்து உழல்பவர்கள். இழிமக்கள் என்று கூறியது பெருமை இல்லாதவர்களையே கூறுவதால், இதில் குடிப்பிறப்பு மற்று சாதி இவற்றைக் அடையாளக் குறிகளாக்காது ஒருவரது செயல்களால் சேரும் பெருமை என்பதையே குறிக்கும் விதமாக, “புரை இலா" என்கிறார் வள்ளுவர்.

Transliteration:

varaivilA mANizhaiyAr menthOL puraiyilAp
pUriyarkaL Azhum aLaRu

varaivu ilA – Without any chaste discipline
mAN izhaiyAr – and not doing anything respectable
menthOL – women of slender arms
puraiy ilAp – have no glory
pUriyarkaL – lowly men (of no good conduct)
Azhum – immerse in that
aLaRu – mire, dirty muck.

To be in the embrace of unchaste and ill reputed harlots is like being in the dirty muck or mire for men of no glory and lowly conduct, says this verse. Since glory and lowly conduct are emphasized, it is evident that noble birth and caste are not placed in the fore. Glory for men comes from their flawless conduct and acts. Hence the use of word, “pural ilA”.

Staying in the embrace of slender arms of unchaste, harlots of ill repute
are like immersing in dirty muck, for men of no glory and lowly conduct”

இன்றெனது குறள்:

நெறியில் விலைப்பெண்டிர் தோள்கள் பெருமைக்
குறியா இழிந்தோராழ் சேறு

neRiyil vilaippeNDir thOLgaL perumaik

kuRiyA izhindOrAzh sERu

அக்டோபர் 30, 2014

குறளின் குரல் - 924

30th Oct 2014

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு
                       (குறள் 918: வரைவில் மகளிர் அதிகாரம்)

ஆயும் அறிவினர் - ஆய்ந்து, இவை நல்லன, அல்லது அல்லன என்று பாகுபடுத்தி ஆராயும் அறிவுடமை
அல்லார்க்கு - இல்லாதவர்க்கு
அணங்கு என்ப - துன்பம் என்பதாம் (காம வயப்படுத்தி அழிக்கு மோகினி என்றும் கூறுவர்)
மாய மகளிர் - வஞ்சத்தை நெஞ்சில் சுமந்த வஞ்சியராம் விலைமகளிர்
முயக்கு- அவர்களோடு கூடிக் கொள்ளும் உடலுறவால்

இவையிவை நல்லன அல்லது அல்லன என்பதை பாகுபடுத்தி ஆராய்ந்து நல்லவற்றைக் கொள்ளும் அறிவுடமை இல்லாதவர்க்கு, வஞ்சத்தை நெஞ்சில் சுமந்த வஞ்சியராம் விலைமகளிரைக் கூடுவதால் துன்பமேயாம்.

"அணங்கு" என்பதை பரிமேலழகர் "காம நெறியால் உயிர்கொள்ளும் தெய்வம்" என்று கூறி, அவ்வாறு ஆராயாது முயங்குவோர் உயிரிழக்க நேரிடும் என்று எச்சரிக்கையாகக் கூறுகிறார். “காமப் பிசாசு" என்றிருக்கவேண்டும். விலைமாதரை ஒரு பேச்சுக்காகக் கூட தெய்வத்தின் நிலைக்கு உயர்த்துவது சரியில்லை. "அணங்கு" என்ற சொல்லுக்கு வருந்துகிற துன்பம் என்றும் பொருள் கொள்ளலாம் ஆகையால் அவ்வாறு கொள்ளுதலே மேலும் பொருத்தமாயிருக்கும்.

Transliteration:

Ayum aRivinar allArkku aNangenba
mAya magaLir muyakku

Ayum aRivinar – Being wise with deep thinking and knowing what is good or bad
allArkku – people devoid of such thinking
aNang(u) enba – misery befalls
mAya magaLir – with cunning women that sell pleasure
muyakku – physical relationship with them.

Those who do not have the wisdom to differentiate between good and bad and tread only the path of good, shall have misery, because of their embrace and relationship with the prostituting women that carry only thoughts of exploitation in their minds.

Parimelazhagar interprets the word “aNangu” as the goddess of lust and desire that will give death to such fools by dragging them into its vicious net. To give goddess status to an instigating evil nature does not fit somehow. The word also means, “misery”; hence it makes sense to interpret that such fools will fall into misery because of their indiscriminate acts.

Relationship with cunning women, that to covet, lure
 shall bring only misery to thoughtless fools, for sure”

இன்றெனது குறள்(கள்):

வஞ்சம் சுமந்தவஞ்சி யர்முயக்கம் துன்பமாம்
கொஞ்சமும் ஆய்ந்தறிவற் றார்க்கு

vanjam sumandavanji yarmuyakkam thunbamAm
konjamum AyndarivaR RArkku

வஞ்சனெஞ்ச வஞ்சியர்க்கண் துஞ்சதுன்பே விஞ்சுமாம்
கொஞ்சமும் ஆய்ந்தறிவற் றார்க்கு

vanjanenja vanjiyarkaN thunjathunbE vinjumAm

konjamum AyndarivaR RArkku

அக்டோபர் 29, 2014

குறளின் குரல் - 923

29th Oct 2014

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
                           (குறள் 917: வரைவில் மகளிர் அதிகாரம்)

நிறை நெஞ்சம் - மனவடக்கம்
இல்லவர் - இல்லாதவரே
தோய்வார் - தீண்டுவார், முயங்கிக்கிடப்பார்
பிறநெஞ்சிற் பேணிப் - தம்முள்ளத்தில் பிறரால் கிடைக்கும் பொருளாதாயத்தை மட்டும் கருதி
புணர்பவர் தோள் - அவரோடு உடலுறவு கொள்ளும் பரத்தையரை.

யார் பரத்தையரைக் கூடி, அவர்களுடை அழகுமிக்க தோள்களிலேயே தம்மை ஒப்புவித்து கிடப்பார் என்பதைப் பொதுவாகக் கூறுகிற குறள். யாரெல்லாம் அவ்வாறு இருக்கமாட்டார்கள் என்பதை கடந்த மூன்று குறள்களில் கூறிவிட்டு, இக்குறளில், மனவடக்கம் இல்லாதவரே விலைமாதரோடு முயங்கியிருப்பார் என்று பொதுவாகக் கூறுகிறார் வள்ளுவர்.

உள்ளம் வேறொருவர்பால் இருக்க, வஞ்சத்தால் தம்மோடு உறவுகொள்ளும் விலைமாதரின் கருத்தை அறியாதோர், ஆராய்ந்து நன்றாகத் தெரிந்த நிலையினும் தீவினைமிக்க பிறப்பினை உடையவர் என்பதை கூறும் நாலடியார் பாடல்:

"உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம்" என்னும் நாலடியார் பாடல்.

கம்பரும் இதையே இவ்வாறு கூறுகிறார். "விலைநினைந் துளவழி விலங்கும் வேசையர் உலைவுறும் மனமென"

Transliteration:

niRainenjam illavar thOivAr piRanenjiR
pENip puNarbavar thOL

niRai nenjam – restrained heart
illavar – those that are devoid of that
thOivAr – will be in the company of harlots
piRanenjiR pENip – that keep only their gains in their minds
puNarbavar thOL – and are willing for intercourse for that.

After identifying who are all not likely to be in the company of harlots for what reasons, in the previous three verses, in this verse, vaLLuvar says that only those who have no restrain in their hearts and minds are likely to have physical relationship with harlots that sell their bodies in exchange of personal gains without any true sense of love.

Only weak minded without restrained hearts, seek the embrace
of harlots that for their gain sell themselves without any remorse”

இன்றெனது குறள்:

தன்னலமே பேணும் பரத்தையரைக் கூடுவார்
நன்னலம் நெஞ்சிலாத வர்

thannalamE pENum paraththayaraik kUDuvAr

nannalam nenjilAda var

அக்டோபர் 28, 2014

குறளின் குரல் - 922

28th Oct 2014

தன்னலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பார்ப்பார் தோள்
                              (குறள் 916: வரைவில் மகளிர் அதிகாரம்)

தன்னலம் - தம்முடைய புகழ் (அறம் மற்றும் ஒழுக்கம் கூடியதால் ஏற்படுவது)
பாரிப்பார் - பரப்புதற்குரிய ஒழுக்கச் சீலர்கள்
தோயார் - தீண்டார்
தகைசெருக்கிப் - தமக்கு தகைமை என்னும் அழகு, ஆடல், பாடல் இவற்றை வெளிப்படுத்தி
புன்னலம் - இழிவாக விலைப்பொருளாக்கிய அழகாம்
பார்ப்பார் - பரத்தையரின்
தோள்- அழகு தோள்களை

விலைமாதருக்கு அவர்களுடைய முதலீடு என்பது அவர்களது அழகு, அவர்கள் பிறரை மயக்குதற்கு வெளிப்படுத்தும் ஆடல், பாடல் திறமைகள். அவற்றை வைத்து தங்களுடைய வயிற்றை வளர்ப்பதோடு, மற்ற வாழ்க்கை வளங்களையும் கொள்ளும் விலைமாதருடைய அழகுத்தோள்களினை, அறம் மற்றும் ஒழுக்கத்தால் ஏற்படும், புகழ் பரவுவதையே விரும்புகிற சீலர்கள் தீண்டமாட்டார்கள், என்கிறது இக்குறள்.

கடந்த இரண்டு குறள்களிலும் காணப்பட்ட பொருளே, எனினும், இதில் அருள் பொருள் தேடும் அருளாளர்களை முதலிலும், அடுத்ததாகக் கற்றறிந்த சான்றோர்களையும், இக்குறளில் புகழுக்காக ஒழுக்க சீலத்தைப் போற்றுபவர்களையும் கூறுகிறார் வள்ளுவர்.

Transliteration:

thannalam pArippAr thOyAr thagaiserukkip
punnalam pArppAr thOL

thannalam – glory due to virtuous and disciplined conduct
pArippAr – such disciplinarians
thOyAr – will not touch
thagaiserukkip – showing off their so called assets of beauty, dance and music
punnalam – the cheap physical pleasures offered by them
pArppAr – prostituting women
thOL – their beautiful shoulders

Prostituting women think of their beauty, their abilities to dance and sing as assets to win men to fend for themselves as well as prosperity in their lives. Men that seek glory with their virtues and disciplined conduct, shall not be attracted to such women of beautiful shoulders, says this verse.

Though, the same thought is expressed in the past two verse too, it addresses three different types of men, first, about the men seeking godliness, the second, about learned and the present verse about men keen on glory of good conduct and virtues..

Men seeking glory of their good virtues, and good traits
shall not refuge in shoulders of cocottes, be in any straits”

இன்றெனது குறள்:

தம்மொழுக்கம் காத்திடுவோர் தீண்டார் களித்தழகில்
தம்மைவிற்கும் மாதரின் தோள்

thammozhukkam kAththiDuvOr thINDAr kaLiththazhagil

thammaiviRkum mAdarin thOL

அக்டோபர் 27, 2014

குறளின் குரல் - 921


27th Oct 2014

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர்
                                  (குறள் 915: வரைவில் மகளிர் அதிகாரம்)

பொதுநலத்தார் - பொதுமகளிராம் பரத்தையரின்
புன்னலம் - இழிதகை இன்பத்திலே
தோயார் - மூழ்கமாட்டார்
மதிநலத்தின் - சிறந்த இயற்கையாக அறிவினால்
மாண்டபெறப்பட்ட சிறந்த கல்வியோடு கூடிய
அறிவினவர் - அறிவுடையோர்

கூறியதையே மீண்டும் மீண்டும் கூறுகிற குறளிது. பொதுமகளிராம் பரத்தையரோடு கூடும் இழிதகை இன்பத்திலே, சிறந்த இயற்கை அறிவின் துணையோடு பெறப்பட்ட, சீர்த்தியான கல்வியறிவோடு கூடிய அறிவுடையோர் மூழ்கமாட்டார். கல்வியில் பெரியோர், மதிநலம் கொண்டு எச்சில் பண்டமென அம்மாதரைக் கருதி அகத்தூய்மை, மற்றும் புறத்தூய்மை இவற்றில் உறுதியுடன் இருப்பர் ஆதலால், அவர்களுக்கு பரத்தையரோடு கூட விழைவிருக்காது.

Transliteration:
podunalaththAr punnalam thOyAr madinalaththin
mANDa aRivi navar

podunalaththAr – women that sell themselves
punnalam – the cheap physical pleasures offered by them
thOyAr – in that, will not immerse themselves
madinalaththin – with the knowledge they are born with
mANDa – and the knowledge obtained through education
aRivinavar – wisemen.

Another repetitive verse. Nothing different from previous verse. Men of deep wisdom, with innate knowledge and the knowledge through extensive study shall not seek the cheap pleasures of women that sell themselves for anyone as a barter. Wise men, shall consider such women as impure and shall not seek their pleasure to keep their internal and external sanctity.

Wisemen of innate and acquired knowledge shall not
seek the cheap pleasures of women that are harlot”

இன்றெனது குறள்:

இயற்கை அறிவோடு கல்வி சிறந்தோர்
முயங்கவிலை மாதரைக்கூ டார்

iyaRkai aRivODu kalvi siRandOr
muyangavilai mAdaraikkU DAr

அக்டோபர் 26, 2014

குறளின் குரல் - 920

26th Oct 2014

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர்.
                    (குறள் 914: வரைவில் மகளிர் அதிகாரம்)

பொருட் - செல்வப் பொருளாம்
பொருளார் - பொருள்களிலேயே நாட்டம் கொண்ட விலைமாதரால் கிடைக்கும்
புன்னலந் - அற்ப இன்பத்தினில்
தோயார் - தம்மை ஈடுபத்திக்கொள்ளார்
அருட்பொருள் - உயர் பொருளாகிய அருளையே அருஞ்செல்வமாகக் கருதி
ஆயும் - அதை அடையும் வழியை ஆராயும்
அறிவினவர் - அறிவுடையோர்

உலகத்தில் நிலையற்ற இன்பங்களைத் தரும் செல்வத்திலேயே நாட்டம்கொண்டு இன்பத்தை விலைகூறும் பெண்டிர் தரும் அற்ப இன்பத்திலே தம்மை இழந்து ஈடுபடார், உயர் பொருளாகிய அருட்செல்வத்தை அருஞ்செல்வமாகப் போற்றும், அதை அடையும் வழியே ஆராயும் அறிவுடைய ஆன்றோர், என்கிறது இக்குறள்.

நாலடியார் பாடலொன்று, “மாணோக்கின் தந்நெறிப் பெண்டிர் தடமுலை சேராரே செந்நெறிச் சேர்த்துமென் பார்" என்பதும் இக்கருத்தையொட்டியே.

Transliteration:
poruTporuLAr punnalam thOyAr aruTporuL
Ayum aRivi navar

poruT – the wealth of worldly pleasures
poruLAr – women that are only interested in them and sell themselves for such wealth
punnalam – the cheap pleasure they offer
thOyAr – will not immerse themselves in such pleasures
aruTporuL – the higher wealth of virtues and mind development towards such
Ayum - exploring
aRivinavar – wise men

Wise men that seek higher purpose of life and virtues that direct them towards such puritan pursuits, shall not get drawn to women that seek wealth of worldly pleasures and are even prepared to sell themselves in that pursuit, says this verse. A simple verse which says who will not get succumbed to the designs of women that would do anything for their wealth seeking pursuits.

Wise men that are in the pursuit of higher purpose of life in the world
shall not be drawn to the women that are in “sell self for any” mold”

இன்றெனது குறள்(கள்):

அருள்வேண்டி ஆய்தமர்ந்த ஆன்றோர் அமையார்
பொருளுக்காய் புன்செய்பெண் ணோடு

aruLvENDi Aydamarnda AnROR amaiyAr
poruLukkAi punseypeN NODu

செல்வமே போற்றும் பரத்தைகூடார் நல்லருள்
செல்வமாய்ந்த நல்லறி வோர்

selvamE pORRum paraththaikUDAr nallaruL

selvamAinda nallaRi vOr

அக்டோபர் 25, 2014

குறளின் குரல் - 919

25th Oct 2014

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று
                                           (குறள் 913: வரைவில் மகளிர் அதிகாரம் )

பொருட்பெண்டிர் - ஒருவரை விரும்பாது, அவர்தரும் பொருள்மேலே நாட்டம் கொண்ட விலைமாதர்
பொய்ம்மை - பாசாங்கான
முயக்கம் - தழுவலும், அணைப்பும்
இருட்டறையில் - ஒளியில்லாத அறையிலே
ஏதில் - காரணமே இல்லாமல்
பிணந்தழீஇ அற்று - ( முன்னமே அறிந்திராத ஒரு) பிணத்தைத் தழுவியதற்கு ஒப்பாகும்

ஒருவருமேல் உண்மையான அன்போடு அவரை விரும்பாமல், அவரது பொருள்மேலே நாட்டம் கொண்ட விலைமாதரின் பாசாங்கான தழுவலும், அணப்பும், ஒளியில்லாத அறையிலே காரணமே இல்லாமல், முன்பின் தெரியாத ஒரு பிணத்தைத் தழுவியதற்கு ஒப்பாகும், என்கிறது இக்குறள். சாவு வீட்டிலே முன்பின் தெரியாத பிணத்தைத் தழுவி சிலர் காசுக்காக ஒப்பாரி வைப்பர். உண்மையில் அவர்களுக்கும், இறந்தவருக்கும், அல்லது அவர் குடும்பத்தினருக்கும் ஒருவித தொடர்பும் இராது. அத்தகையவரைப் போன்றோரே விலைமாதரும் - காசுக்காகக் கட்டிப்பிடித்து முயங்குவர்; அதில் உண்மையான அன்பு இராது.

Transliteration:

poruTpeNDir poimmai muyakkam iruTTaraiyil
Edhil piNanthazIi aRRu

poruTpeNDir – women who sell physical pleasures for money
poimmai – their false
muyakkam – embrace of physical pleasure
iruTTaraiyil – in the dark room
Edhil – without a reason
piNanthazIi aRRu – embracing a dead corpse

Without true love for a person, having interest only in how much they pay, the embrace of physical pleasure from women that sell sex for money, is like embracing a dead body in the dark room without knowing the dead person. In death houses, there are people that come and cry for money, without being connected either to the dead person or the dead person's relatives. Such is the nature of women that sell their body for money; they have no real affection.

The embrace of women that sell themselves for wealth
  is like embracing the dead body in a darkroom – filth”

இன்றெனது குறள்:

பிணத்தைத் தழுவினார் போன்றாம் பணத்துக்
கிணங்கும் அணங்கைமுயங் கல்

piNaththaith thazhuvinAr pONRAm paNAththuk

kiNAngum aNangaimuyang gal

அக்டோபர் 24, 2014

குறளின் குரல் - 918

24th Oct 2014

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயந்தூக்கி நள்ளா விடல்
                  (குறள் 912: வரைவில் மகளிர் அதிகாரம்)

பயன்தூக்கிப் - ஒருவரால் பெறக்கூடிய ஆதாயத்தை கணக்கிட்டு
பண்புரைக்கும் - அவர் இன்னார் என்று உயர்த்தியோ அல்லது தாழ்வாகவோ மதிப்பிடுதல்
பண்பில் மகளிர் - பண்பு இல்லாத பெண்கள் (வரைவில் மகளிர்)
நயந்தூக்கி - அவர்களுடைய ஒழுக்கத்தை ஆராய்ந்து
நள்ளா விடல் - அவரை விரும்பாமல் ஒழிக

ஆத்திச்சூடியில் ஔவையார், “மைவிழியார் மனை அகல்" என்று சொல்லியிருப்பார். பரத்தையர் வீடு சேர்வதும், அங்கே இருப்பதும் தவறென்று ஒருவர் உணர்ந்து, அம்மனை நீங்கவேண்டும். ஒருவரால் பெறக்கூடிய பயனை மட்டும் கணக்கிட்டு, அவரை உயர்வாகவோ, தாழ்வாகவோ பேசக்கூடிய இருநாக்கு மங்கையர் பண்பில்லாத பரத்தையர். அவர்கள் ஒழுக்கத்தை சீர்தூக்கி, அது சுயநலமிக்க உறவு என்பதை உணர்ந்து அத்தகைய பெண்டிரை விரும்பாது ஒழியவேண்டும் என்கிறது இக்குறள்.

Transliteration:

payanthUkki paNburaikkum paNbil magaLir
nayanthUkki naLLA viDal

payanthUkki – Assessing the benefits likely to get from the person
paNburaikkum – to speak highly or lowly of a person
paNbil magaLir - characterless women
nayanthUkki – assessing their character
naLLA viDal – avoid their company

Leave the whorehouse, the house of ill”, says AuvayyaAr in her work of virtue “AthichchUDi”. Realizing it is lack of virtue and a grave mistake to be in the house of prostitution, one must earnestly attempt to leave. Women of such house, that are twin-tongued, would assess the benefits and the fortune of someone and would speak highly or lowly of their clients. Realizing the selfish nature of such physical relationships, one shall apply caution and leave them, says this verse.

Leave the company of women that weigh the gain
and speak accordingly, lowly or highly, to avoid pain”

இன்றெனது குறள்:

பயனளந்து பேசுகின்ற பாவையரை பாராய்
வயப்படாது விட்டு விலகு

payanaLandu pEsuginRa pAvaiyarai pArAi

vayappaDAdhu viTTu vilagu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...