அக்டோபர் 29, 2014

குறளின் குரல் - 923

29th Oct 2014

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்.
                           (குறள் 917: வரைவில் மகளிர் அதிகாரம்)

நிறை நெஞ்சம் - மனவடக்கம்
இல்லவர் - இல்லாதவரே
தோய்வார் - தீண்டுவார், முயங்கிக்கிடப்பார்
பிறநெஞ்சிற் பேணிப் - தம்முள்ளத்தில் பிறரால் கிடைக்கும் பொருளாதாயத்தை மட்டும் கருதி
புணர்பவர் தோள் - அவரோடு உடலுறவு கொள்ளும் பரத்தையரை.

யார் பரத்தையரைக் கூடி, அவர்களுடை அழகுமிக்க தோள்களிலேயே தம்மை ஒப்புவித்து கிடப்பார் என்பதைப் பொதுவாகக் கூறுகிற குறள். யாரெல்லாம் அவ்வாறு இருக்கமாட்டார்கள் என்பதை கடந்த மூன்று குறள்களில் கூறிவிட்டு, இக்குறளில், மனவடக்கம் இல்லாதவரே விலைமாதரோடு முயங்கியிருப்பார் என்று பொதுவாகக் கூறுகிறார் வள்ளுவர்.

உள்ளம் வேறொருவர்பால் இருக்க, வஞ்சத்தால் தம்மோடு உறவுகொள்ளும் விலைமாதரின் கருத்தை அறியாதோர், ஆராய்ந்து நன்றாகத் தெரிந்த நிலையினும் தீவினைமிக்க பிறப்பினை உடையவர் என்பதை கூறும் நாலடியார் பாடல்:

"உள்ளம் ஒருவன் உழையதா ஒண்ணுதலார் கள்ளத்தால் செய்யும் கருத்தெல்லாம்" என்னும் நாலடியார் பாடல்.

கம்பரும் இதையே இவ்வாறு கூறுகிறார். "விலைநினைந் துளவழி விலங்கும் வேசையர் உலைவுறும் மனமென"

Transliteration:

niRainenjam illavar thOivAr piRanenjiR
pENip puNarbavar thOL

niRai nenjam – restrained heart
illavar – those that are devoid of that
thOivAr – will be in the company of harlots
piRanenjiR pENip – that keep only their gains in their minds
puNarbavar thOL – and are willing for intercourse for that.

After identifying who are all not likely to be in the company of harlots for what reasons, in the previous three verses, in this verse, vaLLuvar says that only those who have no restrain in their hearts and minds are likely to have physical relationship with harlots that sell their bodies in exchange of personal gains without any true sense of love.

Only weak minded without restrained hearts, seek the embrace
of harlots that for their gain sell themselves without any remorse”

இன்றெனது குறள்:

தன்னலமே பேணும் பரத்தையரைக் கூடுவார்
நன்னலம் நெஞ்சிலாத வர்

thannalamE pENum paraththayaraik kUDuvAr

nannalam nenjilAda var

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...