ஆகஸ்ட் 31, 2015

குறளின் குரல் - 1229

31st Aug, 2015

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்.
                           (குறள் 1223: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

பனி அரும்பிப் - பனித் துளி பூத்து
பைதல் கொள் - பசலை படர்ந்தது
மாலை - மாலை பொழுதுக்கு (முன்னர் நானும் அவரும் கூடிய காலை)
துனி அரும்பித் - வெறுப்பு பூத்து
துன்பம் வளர வரும் - துன்பமே வளர்கிறது, இம்மாலையால் இன்று

பனி பூத்து, நான் பசலை கொள்ளும்படியான வேளையான மாலை, இப்போது நான் என் உயிரையே வெறுக்கும்படியாக, என் துன்பம் மேலும் வளர வந்துகொண்டிருக்கிறதே என்று வரப்போகும் மாலைப் பொழுதை நினைத்து கவலையுறுகிறாள்.

உரையாசிரியர்கள் பலரும் இக்குறளுக்கான உரையைச் சரியாக எழுதவில்லை என்றே தோன்றுகிறது. என் தலைவன் என்னை நீங்கி இருப்பதால், பனி பூத்த மாலை வேளைகள் எனக்கு மேலும் பசலையைத் தருவன. அத்தகைய மாலைப் பொழுது, மீண்டும் என் துன்பம் வளர வந்து கொண்டே இருக்கிறது. ஆனால், பனி பூத்தல், என்பதை மாலை நேரத்துக்குப் பசலைப் பூத்ததென எழுதியிருக்கின்றனர்.  இது பொருந்தா கற்பனையாக விளக்கமாக உள்ளது.

மணக்குடவர், பரிமேலழகருக்கு முந்தியவர்; இவர் உரை மிகவும் பொருந்துவதாக உள்ளது. படரைத் தலைவிக்குத் தந்த மாலைப் பொழுது தானும் துன்புற்றதாகக் கூறி, அது மீண்டும் வருவதற்காக அவள் வெறுப்பும் துன்பமும் கொள்வதாகக் கூறுகிறார். இதுவே முற்றிலும் சரி. “இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது” என்று கூறி முடிக்கிறார்.

Transliteration:

Paniarumbip paidalkoL mAlai thuniyarumbit
Tunbam vaLara varum

Paniarumbip – With mist set in
paidalkoL – that which gives paleness
mAlai – this evening
thuniyarumbit – for the hate to blossom in me
Tunbam vaLara varum – and for the pain to grow in me, comes here again.

With mist set in, these evenings make me go pale always; For me to hate it and be painful, the evening is coming again, says the worried and the love-struck maiden about the onset of evening.

Most commentators, including venerated Parimelazhagar have interpreted the verse as if the evening has grown pale, which seems like a nice imaginative interpretation for some other context; But in this verse, what ManakkuDavar that wrote commentary before Parimelazhagar, has interpreted  seems more apt, just not interpreting beyond what the verse conveys.  He says, the mist blossomed evening that gave paleness to the maiden in love always, is feared by the maiden as it is coming again, as the evening is approaching again.

“The mist blossomed evening that makes me grow pale
 is back again for me to hate it and be painful without fail”


இன்றெனது  குறள்:

பனிபெய் படர்தரும் மாலையே மீண்டும்
நனித்துன்பு கூட்டவரு மின்று

panipei paDartarum mAlaiyE mINDum
nanittunbu kUTTavaru minRu

ஆகஸ்ட் 30, 2015

குறளின் குரல் - 1228

30th Aug, 2015

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.
                           (குறள் 1222: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

புன்கண்ணை - துன்பத்திலாழ்ந்திலுள்ளாய்
வாழி மருள்மாலை - நீ வாழ்க மயங்கியிருக்கும் மாலையே
எம்கேள்போல் - எனக்கணுக்கமானவர்போல்
வன்கண்ணதோ - கொடிய நெஞ்சினரோ
நின் துணை - உன்னுடைய துணையும்.

மயங்கும் மாலைப் பொழுதே, நீ துன்பத்தில் இருக்கிறாயே. ஒருவேளை உன்னுடைய துணையும் என் துணைபோல் கொடியதோ? அந்திப் பொழுதின், ஒளியிழந்து கொண்டிருக்கும் தன்மையை, மாலை நேரத்தின் துன்பமாக உருவகம் செய்கிறார் வள்ளுவர். தவிரவும் தம்துணையை கொடிய நெஞ்சினர் என்று கூறி, அவர் மாலை நேரத்து வந்தணையாமைபற்றி தம் வருத்தத்தையும் கூறுகிறாள் காதற்தலைவி

Transliteration:

punkaNNai vAzi maruLmAlai emkELpOl
vankaNNa dOnin tunAi

punkaNNai – You’re in distress
vAzi maruLmAlai – May you live long, the lusterless evening
emkELpOl – like my beloved (who has left me not coming back in the evening)
vankaNNadO – is cruel
nin tunAi – your companion?

O! lustre-losing evening, you’re in distress. Is your companion also as cruel as mine? In this verse, a metaphorical suggestion of evening losing light to the distress of evening is made cleverly by vaLLuvar. Also the maiden refers to her beloved as hard-hearted because he has not come back by the evening to make her evening a pleasurable one.

“O! shineless evening! You’re in distress and pain
 Is your companion as hard-hearted as mine?”


இன்றெனது  குறள்:

என்துணை போலுன் துணையும் கொடிதோசொல்
துன்ப மருட்மாலை யே

entuNai pOlun tuNaiyum koDidOsol
tunba maruTmalai yE

ஆகஸ்ட் 29, 2015

குறளின் குரல் - 1227

123: (Lamenting the arrival of evening  - பொழுது கண்டிரங்கல்)

[Maiden that suffers the pain of her lover going away, dreads the onset of evening, every day when she starts recounting her wonderful evenings and ensuing nights that she spent in her lovers’ embrace. At least the day-time occupies her with daily chores, but the evening, as the day winds up, makes the absence felt strongly and hence the lament intensely]

29th Aug, 2015

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது.
                           (குறள் 1221: பொழுது கண்டிரங்கல் அதிகாரம்)

மாலையோ - நீ வெறும் அந்தி சாயும் நேரம், மாலைப் பொழுதுதானா?
அல்லை - இல்லவே இல்லை.
மணந்தார் உயிருண்ணும் - மணந்து, இன்று தம் கணவரை பிரிந்து இருப்பவர் உயிரைத் தின்னும்
வேலைநீ - கூரிய வேலே நீ
வாழி பொழுது - நீ நன்றாக வாழ்வாயாக

பொழுதே, நீ முன்னர் வந்து சென்ற அந்தி நேரம்போல் இப்போது இல்லை; மணந்து இன்று தம் கணவரை பிரிந்து இருப்பவர் உயிரைத் தின்னும் கூரிய வேலாகிய ஆயுதமாஉ இருக்கிறாய். இருக்கட்டும் நீ நன்றாக வாழ்வாயாக, நாங்கள் துன்பத்துழன்றாலும்!

அந்தி சாயும் நேரம் காதலிலாழ்ந்த அணங்கினர் ஆவலோடு எதிர் நோக்கும் நேரம். அன்புக்குரியவரோடு கூடியிருக்கும் இரவுக்கு உறவாயிருக்கும் நேரம். அதுவே காதலரைப் பிரிந்து வாழும் காதற் பெண்டிருக்கு துன்பம் தரும் நேரமாகிவிடும்.

கலித்தொகை வரிகள் மகளிரின் அந்நிலையை இவ்வாறு கூறுகின்றன.

“வாலிழை மகளிர் உயிர்பொதி அவிழ்க்கும்
காலை ஆவ தறியார்
மாலை என்மனார் மயங்கி யோரே”  (கலி: 119:14,6)

Transliteration:

mAlaiyO allai maNandAr uyiruNNum
vElainI vAzhi pozhudu

mAlaiyO – Are you the same evening (that we used to look forward to)
allai – No, you’re not the same
maNandAr uyiruNNum – you eat the lives of those married women that endure separation from the their respective lovers
vElainI – being the spear
vAzhi pozhudu – at least you live well ( a tone of sarcasm)

O! Evening, now, you be happy! After all it is not your concern that you stand as the spear that kill the lives of married women who are enduring the separation of their respective beloved companions; and you ‘re not like how you used to be, when we looked forward to your coming in as it had given us the happiness of being in the company and embrace of our beloved.

“You are not the evening that you used to be, but a killing spear
 for married women, who endure separation of beloved and dear”


இன்றெனது  குறள்:

அந்தியோநீ அன்று அணங்கினர் ஆவிகொள்ளும்
குந்தம்நீ வாழ்பொழுதே நன்று  (குந்தம் - வேல்)

andiyOnI anRu aNanginar AvikoLLum
kundamnI vAzpozhudE nanRu

ஆகஸ்ட் 28, 2015

குறளின் குரல் - 1226


28th Aug, 2015

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.
                           (குறள் 1220: கனவு நிலை உரைத்தல் அதிகாரம்)

நனவினால் - விழித்திருக்கையில்
நம்நீத்தார் என்பர் - என்னை என் காதலர் நீங்கியதைக் குற்றம் சொல்கிறார்
கனவினால் - கனவில் அவர் நீங்காது இருத்தலைக்
காணார்கொல் - காணார்போலும்
இவ்வூரவர் - இவ்வூரார்.

காதற் தலைமகள், தன் காதலரை ஊரார் குற்றம் சொல்வதைக் கேட்டு இவ்வாறு கூறுகிறாளாம். “ஊரார் என் காதலர் நான் விழித்திருக்கும்போதே என்னை நீங்கிச் சென்றதைக் குற்றமாகச் சொல்கிறார்களே, நாங்கள் கனவில் நீங்காது இருத்தலை இவ்வூரார் கண்டிலர் போலும்”. அவளுக்கு காதற் தலைமகன் மேல் வருத்தம் இருப்பினும், ஊரார் அவனைப் பழிப்பதை அவளால் பொறுக்க முடியவில்லை.

Transliteration:

nanavinAl namnIttAr enbar kanavinAl
kANArkol ivvU ravar

nanavinAl  - when in wakeful state
namnIttAr enbar – that my lover left me, they fault
kanavinAl – in my dreams, he does not leave me
kANArkol – would not see
ivvU ravar – the people of this town

Listening to the towns people blaming her lover for leaving her, the maiden says, “The towns people find fault in him for leaving me, in wakeful hours; perhaps they don’t see him not doing so in my dreams”. However painful it is for her, she does not like the fact that others find fault in him.

“They fault my lover for leaving me while I am wakeful
 Don’t they see him not leaving me in dreams miserable?”


இன்றெனது  குறள்:

நனவில் பிரிந்ததை குற்றம்சொல் ஊரார்
கனவின்கண் காணார்போ லும்

nanavil pirindadai kuRRamsol UrAr
kanavinkaN kANArpO lum

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...