செப்டம்பர் 30, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 11

जटाला मञ्जीरस्फुरदरुणरत्नांशुनिकरैः
निषिदन्ती मध्ये नखरुचिझरीगाङ्गपयसाम् ।
जगत्त्राणं कर्तुं जननि मम कामाक्षि नियतं
तपश्चर्यां धत्ते तव चरणपाथोजयुगली ॥ ११॥

ஜடாலா மஞ்ஜீரஸ்பு²ரத³ருணரத்நாம்ுனிகரை:
நிஷித³ந்தீ மத்யே நக²ருசிசரீகா³ங்க³பயஸாம்
ஜக³த்த்ராணம் கர்தும் ஜனனி மம காமாக்ஷி நியதம்
தப்சர்யாம் த்தே தவ சரணபாதோ²ஜயுக³லீ 11

என் தாயே காமாக்ஷீ! கால் தண்டைகளில் ஒளிரும் சிவப்பு இரத்தினங்களின் கதிர்களால் சடை தரித்த, நகங்களின் ஒளி வெள்ளமாகிய கங்கைப் பெருக்கின் நடுவில் அமர்ந்ததாக, நியமத்துடன் தவம் செய்வதை உன் பாதத்தாமரைகள் இவ்வுலகம் உய்யும்பொருட்டு ஏற்றுள்ளன.

காற்றண்டை கள்கொண்ட காந்தி மணிகள் கதிர்களைதம்
மேற்சடை யாய்பூண்டு மின்னும் நகங்களின் மேலொளிர்ந்த
ஏற்றமாம் கங்கை இடையமர் காமாட்சீ! என்னருந்தாய்!
போற்றுமுன் பாதாம் புயம்நே மயமம் புவியிதற்கே!


காற்றண்டை - கால் தண்டை; காந்தி-ஒளி; மணி-இரத்தினம்; ஏற்றம்-பெருக்கு; பாதாம்புயம்- பாதத்தாமரை; நேம்-நியமம்; யமம்-தவம்;

செப்டம்பர் 29, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 10

रजःसंसर्गेऽपि स्थितमरजसामेव हृदये
परं रक्तत्वेन स्थितमपि विरक्तैकश सुलभं।
अलभ्यं मन्दानां दधदपि सदा मन्दगतितां
विधत्ते कामाक्ष्याः चरणयुगमाश्चर्यलहरीम् ॥ १०॥

ரஜ:ஸம்ஸர்கே³பி ஸ்தி²தமரஜஸாமேவ ஹ்ருʼ³யே
பரம் ரக்தத்வேன ஸ்தி²தமபி விரக்தைகரணம்
அலப்யம் மந்தா³நாம் ³³பி ஸதா³ மந்த³³திதாம்
விதத்தே காமாக்ஷ்யா: சரணயுக³மா்சர்யலஹரீம் 10

காமாக்ஷியின் இரு திருவடிகளும், இரசத்தின் (புழுதி) தொடர்பிருப்பினும், இரசோ குணம் இல்லாதார் மனதில்மட்டும் இருப்பதாகவும், சிவந்த (ரக்த) நிறத்தோடிருப்பினும், விரக்தியுடையார்க்கே எளிதானதாகவும், (மந்தகதி) உடைத்ததாயினும், மந்த மதியினருக்கு பெறமுடியாததாகவும், வியப்பெனும் அலைகளை எழுப்புகிறதே! இப்பாடலில் ஸ்ரீமூகர் “ரஜஸ்”, “ரக்த”, “மந்தம்” என்னும் சமஸ்க்ருத பதங்களின் இருவேறு துருவங்களைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளவிதமே வியப்பானது. இரசோகுணம் என்பது விழைவு, பெருமை என்னும் குணங்களைக் குறிப்பன. காமாக்ஷியின் பாதங்களுக்கு இவ்விரண்டு குணங்களும் உண்டு; ஆயினும் அவை, அக்குணங்கள் இல்லாத ஞானியார்க்கே கிடைக்கும்.! இரசம் என்பது புழுதியென்பது இரசோ குணமாகிய விரும்பப்படும், பெருமை மிக்க பாதங்கள் என்பதற்கும் பொருந்தும்.

இரசத் தொடர்பில் இருந்து மிலாருளம் ஏகுவதும்,
இரத்த நிறத்தில் இருந்தும் விரத்தர்க்(கு) எளியதுமாம்,
உரமெ லிநடை உடைத்தும் மயல்மதி உள்ளவர்க்கு
அரிதாம்கா மாட்சீ அடிச்சீர்கள் விந்தை அலைகளன்றே!


இரசம்-புழுதி; ஏகுவது-இருப்பது; விரத்தர்-விரக்தியுடையார்; உரமெலி-மந்தகதி; மயல்-மந்தம்

செப்டம்பர் 28, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 9

सुपर्वस्त्रीलोलालकपरिचितं षट्पदकुलैः
स्फुरल्लाक्षारागं तरुणतरणिज्योतिररुणैः
भृतं कान्त्यम्भोभिः विसृमरमरन्दैः सरसिजैः
विधत्ते कामाक्ष्याः चरणयुगलं बन्धुपदवीम् ९॥

ஸுபர்வ ஸ்த்ரீ லோலாலக பரிசிதம் ஷட்பத³ குலை:
ஸ்பு²ரல் லாக்ஷாராக³ம் தருண தரணி ஜ்யோதிரருணை:
ப்ருʼதம் காந்த்யம்போபி: விஸ்ருʼமர மரந்தை:³ ஸரஸிஜை:
விதத்தே காமாக்ஷ்யா: சரண யுக³லம் ³ந்துபத³வீம் 9

வணங்கும் தேவமகளிரின் அசையும் கூந்தல்களோடு கூடியதும், ஒளிரும் செம்பஞ்சுக் குழம்பால் சிவந்ததும்,  இளஞ்சூரியனின் கதிர்போன்று செம்மையொளி படர்ந்த நீரினால் நிறைந்ததாயுமுள்ள காமாக்ஷியின் இரு பாதங்களும், வண்டுகளோடும், பூந்தாது நிறைந்த தாமரைகளோடும் உறவு கொள்கிறது

கும்பிடு தேவர்தம் கோதை யராடும் குழல்கலந்து
செம்பஞ்சுச் சேறால் சிவந்ததும், வீசிடும் செங்கதிரோன்
செம்மை ஒளிபடர்ச் சீதமாம் காமாட்சீ சீரடிகள்
தும்பியை, பூந்தா துறைத்தா மரையினைத் துவ்விடுதே!

சீதம்-நீர்; கலந்து-கூடி; சேறு-குழம்பு; தும்பி-வண்டு; பூந்தாது-மகரந்தம்; துவ்வுதல்-பற்றுக்கோடு/உறவு

செப்டம்பர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 8

विरावैर्माञ्जीरैः किमपि कथयन्तीव मधुरं
पुरस्तादानम्रे पुरविजयिनि स्मेरवदने
वयस्येव प्रौढा शिथिलयति या प्रेमकलह-
प्ररोहं कामाक्ष्याः चरणयुगली सा विजयते ८॥

விராவை: மாஞ்ஜீரை: கிமபி கத²யந்தீவ மதுரம்
புரஸ்தாதா³ ம்ரே புரவிஜயினி ஸ்மேர வத³னே
வயஸ்யேவ ப்ரௌடா ிதி²லயதி யா ப்ரேம கலஹ-
ப்ரரோஹம் காமாக்ஷ்யா: சரணயுக³லீ ஸா விஜயதே 8

எப்பாதங்கள், தாமணிந்த சிலம்புகளின் ஒலியால் எதோவொன்றை இனிமையாகப் பேசுவது போலிருந்து, புன்னகையுடன் எதிர்வந்து வணங்கும் புராரியிடத்தே கொண்ட ஊடலின் முளையை மிகவும் திறமையுள்ள தோழியைப்போல, தளரச் செய்து நீக்கிவிடுகிறதோ, காமாட்சியின் அவ்விரு பாதங்களும் ஒளிபெற்று விளங்குகின்றன.

புன்னகை பூத்தெதிர் புக்கு வணங்கும் புராரியிடம்
அன்னைகொள் ஊடல் அடிமுளை நீக்கும் அரும்சகிபோல்
இன்சிலம் பின்னொலி ஏதோ மொழியும் இனிமைபூத்து

மின்னும்கா மாட்சியின் மேலாம் இருபாத மேன்மைகளே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...