செப்டம்பர் 30, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 11

जटाला मञ्जीरस्फुरदरुणरत्नांशुनिकरैः
निषिदन्ती मध्ये नखरुचिझरीगाङ्गपयसाम् ।
जगत्त्राणं कर्तुं जननि मम कामाक्षि नियतं
तपश्चर्यां धत्ते तव चरणपाथोजयुगली ॥ ११॥

ஜடாலா மஞ்ஜீரஸ்பு²ரத³ருணரத்நாம்ுனிகரை:
நிஷித³ந்தீ மத்யே நக²ருசிசரீகா³ங்க³பயஸாம்
ஜக³த்த்ராணம் கர்தும் ஜனனி மம காமாக்ஷி நியதம்
தப்சர்யாம் த்தே தவ சரணபாதோ²ஜயுக³லீ 11

என் தாயே காமாக்ஷீ! கால் தண்டைகளில் ஒளிரும் சிவப்பு இரத்தினங்களின் கதிர்களால் சடை தரித்த, நகங்களின் ஒளி வெள்ளமாகிய கங்கைப் பெருக்கின் நடுவில் அமர்ந்ததாக, நியமத்துடன் தவம் செய்வதை உன் பாதத்தாமரைகள் இவ்வுலகம் உய்யும்பொருட்டு ஏற்றுள்ளன.

காற்றண்டை கள்கொண்ட காந்தி மணிகள் கதிர்களைதம்
மேற்சடை யாய்பூண்டு மின்னும் நகங்களின் மேலொளிர்ந்த
ஏற்றமாம் கங்கை இடையமர் காமாட்சீ! என்னருந்தாய்!
போற்றுமுன் பாதாம் புயம்நே மயமம் புவியிதற்கே!


காற்றண்டை - கால் தண்டை; காந்தி-ஒளி; மணி-இரத்தினம்; ஏற்றம்-பெருக்கு; பாதாம்புயம்- பாதத்தாமரை; நேம்-நியமம்; யமம்-தவம்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...