டிசம்பர் 31, 2012

குறளின் குரல் - 264

Valluvar and Thirukkural keep me busy and purposeful every day. As the new year begins, I continue with my sincere prayers to the omniscient. Thanks for those of you have been reading and giving your feedback or appreciation.
-------

1st January, 2013

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
               (குறள் 255: புலால்மறுத்தல் அதிகாரம்)

Transliteration:
uNNAmai uLLadhu uyirnilai uNuNNa
aNNaththal seyyadhu aLaru

uNNAmai – In the conviction of not eating meat
uLLadhu – is there
uyirnilai – the sources of ones life
uNuNNa – (Ignoring that) if somebody eats meat
aNNaththal – open its ghastly mouth
seyyadhu – will not
aLaru – the slough, mire (implying the hell)

உண்ணாமை  - ஊன் உண்ணமை என்னும் உறுதியில்
உள்ளது - இருக்கிறது
உயிர்நிலை - ஒவ்வொரு மனிதனின் உயிர்நிலையும், உயிர்மையின் ஊற்றுக்கண்ணும்
ஊனுண்ண - அவ்வுறுதி அற்று ஊன் உண்ணலை நிலையா உடம்பை வளர்க்க செய்வோர்க்கு
அண்ணாத்தல் - வாய் திறந்து
செய்யாது - வெளியே விடாது
அளறு - சேறு, புதைகுழி (நரகுக்கு ஆகி வந்தது)

ஓர் உயிர் நிலையின் ஊற்றுக்கண்ணாக, அதாவது பெறுதற்கரிய மனிதப் பிறவியின் காரணமாக அமைவதே ஊண் உண்ணா உறுதியாம் நிலைப்பாடு. அவ்வுறுதியினின்றும் தவறியவர்களுக்கு, மீண்டு வரமுடியாத சேறாம் நரகப்படுகுழியே கிடைக்கும் என்பதை உறுதிப்பட கூறுகிறார் வள்ளுவர்.

இக்குறள் ஊன் உண்ணலைப் பாவங்களில் மிகவும் கொடியபாவமாக சொல்லி, அதற்கு மீளா நரகே கிடைக்கும் என்கிறார். மீளா நரகு என்று சொல்லாது, சேறான புதைகுழி என்ற உவமையை நயமாகச் சொல்லியிருக்கும் வள்ளுவரில் கவிஞரும், ஊனுண்ணலை தீவிரமாக கண்டிக்கும் ஒரு அறக்கோட்பாட்டுவாதியும் தெரிகிறார்.

சீவக சிந்தாமணி ஊண் உண்பார் நரகத்துழலுதலை,”ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தில் உறைதல்” என்கும். முனைப்பாடியார் எழுதி அறநெறிச்சாரப் பாடல் நரகுய்க்கும் என்று சொல்லாவிட்டாலும், ஊனை ஒழித்தால் ஊறு இல்லை என்கிறது.

கொன்றூன் நுகருங் கொடுமையை யுன்நினைந்து
அன்றே ஒழிய விடுவானேல்-என்றும்
இடுக்கணெனவுண்டோ இல்வாழ்க்கைக்குள்ளே
படுத்தானாந் தன்னைத் தவம்.”

As a source to blossoming and sustaining of a life and also being a reason for the very birth as a human, is the resolve, to not eat meat. When someone slips off from that resolve, they will goto the hellish mire, vaLLuvar says definitively.

This verse depicts the meat eating as the worst form of sin and its reward as a muddy, swampy hell from where one cannot surface up again. By using this simile of muddy mire with out directly saying unreturning hell, we see an evolved poet and a moral authority in vaLLuvar.

As we have seen, almost all Jainist literary works vehemently denounce meat eating. Jeevaga Chinthamani says it more directly as “by eating meat, one will go to hell”. We can see such references in many other Sangam literary works of Jainist/Buddhisty origin.

“Basis of Lifeforce is to refrain from eating meat to sustain
As it will keep in unreturnable hellish mire, when no refrain”

இன்றெனது குறள்(கள்):
யிர்நிலைக் காதாரம் ஊனுணாமை உண்ணும்
உயிருழலும் ஊழ்நரகாம் சேறு
uyirnilaik kAdhAram UnuNAmai uNNum
uyiruzhalum UzhnaragAm sERu

சற்றே மாற்றி முதல் வரி முற்றுமோனைக்காக மாற்றியும் எழுதப்பட்டது. ஆதாரம் என்னும் வடமொழிச் சொல்லும் விலக்கப்பட்டது இதனால்.

உயிர்நிலைக்கு ஊற்றுக்கண் ஊனுணாமை உண்ணும்
உயிருழலும் ஊழ்நரகாம் சேறு
uyirnilaikku URRukkaN UnuNAmai uNNum
uyiruzhalum UzhnaragAm sERu

குறளின் குரல் - 263


31st December, 2012

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.
               (குறள் 254: புலால்மறுத்தல் அதிகாரம்)

Transliteration:
aruLalla dhiyAdhenin kollAmai kORal
poruLalla thavvUn thinal

aruL alladhi(u) – Not being kind
yAdhenin – what is it? (not being kind)
kollAmai – the doctrine of not killing
kORal – slaying that (good) doctrine itself
poruLallath(u) – Even worse, meaningless is
avvUn thinal – eating the meat by killing

Two negatives conjoined to gether to stress a subject is a unique idea. vaLLuvar has just used that technique in this verse. The usage of “kollAmai kORal” is to underline and convey how a good deed is spoilt. If he had said this in a simple way, “killing is not a kind act”, that would only be related to just another deed. By saying “kollAmai kORal”, he is pointing to destroying a nice virtue – which is a more powerful way of stressing a point.

To spoil the virtue of not killing is not a graceful or kind deed. Similarly to kill a life and eat its meat, is also meaningless, and a sin. In Parimelazhagar’s commentary, he clearly says, “not killing” is kindness and to destroy such kindness is sinful. The deeds – not killing (kollAmai) and killing (kORal) are likened to the reasons – kindness (aruL) and unkind (alladhu). Similarly reason of “meat eating” is likened to the “sinful” deeds.

Sometimes going through some of these verses make one feel, vaLLuvar is being repetitive. Regardless of how people may justify such repetitiions, just because vaLLuvar has said it or we have put vaLLuvar up on the pedestal that we don’t want to be blind of his “could have been follies”, we need a fresh looking glass.  Even vaLLuvar woud not want such sycophantic support to his work.

“Killing the virtue of “Not killing” is not Kindness!
 Like eating meat by killing other life is meaningless”

அருளல்லதி(து) - அருளில்லாமை என்பது
யாதெனிற் - எதுவோ என்றால்
கொல்லாமை - அது பிறவுயிரை கொல்லாத கொள்கையையே
கோறல் - கொல்லுதல்
பொருளல்லது - அதேபோல் பொருளற்ற செயலானது என்னவெனில்
அவ்வூன் தினல் - அவ்வாறு கொன்று கொளப்பட்ட இறைச்சியை உண்ணுதல்தான்.

இரண்டு எதிர்மறைகளை ஒன்றோடொட்டிச் சொல்லி ஒரு பொருளை வலிவுடன் சொல்வது ஒரு உத்தி. அதைத்தான் வள்ளுவர் இக்குறளில் கையாண்டிருக்கிறார். “கொல்லாமைக் கோறல்” என்று சொல்லி, நல்ல செயலை ஒருவர் கெடச்செய்தலை அடிக்கோடிடுகிறார். எளிதாக “கொல்லுதல் அருள் அல்லது” என்று சொல்லியிருந்தால் அது ஒரு செயலைச் சேர்ந்ததாகமட்டும் இருக்கும். “கொல்லாமைக் கோறல்” என்பதன்மூலம் ஒரு பண்பை கெடுத்தலைக் குறிக்கிறார்.

கொல்லாமையை ஒழிவது அருளுடைய செயலன்று. அதேபோல அவ்வாறு ஓருயிரைக் கொன்று அதனுடைய ஊனைத் தின்பதிலும் ஒரு பொருளும் இல்லை, பாவம்தான். பரிமேலழகர் உரையில் அருள் என்பது கொல்லாமையென்றும், அதைக்கோறல் கொல்லாமையல்லது என்றும் விளக்குவார். அவர் கூறும் விளக்கம்: “உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும் 'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய மாக்கியும் கூறினார்.”

சில சமயம், சில குறள்களைப் படிக்கும் போது, வள்ளுவர் திரும்ப திரும்பச் சொன்னதையே சொல்லுகிறாரோ என்று தோன்றுகிறது. எப்படித்தான் எல்லோரும் இவற்றை நியாயப்படுத்தினாலும், வள்ளுவரை உயர்ந்த பீடத்தில் அமர்த்திவிட்டதாலும், வள்ளுவரில் தவறு இருக்குமா என்ற ஐயத்தினாலும், வள்ளுவரைத் தவறு என்பதா என்ற கண்மூடித்தனமாக பின்தொடர்தலாலும், அவருடைய படைப்பிலும் குற்றம் இருந்திருக்கமுடியும் என்று சிந்திக்க மறுக்கிறார்கள். இது ஒரு வெறித்தனமான பின்தொடர்வுதான்.

இன்றெனது குறள்:

கொல்லாமை கொல்லலருள் அல்லதவ் வூனுணலோ
பொல்லாப் பொருளுமாகு மாம்.
(கொல்லாமை கொல்லல் அருள் அல்லது அவ்வூன் உணலோ என்று பிரித்து படிக்கவும்)

kollAmai kollaruL alladhav vUnuNalO
pollAp poruLumAgu mAm

டிசம்பர் 29, 2012

குறளின் குரல் - 262


30th December, 2012

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்னூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
               (குறள் 253: புலால்மறுத்தல் அதிகாரம்)

Transliteration:
paDaikoNDar nenjampOl nannUkkAdhu onRan
uDalsuvai uNDAr manam

paDaikoNDar – Those that bear weapons to kill others
nenjampOl – like their hearts
nan nUkkAdhu – not being immersed in gracefule or virtuous thoughts
onRan  - other lives
uDal suvai – the taste of their meat
uNDAr – those who get used to it by eating
manam – like their mind

This is like that” is a standard method of comparison used by vaLLuvar; familiar to us by now. Those who bear weapons to kill others won’t have graceful or virtuous thoughts in their minds or softness in their hearts. Similarly people that eat meat will not have any compassion for others and they won’t hesitate to kill, is what is alluded here by vaLLuvar. We know the popular adage, “Heavens are not for beings devoid of grace” (aruLillArkku avvulagam illai).

Those who kill either as a profession, or part of an army, don’t have any compassion; they don’t think of the harm they cause to others or have the guilt because of that. The same mindset can be seen in people that eat meat as hinted by vaLLuvar. The usage of the word “suvai”(taste) implies that the meat eaters feel that it is a taste and hence don’t see the harm caused by it. Also to give up something for which taste is developed, is difficult. Then for that taste alone, they become selfish and act.

Being a virtue of Jains and Bhuddists obviously this thought is entrenched in a lot of religio centric Sangam literature.

Though vaLLuvar denounces meat eating, the present day world would definitely argue this point as it has been always contested through many millennia.  After all philosophers including celebrated Swami Vivekananda had eaten fish (which is part of their diet and culture). We need to think of meat obstinence as just the highest form of virtue.

“Weapon holders have no compassionate heart;
 So are the minds of the people that eat meat”

படைகொண்டார் - பிறரைக்கொல்வதற்காக கொலைக்கருவிகளை கைக்கொண்டவர்
நெஞ்சம்போல் - அவர்கள் நெஞ்சினிலே
நன்னூக்காது - நல்லதான அருள் கொள்ளாததுபோல்
ஒன்றன் - பிற உயிர் ஒன்றின்
உடல் சுவை - உடலைக்கொன்று அதனுடைய உடல் சுவையை
உண்டார் - உண்பவர்களின்
மனம் - மனமும் சற்று அருள் இல்லாதது,

அதைப்போல இது என்பது வள்ளுவருக்கும் ,இத்துணைக் குறள்களுக்குப் பிறகு நமக்கும் புதிதல்ல. கொலை ஆயுதங்களைத்தம் கையில் உள்ளோர் நெஞ்சிலே நல்லறமாம் கொலை செய்யாதிருத்தலை நினையாதோ, அதேபோல, பிற உயிர்களைக் கொன்று அவற்றின் ஊனை உணவாக்கொள்வோர் மனமும் அருளைப் பற்றியும் நினையாது, அருளும் இல்லாதது. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்று ஏற்கனவே கண்டிருக்கிறோம்.

கொலைத்தொழிலர்க்கு பிற உயிர்களுக்குத் தீங்கு செய்தலில் எவ்வித குற்றவுணர்வும் இராதது போல, ஊன் உண்பவர்களுக்கும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யும் எண்ணமும், அதனால் குற்றவுணர்வு இராமலும் இருக்கும்.  “சுவை” என்ற சொல்லினால், ஊன் உண்பவர்கள் அதை சுவை என்று கொள்வதனால், தீங்கிழைத்தலையும் ஒரு தமக்குச் சுவையென்று எண்ணியே, ஒரு தன்னலச் செயலாகச் செய்வர் என்பது குறிக்கப்படுகிறது.

ஊனுண்ணுவார் மனம் நல்லதை நினையாததையத் திரிகடுகப்பாடல், கொலைநின்று தின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் - இல்லெனக்கொன்று
ஈகென் பவனை நகுவானும் இம்மூவர்
யாதும் கடைப்பிடியா தார்.” என்று சொல்லி, கொலைநின்று தின்றொழுகுதலை அறநெறி நில்லாரின் முதற்குற்றமாகக் கூறுகிறது.

இன்றெனது குறள்:
போர்த்தொழிலர்க் கில்லருள் நெஞ்சமேப்போல் ஊனுண்ணு
வோர்தமக்கும் இல்லை அருள்.

pOrththozilArk killaruL nenjamEppOl uNuNu
vOrthamakkum illai aruL

குறளின் குரல் - 261


29th December, 2012

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
               (குறள் 252: அருளுடமை அதிகாரம்)

poruLAtchi pORRAdhArkku illai aruLAtchi
Angkillai Unthin bavarkku

poruL Atchi – The use of wealth
pORRAdhArkku – If not carefully valued
illai – will not be there
aruLAtchi – Similarly, the grace and blessing of life and heavens after life
Angkillai – are not there
Un - meat
thinbavarkku – for those eat that (meat)

One who does not preserve and save his wealth wil not see the use of it. Simiarly people that eat meat will not benefit by the use of grace or blessing of good life in this birth as well as subsequent births too.

Parimelazhagar points out a subtle point in the verse that vaLLuvar says, “meat eaters” not about the people that kill other beings for meat. It is inconceivable that there would be a person only to cut animals fo the meat for others and not eat. vaLLuvr simply admonishes the act of eating here.

“Use none for those who can’t guard their wealth
 Nor grace of life there for that eat meat, the filth”
 (Dictionary meaning for filth is morally objectionable material)

பொருளாட்சி - பொருள் படைத்ததன் பயன்
போற்றாதார்க்கு - அப்பொருளை வைத்து பேணாதவற்கு
இல்லை - கிடைக்காது
அருளாட்சி - அருளோடு கூடிய இவ்வுலக வாழ்வும், மறைந்தபின் சுவர்கவாழ்வும் (அருளின் பயன்)
ஆங்கில்லை -அங்கே கிடைக்காது
ஊன் - புலால், (பிற உயிர்களை கொன்று பெறும் இறைச்சி)
தின்பவர்க்கு - உண்பவர்களுக்கு

ஒருவர் தம்முடைய செல்வத்தை காக்காதவராயிருப்பின், அவர் செல்வத்தால் அவருக்குப் பயன் ஏதுமில்லை! அதேபோல், புலாலை உண்பவர்களுக்கும் அருளின் பயனை அடையமாட்டார். அருளின்  பயன் என்ன என்றால் இம்மையில் நல்வாழ்வும், இவ்வுலக வாழ்வு முடிந்தபின் சுவர்கத்தில் வாழ்வும், பின்வரும் பிறவிகளில் நற்குடிப்பிறப்பும்தான்.

பரிமேலழகர் தன் உரையில், சிலர் தான் கொல்லாது ஊன் உண்ணுதலை இழக்கில்லை என்பர் என்றும், ஆனால் அவ்வறு இல்லை என்பதை இக்குறள் உறுதி செய்வதாகக்கூறுவது முற்றிலும் சரியே.. கொல்பவர்க்கு என்னாமல், தின்பவர்க்கு என்றதால், ஐயத்துக்கு இடமில்லை.

இன்றெனது குறள்:
காக்கார் பொருளால் பயனிலபோல்- ஊனுண்போர்
தேக்கார் அருளால் பயன்

kAkkAr poruLAL payanilapOl – UnuNbOr
thEkkAr aruLAL payan

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...