ஏப்ரல் 30, 2015

குறளின் குரல் - 1106

30th April, 2015

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.
                        (குறள் 1100: குறிப்பறிதல் அதிகாரம்)

கண்ணொடு - பார்வையினால், ஒருவர் கண்ணோடு,
கண் இணை - மற்றொருவர் கண் இணய
நோக்கு ஒக்கின் - இருவரது காதலாகிய நோக்கமும் ஒத்துப்போகுமாயின்
வாய்ச்சொற்கள் - வாயிலிருந்து வரும் வெற்று சொற்களால்
என்ன பயனும் இல - ஒரு பயனும் இல்லை

மிகவும் மேற்கோளிடப்படும் குறளிது. காதல் வயப்பட்ட இருவரது உள்ள வேட்கையை அவர்கள் கண்களால் பரிமாறிக்கொள்ளும்போது, ஒருவர் கண்ணோடு மற்றவரது கண்கள் இணைய, இருவரது நோக்கமும் இணைந்திருப்பதால், அவர்களிடையே வேறு வாய்வழிச் சொற்களால் என்ன பயன் இருந்துவிடமுடியும்?

கம்பன் இதையொட்டியே மிதிலைப்படலத்தில் வரும், “கண்ணொடு கண்ணினை கௌவி ஒன்றை ஒன்றுண்ணவும்” வரிகளைச் சொன்னான் போலும்.

Transliteration:

kaNNoDu kaNiNai nOkkokkin vAichoRkaL
enna payanum ila

kaNNoDu – between the lovers, eyes of one person
kaN iNai – when join the eyes of the other
nOkko(u) okkin – and their mutual glance conveys their desire
vAichoRkaL – mere words from mouth
enna payanum ila – what use are they?

Another verse which is quoted very often. When, lovers with so much desire in their hearts, exchange through their mutual glances and the desires being the same of togetherness, what use is it of words from their mouths? None !

Kambar, conveys a similar thought in chapter of Mithila, where Rama and Seetha meet for the first time. The phrase he uses to describe the same is very unique. He says their eyes sieze, grasp each others and devour, which shows extreme desire between the two.

“What use is it in a meaningless mouth-uttered words
 When the lovers eyes mutually grasp, revealing hearts”


இன்றெனது குறள்:

கண்கள் கலந்து கருத்தும் கலப்பின்சொல்
வண்ணத்திற் கேது பயன்?

kaNgaL kalandu karuttum kalappinsol
vaNNattiR kEdu payan?

ஏப்ரல் 29, 2015

குறளின் குரல் - 1105

29th April, 2015

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.
                        (குறள் 1099: குறிப்பறிதல் அதிகாரம்)

ஏதிலார் போலப் - ஒருவரை ஒருவர் முன்பின் பார்த்தறியாதவர்போல
பொதுநோக்கு நோக்குதல் - சாதாரணமாகப் பார்த்தல்போல் (உள்ளத்தில் மகிழ்வை மறைத்து) நடிப்பு
காதலார் கண்ணே உள - ஒருவரை ஒருவர் காதலிக்கும் காதலர்களிடையேதான் உள்ளது.

ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்தும் பொது இடங்களில் பார்த்துக் கொள்ளும்போது, முன்பின் அறியாதவர்கள்போல நடித்து நடந்துகொள்வது காதலர்களிடையே காணப்படும் ஓரியற்கையாம். மற்றவர்களிடம் தம் காதலை மறைத்து, தமக்குள்ளே மறைவாகக் கொண்டாடுவதில் மகிழ்வது காதலர் உள்ளங்களே!

Transliteration:

EdilAr pOlap podunOkku nOkkudal
kAdalAr kaNNE uLa

EdilAr pOlap – as if they have not seen ever before
podunOkku nOkkudal – and as if looking like anybody else (hiding happiness inside)
kAdalAr kaNNE uLa – such posture is most commonly seen between lovers.

Though deeply in love, to pretend as if they have never ever seen each other before and exchange a pretentious glance as if seeing anybody else is typically the nature of lovers. To hide their love in the eyes of others and rejoice within themselves is most commonly seen in them.

“To pretend as if neverever seen each other before
 and exchange a common glance is typical of lovers”


இன்றெனது குறள்:

முன்பின் அறியார்போல் பார்க்கும் பொதுப்பார்வை
நன்குண்டே காதலர் மாட்டு

munpin aRiyArpOl pArkkum poduppArvai
nanguNDE kAdalar mATTu

ஏப்ரல் 28, 2015

குறளின் குரல் - 1104

28th April, 2015

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.
                        (குறள் 1098: குறிப்பறிதல் அதிகாரம்)

அசையியற்கு - மெல்லிய இயல்பினளாம் பெண்ணுக்கு
உண்டு ஆண்டு - ஆங்கே உண்டு (அந்த சிரிப்பினால்)
ஓர் ஏர் - ஓரு குறிப்பு (எப்போது?)
யான் நோக்கப் - நான் பார்க்கும்போது
பசையினள் - அன்பு உள்ள அவள் (முதலின் என்னை அகற்றும் பொருட்டு சுடுசொல் சொல்லியவள்)
பைய நகும்.- (என் முகம் சுருங்ககண்டு நெகிழ்ந்து )மெல்ல தனக்குள்ளாகச் சிரித்துக் கொள்வாள்

மீண்டும் பெண்ணின் நகைப்புக்கு ஒரு காரணத்தை அழகாகச் சொல்லுக்கிற குறளிது. மெல்லிய இயல்பினளாம் அப்பெண் நான் அவளைப் பார்க்கையில் முன்பு கோபச் சொல் பேசியவள், என் வாடிய முகத்தைக் கண்டு நெகிழ்ந்து, மெல்ல தனக்குள்ளாகச் சிரித்துக் கொள்வாள்; ஆயினும் அந்த நகைப்பிற்கும் ஒரு பொருள், குறிப்பு அல்லது அழகு உண்டு, என்று தலைமகன் நினைக்கிறானாம்.

Transliteration:

asaiyiyaRku uNDANDOr EeryAn nOkkap
pasaiyinaL payya nagum

asaiyiyaRku – for that soft natured girl
uND(u) AND(u) – there is ( for her smile that she slowly lets out)
Or Er – there is a beauty, or meaning
yAn nOkkap – When I glance at her
pasaiyinaL – the girl with love ( but she said harsh words to get rid of me, earlier)
payya  – will slowly smile.

Another intrepretation of the smile of a girl in love! The soft-natured girl that earlier spoke harsh words (implied) when I glanced at her, subsequently, looking at my shrunk face, would let out her smile slowly; but that smile has a meaning or a hint, thinks the man in love.

“When I would glance her she would smile slowly;
 but that would hint her love at me immensely”


இன்றெனது குறள்:

நான்பார்க்க அன்புளாள் மெல்ல நகைக்குமதில்
தான்பார்க்க உண்டே குறிப்பு

nAnpArkka anbuLAL mella nagaikkumadil
thAnpArkka uNDE kuRippu

ஏப்ரல் 27, 2015

குறளின் குரல் - 1103

27th April, 2015

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.
                        (குறள் 1097: குறிப்பறிதல் அதிகாரம்)

செறாஅச் - சினந்தார்போன்று வெளிப்பூச்சாகப் பேசுகின்ற
சிறுசொல்லும் - சுடு சொற்களைச் சொல்லுவதும் (பொய்க்கோபத்தின் வெளிப்பாடே)
செற்றார்போல் நோக்கும் - சினந்தவர்போல பார்க்கின்ற பார்வையும்
உறாஅர்போன்று - தமக்கு உற்றார் இல்லார் போன்ற வெளித்தோற்றமும்
உற்றார் - ஆயினும் உள்ளார்ந்து விரும்பும் உறவும்
குறிப்பு - காதற்பெண்ணை இனங்காட்டும் குறிப்பாகும்

இக்குறள் சொல்லும் கருத்து முந்தைய குறளின் கருத்தை ஒட்டியதே. பொய்க்கோபத்தின் வெளிப்பாடாய், சினந்தார் போன்று வெளிப்பூச்சாகப் பேசுகின்ற சுடு சொற்களைச் சொல்லுவதும், சினந்தவர்போல பார்க்கின்ற பார்வையும், தமக்கு உற்றார் இல்லார் போன்ற வெளித்தோற்றமும், ஆயினும் உள்ளார்ந்து விரும்பும் உறவும் காதற்பெண்ணை இனங்காட்டும் குறிப்பாகும்.

கம்பரின் கவிநயம் இதை, “ஊடிய  மனத்தினர் உறாத நோக்கினார் ஆடவர் உயிரென அருகு போயினார்” என்று சொல்லும்.

Transliteration:

seRAach chiRusollum sERRArpOl nOkkum
uRAaipOnRu uRRAr kuRippu
seRAach – in pretense anger
chiRusollum – speaking hot words
sERRArpOl nOkkum – glancing as if angered, (but not really)
uRAaipOnRu – as if not wanting to belong to her man, externally
uRRAr – but in reality wanting to be with her man
kuRippu – are the signs of the love-struck lady.

Another verse similar to previous one. Speaking outwardly hot words, but implied sweetness, glancing with pretense anger and pretending as if she does not belong to her man, bug wanting him so close yet, are the signs of a lady in love, says VaLLuvar in this verse.

“Speaking hot words but intending sweetness, glancing in anger of pretense
 Desiring closeness yet behaving as if not, are the signs of love so intense”


இன்றெனது குறள்:

சினவாச் சுடுசொல் சினந்தார்போல் பார்வை
மனத்தொளித் தும்காட்டு மன்பு

sinavAch cuDusol sinandArpOl pArvai
manattoLit tumkATTu manbu

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...