மார்ச் 31, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 91

क्षेपीयः क्षपयन्तु कल्मषभयान्यस्माकमल्पस्मित-
ज्योतिर्मण्डलचंक्रमास्तव शिवे कामाक्षि रोचिष्णवः
पीडाकर्मठकर्मघर्मसमयव्यापारतापानल-
श्रीपाता: नवहर्षवर्षणसुधास्रोतस्विनीशीकराः ९१॥

க்ஷேபீய: க்ஷபயந்து கல்மஷபயான்யஸ்மாகமல்பஸ்மித-
ஜ்யோதிர்மண்ட³லசம்க்ரமாஸ் தவ ஶிவே! காமாக்ஷி! ரோசிஷ்ணவ:
பீடா³கர்மட²கர்மகர்ம ஸமய வ்யாபார தாபானல-
ஸ்ரீபாதா: நவ ஹர்ஷ வர்ஷண ஸுதாஸ்ரோதஸ்வினீ ஶீகரா: 91

மங்கள உருவே காமாக்ஷி! துயரத்தை விளைவிக்கும் கருமங்கள் என்னும் கோடையன்ன தாபமாம் அனலுக்கு அழிவை செய்கின்றவைளாம், புதுப்பொழிவால் களிப்புற செய்யும் அமுத நதியின் நீர்த்துளிகளாம் இருக்கும், உனது இளநகையின் ஒளிக்கூட்டத்தின் நடமாட்டம், வெகு விரைவில் எமது பாவ அச்சங்களை அழிக்கவேண்டும்!

துயரம் விளைவிக்கும் தொல்லைக் கருமத்தின் துன்பனலாம்
அயர்வளி கோடை அழித்துப் புதுமழை ஆங்குமகிழ்
வயஞ்செய் அமுதநீர் வாரிவிந் தாமுன் மயக்குநகை
வயக்கின்சஞ் சாரமெம் மாசச்சம் காமாட்சி மாய்க்கசிவே!

துன்பனல்-துன்ப அனல்; அயர்வு-சோர்வு; வயம்-உரிமையாக்கும்; வாரி-அருவி; விந்து-துளி, வயக்கு-ஒளி; சஞ்சாரம்-நடமாட்டம்; மாசு-பாவம்; மாய்க்க-அழிக்கட்டும்; சிவே-மங்களமே!

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

துயரம் விளைவிக்கும் தொல்லைக் கருமத்தின் துன்ப அனலாம், அயர்வளி கோடை அழித்துப் புதுமழை ஆங்கு மகிழ்வயஞ் செய் அமுதநீர் வாரி விந்தாம் உன் மயக்கு நகை வயக்கின் சஞ்சாரம் எம் மாசு அச்சம் காமாட்சி மாய்க்க சிவே!

மார்ச் 30, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 90

आकर्षन्नयनानि नाकिसदसां शैत्येन संस्तम्भय-
न्निन्दुं किंच विमोहयन्पशुपतिं विश्वार्तिमुच्चाटयन्
हिंसत्संसृतिडम्बरं तव शिवे हासाह्वयो मान्त्रिकः
श्रीकामाक्षि मदार्तितापतमसो विद्वेषणे चेष्टताम् ९०॥

ஆகர்ஷன் நயனானி நாகிஸத³ஸாம் ஶைத்யேன ஸம்ஸ்தம்ப-
ந்னிந்து³ம் கிம்ச விமோஹயன் பஶுபதிம் விஶ்வார்திமுச்சாடயன்
ஹிம்ஸத் ஸம்ஸ்ருʼதிட³ம்ப³ரம் தவ ஶிவே! ஹாஸாஹ்வயோ மாந்த்ரிக:
ஸ்ரீகாமாக்ஷி மதார்துதாபதமஸோ வித்³வேஷணே சேஷ்டதாம் 90

मदीयमानसतमो/மதீ³யமானஸதமோ என்றும் பாடம் -  என்மனதிலிருக்கும் இருளொடு பகைப்பதில் என்று பொருள்.

மங்களமே! ஸ்ரீகாமாக்ஷி! விண்ணோர் சபையினர் கண்களை ஈர்த்து, தண்மையால் சந்திரனும் உறையச் செய்து, பரமேசுவரனையும் மோகம் கொள்ளச் செய்து, உலகின் துயரை விரட்டி, வாழ்வெனும் வெப்பை துன்புறுத்திச் செய்யும் உன் புன்சிரிப்பெனும் மாந்திரிகன் என்னுடைய துயர், தாபம், அறியாமை இவற்றிலும் வெறுப்புற்று நீக்குவதில் ஈடுபடட்டுமே!

விண்சபை யோர்தம் விழிகளை ஈர்த்து மிகிரனயும்
தண்ணால் உறைத்து தகாபர மேசர்க்கும் தந்துதுயர்
மண்ணில் விரட்டியிவ் வாழ்துன்பை துன்புசெய் மாந்த்ரிகனுன்
வண்ணந கையால வையென்னில் காமாட்சி மாற்றுகவே!

விண்சபையோர்-தேவர்; மிகிரன்-சந்திரன்;தண்-குளிர்ச்சி; தகா-மோகம்; மண்-உலகு;  மாற்றுக-நீக்கிச் சிறப்பு செய்தல்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

விண் சபையோர் தம் விழிகளை ஈர்த்து மிகிரனையும், தண்ணால் உறைத்து, தகா பரமேசர்க்கும் தந்து, துயர் மண்ணில் விரட்டி, இவ்வாழ்துன்பை துன்பு செய் மாந்த்ரிகன் உன் வண்ண நகையால் அவை என்னில் காமாட்சி மாற்றுகவே!

குறிப்பு: மூலப்பாடல்போன்றே எழுதுவதற்குச் மிகவும் சவாலான பாடல், என்பதை மூலப்பாடலையும், தமிழாக்கப்பாடலையும் கவனிக்கும்போதே உணரலாம்.

மார்ச் 29, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 89

पुम्भिर्निर्मलमानसौर्विदधते मैत्रीरसं निर्मलां
लब्ध्वा कर्मलयं निर्मलतमां कीर्तिं लभन्तेतराम्
सूक्तिं पक्ष्मलयन्ति निर्मलगुणां यत्तावकाः सेवकाः
तत्कामाक्षि तव स्मितस्य कलया नैर्मल्यसीमानिधेः ८९॥

பும்பி: நிர்மலமானஸௌர் வித³தே மைத்ரீ ரஸம் நிர்மலாம்
லப்³த்வா கர்மலயம் நிர்மலதமாம் கீர்திம் லபந்தேதராம்
ஸூக்திம் பக்ஷ்மலயந்தி நிர்மலகுணாம் யத்தாவகா: ஸேவகா:
தத் காமாக்ஷி தவ ஸ்மிதஸ்ய கலயா நைர்மல்யஸீமானிதே: 89

காமாக்ஷி! உன்னடியார்கள், வினைகள் நீங்க, தூய மனதுள்ள நல்லோருடன் தூய நட்பைக் கொள்ளுகிறார்கள். தூய புகழையும் பெறுகிறார்கள். தூய குணமுள்ள வாக்கினை வழங்குகின்றனர்.இவைகள் எல்லாம் தூய்மையின் பேரெல்லையான உன் புன்சிரிப்பின் ஒரு கலையால் நடக்கின்றன.

தூமன நல்லோர்தம் தூநட்பை தீவினை துவ்வுதற்கு
காமாட்சி உன்னன்பர் கைகொள்வர், தூபு கழும்பெறுவர்,
தீமையில் தூய சிகுவை வழங்குவர், தேவியுன்றன்
தூமந்த காசப்பேர் துங்கத்தோர் அம்சம் தொடுவதாலே

தூ-தூய; துவ்வுதற்கு - நீங்குதற்கு; தீமை+இல்-தீமையிலாத; சிகுவை-வாக்கு; துங்க - எல்லை;  பேர்-பெரிய;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


தூ மன நல்லோர்தம் தூநட்பை, தீவினை துவ்வுதற்கு, காமாட்சி உன்னன்பர் கைகொள்வர், தூ புகழும் பெறுவர், தீமையில் தூய சிகுவை வழங்குவர், தேவியுன்றன், தூ மந்தகாசப் பேர் துங்கத்தோர் அம்சம் தொடுவதாலே

மார்ச் 28, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 88

स्वाभाव्यात्तव वक्त्रमेव ललितं सन्तोषसम्पादनं
शम्भोः किं पुनरञ्चितस्मितरुचः पाण्डित्यपात्रीकृतम्
अम्भोजं स्वत एव सर्वजगतां चक्षुःप्रियम्भावुकं
कामाक्षि स्फुरिते शरद्विकसिते कीदृग्विधं भ्राजते ८८॥

ஸ்வாபாவ்யாத் தவ வக்த்ரமேவ லலிதம் ஸந்தோஷஸம்பாத³னம்
ஶம்போ: கிம் புனரஞ்சித ஸ்மிதருச: பாண்டி³த்ய பாத்ரீக்ருʼதம்
அம்போஜம் ஸ்வத ஏவ ஸர்வஜக³தாம் சக்ஷு: ப்ரியம் பாவுகம்
காமாக்ஷி! ஸ்பு²ரிதே ஶரத்³விகஸிதே கீத்³ருʼக்³ விதம் ப்ராஜதே 88

காமாக்ஷி!  அழகு மிக்க உன்முகம் சிவனுக்கு இயல்பாய்  சிவனுக்கு மகிழ்வைத் தருவது.அழகிய புன்சிரிப்பென்னும் திறமைக்கு இருப்பிடமாகிவிட்டால் விளையும் இன்பத்திற்கு, கேட்கவும் வேண்டுமா? தாமரைப்பூ இயல்பிலேயே உலகில் கண்களுக்கு இன்பம் தருவது. சரத்காலத்தில் அது மலரும்போது அது மேலும் இன்பம் தந்துவிளங்குமே, அதைபோலவே!

இயல்பில் அழகாம்நின் இன்முகம் இன்பீயும் ஈசருக்கு!
வயக்குறு புன்னகை வல்லமை யால்மிகு மஞ்சுறும்பங்
கயமுமின் பின்கதி காமாட்சி ஞாலத்தில் கண்களுக்கு!
நயக்கும் சரதத்துன் நன்நகை  யன்ன நலமுடனே!

வயக்கு-ஒளி; மஞ்சு-அழகு; கதி-இயல்பு; சரதம்-சரத்காலம்; நயக்கும்-இனிமையுறும்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


இயல்பில் அழகாம்நின் இன்முகம் இன்பீயும் ஈசருக்கு! வயக்குறு புன்னகை வல்லமையால் மிகு மஞ்சுறும் பங்கயமும் இன்பின் கதி, காமாட்சி ஞாலத்தில் கண்களுக்கு! நயக்கும் சரதத்துன் நன்நகையன்ன நலமுடனே!

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...