மார்ச் 29, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 89

पुम्भिर्निर्मलमानसौर्विदधते मैत्रीरसं निर्मलां
लब्ध्वा कर्मलयं निर्मलतमां कीर्तिं लभन्तेतराम्
सूक्तिं पक्ष्मलयन्ति निर्मलगुणां यत्तावकाः सेवकाः
तत्कामाक्षि तव स्मितस्य कलया नैर्मल्यसीमानिधेः ८९॥

பும்பி: நிர்மலமானஸௌர் வித³தே மைத்ரீ ரஸம் நிர்மலாம்
லப்³த்வா கர்மலயம் நிர்மலதமாம் கீர்திம் லபந்தேதராம்
ஸூக்திம் பக்ஷ்மலயந்தி நிர்மலகுணாம் யத்தாவகா: ஸேவகா:
தத் காமாக்ஷி தவ ஸ்மிதஸ்ய கலயா நைர்மல்யஸீமானிதே: 89

காமாக்ஷி! உன்னடியார்கள், வினைகள் நீங்க, தூய மனதுள்ள நல்லோருடன் தூய நட்பைக் கொள்ளுகிறார்கள். தூய புகழையும் பெறுகிறார்கள். தூய குணமுள்ள வாக்கினை வழங்குகின்றனர்.இவைகள் எல்லாம் தூய்மையின் பேரெல்லையான உன் புன்சிரிப்பின் ஒரு கலையால் நடக்கின்றன.

தூமன நல்லோர்தம் தூநட்பை தீவினை துவ்வுதற்கு
காமாட்சி உன்னன்பர் கைகொள்வர், தூபு கழும்பெறுவர்,
தீமையில் தூய சிகுவை வழங்குவர், தேவியுன்றன்
தூமந்த காசப்பேர் துங்கத்தோர் அம்சம் தொடுவதாலே

தூ-தூய; துவ்வுதற்கு - நீங்குதற்கு; தீமை+இல்-தீமையிலாத; சிகுவை-வாக்கு; துங்க - எல்லை;  பேர்-பெரிய;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


தூ மன நல்லோர்தம் தூநட்பை, தீவினை துவ்வுதற்கு, காமாட்சி உன்னன்பர் கைகொள்வர், தூ புகழும் பெறுவர், தீமையில் தூய சிகுவை வழங்குவர், தேவியுன்றன், தூ மந்தகாசப் பேர் துங்கத்தோர் அம்சம் தொடுவதாலே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...