ஜூலை 31, 2012

குறளின் குரல் - 111


அதிகாரம் 11 – செய்நன்றி அறிதல் (Gratitude) 

Being thankful to timely help rendered by others - "Gratitude" is an important trait of people of virtues and good living. vaLLuvar must have witnessed quite a bit of thanklessness in acts and beings during his times. So he devoted an entire chapter stressing the importance of this virtue. A thriving society’s back bone is the mutual help given and taken by the members of a community. It is an important virtue to be adhered by the members of society; the otherside of this would be the gratitude for the help. These two tread the society in good stead.

31st  July, 2012
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

Transliteration:
seyyAmal seydha udhavikku vaiyagamum
vAnagamum AtRal aridhu

seyyAmal  - when others have not done any help (or) not waiting for others to help first
seydha – volunteering on own will
udhavikku  - those that help
vaiyagamum – the skies and
vAnagamum – the earth
AtRal – a compensation or counter help
Aridhu - can not even be (a compensation)

Even when no one has done any help earlier, (whether needed or not), when someone volunteers to help others, that virtue can not be compensated even if the entire world and the skies are given to such an act of benevolence – is what is said in this verse.

There are similar thoughts expressed in the epics of Tamil literature “perungkadhai” and in “kamba rAmAyaNam”. 

My two verses for reflecting the same thought are given below. The second verse says that there is nothing which can be given as a compensatory gift for such benevolence, which is what vaLLuvar probably intended to say. Such virtue in a person is immeasurable and be not subject to anything that is measurable. The earth has dimensional limits and the heaven’s expanse is unknown. To add them in the same comparison may suit the poetic meter but not emphasize the thought in best possible light. The second verse reflects that thought.

Without ever having help from anyone, the help extended to others in need
Is an act of extreme benevolence and no compensation equals that deed!

தமிழிலே:
செய்யாமல் – பிறர் தனக்கு எவ்வுதவியும் செய்யாமலிருந்தாலும், அல்லது செய்யட்டும் என்று காத்திராமல்
செய்த – தானாக முன்வந்து
உதவிக்கு – பிறர்க்கு உதவி செய்யும் பெருங்குணத்தர்களுக்கு
வையகமும் - இவ்வுலகத்தையும்
வானகமும் - வானுலகத்தையும்
ஆற்றல் – கைம்மாறு, நிறையாக ஆற்றுதல் (உம் – விகுதி என்பதே கொடுத்தாலும் என்றும் சுட்டிவிடுகிறது)
அரிது – கொடுத்தாலும் நிறைவாக இராது

பிறர் தமக்கு செய்த உதவிக்கே மாற்றாக உதவி செய்யவேண்டும் என்கிற எண்ணம் உள்ளவர்கள் குறைவே. இதில் தனக்கு எந்த உதவியும், யாரும் செய்திராவிட்டாலும், தானாக முன்வந்து, பிறர்க்கு உதவி வேண்டும் போது, உதவுகின்ற பெரிய குணத்தவர்களுக்கு, இவ்வுலகையும், வானுலகையும் தந்தாலும் ஈடாகாது என்பதே இக்குறளின் கருத்து.

இக்கருத்தை பெருங்கதையும் , “பொன்னணி மார்பன் முன்னர் ஆற்றிய நன்னர்க் குதவும் பின் உபகாரம் அலைதிரைப் பௌவம் ஆடையாகிய நிலமுழுதும் கொடுப்பினும் நேரோ என்மரும்” என்று சொல்கிறது.  கம்பனும், கிட்கிந்தா காண்டத்தில் பின்வருமாறு சொல்கிறான். “ உதவாமல் ஒருவன் செய்த உதவிக்குக் கைம்மாறாக மதயானை அனைய மைந்த மற்றுமுண்டாக வற்றோ”.  

இன்றைய குறளின் கருத்தை வழிமொழிந்து இரண்டு குறள்கள் இதோ!  இரண்டாவது குறளில் அத்தகைய உதவிசெய்வாரின் சிறப்புக்கு ஈடாக ஈவதொன்றில்லை என்றது, அத்தகு உதவிகளை காணக்கூடிய பரிமாணங்களில் அளந்துவிடக்கூடாது என்பதினால்தான். வையமோ ஒரு பரிமாணத்துக்குள் அடங்குவது, வானமோ பரந்து விரிந்துகொண்டே இருப்பது. இவ்விரண்டையும் கவிதை நயத்துக்காக அளவுகளாகக் கொள்ளலாமேதவிர, கருத்தை சிறப்பாகச் சொல்ல அல்ல!

இன்றெனது குறள்(கள்):
பிறர்செய்யக் காத்திராமல் தானுதவி செய்வார்க்கு
விண்ணுமண்ணும் ஈந்துமீடில் லை

பிறர்செய்யக் காத்திராமல் தானுதவி செய்வார்
சிறப்புக்கு ஈவதொன்றில் லை 

ஜூலை 30, 2012

குறளின் குரல் - 110


30th  July, 2012

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
                       (குறள் 100:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
Iniya uLavAga innAdha kURal
Kaniiruppa kAi kavarndhtRu

Iniya – sweet words that do good and are vituous
uLavAga  - knowing such words (not possessing exactly. Knowing is appropriate here)
innAdha – useless and harsh words that are painful to others as well as to self at the end.
kURal – speaking such
kaniiruppa  - where there is ripe fruit
kAi  - bitter, sour, hot raw vegetables
kavarndhtRu – desiring and insisting as better taste

When there are words replete with goodness, benefit and virtue, knowingly if someone chooses to use bad, offensive, harsh words towards others, it is like choosing a bitter raw vegetable over a ripe fruit. Whose lose or pain is it? The consumer’s!

Some raw vegetables ripe and become sweet. There are words said with intention to mend somebody, to steer them in the right path or to give a bitter pill for their own goodness. They are not referred to here. Bad and harsh words have no such process to become sweet words with time.

Ripe chillies are still hot and ripe bittergourds are still bitter. Nux vomica (Strychnine) vegetable can cost life for anyone. Such are the words that cause pain to the person consuming them. Some swaggering types do things or say words just to put off and be offensive to others. When someone says that he or she likes the jackfruit, and if the other would insist bittergourd as their choice that would only mean they are simly smug and brash. Who is going to suffer the bitterness and pain associated?

Speaking harsh while sweet words of virtue are a plenty
Is choosing the bitter and bad raw to the ripe fruit, as tasty

தமிழிலே:
இனிய - நன்மையும், அறத்தையும் உணர்த்தும் இனிய சொற்கள்
உளவாக – அறிந்திருந்தும் (இருப்பது என்பது மொழியின் வளம், அறிவது என்பது அறிவனது ஆற்றல்)
இன்னாத - பயன் தராத, கடுஞ்சொற்களை, பிறருக்குத் முதலிலும், முடிவில் தனக்கேயும் துன்பத்தைத் தருகின்ற
கூறல் – பேசுதல்
கனிஇருப்பக் - நல்ல இனிய சுவையுடைய பழங்கள் கையிலே இருக்க அவற்றைப் புறந்தள்ளி
காய் – பாகற்காய், எட்டிக்காய் என்று சுவையில்லாத சொற்களை
கவர்ந்தற்று – சுவையென்று அறியாமையில் எண்ணிச் சொல்வதுபோலாகும்

நன்மையையும், அறத்தையும் உணர்த்தக்கூடிய இனிய சொற்கள் எவ்வளவோ இருக்க, அவற்றை அறிந்தும், பயனிலாத, கடுஞ்சொற்களை பிறறிடத்தில் பேசுதல் என்பது, நல்ல பழவகைகள் இருக்க, துவர்ப்பும், கசப்பும் மிக்க காய்களைத் தேடி உண்ணுவதுபோலாம். இவை உண்பவருக்கே துன்பத்தை விளைவிக்கக்கூடியன.  

சில காய்வகைகள் கனிந்து பழமாகி சுவையாகும் தன்மையுடையன. அதுபோல ஆகும் சொற்கள் ஏதுமில்லை. ஆனால் சிலசமயங்களில் சுடுசொல், கசப்பும் மருந்தாகி விடுதல் போலச் சொல்லப்படுவதுண்டு.  அவற்றைப்பற்றியும் இங்கு கூறப்படவில்லை.

மிளகாய் பழுத்தாலும் காரம்தான். பாகற்காய் பழுத்தாலும் கசப்புத்தான். எட்டிக்காய் பழுத்தாலும் பழுக்காவிட்டாலும், உயிருக்கே உலைவைக்கக்கூடியது.  இவ்வகைக் காய்களைப் போன்றனவாம் துன்பத்தைத் தரும் சொற்கள்.  இக்குறள் ஒருவர் வீம்புக்குத் தெரிவு செய்யும் பாதையையும் குறிக்கிறது. சிலர், உனக்குப் பிடித்தது பலாப்பழமா, எனக்குப் பிடித்தது பாகற்காய் என்பார்கள். யாருக்கு அதனால் வரும் கசப்பும், துன்பமும்? அதுபோன்றதே கனியிருக்க காயே மேல் என்போரது வீம்பும்.

இன்றெனது குறள்(கள்):
கனியதற்கு காயதுவே மேலென்போர் போலாம்
இனியசொற்கள் இல்லாதார் பேச்சு

பழமிருக்க பாகற்காய் போலாமே இன்சொல்
பழகாது இன்னாச் சொலல்

ஜூலை 29, 2012

குறளின் குரல் - 109


29th  July, 2012

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.
                       (குறள் 99:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
Insol inidhIndRal kANbAn evankolO
Vansol vazhanguvadhu

Insol  - sweet words (soothing words)
Inidh(u) – pleasurable experience
IndRal  - gives
kANbAn  - who sees that (the pleasurable experience given by soothing words)
evankolO – who will and what for ?(after experiencing the  sweetness of insol or sooth-speak)
Vansol – harsh words
Vazhanguvadhu – speak to others

Why and for what would a person, who realizes that the sweet conversations with others or sweet words heard from others give immense pleasure, use harsh words towards others?  Most commentators have interpreted the verse from the perspective of the recipient of good words. Though that seems to be the general scenario, and a well known truth, this verse seems applicable to both, who are recipient as well as the ones who have sweet words for others.

When we derive pleasure, from others speaking sweet words to us, we must reciprocate the same or at least, speak devoid of hard words and tone, as a minimum requirement.

When someone who is used to speaking sweet and soothing words, gets angry, care must be exercised not to use harsh words and must think if it is worth to lose the pleasure of soothing words. Sangam anothologies “innA naRpadhu” and “nAnmaNi kadigai” have ample references to this. nAnmaNi kadigai says, those who use harsh words will get only the same in reciprocation, while being nice and respectful gets good circle of friends and make everyone a relative.

People of harsh words lose good friends. Since the lord of death will come through the words of illiterate, people of harsh words are likened to the illiterate.

Experiencing the pleasure of words that’re sweet
Why would anyone speak harsh words replete?

தமிழிலே:
இன்சொல் – இனிமையாகப் தாம் பிறரிடம் பேசுதலும், தன்னிடம் பிறர் பேசுதலும்
இனி(து) - இன்பத்தினைத்
ஈன்றல் - தருவதினைக்
காண்பான்  -  கண்கூடாகக் காண்பவர்
எவன்கொலோ  - யார்தான், எதன் பொருட்டு?
வன்சொல் – பிறரிடத்தில் கடுஞ்சொற்களைக் கூட்டிப்
வழங்குவது – பேசுவார்கள்?

இனிமையாக தான் பிறரோடும், தன்னோடு பிறரும் உரையாடுதலின் இன்பத்தினை அறிந்து உணர்ந்தவர்கள், எதற்காக, ஏன், பிறரிடம் கடுஞ்சொற்களைக் கூட்டி பேசவேண்டும்?  பெரும்பாலும், உரையாசிரியர்கள் “இனிமையான பிறர்கூறும் சொற்கள்” என்று நுகர்வோர் கோணத்திலேயே எழுதியுள்ளார்கள். பொதுவாக அதுதான் உண்மையாக இருந்தாலும், இனிமையாகப்பேசி, மற்றவர்கள் அதனால் அடையும் இன்பத்தையும், தானே அடையும் இன்பத்தையும் உணர்ந்தவர்களுக்கும் இக்குறள் பொருந்தும்.

பிறர் தன்னிடம் பேசும் இனிய மொழிகளிலே இன்பம் அடைகிறவர்கள், மற்றவரிடத்திலே தாங்கள் பேசுவது வன்மொழியாக இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நுகர்வோருக்கான குறைந்தளவு பண்பு அது.

பிறரிடத்தின் இன்மொழி பேசுபவர்களுக் கூட, சில சமயங்களில் வருத்தம், வெகுளி கொள்ள நேரும்போது, தங்கள் பேசும் இன்மொழியிலே இருக்கக்கூடிய இன்பத்தை இழக்கவேண்டுமா என்று சிறிது சிந்திக்கவேண்டும். கபிலரின் இன்னா நாற்பது “அறமனத்தார் கூறுங் கடுமொழியின்னா” என்கிறது.  அறமனத்தோர் கூறுகின்ற கடுமையான மொழியானது துன்பத்தைத்தரும் என்கிறார் கபிலர்.   அறமொழியினராக இருப்பின், வன்மொழி பேசுதல் இராது. அப்படிஅவர்களே வருந்தி பேசும்போது, அது பிறர்க்கும் ஊறு விளவித்து, அவர்களுக்கே கூட மனவருத்தம் என்கிற துன்பத்தைத் தந்துவிடும். சங்க நீதிநெறி நூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகை “நாவன்றோ நட்பறுக்கும் தேற்றமில் பேதை” என்றும் “கல்லா ஒருவர்க்கு தம்வாயிற் சொற்கூற்றம்”, “வைததனால் ஆகும் வசையே வணக்கமது செய்ததனால் ஆகும் செழுங்கிளை” என்கிறது.

வன்மொழி பேசுபவர்கள் நல்ல நட்புகளை இழப்பர். கல்லாத ஒருவருக்குத் தான் அவர் வாய்ச்சொல் மரணதேவனாக முடியும் என்பதால், வன்மொழியாளர்கள் கல்லாதவர்க்கே ஒப்பாவர் என்றும் உணர்த்தப்படுகிறது.  தவிர, ஒருவரை வன்மொழி பேசுவதால், அதுவே நமக்கும் வந்து சேரும். ஆனால் இன்மொழியால் வணங்குபவர்க்கு, எல்லோருமே சுற்றமாகி விடுவர். மேலும், இன்சொல், வன்சொல் இவற்றின் பயன்களையும் கீழ்கண்டவாறு சுருங்கச் சொல்கிறது.

“இன்சொலான் ஆகும் கிழமை, இனிப்பிலா
வன்சொலான் ஆகும் வசைமனம் – மென்சொலின்
நாவினால் ஆகும் அருள்மனம் அம்மனத்தான்
வீவிலா வீடாய் விடும்”   

இன்றெனது குறள்:
இன்பளிக்கும் இன்சொல் எனவறிந்தோன் மற்றார்க்கு
வன்சொல்லல் எப்பயனுக் காய்?

ஜூலை 28, 2012

குறளின் குரல் - 108


28th  July, 2012

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.
                       (குறள் 98:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
siRumayuL nIngiya insol marumayum
immayum inbam tharum

siRumay – meanness in thoughts
uL  nIngiya – innately absent
insol – sweet words
marumayum – in the next birth
immayum – and in the current birth
inbam - happiness
tharum- will give.

In his commentary Parimelazhagar has interpreted the word “sirumayuL” as a case (vibhakthi) related transuse “sirumayin” called “urubu mayakkam”, the ending part of nouns and pronouns that define the particular case; but it makes sense even as it is when we interpret it as “innate meanness or pettiness”.

It is understandable why Parimelazhagar, the commentator mentioned about the current and future birth in the previous verse, though there was no explicit reference to that in that verse. This verse has it clearly spelt out.  In this verse, vaLLuvar says that the sweet words devoid of pettiness (small mindedness or meaneness) will give happiness in the next and the current birth.

Parimelazhagar calls the sweet words as the “disease free sweet words”; has used the word “nOi” (disease) in the sense of trouble causing happenings. He also concludes, the first in order usage of “Next birth” (மறுமை) in the verse, is to convey its importance. There is a subtle human psychology implied here. The human tendency is to worry about the safetly in future and hence go in “accumulate amd save mode”, whether they are objects or the currency of virtue to be exchanged in the future births.

I have also used the 7 future births as done by vaLLuvar in other verses, instead of saying just the next birth.

In this life and beyond, is there happiness
For people of sweet words free of pettiness

தமிழிலே:
சிறுமை – கீழ்த்தரமான, குறுகிய எண்ணங்களை
உள் நீங்கிய – தன்னுள் இல்லாமல் நீங்கிய
இன்சொல் – (சொல்லப்படும்) இனிய சொற்கள்
மறுமையும் – மறுபிறப்பிலும்
இம்மையும் - இப்பிறப்பிலும்
இன்பம் – இன்பத்தினைத்
தரும் – தரக்கூடிய தன்மையுடையது

சிறுமையின்றும்” என்பது உருபு மயக்கத்தினால் “சிறுமையுள்” ஆனது என்று கீ.வா.ஜ வின் ஆராய்ச்சிப் பதிப்பு கூறுகிறது. அப்படி இருக்கலாம், ஆனால் “சிறுமை+உள் அடக்கிய” என்று பிரித்துப் பொருள் கொண்டால், சிறுமைத்தனமான எண்ணங்களை உள்ளடக்கமாகக் கொள்ளாமல், அவை நீங்கப் பெற்ற என்பதும் பொருந்தி வருகிறது.

முந்தைய குறளின் கருத்துக்குப் பரிமேலழகர் இம்மை, மறுமை என்று ஏற்றிச் சொன்னதன் காரணம் இக்குறளில் தெரிகிறது. கீழ்த்தரமான, குறுகிய நோக்க எண்ணங்களை, தன்னுள் இல்லாமல் நீங்கி, சொல்லப்படும் இனிய சொற்கள், இம்மை மறுமை இருமையிலும் இன்பத்தைத் தரவல்லது.

பரிமேலழகர் தன்னுடைய உரையில் பிறர்க்கு “நோய் செய்யாத இனிய சொல்” என்று கூறுகிறார். இதில் நோய் என்பது, “துன்பத்தினையும் வருத்தத்தினையும்” என்ற பொருளில் ஆளப்பட்டிருக்கிறது. மறுமையின்பம் பெரிதாகலின், அதனை முதலில் சொன்னதற்கான காரணமும் சொல்லுகிறார்.  இதில் மனித இனத்தில் உளவியலும் குறிப்பாகச் சொல்லப்படுகிறது. இன்றைக்கு இருக்கிறதோ இல்லையோ, எதிர்காலத்துக்கு சேர்த்துவைப்பது ஒரு இனிய கட்டாயமாகவே ஆகிவிடுவதால், அந்தத் தூண்டிலைப் போடுவது எல்லோருக்கும் வழக்கமாகிவிடுகிறது.  மறுபிறப்புக்கு, இன்றைய மாற்றுக்குறளில் ஏழ்பிறப்பு என்று சொல்லியகாரணம், வள்ளுவரே ஏழேழ் பிறப்பு என்று பிற குறள்களில் சொல்லியிருப்பதால்தான்.

இன்றெனது குறள்:
கீழ்மையிலா இன்சொல் உடையார்க்கு இப்பிறப்பும்
ஏழ்பிறப்பும் இன்பமே தான்

ஜூலை 27, 2012

குறளின் குரல் - 107


27th  July, 2012

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
                       (குறள் 97:  இனியவை கூறல் அதிகாரம்)

நயன் – மேன்மை, இன்பம் ; நன்றி – நன்மை

Transliteration:
Nayan IndRu nandRi payakkum payanIndRu
paNbin thalaippiriyAch chol

Nayan  IndRu – gives glorious state
nandRi – good
payakkum - begets
payan IndRu – saying words the mean and do good to others
paNbin – ( the words of ) exalted quality
thalaippiriyAch – not losing the (the words of exalted quality)
chol - words

In Parimelazhagar’s commentary, the meaning of “nayan IndRu nandRi payakkum” has been explained as the “justice in this birth and virtues in the future births”. It is difficult to guess what prompted him to understand and the meaning as such. By reading the verse, it is difficult to interpret it that way.  

May be it is Parimelazhagar’s strong belief in cycle of births and deaths, Karma theory due to good and bad deeds that prompt him to link the meaning to associated thoughts at every opportune moment. It is very apparent that other commentators have also had considerable difficulty in accepting it as it is. Probably his fertile imagination must have let him more than what has been said in the verse.

The words uttered by somebody should stead the path of quality of virtue. The meaning of the words should really convey the goodness intended in both meaning and resulting deeds. Such speak will shower the best to the person of sweet words. Since the words that are sweet and useful to someone will yield appropriate reciprocation to one who says it too. Sweet words give pleasure and goodness to both the parties.

Sweet and fruitful words not losing virtuous quality
Culminate in greater good in deeds of superiority

தமிழிலே:
நயன்ஈன்று – மேன்மையைத் தரும்
நன்றி – நன்மையைச்
பயக்கும் - செய்யும்
பயன்ஈன்று – தமக்குரிய பொருளால் பிறர்க்கு நன்மைகளை செய்விக்கும்
பண்பின் - பண்பினை
தலைப்பிரியாச் - நீங்காத
சொல் - சொற்கள்

பரிமேலழகர் உரையிலே ‘நயன் ஈன்று நன்றி பயக்கும்’ என்பதை ‘ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்’ என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.  எப்படி இவ்வாறு சொல்கிறார் என்று விளங்கவில்லை.

மற்ற உரையாசிரியகளுக்கும் இவ் விளக்கம் பொருள் விளங்கவில்லை என்பது மற்ற உரைகளைப் படிக்கும் போது தெரிகிறது. இம்மை, மறுமை என்பதை அவராகவே சேர்த்திருக்கவேண்டும், அதுபோல ‘நீதி’ என்பதும் அவரது கற்பனையாகத் தெரிகிறது.

ஒருவர் சொல்லும் சொற்கள் பண்புநிலையிலிருந்து நீங்காமல், அச்சொற்களின் பொருள்களினால், நன்மைகளைத் தருவதாக இருந்தால், அவை அவருக்கு மேன்மை தரும் நன்மைகளைச் செய்துவிடும் என்கிறது இக்குறள். இன்சொற்கள், அதுவும் பிறர் பயனுறும் வகைத்தான சொற்கள், பயனுற்றவர்கள், அடைந்த பயனின் நன்றிக்கடனாக சொல்பவருக்கு நன்மையும் பெருமையும் செய்வார்கள். இனியசொற்களால், சொல்பவர், கேட்பவர் என இருவருக்குமே நன்மையும், மேன்மையும்.

இன்றெனது குறள்:
நற்பயனை நல்குகின்ற பண்பகலா இன்சொற்கள்
பொற்புயர்வு நன்மை தரும்
(பொற்புயர்வு – ஒளிபொருந்திய மேன்மை)

ஜூலை 26, 2012

குறளின் குரல் - 106


26th  July, 2012

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்.
                       (குறள் 96:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
Allavai thEya aRamperugum nallavai
nAdi iniya solin

Allavai - deeds that are not good
thEya – will diminish
aRam – virtuous deeds
perugum – will grow
nallavai nAdi – when desiring good to happen
iniya  - sweet words of goodness
solin – when speak

When sweet and meaningful are spoken intendending good things to happen, the virtues in the world will gain strength and grow. Ill will diminish on its own as goodness takes root. There is no other weapon needed to quell evil ill’s designs.

As the virtuous deeds grow, ill will lose its surviving power, and will diminish in strength and eventually will be vanquished is the summary concept put forth through this verse. 

In other words, to be consistently speaking sweet and useful words for others definitely is an effort at first but over a period of time, becomes the trait and innate quality virtue in anybody.

Ill deeds wither whence good ones grow and sail
If sweeter words spoken for goodness to prevail

தமிழிலே:
அல்லவை – நல்லன அல்லாதவை
தேய - குறைந்துபட
அறம் – அறத்தின் வலி
பெருகும் – ஓங்கும், வளரும்
நல்லவை நாடி – நல்லன செயல்கள் நடப்பதற்காய் வேண்டி
இனிய - இனிமை பொருந்திய
சொலின் – சொற்களைப் பேசுவதால்.

நன்மைகள் விளைவதையே நாடியொருவர், இனிய பொருள் பொதிந்த சொற்களை பிறரிடம் சொல்வாரானால், அதனால் அறத்தின் ஓங்கிய வலிமை பெருகும், வளரும். அறமல்லாதனவை வலிமை குன்றி, தாமாகவே மறைந்துவிடும்.  இனிய சொற்களைப் பேசுவதனால் இருக்கும் பொது நன்மையை இக்குறளில் வலியுறுத்தியுள்ளார்.

இனிய பயனுள்ள சொற்களை எப்பொழுதும் சொல்வது முதலில் ஒரு கடிய முயற்சிதான், ஆனாலும் தொடர்ந்து முயலுபவருக்கு அதுவே அவருடை உள்ளுரை பண்பாகிவிடுகிறது. இப்பண்பு ஒவ்வொருவரிடத்தில் வளருமானால், அல்லவை மறையவேண்டியதுதானே!

அறமல்லனவற்றை அழிக்க தகுந்த படைக்கலன் அறச் செயல்களை வளர்ப்பதன் மூலமே. அறச்செயல்கள் வளர வளர மறச்செயல்கள் வலியிழந்து தாமே அழிந்துபடும்.

இன்றெனது குறள்:
நல்லறம் ஓங்கிடும் அல்லறம் ஓய்ந்திடும்
நல்லதற்காய் இன்சொல் லிடின்

ஜூலை 25, 2012

குறளின் குரல் - 105

25th  July, 2012

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
                       (குறள் 95:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
paNivudayan insolan Adhal oruvaRku
aNiyalla matRu piRa

paNivudayan –humble
insolan – and a person of sweet words
Adhal  - being so,
oruvaRku – for a person
aNi – is like a precious jewel
alla - Not
matRu piRa – other things

Humility and sweet words are the desirable attributes that are the best jewels for a person. Other attributes are not so. The tone of the verse says that these two attributes have all encompassing goodness in them. Humility born out ignorance is due to inferiority complex. Sweet words without humility are fake decorations which when layers are peeled are revealed. They are for personal gains and can not be likened to the best jewels.

In a later chapter of “Self-Control” vaLLuvar will say enough about Humility as an important attribute. The three verses beginning with “ adakkam amararuL uykkum”, “ellArkkum nandRAm paNidhal” and “yAkAvArAyinum nAkAkka” stress the importance of humility.  Humility is a virtue attained by the control of five senses. It is a desirable attribute in everyone. People of humility are bound to have the control of tongue and will be of sweet words for everyone.  That attribute can keep them one among the heavenly beings.  

Though seemingly simple statement this verse has a lot of inherent qualities stressed and require deeper study and understanding.

Humility and sweet words are like precious jewel
To one; other superficial façade compare next to nil

தமிழிலே:
பணிவுடையன் – அடக்கமுடமையாகிய பணிவு என்னும் பண்பையும்
இன்சொலன் – இனிய பயந்தரும் சொற்களை மட்டுமே யாரிடத்திலும் சொல்பவர்களாயும்
ஆதல் – ஆக இருத்தல்
ஒருவற்கு – ஒரு மனிதருக்கு
அணி – பூணுகின்ற அணிகலன், நகையெனலாம், அவருக்குள்ள நிறைவான செல்வம்
அல்ல - இல்லை
மற்றுப் பிற – மற்ற வெளிப்பூச்சான பகட்டைக்காட்டும் பண்புபோலத் தோன்றும் பொய்கள்

அடக்கமுடமையும், இனிய சொற்களை மட்டும் பேசுபவராகவும் இருத்தலே ஒருவருக்கு அணியும் நகைகளைப் போன்ற பெருமை தருவனவாம். மற்ற வெளிப் பகட்டான பண்பைப்போல் தோன்றும் பொய்கள் எல்லாம் நகைகள் போல இருந்தாலும் போலிகளே.

“அடக்கம் அமரருள் உய்க்கும்” என்றும், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்றும், “யாகாவாராயினும் நாகாக்க” என்றும் பின்னால் வரப்போகிற “அடக்கமுடமை” அதிகாரத்தில் கூறுவார் வள்ளுவர்.  பணிவுடமை என்பது புலனடகத்தின் காரணமாகப் பிறக்கும் ஒரு பண்பு.  பணிவுடமை எல்லோர்க்கும் இருக்கவேண்டிய ஒன்று. பண்புடையராக இருப்பவர் நாவடக்கமும் உள்ளவராகத்தான் இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்ல அவர்கள் வாய்மொழியெல்லாம் இனியவையாகத்தான் இருக்கமுடியும். அத்தகையோரின் பணிவென்னும் பண்பே அவர்களை தேவருள் ஒருவராகக் கருதச்செய்யும்.

இக்குறள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கருத்தை எளிமையாகக் கூறினாலும், இக்குறள் நிறைய சார்பான பண்புகளை சிந்திக்க வைக்கிறது. ஆழ்ந்த படிக்க, சிந்திக்கவேண்டியவற்றைப் பற்றி கூறுகிறது.

இன்றெனது குறள்:

இன்சொல் பணிவுடமை யார்க்குமிவை நல்லணிகள்
என்பன, மற்றவை இல்

ஜூலை 24, 2012

குறளின் குரல் - 104


24th  July, 2012

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு.
                       (குறள் 94:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
thunbuRuum thuvvAmai illAgum yArmATTum
inbuRuum insolavarkku

thunbuRuum – That which causes a lot of sorrow, distress, anguish, suffering
thuvvAmai – disgust, jealous, poverty  (has multiple meanings, all of which fit the context)
illAgum – shall not be there
yArmATTum – when with everyone
inbuRuum –  a lot of delight or happiness yielding
insolavarkku – capable of uttering sweet words

Those who speak happiness giving, delightful sweet words towards everyone will be devoid of pains of disgust, jealousy, and poverty. vaLLuvar’s genius uses the choicest word “thuvvAmai” which has many meanings in tamil, all of which are undesirable, that cause suffering and distress.  In this verse he has demonstrated the beauty of brevity in using the apt word.

When somebody has only sweetwords for everyone, the person won’t have enemies, nor disgust or jealousy. So the person won’t have any sufferings because of them. Since such personality will have many good friends that care, even if the poverty strikes, they get help even without asking -  the ensuing suffering will also not be there.

Since mutual hared or disgus arising out of glory, or wealth of the other person, causes only misery. So, I have used the word “hatred” in my verse today. Only those devoid of disgust will be people of sweet words and hence others won’t have hatred towards them too.

For who has cheery sweet words for everyone to hear
Distressful jealous, disgust, poveryty shall not be there

தமிழிலே:
துன்புறூஉம் – துன்பத்தை மிகுவிக்கும்
துவ்வாமை – வெறுப்பு, பொறாமை, வறுமை
இல்லாகும்  - இல்லாதொழியும்
யார்மாட்டும்  - எவரிடத்திலும்
இன்புறூஉம்  - இன்பத்தை மிகுவிக்கும்
இன்சொலவர்க்கு – இனிய சொற்களை சொல்ல வல்லவர்க்கு.

எல்லோரிடத்திலும் இன்பத்தை மிகுவிக்கும் இனிய சொற்களை சொல்ல வல்லவர்க்கு, துன்பத்தை மிகுவிக்கும் வெறுப்பு, பொறாமை, வறுமை போன்றைவை இல்லாதொழியும். “துவ்வாமை” என்ற சொல் பல பொருள்களைக் கொண்டது, எல்லாமே துன்பத்தை விளைவிக்கக்கூடியன. வள்ளுவரின் சொல்லாடலின் வலிமையை எடுத்துக்காட்டக்கூடிய சொல்லாட்சி.  

எல்லோரிடத்திலும் இன்சொற்களையே பேசுவோருக்கு பகையோ, யார்மேலும் வெறுப்போ, பொறமையோ இல்லையாதலால், அவருக்கு இவற்றால் பெறக்கூடிய துன்பமும் ஒன்றுமில்லை. நண்பர்களே மிகுத்திருப்பராதலால், அவர்களுக்கு வறுமை வந்தபோதும், கேளாமலேயே உதவியும் வரும், வறுமையால் வரும் துன்பமும் ஒன்றுமில்லை.

ஒருவர் மீது ஒருவர்கொள்ளும் வெறுப்பு பொறாமை, புகழ், செல்வம் காரணம் பற்றி வந்து அதனால் துன்பமே விளையுமாதலால், இன்றைய குறளில் “வெறுத்தல்” என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளேன். வெறுத்தல் இல்லாதவரே இன்சொலராகவும் இருப்பர், அதனாலேயே பிறரும் அவர்பால் வெறுப்புக் கொள்வதும் கிடையாது

இன்றெனது குறள்:
எல்லோர்க்கும் இன்சொல் வலார்க்கு வெறுத்தலும்
இல்லதனின் துன்பமு மில்

பிரித்துப் படித்துப் பொருள் கொள்ள:
எல்லோர்க்கும் இன்சொல் வலார்க்கு, வெறுத்தலும்
இல், அதனின் துன்பமும் இல்  

ஜூலை 23, 2012

குறளின் குரல் - 103


23rd  July, 2012

முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்.
                       (குறள் 93:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
mugaththAn amarndhu – with a smiling and pleasant face
inidhunOkki – having a sweet gaze
agaththAnAm – coming from the heart, without pretence and facade
insolinadhE – the sweet words that bring
aRam - virtue

Good virtue is, the ability to have a smiling face, pleasing gaze, and sweet words coming from the heart. When we see somebody who is very close to us, our heart jumps in joy, and when we look at them, our look has an automatic sweetness; when we speak to them, our words express compassion and love genuinely and we don’t speak anything to hurt them even remotely.

This vitue should be exercised without any likes and dislikes for specific persons. “yAdhum UrE, yAvarum kELir’  (யாதும் ஊரே, யாவரும் கேளிர்) are golden words to remember,  when we talk to everyone.  In one of the poems the importance of being a person of sweet words has been stressed by saying, that the seas wont raise when there is hot sun, but will, seeing the cool moon to imply how the world responds to hot words versus sweet words. So, be the person of sweet words.

Pleasant face, sweet gaze and sweeter words
From the heart, define the true vitrtue that holds

தமிழிலே:
முகத்தான் அமர்ந்து – முகமானது மலர்ச்சியுடன்
இனிதுநோக்கி – இனிய பார்வையும்
அகத்தானாம் – உள்ளத்திலிருந்து வரும் (பொய்யும் பூச்சுமிலாத)
இன்சொலினதே – இனிமையான சொற்களால் விளைவதே
அறம் – அறம் எனப்படுவதாம்

அறச் செய்கையெனப்படுவது, முகமலர்ச்சியுடன், இனிய பார்வையும், உள்ளத்திலிருந்து வருகின்ற உண்மையான இனிய சொற்களாலும் விளைவதாம். நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாகக் கருதும் ஒருவரைப்பார்க்கும் போதே நம்முடைய முகம் மலர்கிறது, உள்ளம் உவகையில் துள்ளுகிறது, அவர்களை நாம் பார்க்கும் பார்வையிலும் ஒரு இனிமை சேர்கிறது. இவற்றோடு நாம் அவர்களோடு பேசும்போது உண்மையான அன்போடு வரும் சொற்களாக, அவர்கள் மனது எவ்விதத்திலும் கோணாதவாறுதான் பேசுவோம்.

இக்குறளில், அறம் என்பதை பண்பு என்கிற பொருளிலேதான் கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பண்பை வேண்டியவர் வேண்டாதவர் என்கிற விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லோரிடத்திலும் கொள்வோமேயானால் அதுதான் உண்மையான பண்பு.  ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வாசகத்தை நினைவில் இருத்துவோமேயானால்,  எல்லோரிடத்தும் அன்பும், ஆதலால் இன் சொல் அன்றி வேறு எதுவும் பேசோம்.  இன்சொல்லின் வலிமை பற்றி கீழ்வரும் பாடல் கூறுவதைப் பார்க்கலாம்.

இன்சொலால் அன்றி இருநீர் வியன்உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே-பொன்செய்
அதிர்வளையாய்! பொங்காது அழல்கதிரால் தண்என்
கதிர்வரவால் பொங்கும் கடல்

இனிய சொற்களால் அன்றி இவ்வுலகம் கடுஞ்சொற்களால் என்றும் மகிழாது, எப்படியெனில், கடலானது சுட்டெரிக்கும் கதிரவன் வரவால் பொங்காது, குளிர்ச்சியான முழுமதியைக் காணும்போதுதான் பொங்குவது போல்.  இன்சொல்லே பண்பு.

இன்றெனது குறள்:
புன்சிரிப்பு பூத்தமுகம் இன்பார்வை உள்நிறைந்த
இன்சொல் இணைந்த தறம்

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...