ஜூலை 27, 2012

குறளின் குரல் - 107


27th  July, 2012

நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்.
                       (குறள் 97:  இனியவை கூறல் அதிகாரம்)

நயன் – மேன்மை, இன்பம் ; நன்றி – நன்மை

Transliteration:
Nayan IndRu nandRi payakkum payanIndRu
paNbin thalaippiriyAch chol

Nayan  IndRu – gives glorious state
nandRi – good
payakkum - begets
payan IndRu – saying words the mean and do good to others
paNbin – ( the words of ) exalted quality
thalaippiriyAch – not losing the (the words of exalted quality)
chol - words

In Parimelazhagar’s commentary, the meaning of “nayan IndRu nandRi payakkum” has been explained as the “justice in this birth and virtues in the future births”. It is difficult to guess what prompted him to understand and the meaning as such. By reading the verse, it is difficult to interpret it that way.  

May be it is Parimelazhagar’s strong belief in cycle of births and deaths, Karma theory due to good and bad deeds that prompt him to link the meaning to associated thoughts at every opportune moment. It is very apparent that other commentators have also had considerable difficulty in accepting it as it is. Probably his fertile imagination must have let him more than what has been said in the verse.

The words uttered by somebody should stead the path of quality of virtue. The meaning of the words should really convey the goodness intended in both meaning and resulting deeds. Such speak will shower the best to the person of sweet words. Since the words that are sweet and useful to someone will yield appropriate reciprocation to one who says it too. Sweet words give pleasure and goodness to both the parties.

Sweet and fruitful words not losing virtuous quality
Culminate in greater good in deeds of superiority

தமிழிலே:
நயன்ஈன்று – மேன்மையைத் தரும்
நன்றி – நன்மையைச்
பயக்கும் - செய்யும்
பயன்ஈன்று – தமக்குரிய பொருளால் பிறர்க்கு நன்மைகளை செய்விக்கும்
பண்பின் - பண்பினை
தலைப்பிரியாச் - நீங்காத
சொல் - சொற்கள்

பரிமேலழகர் உரையிலே ‘நயன் ஈன்று நன்றி பயக்கும்’ என்பதை ‘ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும்’ என்று பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.  எப்படி இவ்வாறு சொல்கிறார் என்று விளங்கவில்லை.

மற்ற உரையாசிரியகளுக்கும் இவ் விளக்கம் பொருள் விளங்கவில்லை என்பது மற்ற உரைகளைப் படிக்கும் போது தெரிகிறது. இம்மை, மறுமை என்பதை அவராகவே சேர்த்திருக்கவேண்டும், அதுபோல ‘நீதி’ என்பதும் அவரது கற்பனையாகத் தெரிகிறது.

ஒருவர் சொல்லும் சொற்கள் பண்புநிலையிலிருந்து நீங்காமல், அச்சொற்களின் பொருள்களினால், நன்மைகளைத் தருவதாக இருந்தால், அவை அவருக்கு மேன்மை தரும் நன்மைகளைச் செய்துவிடும் என்கிறது இக்குறள். இன்சொற்கள், அதுவும் பிறர் பயனுறும் வகைத்தான சொற்கள், பயனுற்றவர்கள், அடைந்த பயனின் நன்றிக்கடனாக சொல்பவருக்கு நன்மையும் பெருமையும் செய்வார்கள். இனியசொற்களால், சொல்பவர், கேட்பவர் என இருவருக்குமே நன்மையும், மேன்மையும்.

இன்றெனது குறள்:
நற்பயனை நல்குகின்ற பண்பகலா இன்சொற்கள்
பொற்புயர்வு நன்மை தரும்
(பொற்புயர்வு – ஒளிபொருந்திய மேன்மை)

1 கருத்து:

  1. என்னுடைய சிற்றறிவில் கொடுத்துள்ள (சற்றே வேறுபட்ட) விளக்கம் இங்கே:
    http://ilayaraja.forumms.net/t118p105-191#11667
    :-)

    பதிலளிநீக்கு

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...