மார்ச் 31, 2013

குறளின் குரல் - 353


31st March 2013

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.
                         (குறள் 344: துறவு அதிகாரம்)

iyalbAgum nOnbiRkk(u) onRu inmai uDaimai
mayalAgum maRRum peyarththu

Transliteration:
iyalbAgum – it is natural
nOnbiRkk(u) – for penance
onRu inmai – to not have attachment in anything
uDaimai – attachments
mayalAgum – is be drawn into the delusion or madness of
maRRum – and so on  (to be read along with uDamai)
peyarththu – to have (attachments – uDamai)

It is natural for ascetics to not have anything as their own belonging. To have attachment in material comforts give delusion to the pursuit towards higher knowledge and will swerve a pursuant ascetic away from the path. If there is any attachement towards even a single materialistic comfort for an ascetic that slowly develops in to multiple interests and eventually completely takes them away from their penitent pursuit.

There is a short story that we have to recall here.  An ascetic was given a place to stay by a concerned individual to help him pursue his path without any external interference. The place had some the menance of rats; a cat was brought in to take care of the menace. Soon to feed cat milk, a cow was brought in; subsequently a milkman and his family. Soon the hermitage was thronging with more people, for various reasons all stemming from the  single reason of menance of rats; the ascetic was diverted from his intended pursuit to manage a big establishment, all because of a little giving in to the comfort of a place for him to stay. The underlying message is the essence and what exactly this verse alludes to.

It is in the nature of ascetics to be devoid of attachment
Desire to possess even a little is delusion of sacrament

தமிழிலே:
இயல்பாகும் - மிகவும் சாதாரணமாக நடக்கின்றவொன்று
நோன்பிற்கு - துறவுக்கும் தவத்திற்கும்
ஒன்று இன்மை - எவ்விதப்பற்றும் இல்லாமலிருத்தல்
உடைமை - ஆனால் பற்று
மயலாகும் - மயக்கமாகும் (அறிவு மயக்கம்)
மற்றும் - பிறவுடன்
பெயர்த்து - இருப்பது (எது? பற்று!)

தமக்கென ஒர் உடமையும் இல்லாமலிருத்தல் துறவிகளுக்கு இயல்பான ஒன்றே! உடமைகளில் பற்று கொள்வதும்,  கொள்ள நினைப்பதும் அவர்களுக்கு அறிவு மயக்கத்தைத் தந்து துறவிலிருந்து நீக்கிவிடும். எல்லாப்பொருள்களிலும் பற்றினை விட்டுவிட்டு துறவு மேற்கொண்டவர்களுக்கு ஏதேனும் ஒன்றின் மேல் பற்று ஏற்பட, அதுவே அறிவு மயக்கத்தைத் தந்து பலவாகப் பெருகி துறவு நிலையிலிருந்து விலக்கிவிடும்.

எல்லோரும் அறிந்த குட்டிக்கதையொன்றை இங்கே நினவுகூறுவது நல்லது, துறந்த ஒருவருக்கு ஒருவர் தங்க இடம் கொடுத்தார். அவ்விடத்தில் எலித்தொல்லைத் தாங்கமுடியாமல் போக, அதற்காகப் பூனை வளர்த்தாராம் துறவி. அப்பூனையின் பால் தேவைக்காக, ஒரு மாட்டையும், அதை பராமரிக்க ஒரு கோனாரையும், அவன் காரணமாக, அவனுடைய குடும்பமும் குழந்தைகளும் வந்து சேர, இவ்வாறு தனித்திருந்த துறவிக்கு, ஒன்றன் பின் ஒன்றாக தேவைகளும், உறவுகளும் ஏற்பட்டதாகக் கதை. அதனுடைய சுருக்கமே இக்குறள்.

இன்றெனது குறள்:
உடைமையில் பற்றின்மை நோற்போர்க் கியல்பு
உடைத்தால் மயங்கும் துறவு

uDaimaiyil paRRinmai nORppOrk kiyalbu
uDaiththAl mayangum thuRavu

மார்ச் 30, 2013

குறளின் குரல் - 352


30th March 2013

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
                         (குறள் 343: துறவு அதிகாரம்)

Transliteration:
aDalveNDum aindhan pulaththai viDalvEnDum
vENdiya vellAm orungu

aDal veNDum – must quell
aindhan pulaththai – the desires of all five senses
viDalvEnDum – must quit the attachment
vENdiyavellAm  - in all these things that have been created for enjoyment
orungu – all at once

Without saying why and for what, vaLLuvar says that one must quell the desires of five senses and also must relinquish what would be nice to have in life to relish, all at once. It is not even clear as to whom it is addressed to. Since it is under the chapte of Renunciation, we must surmise that this is meant for people of ascetic pursuit. In Parimelazhagar’s commentary, he says, “for those who attain heavenly abode”; thought cannot be refuted, it is possible that he has got the hint from a verse in “nAlaDiyAr”.

“Must quell the desires of five senses and relinquish
 All at once what would be nice having in life to relish”

தமிழிலே:
அடல் வேண்டும் - கொன்றொழிக்க வேண்டும்
ஐந்தன் புலத்தை - ஐந்து புலன்களால் எழும் ஆசைகளை
விடல்வேண்டும் - பற்றினை விட்டுவிட வேண்டும்
வேண்டியவெல்லாம் - நுகருதல் பொருட்டு படைக்கப்பட்ட அனைத்திலும்
ஒருங்கு - ஒன்றாக, ஒரே நேரத்தில்

எதற்கு என்று சொல்லாமல், இக்குறள் ஐம்புலன்களால் விளையும் ஆசைகளைக் கொன்று ஒழிக்கவேண்டும் என்றும், நுகருதல் பொருட்டு படைக்கப்பட்ட அனைத்தும் வேண்டுவனவாயிருப்பினும் அவற்றின் மீது பற்றினையும் ஒருங்கே விட்டுவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர். இது துறவு நெறி மேல் செல்பவர்களுக்காகவே கூறப்பட்டதாகக் கருதவேண்டும். பரிமேலழகர் உரை “வீடு எய்துவாருக்கு” என்கிறது. மறுப்பதற்கு இல்லையென்றாலும், அவர் கீழ்காணும் நாலடியாரின் பாடலையொட்டி பொருள் செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. அப்பாடலானது:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.

இன்றெனது குறள்:
கட்டுறுத்தி ஐம்புலத்து ஆசைகளை, வேண்டியவும்
விட்டொழித்துச் செய்தல் துறவு

kaTTuRuththi eyembulaththu AsaigaLai, vENDiyavum
viTTOzhiththuch seydhal thuRavu.

மார்ச் 29, 2013

குறளின் குரல் - 351


29th March 2013

வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.
                         (குறள் 342: துறவு அதிகாரம்)

Transliteration:
vEnDinuN DAgath thuRakka thuRandhapin
INDuiyaR pAla pala

vEnDin – if legitimate and genuine pleasures are desired,
uNDAgath – to get those
thuRakka – must forego all wordly desires.
thuRandhapin – when worldly desires are renounced
INDu – in this birth itself
iyaRpAla pala – there are many legitimate and genuine pleasures to attain.

It may seem that this verse speaks of contradicting things. If someone desires genuine pleasures to attain, they must renounce the worldly pleasures and the desires of the senses. When they do so, all genuine pleasures to be attained in this world will automatically come to them. Now the question is, what could be those genuine desires for someone who has renounced the worldly pleasures? As such they are renounced and devoid of desires of worldly pleasures and are in the pursuit of higher truth. Perhaps the genuine desire of them would be to reach the Godhead and a perpetual blissful state. Only those who are devoid of desires can attain such blissful state.

If all the genuine desires and pleasures need to be attained
One must renounce the worldly desires of senses, contained.

தமிழிலே:
வேண்டின் - முறையான இன்பங்களை விரும்பினால்
உண்டாகத் - அவைகள் வந்து சேர
துறக்க - ஆசைகளைத் துறந்து விடுக
துறந்தபின் - அப்படித் துறந்தபின்
ஈண்டு - இம்மையிலேயே (வந்துறும்)
இயற்பால பல - முறையான இன்பங்கள் பல உள்ளன

இக்குறள் முரணாகப் பேசுவதுபோல் தோன்றக்கூடியது. முறைமையான இன்பங்களை ஒருவர் வேண்டினால், அவர்கள் உலகியல் சார்ந்த, புலன்கள் சார்ந்த பற்றுகளை விட்டுவிட வேண்டும். அப்படி விட்டுவிட்டவர்களுக்கு, இவ்வுலகின் கண்ணே பெறக்கூடிய பல இன்பங்களும் வந்துறும். உலகியல் ஆசைகளை விட்டவர்களுக்கு இவ்வுலகிலேயே எய்தக்கூடியவை எவையாக இருக்கமுடியும்? அவர்களோ வேண்டுதல் வேண்டாமை இலானடி சேரும் வழியிலே இருப்பவர்கள், அவர்களுக்கு வேண்டுவது யாது? அவர்களுக்கு இன்பமும், வேண்டுவது, உயர்பொருளை அடைந்து உய்வது ஒன்றே! ஆசையற்றவர்களுக்கே அத்தகைய ஞான வெளிச்சம் கிடைக்கும், அவர்கள் வேண்டுவது அது ஒன்று மட்டும்தான்.

இன்றெனது குறள்:
துறந்தார்க்குத் துன்பம்போம் துய்த்திட இன்பம்
துறப்பீரே நீங்கிடப் பற்று

thuRandhArkkuth thunbampOm thuyththiDA inbam
thuRappIrE nIngiDap paRRu

மார்ச் 28, 2013

குறளின் குரல் - 350


35:  (Renunciation - துறவு)

[What is the true renouncing? The detachment towards wealth, the physical body and the worldly pleasures collectively, is known to be renunciation. Those who understand the impermanence of life and worldly pleasures readily understand the true meaning of it.  Renunciation is not just going away leaving family and friends, shirking wordly responsibilities, but staying like a water drop on the lotus leaf (தாமரை இலை மேல் தண்ணீர் போல). Attachment towards the material comforts and the self-importance are at the root of all evils. People of renounced path must cleanse themselves of these and help the world towards higher evolvement, which is basic purpose of renunciation]

28th March 2013

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
                         (குறள் 341: துறவு அதிகாரம்)

Transliteration:
yAdhanin yAdhanin nIngiyAn nOdhal
adhanin adhanin ilan

yAdhanin yAdhanin – towards whatever objects
nIngiyAn – one who is rid of (attachment)
nOdhal – suffering pain
adhanin adhanin – because those objects
ilan – never does he.

This verse has two phrases that imply plural meaning of what it says, as back-to-back use of the same word. “yAdhanin yAdhanin” means “whichever objects” and “adhanin adhanin” means, “all those objects”.  The verse says, in whichever objects a person loses attachment, he will never suffer pain because of those objects.

Though, there is no direct connotation to the thought of this verse, a verse from nAlaDiyAr says, all such things such as family life, youth, excessive beauty, influence, wealth and strength, are impermanent and will wither away over a period of time. Erudite, understanding this will forego their attachment towards these.

Though the verse of nAlaDiyar does not categorically say, that these aforementioned objects will yield pain, it implies impermanence of the same and hence pain to people that have had them earlier and will lose them over a period. So it must be construed to be pain because of impermanence.

“In whichever objects attachment is none for a person
 There will never be pains of suffering for any reason”

யாதனின் யாதனின் - எந்தெந்த பொருள்களிலிருந்து
நீங்கியான் - பற்றுதலை நீங்க பெறுவனோ
நோதல் - துன்பமடைதல்
அதனின் அதனின் - அவ்வப்பொருள்களால்
இலன் - அவனுக்கு இல்லை

எந்தெந்த பொருள்களில் என்பதற்கு பதிலாக “யாதனின் யாதனின்” என்று அடுக்காகவும், அதேபோல, “அதனின் அதனின்” என்று அடுக்காகவும் கூறியுள்ளார்.  எந்தெந்த பொருள்களிலிருந்து ஒருவருக்கு பற்று நீங்குகிறதோ, அப்பொருள்களால் துன்பம் ஒருவருக்கு வருவதில்லை என்பது இக்குறளால் வள்ளுவர் சொல்லும் கருத்து. இக்கருத்தை வழிமொழியாவிட்டாலும், நாலடியார் பாடலொன்று பற்றினை சான்றோர் விடுதலுக்கான காரணத்தை நிலையாமையை அவர்கள் உணர்வதால் என்று கூறுகிறது. அப்பாடல்:

இல்லம் இளமை எழில்வனப்பு மீக்கூற்றம்
செல்வம் வலிஎன் றிவையெல்லாம் - மெல்ல
நிலையாமை கண்டு நெடியார் துறப்பர்
தலையாயார் தாம்உய்யக் கொண்டு.                                                

இல்லற வாழ்வு, இளமை, மிக்க அழகு, செல்வாக்கு, செல்வம், வலிமை என்று கூறப்படும் இவையெல்லாம் நாளடைவில் நிலையில்லாமல் போதலை அறிந்து, சான்றோர்கள் தாம் கடைத்தேறும் வழியை மேற்கொண்டு காலம் தாழ்த்தாது இருவகைப் பற்றையும் துறப்பர்.  இப்பாடல் மேற்கண்டவற்றால் துன்பம் என்று சொல்லவில்லை. ஆனாலும், அந்த நிலையாமையே துன்பத்தைத் தருவதாம், அவற்றை பெற்று இழந்தவர்க்கு என்பதால், நிலையாமை காரணமாக வந்த துன்பம் என்று கொள்ளவேண்டும்.

இன்றெனது குறள்:
எவ்வெவற்றில் பற்றொ ருவரிடம் நீங்குமோ
அவ்வவற்றால் துன்பமேதும் இல்

evvevaRRil paRRo ruvariDam nIngumO
avvavaRRAl thunbamEdhum il

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...