மார்ச் 30, 2013

குறளின் குரல் - 352


30th March 2013

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு.
                         (குறள் 343: துறவு அதிகாரம்)

Transliteration:
aDalveNDum aindhan pulaththai viDalvEnDum
vENdiya vellAm orungu

aDal veNDum – must quell
aindhan pulaththai – the desires of all five senses
viDalvEnDum – must quit the attachment
vENdiyavellAm  - in all these things that have been created for enjoyment
orungu – all at once

Without saying why and for what, vaLLuvar says that one must quell the desires of five senses and also must relinquish what would be nice to have in life to relish, all at once. It is not even clear as to whom it is addressed to. Since it is under the chapte of Renunciation, we must surmise that this is meant for people of ascetic pursuit. In Parimelazhagar’s commentary, he says, “for those who attain heavenly abode”; thought cannot be refuted, it is possible that he has got the hint from a verse in “nAlaDiyAr”.

“Must quell the desires of five senses and relinquish
 All at once what would be nice having in life to relish”

தமிழிலே:
அடல் வேண்டும் - கொன்றொழிக்க வேண்டும்
ஐந்தன் புலத்தை - ஐந்து புலன்களால் எழும் ஆசைகளை
விடல்வேண்டும் - பற்றினை விட்டுவிட வேண்டும்
வேண்டியவெல்லாம் - நுகருதல் பொருட்டு படைக்கப்பட்ட அனைத்திலும்
ஒருங்கு - ஒன்றாக, ஒரே நேரத்தில்

எதற்கு என்று சொல்லாமல், இக்குறள் ஐம்புலன்களால் விளையும் ஆசைகளைக் கொன்று ஒழிக்கவேண்டும் என்றும், நுகருதல் பொருட்டு படைக்கப்பட்ட அனைத்தும் வேண்டுவனவாயிருப்பினும் அவற்றின் மீது பற்றினையும் ஒருங்கே விட்டுவிட வேண்டும் என்கிறார் வள்ளுவர். இது துறவு நெறி மேல் செல்பவர்களுக்காகவே கூறப்பட்டதாகக் கருதவேண்டும். பரிமேலழகர் உரை “வீடு எய்துவாருக்கு” என்கிறது. மறுப்பதற்கு இல்லையென்றாலும், அவர் கீழ்காணும் நாலடியாரின் பாடலையொட்டி பொருள் செய்திருக்கலாம் என்று கருத இடமுண்டு. அப்பாடலானது:

மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக் - கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்.

இன்றெனது குறள்:
கட்டுறுத்தி ஐம்புலத்து ஆசைகளை, வேண்டியவும்
விட்டொழித்துச் செய்தல் துறவு

kaTTuRuththi eyembulaththu AsaigaLai, vENDiyavum
viTTOzhiththuch seydhal thuRavu.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...