ஜூலை 25, 2012

குறளின் குரல் - 105

25th  July, 2012

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
                       (குறள் 95:  இனியவை கூறல் அதிகாரம்)

Transliteration:
paNivudayan insolan Adhal oruvaRku
aNiyalla matRu piRa

paNivudayan –humble
insolan – and a person of sweet words
Adhal  - being so,
oruvaRku – for a person
aNi – is like a precious jewel
alla - Not
matRu piRa – other things

Humility and sweet words are the desirable attributes that are the best jewels for a person. Other attributes are not so. The tone of the verse says that these two attributes have all encompassing goodness in them. Humility born out ignorance is due to inferiority complex. Sweet words without humility are fake decorations which when layers are peeled are revealed. They are for personal gains and can not be likened to the best jewels.

In a later chapter of “Self-Control” vaLLuvar will say enough about Humility as an important attribute. The three verses beginning with “ adakkam amararuL uykkum”, “ellArkkum nandRAm paNidhal” and “yAkAvArAyinum nAkAkka” stress the importance of humility.  Humility is a virtue attained by the control of five senses. It is a desirable attribute in everyone. People of humility are bound to have the control of tongue and will be of sweet words for everyone.  That attribute can keep them one among the heavenly beings.  

Though seemingly simple statement this verse has a lot of inherent qualities stressed and require deeper study and understanding.

Humility and sweet words are like precious jewel
To one; other superficial façade compare next to nil

தமிழிலே:
பணிவுடையன் – அடக்கமுடமையாகிய பணிவு என்னும் பண்பையும்
இன்சொலன் – இனிய பயந்தரும் சொற்களை மட்டுமே யாரிடத்திலும் சொல்பவர்களாயும்
ஆதல் – ஆக இருத்தல்
ஒருவற்கு – ஒரு மனிதருக்கு
அணி – பூணுகின்ற அணிகலன், நகையெனலாம், அவருக்குள்ள நிறைவான செல்வம்
அல்ல - இல்லை
மற்றுப் பிற – மற்ற வெளிப்பூச்சான பகட்டைக்காட்டும் பண்புபோலத் தோன்றும் பொய்கள்

அடக்கமுடமையும், இனிய சொற்களை மட்டும் பேசுபவராகவும் இருத்தலே ஒருவருக்கு அணியும் நகைகளைப் போன்ற பெருமை தருவனவாம். மற்ற வெளிப் பகட்டான பண்பைப்போல் தோன்றும் பொய்கள் எல்லாம் நகைகள் போல இருந்தாலும் போலிகளே.

“அடக்கம் அமரருள் உய்க்கும்” என்றும், ‘எல்லார்க்கும் நன்றாம் பணிதல்” என்றும், “யாகாவாராயினும் நாகாக்க” என்றும் பின்னால் வரப்போகிற “அடக்கமுடமை” அதிகாரத்தில் கூறுவார் வள்ளுவர்.  பணிவுடமை என்பது புலனடகத்தின் காரணமாகப் பிறக்கும் ஒரு பண்பு.  பணிவுடமை எல்லோர்க்கும் இருக்கவேண்டிய ஒன்று. பண்புடையராக இருப்பவர் நாவடக்கமும் உள்ளவராகத்தான் இருத்தல் வேண்டும். அதுமட்டுமல்ல அவர்கள் வாய்மொழியெல்லாம் இனியவையாகத்தான் இருக்கமுடியும். அத்தகையோரின் பணிவென்னும் பண்பே அவர்களை தேவருள் ஒருவராகக் கருதச்செய்யும்.

இக்குறள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய கருத்தை எளிமையாகக் கூறினாலும், இக்குறள் நிறைய சார்பான பண்புகளை சிந்திக்க வைக்கிறது. ஆழ்ந்த படிக்க, சிந்திக்கவேண்டியவற்றைப் பற்றி கூறுகிறது.

இன்றெனது குறள்:

இன்சொல் பணிவுடமை யார்க்குமிவை நல்லணிகள்
என்பன, மற்றவை இல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...