அக்டோபர் 24, 2014

குறளின் குரல் - 918

24th Oct 2014

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பில் மகளிர்
நயந்தூக்கி நள்ளா விடல்
                  (குறள் 912: வரைவில் மகளிர் அதிகாரம்)

பயன்தூக்கிப் - ஒருவரால் பெறக்கூடிய ஆதாயத்தை கணக்கிட்டு
பண்புரைக்கும் - அவர் இன்னார் என்று உயர்த்தியோ அல்லது தாழ்வாகவோ மதிப்பிடுதல்
பண்பில் மகளிர் - பண்பு இல்லாத பெண்கள் (வரைவில் மகளிர்)
நயந்தூக்கி - அவர்களுடைய ஒழுக்கத்தை ஆராய்ந்து
நள்ளா விடல் - அவரை விரும்பாமல் ஒழிக

ஆத்திச்சூடியில் ஔவையார், “மைவிழியார் மனை அகல்" என்று சொல்லியிருப்பார். பரத்தையர் வீடு சேர்வதும், அங்கே இருப்பதும் தவறென்று ஒருவர் உணர்ந்து, அம்மனை நீங்கவேண்டும். ஒருவரால் பெறக்கூடிய பயனை மட்டும் கணக்கிட்டு, அவரை உயர்வாகவோ, தாழ்வாகவோ பேசக்கூடிய இருநாக்கு மங்கையர் பண்பில்லாத பரத்தையர். அவர்கள் ஒழுக்கத்தை சீர்தூக்கி, அது சுயநலமிக்க உறவு என்பதை உணர்ந்து அத்தகைய பெண்டிரை விரும்பாது ஒழியவேண்டும் என்கிறது இக்குறள்.

Transliteration:

payanthUkki paNburaikkum paNbil magaLir
nayanthUkki naLLA viDal

payanthUkki – Assessing the benefits likely to get from the person
paNburaikkum – to speak highly or lowly of a person
paNbil magaLir - characterless women
nayanthUkki – assessing their character
naLLA viDal – avoid their company

Leave the whorehouse, the house of ill”, says AuvayyaAr in her work of virtue “AthichchUDi”. Realizing it is lack of virtue and a grave mistake to be in the house of prostitution, one must earnestly attempt to leave. Women of such house, that are twin-tongued, would assess the benefits and the fortune of someone and would speak highly or lowly of their clients. Realizing the selfish nature of such physical relationships, one shall apply caution and leave them, says this verse.

Leave the company of women that weigh the gain
and speak accordingly, lowly or highly, to avoid pain”

இன்றெனது குறள்:

பயனளந்து பேசுகின்ற பாவையரை பாராய்
வயப்படாது விட்டு விலகு

payanaLandu pEsuginRa pAvaiyarai pArAi

vayappaDAdhu viTTu vilagu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...