ஜூலை 28, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 48

साम्राज्यमङ्गलविधौ मकरध्वजस्य
लोलालकालिकृततोरणमाल्यशोभे
कामेश्वरि प्रचलदुत्पलवैजयन्ती-
चातुर्यमेति तव चञ्चलदृष्टिपातः 48

ஸாம்ராஜ்ய மங்கல விதௌ மகரத்வஜஸ்ய
லோலால காலிக்ருத தோரணமால்ய ஶோபே |
காமேஶ்வரி ப்ரசலதுத்பல வைஜயந்தீ-
சாதுர்யமேதி தவ சஞ்சல த்ருஷ்டிபாத: ||48|

காமேசுவரியே! ஆடும் அளக வரிசையாம் தோரண மாலைகளால் அழகு கூடிய, மன்மதனின் அரசு மகுடாபிடேக மங்கள வைபவத்தில் உன்னுடைய அசையும் கண்கள், நீலோத்பல மாலைகளின் அழகை அடைகிறது!

ஆடும் அளக அணிதோ ரணமாலை ஆரியோடு
கூடும் அனங்கன் குடியின் முடிசூட்டிக் கொள்ளுமந்த
ஈடில் சுபத்தில் இனிதே அசையுன் இருவிழியில்
ஊடும் கரும்பூ உருமாலை, காமாட்சீ, ஒண்ணழகே!

அளகம் - கூந்தல்; அணி - வரிசை; ஆரி, உரு -அழகு; சுபம்-மங்கலம்; அனங்கன்-மன்மதன்; கரும்பூ - நீலோற்பல மலர்; ஒண் - மேன்மை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...