ஜூன் 26, 2012

குறளின் குரல் - 76


26th June, 2012

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
                      (குறள் 66: மக்கட்பேறு அதிகாரம்)

Transliteration:
Kuzhal inidhu yAzhinidhu enbatham makkaL
Mazhalaich chol kELAdhavar

Kuzhal inidhu – Music of flute is sweet
yAzhinidhu  - Music of lute is sweeter
enba – music enthusiasts or self proclaimed connoiseurs
tham makkaL – their won children’s
Mazhalaich chol – sweet babble of their little children
kELAdhavar – when they don’t care to hear or don’t have the progenial gift

Here is another verse which is often cited in speeches as well as in written articles. The children’s babble or baby talk is sweeter than the music of flute and lute to parents, is the gist of this verse.  Great orators’s speech of great literary values and the expert musical display by exponents of music pale compare to a child’s babble when it comes to the listening pleasure to parents.

Little babies try out with their voice, the sounds, for nearly a year before saying their first word. The combination of unique sounds and patterns of their growing up environment has definitive influence in the way they develop their speech and musical cognition.  Not sure if literary tradition and works of other languages have celebrated the baby’s babble as much as Tamil literature. Many of them from Sangam to contemporary literary works have mentioned this comparison of babble to music produced by lute and the flute.  
Kamban has said, the sweetness of flute and lute, have been given to them, by the sweetness of baby’s babble. He also says that the musical instruments like yAzh(lute), kuzhal(flute) and vINa (Another form of lute) will be shamed before  a child’s babble. vaLLuvar himself has said in a different place, it is sweeter than nectar, which has been echoed in another tamil work called, “iniyavai nArppadhu”.

Another subtle idea conveyed through this verse is this: simple natural pleasures of life are more valuable than created pleasures of the world. Inward looking reveals great manythings than outward looking is another thought conveyed, at least as I see it.

Since there are plenty of musical instruments of different kinds these days, I have tried to generalize the thought in the new verse and also tried to keep the old thought in a different verse.

“Flute and lute are sweet only to ears of people,
  not blessed with sweetness of progenial babble”

குழல்இனிது – குழலின் இசை இனிமையானது
யாழ்இனிது – யாழின் இசை இனிமையானது
என்ப – என்று இசை விரும்பிகள் அவரவர் விருப்பினை உரத்துச் சொல்லவும், மறுத்துச் சொல்லவும் செய்வர்
தம் மக்கள் - தம்முடைய குழந்தைகளின்
மழலைச் சொல் – இனிய மழலைப் பேச்சினை (முன்னர் கூறியதுபோல், அமுதை விடவும்)
கேளாதவர் – கேட்காதவர்கள், அல்லது அப்பேற்றினை பெறாதவர்கள்

இதுவும் பலராலும் மேற்கோளாகப் பேசப்படும் ஒரு குறள்.  குழவியரின் மழலையமுதம் கேட்கும் பேற்றினைப் பெற்றவர்களுக்கு, மற்ற இசைக்கருவிகளால் இசைக்கப்பெரும் மிக இனிமையான இசையும் கூட பெரிதெனத் தெரியாது. மிகச்சிறந்த பேச்சாளார்களின் இலக்கணமும், இலக்கியமுமடங்கிய சொற்பொழிவுகளிலோ, இசை விற்பன்னர்களின் இசைநுணுக்கங்கள் நிறைந்த இசைக்கச்சேரிகளிலோ இல்லாத இன்பம், குழந்தைகள் பேசும் மழலை மொழியைக் கேட்போருக்கு உண்டு.

கம்பர் ஊர்தேடு படலத்தில் சொல்வது: “குழலும் வீணையும் யாழுமென்றினையன குழைய மழலை மென்மொழி” என்று. அவரே உண்டாட்டுப் படலத்தில், “யாழ்க்கும் மின்குழற்கும் இன்பம் அளித்தன் இவையாம் என்னக் கேட்குமென் மழலை” என்பார். முதலில் குழல், வீணை, யாழ்போன்ற இசைக்கருவிகளி தோய்ந்த இவையெல்லாம் குழையும்படி, வெட்கும்படி இருக்குமாம் மழலை மொழி அதுவும் மென் மொழியென என்கிறார். பின்னர் யாழ், மின்னுகின்ற குழற்குமே இனிமையை தந்ததே குழவியரின் மழலை மென் மொழி என்கிறார். 

புறநானூற்றிலும் தந்தையர்க்கு, புதல்வர்தம் மழலை யாழினும் இனிது என்று காணப்பெறுகிறது. இனியவை நாற்பது பாடல் ஒன்றிலும் “குழவி தளர்நடை காண்டல் இனிதே அவர்மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே”

குறள்விளக்கமாகக் குறள் எழுதும்போது, இன்று இசையுலகில் பல்வேறு துளை, மற்றும் கம்பிக்கருவிகள் உள்ளதால், பொதுவாகவும் எழுதவேண்டுமென்றதால், வள்ளுவரை ஒட்டியும், இன்றைய இசைத்துறை இயல்பை ஒட்டியும் எழுதியுள்ளேன்.

இன்றெனது குறள்(கள்):
தன்மக்கள் சொல்மதலை கேளாரே யாழ்குழலின்
இன்னிசையைக் கொண்டாடு வர்

தன்மக்கள் சொல்மதலை கேளார் இசைக்கருவி
தன்னிசையைக் கொண்டாடு வர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...