ஏப்ரல் 25, 2014

குறளின் குரல் - 736

25th Apr 2014

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக் 
கற்ற செலச்சொல்லா தார்.
                (குறள் 730: அவை அஞ்சாமை அதிகாரம்)

உளரெனினும் - உயிரோடுதான் இருக்கிறார் என்றாலும்
இல்லாரொடு ஒப்பர் - உயிரற்ற பிணமாகி உயிரோட்டம் இல்லாதவரோடு ஒப்பர்
களன்அஞ்சிக் - கற்றவர் நிறைந்திருக்கும் அவைக்களம் அஞ்சி
கற்ற செலச் - தாம் கற்றதை அங்குளோர் உள்ளம் கொள அல்லது பதியுமாறு
சொல்லாதார் - சொல்ல முடியாதவர்

முன்பு, சொல்வன்மை அதிகாரத்தில், இக்குறள் போல் அதி காரமாக இல்லாது, சிறிது உறைப்புக் குறைவாகவே, தாம் கற்றதை நன்கு விரிவாக உரைக்கத் தெரியாதவர், மணமில்லா பூங்கொத்துக்குச் சமம் என்றார் வள்ளுவர் கீழ்வரும் குறளால்.

“இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது 
உணர விரித்துரையா தார்”

இவ்வதிகாரத்தில், அவைக்கு அஞ்சி, தாம் கற்றதை அவையில் உள்ளவர்களின் உள்ளத்தில் பதியுமாறு சொல்லத் தெரியாத கற்றவன், உயிரோடு இருந்தானாயினும், உயிரற்ற பிணத்துக்கு ஒப்பாகவே கருதப்படுவான் என்று கல்லாரினும் இழிந்து பிணம் என்று, கூறிவிட்டார் வள்ளுவர். நம்மவரே ஆயினும், பிணமானது, அழுகி, துர்வாடை வீசுவதால் அது எரியுண்ணவோ, அல்லது புதைக்கவோ தக்கது. அத்தகையதே அவைக்கஞ்சுவோன் கல்வியும் என்பதும் உணர்த்தப்படுகிறது.

Transliteration:

uLareninum illAroDu oppar kaLananjik
kaRRa chelachchollA dhAr

uLareninum – Though in form is alive  
illAroDu oppar – compare only to corpse 
kaLan anjik – fearful of scholar’s assembly
kaRRa chela – to explain his learning comprehensibly
chchollA dhAr – cannot speak

In an earlier chapter of “articulation” vaLLuvar has said a similar thought in a milder expression, that a person that cannot speak despite his learning is like a fragrance-less flower bunch,

In this chapter, he says though learned, a person that cannot speak comprehensibly in the assembly of scholars, out of fear, compares to corpse, though in form is construed to be alive. There can none be so demeaning to such a person. A corpse rots and starts spreading bad odor and hence will be either buried or burnt. Perhaps vaLLuvar suggests the knowledge of such person is only worthy of that.

Though seen as alive, a learned, fearful to speak comprehensibly
Only compares to corpse to in the midst of scholars assembly”

இன்றெனது குறள்:

கற்றதை நல்லவையோர் கொள்ளச் சொலாருயிர்
உற்றும் பிணத்துக்கே ஒப்பு

kaRRadhai nallavaiyOr koLLach cholAruyir

uRRum piNaththukkE oppu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...