நவம்பர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 69

करीन्द्राय द्रुह्यत्यलसगतिलीलासु विमलैः
पयोजैर्मात्सर्यं प्रकटयति कामं कलयते ।
पदाम्भोजद्वन्द्वं तव तदपि कामाक्षि हृदयं
मुनीनां शान्तानां कथमनिशमस्मै स्पृहयते ॥ ६९॥

கரீந்த்³ராய த்³ருஹ்யத்யலஸ க³தி லீலாஸு விமலை:
பயோஜைர் மாத்ஸர்யம் ப்ரகடயதி காமம் கலயதே ।
பதா³ம்போ⁴ஜ த்³வந்த்³வம் தவ தத³பி காமாக்ஷி ஹ்ருʼத³யம்
முனீநாம் ஶாந்தாநாம் கத²மனிஶமஸ்மை ஸ்ப்ருʼஹயதே ॥ 69॥

காமாக்ஷி! உன்னுடைய தாமரைப் பதங்களிரண்டும், மென்னடை லீலையில் சிறந்த யானையையும் வஞ்சிக்கிறது.மாசற்ற தாமரையிடத்தே பொறாமை கொள்ளுகிறது. ஆசையைத் தருகின்றன. ஆயின் வஞ்சிப்பதும், பொறாமையும், ஆசையும் இல்லாத அமைதியான முனிவர்களின் இதயம் இவற்றில் ஈடுபாடு கொள்கிறதே!

விஞ்சியே மென்னடை வித்தையில் மேலாம் வியன்கரியை
வஞ்சிக்கும்; ஆசற்ற வாரிசத் தின்மேல் மறலியுறும்
நெஞ்சில் தருமாசை நின்மரைத் தாளீரில் நின்றமைதி
கொஞ்சுத வத்தோர்க் குளமொன்றி, காமாட்சீ கூடிடுதே!


மறலி-பொறாமை; வியன்-சிறப்பு; வஞ்சிக்கும்-துரோகம் செய்யும்; ஆசற்ற-மாசற்ற, குற்றமில்லாத; வாரிசம்-தாமரை; மரை-தாமரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...