ஏப்ரல் 28, 2016

மூகபஞ்சசதீ - ஆர்யா சதகம் - 58

पञ्चदशवर्णरूपं कञ्चन काञ्चीविहारधौरेयम्
पञ्चशरीयं शम्भोर्वञ्चनवैदग्ध्यमूलमवलम्बे 58

பஞ்சதச வர்ணரூபம் கஞ்சன காஞ்சீ விஹார தௌரேயம் |
பஞ்ச சரீயம் சம்போ: வஞ்சன வைதக்த்ய மூலம் அவலம்பே ||58||



சிவபெருமானை மோகம் கொள்ள வைக்கும் மன்மதனின் திறனுக்கு மூலமாக, காரணமாக இருக்கும் தேவதையை (காமரூபிணியான உருவம்), காஞ்சீபுரியில் விளையாடி லீலைகள் புரிவதில் முன்னிற்பதை, மூவைந்து எழுத்துக்களாலான மூன்று பிரிவுகளாம் வாக்பவ கூடம் (5 எழுத்துக்கள்), மத்ய/காமராஜ கூடம் (6 எழுத்துக்கள்), சக்தி கூடம் (4 எழுத்துக்கள்) என்றிவற்றாலகிய மந்திர வடிவுமான ஒன்றைச் சரணமடைகின்றேன். (ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூபமுக பங்கஜா; கண்டாத: கடி பர்யந்த மத்யகூட ஸ்வரூபிணி; சக்திகூட ஏகதாபன்ன கட்யதோபாக தாரிணீ)

மூவைந் தெழுத்தில் முளைத்தெழு மந்திர மூவுருவை
ஆவலாய் காஞ்சியில் ஆடவே முன்னின்ற அற்புதத்தை
தேவனாம் சம்புவையே தெற்றும் மதனின் திறமைக்கு
மூவா முதலென மூண்டவள் முன்சரண் முற்றிலுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...