धृतच्छायं नित्यं सरसिरुहमैत्रीपरिचितं
निधानं दीप्तीनां निखिलजगतां बोधजनकम् ।
मुमुक्षूणां मार्गप्रथनपटु कामाक्षि पदवीं
पदं ते पातङ्गीं परिकलयते पर्वतसुते ॥ ३९॥
த்⁴ருதச்சா²யம் நித்யம்
ஸரஸிருஹமைத்ரீபரிசிதம்
நிதா⁴னம் தீ³ப்தீநாம்
நிகி²லஜக³தாம் போ³த⁴ஜனகம்
।
முமுக்ஷூணாம்
மார்க³ப்ரத²னபடு காமாக்ஷி
பத³வீம்
பத³ம் தே பாதங்கீ³ம் பரிகலயதே
பர்வதஸுதே ॥ 39॥
மலைமகளே, காமாக்ஷீ! எப்போதும் சூரியனின் மனையாளான சாயையோடு கூடியதாயும்,
தாமரைகளின் நட்பை அடைந்ததாயும், ஒளிக்குக் காரணமாயும், உலகனைத்திற்கும் ஞானத்தைத் தருவதாகவும்,
முத்தியை நாடுவோர்க்கு தக்க வழியைக் காட்டுவதில் திறமையுள்ள உன் திருவடிகள் சூரியனின்
தன்மை பெற்றதாக இருக்கின்றன.
மலைமகள்
காமாட்சீ! மாலியின் சாயை மணத்ததாய்நீர்
சலசத்தின்
நட்புற்ற தாயொளிக் கேதுவாய், தாலமிதில்
வலவ றிவளிக்க
வல்லதாய், முத்தி வழிவிழைந்தால்
நலவழி
காட்டிட ஞாயிறு போன்றாம்நின் நற்பதமே!
மாலி-சூரியன்; மணத்தல்-கூடுதல்; நீர்சலசம்-தாமரை; ஏது-காரணம்; தாலம்-உலகம்;
வலவறிவு-வலிய ஞானம்;