அக்டோபர் 27, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 38

दिनारम्भः सम्पन्नलिनविपिनानामभिनवो
विकासो वासन्तः सुकविपिकलोकस्य नियतः
प्रदोषः कामाक्षि प्रकटपरमज्ञानशशिन-
श्चकास्ति त्वत्पादस्मरणमहिमा शैलतनये ३८॥

தி³னாரம்ப: ஸம்பந்-நளின விபினாநாமபினவோ
விகாஸோ வாஸந்த: ஸுகவி பிகலோகஸ்ய நியத:
ப்ரதோ³ஷ: காமாக்ஷி ப்ரகடபரமஜ்ஞான ஶஶின-
்சகாஸ்தி த்வத்பாத³ஸ்மரண மஹிமா ைலதனயே 38

மலைமகளே! காமாக்ஷி! உன் பாதங்களை தியானிப்பதன் பெருமை, செல்வாமாகும் தாமரைக்காடுகளுக்கு புதிய வைகறையாகவும், நற்கவிகளாம் குயிற்கூட்டத்துக்கு நிலைத்த வசந்தகால தோற்றமாகவும், நிறையறிவாம் சந்திரனுக்கு மாலை நேரமாகவும் விளங்குகிறது

உனது கழல்களை உள்கும் பெருமை, உடைமைமிக்க
வனச வனத்திற்கு வைகறை யென்றாகும்; வாக்கியராம்
வனப்பிரி யர்க்கு வசந்தம்போ லாம்நிறை வாசனம
வனற்குமா லையாய் மலைமகள் காமாட்சீ மன்னிடுதே!

உள்கு-தியானித்தல்; உடைமை-செல்வம்; வனசம்-தாமரை; வைகறை-விடியல்; வாக்கியர்-கவிஞர்; வனப்பிரியர்-குயிற்கூட்டம்; வாசனம்-ஞானம்; ம - சந்திரன்; வனன் - அழகு (ம வனன் - சந்திர அழகர்); மன்னுதல்- நிலைபெறுதல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...