செப்டம்பர் 04, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 86

कैवल्य दिव्य मणिरोहण पर्वतेभ्यः
कारुण्य निर्झरपयः कृत मञ्जनेभ्यः ।
कामाक्षि किङ्करित शङ्कर मानसेभ्य-
स्तेभ्यो नमो‌‌ऽस्तु तव वीक्षण विभ्रमेभ्यः ||86||

கைவல்ய திவ்ய மணிரோஹண பர்வதேப்ய:
காருண்ய நிர்ஜரபய: க்ருத மஞ்ஜனேப்ய: |
காமாக்ஷி கிங்கரித ஶங்கர மானஸேப்ய-
ஸ்தேப்யோ நமோ‌ऽஸ்து தவ வீக்ஷண விப்ரமேப்ய: ||86||

காமாக்ஷீ! முத்தியாம் உயர்ந்த இரத்தினங்கள் விளைகின்ற மலையும், கருணையென்னும் மலையருவியில் மூழ்கி நீராடியவையும், சங்கரனாரின் மனத்தை தன்பால் இழுக்கக்கூடியதுமான உன்பார்வையின் வீச்சுக்கெந்தன் வணக்கங்களிருக்கட்டும்!

சிவமாம் உயர்மணி சிந்தும் மலையும் சிறக்குமன்பு
உவக்கும்நீர் வீழ்ச்சியில் ஊடா டுவதும் உமேசனவர்
சுவாந்தம தைதன்பால் சுண்டி இழுப்பதும் சோதியாமெம்
பவமறு காமாட்சீ பார்வைக் கடையை பணிந்தனமே!

சிவம்-முக்தி; உயர்மணி-இரத்தினங்கள்; அன்பு-கருணை; சுவாந்தம்-மனம்;

செப்டம்பர் 03, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 85

दर्पाङ्कुरो मकरकेतन विभ्रमाणां
निन्दाङ्कुरो विदळितोत्पल चातुरीणाम् ।
दीपाङ्कुरो भवतमिस्र कदम्बकानां
कामाक्षि पालयतु मां त्वदपाङ्गपातः ॥85॥

தர்பாங்குரோ மகரகேதன விப்ரமாணாம்
நிந்தாங்குரோ விதளிதோத்பல சாதுரீணாம் |
தீபாங்குரோ பவதமிஸ்ர கதம்பகானாம்
காமாக்ஷி பாலயது மாம் த்வதபாங்கபாத: ||85||

காமாக்ஷியே! மன்மதனின் விளையாடல்களின் அகந்தைக்கு காரணமாயதும், மலர்ந்த கருநெய்தல் பூக்களின் அழகைப் பழிப்பதும், பவத்தின் இருளுக்கு தீபச்சுடர்போல் இருப்பதுமாம் உனது கடைக்கண் பார்வையானது என்னைக் காப்பாற்றட்டும்.

உருவிலி கேளியில் உண்டா யசெருக்கின் ஓரிடையும்
விரிகரு நெய்தற்பூ விஞ்சும் அழகும் வினைபவத்தின்
இருளை விலக்கிட ஏற்றுஞ் சுடர்போல் இருக்குமுன்றன்
கருணை கடைக்கண்ணால் காமாட்சி செய்கநீ காத்தருளே!


உருவில்-மன்மதன்; கேளி-விளையாட்டு; இடை-காரணம்; விரி-மலர்தல்;

செப்டம்பர் 02, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 84

कामाक्षि नित्यमयमञ्जलिरस्तु मुक्ति-
बीजाय विभ्रममदोदयघूर्णिताय ।
कन्दर्पदर्पपुनरुद्भवसिद्धिदाय
कल्याणदाय तव देवि दृगञ्चलाय ॥84॥

காமாக்ஷி நித்யமயமஞ்ஜலிரஸ்து முக்தி-
பீஜாய விப்ரம மதோதய கூர்ணிதாய |
கந்தர்ப தர்ப புனருத்பவ ஸித்திதாய
கல்யாணதாய தவ தேவி த்ருகஞ்சலாய ||84||

தேவி காமாக்ஷி! முத்திக்கு வித்தாயதும், அழகின் அகந்தையால் சுழல்வதும், அனங்கனின் அகந்தை மீண்டும் தோன்றி நிலைபெறச் செய்வதும், மங்களத்தின் உருவாகவே இருப்பதுமாய உன் கடைக்கண்களுக்கு என்றும் இவ்வஞ்சலி இருக்கட்டும்.

அமுதின் விதையாம், அழகின் செருக்கில் அலைவதுவாம்,
அமுத னெதிரி அனங்கன் அகந்தையை ஆங்குமீண்டும்
குமிழ்த்தொ ருநிலை கொளச்செய் வதாம்தங் குமங்களமே
கமழ்கண் களுக்கென்றும் காமாட்சீ அஞ்சலி கைதொழுதே


அமுது - முத்தி; அமுதன் - சிவன்; அனங்கன் - மன்மதன்; குமிழ்த்து - கொழித்து; கமழ்-மணத்தல்;

செப்டம்பர் 01, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 83

अत्यन्तचञ्चलमकृत्रिममञ्जनं किं
झङ्कारभङ्गिरहिता किमु भृङ्गमाला ।
धूमाङ्कुरः किमु हुताशनस ङ्गहीनः
कामाक्षि नेत्ररुचि नीलिम कन्दळी ते ॥83॥

அத்யந்த சஞ்சலம க்ருத்ரிமமஞ்ஜனம் கிம்
ஜம்கார பங்கி ரஹிதா கிமு ப்ருங்கமாலா |
தூமாங்குர: கிமு ஹுதாஶன ஸங்கஹீன:
காமாக்ஷி நேத்ரருசி நீலிம கந்தளீ தே ||83||

ஹே! காமாக்ஷீ! உன் கண்களின் காந்தியான கருமை நிறமானது, மிக அலைபாய்வது! அது பிறரால் செய்யப்படாத மையோ? ரீங்காரமிடாத வண்டுகளின் வரிசையோ? நெருப்பின் தொடர்பில்லாமல் வரும் கரும்புகையின் கூட்டமோ? எதுவென்று அறியேனே!

கருமை நிறமாமுன் கண்ணதன் காந்தி கவித்தனத்து!
அரும்விழிக் குப்பிறர் ஆக்காத அஞ்சனம் ஆமதுவோ!
வருணரீங் காரமில் வண்டுகள் கூடிய மாலிகையோ!
நெருப்பற் றபுகை நிகரமா! காமாட்சீ நின்விழியே!


கவித்தனம்-சஞ்சலம்; மாலிகை-வரிசை; நிகரம் = கூட்டம்; வருணம்-சுர ஓசை

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...