செப்டம்பர் 01, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 83

अत्यन्तचञ्चलमकृत्रिममञ्जनं किं
झङ्कारभङ्गिरहिता किमु भृङ्गमाला
धूमाङ्कुरः किमु हुताशनस ङ्गहीनः
कामाक्षि नेत्ररुचि नीलिम कन्दळी ते 83

அத்யந்த சஞ்சலம க்ருத்ரிமமஞ்ஜனம் கிம்
ஜம்கார பங்கி ரஹிதா கிமு ப்ருங்கமாலா |
தூமாங்குர: கிமு ஹுதான ஸங்கஹீன:
காமாக்ஷி நேத்ரருசி நீலிம கந்தளீ தே ||83||

ஹே! காமாக்ஷீ! உன் கண்களின் காந்தியான கருமை நிறமானது, மிக அலைபாய்வது! அது பிறரால் செய்யப்படாத மையோ? ரீங்காரமிடாத வண்டுகளின் வரிசையோ? நெருப்பின் தொடர்பில்லாமல் வரும் கரும்புகையின் கூட்டமோ? எதுவென்று அறியேனே!

கருமை நிறமாமுன் கண்ணதன் காந்தி கவித்தனத்து!
அரும்விழிக் குப்பிறர் ஆக்காத அஞ்சனம் ஆமதுவோ!
வருணரீங் காரமில் வண்டுகள் கூடிய மாலிகையோ!
நெருப்பற் றபுகை நிகரமா! காமாட்சீ நின்விழியே!


கவித்தனம்-சஞ்சலம்; மாலிகை-வரிசை; நிகரம் = கூட்டம்; வருணம்-சுர ஓசை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...