ஜூலை 21, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் -102

इमं परवरप्रदं प्रकृतिपेशलं पावनं
परापरचिदाकृतिप्रकटनप्रदीपायितम्
स्तवं पठति नित्यदा मनसि भावयन्नम्बिकां
जपैरलमलं मखैरधिकदेहसंशोषणैः १०२॥

இமம் பரவரப்ரத³ம் ப்ரக்ருʼதிபேஶலம் பாவனம்
பராபரசிதா³க்ருʼதிப்ரகடனப்ரதீ³பாயிதம்
ஸ்தவம் பட²தி நித்யதா³ மனஸி பாவயன்னம்பி³காம்
ஜபைரலமலம் மகை²ரதிகதே³ஹஸம்ஶோஷணை: 102

சிறந்த வரத்தை நிறைவாய் தருவாள்; இயற்கையில் எழிலாள்; தூய்மையைத் தருவாள்; அனைத்து குணங்களும் அவையற்ற நிலைகள் விளக்கும் விளக்கவள்; இத் துதியை மனதில் தேவியை தியானிப்பவனாகப் தினமும் படிக்கவேண்டும்; அவனுக்கு உடலை வாட்டும் செபமும் வேள்வியும் வேண்டாமே

அதிசயப் பேறை அளிப்பாள்; இயற்கையில் அங்கமவள்;
அதிதூய்மை ஈவாள்; அனைத்து குணமும் அவையிலாத
கதிகள் விளக்கிடும் கையொளி; உள்ளங் கருதியிந்த
துதிப்பார்க்கு வேள்விச் சுடர்செபம் வேண்டா துவண்டுடலே!

அதிசயம்-சிறந்த; பேறு-வரம்; அங்கம்-அழகு,எழில்; கதியும்-நிலையும்; கையொளி- கைத்தீபம்; துவண்டு-வாடி, வருந்தி;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அதிசயப் பேறை அளிப்பாள்; இயற்கையில் அங்கமவள்; அதிதூய்மை ஈவாள்; அனைத்துக் குணமும் அவையிலாத கதியும் விளக்கிடும் கையொளி; உள்ளங் கருதியிதை துதிப்பார்க்கு வேள்விச் சுடர்செபம் வேண்டா துவண்டுடலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...