மே 27, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 49

क्षणात्ते कामाक्षि भ्रमरसुषमाशिक्षणगुरुः
कटाक्षव्याक्षेपो मम भवतु मोक्षाय विपदाम्
नरीनर्तु स्वैरं वचनलहरी निर्जरपुरी-
सरिद्वीचीनीचीकरणपटुरास्ये मम सदा ४९॥

க்ஷணாத்தே காமாக்ஷி! ப்ரமர ஸுஷமா ஶிக்ஷண கு³ரு:
கடாக்ஷவ்யாக்ஷேபோ மம வது மோக்ஷாய விபதா³ம்
நரீ ர்து ஸ்வைரம் வசனலஹரீ நிர்ஜரபுரீ-
ஸரித்³வீசீ நீசீகரண படுராஸ்யே மம ஸதா³ 49

காமாக்ஷி! வண்டுகளுக்கு அழகைக் கற்பிப்பதில் குருவாகும் உன் கடைக்கண் பார்வை வீச்சு, என்னுடைய துன்பங்களிலிருந்து என்னை நொடியில் விடுவிக்கட்டும்; மூப்பற்ற தேவர்களின் நகரில் ஓடும் கங்கைப் பெருக்கை கீழ்மைப்படுத்தும் திறனுள்ள உன்னுடைய சொற்பெருக்கானது, என் வாக்கில் எப்போதும் தன்னிச்சையாக நடனம் செய்யட்டும்!

பருங்கிகட் கந்தம் பயிற்றிடும், காமாட்சி, பண்ணவனுன்
அருட்கடைக் கண்பார்வை, அற்று கணத்திலென் அல்லலெலாம்
கருக்கட்டும்; மூப்பில் அமரரூர் கங்கை கடைசெயாற்றல்
பெருகுன்சொல் வெள்ளமென் பேச்சிலும் ஆடிப் பெருகதானே!

பருங்கி-பிருங்கி, வண்டு; அந்தம்-அழகு; பண்ணவன்- ஞான குரு; அற்று- இல்லாமல்; கடை-தாழ்வு; ஆடி-நடனம் செய்து; பெருக-பெருகட்டும்; தானே-சுயமாக;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


பருங்கிகட்கு அந்தம் பயிற்றிடும், காமாட்சி, பண்ணவன் உன் அருட் கடைக்கண் பார்வை, அற்று கணத்தில் என் அல்லலெலாம் கருக்கட்டும்; மூப்பு இல் அமரர் ஊர், கங்கை கடைசெய் ஆற்றல் பெருகுன் சொல்வெள்ளம் என் பேச்சிலும் ஆடிப் பெருக, தானே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...