பிப்ரவரி 01, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 33

कुर्युर्नः कुलशैलराजतनये कूलंकषं मङ्गलं
कुन्दस्पर्धनचुञ्चवस्तव शिवे मन्दस्मितप्रक्रमाः
ये कामाक्षि समस्तसाक्षिनयनं सन्तोषयन्तीश्वरं
कर्पूरप्रकरा इव प्रसृमराः पुंसामसाधारणाः ३३॥

குர்யுர் : குலஶைல ராஜதனயே! கூலம்கஷம் மங்க³லம்
குந்த³ ஸ்பர்தன சுஞ்சவஸ்தவ ஶிவே மந்த³ஸ்மித ப்ரக்ரமா:
யே காமாக்ஷி! ஸமஸ்த ஸாக்ஷி நயனம் ஸந்தோஷயந்தீஶ்வரம்
கர்பூர ப்ரகரா இவ ப்ரஸ்ருʼமரா: பும்ஸாமஸாதாரணா: 33

மலையரசன் மகளும், சிவன் மனையாளுமான, ஹே காமாக்ஷீ! ஆண்களுக்கு கிடைக்காதவையும், அனைத்திற்கும் சாட்சியாயுள்ள (சந்திர, சூரிய, அக்னியாம்) மூன்றினையும் கண்ணாகக் கொண்ட பரமசிவனை, கற்பூரப் பொடிக் குவியல்போல், மகிழ்விப்பனவும், முல்லை மலரின் பகையாகும் திறனுள்ளவையுமான உன் மென்னகை வரிசைகள் நமக்கு அளவிறந்த நலங்களை செய்யட்டும்!

மலைராசன் பெண்ணே! மகேசன் மனையே!கா மாட்சி!யாண்கட்
கிலையான தும்சாக் கியாயனைத் திற்கும்நிற் கின்றமூன்றும்
நிலைவிழி ஈசன், நிகரபூ ரத்தால் நிறையமுல்லை
மலரின் பகையாமுன் மந்தந கைநலம் மண்ணுகவே!

மலைராசன்-இமவான்; சாகியாய்-சாட்சியாய்; மூன்றும் - சந்திர, சூரிய, அக்னி; நிகர-குவியல்; பூரம்-கற்பூரம்; நிறைய-மகிழ; மண்ணுக-செய்க!

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

மலைராசன் பெண்ணே! மகேசன் மனையே! காமாட்சி! ஆண்கட்கு இலையானதும் சாக்கியாய் அனைத்திற்கும் நிற்கின்ற மூன்றும் நிலைவிழி ஈசன், நிகர பூரத்தால் நிறைய, முல்லை மலரின் பகையாம் உன் மந்த நகை, நலம் மண்ணுகவே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...