செப்டம்பர் 26, 2016

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம் - 7

नयन्ती संकोचं सरसिजरुचं दिक्परिसरे
सृजन्ती लौहित्यं नखकिरणचन्द्रार्धखचिता
कवीन्द्राणां हृत्कैरवविकसनोद्योगजननी
स्फुरन्ती कामाक्ष्याः चरणरुचिसन्ध्या विजयते ७॥

நயந்தீ ஸம்கோசம் ஸரஸிஜருசம் தி³க்பரிஸரே
ஸ்ருʼஜந்தீ லௌஹித்யம் நக² கிரண சந்த்³ரார்த²சிதா
கவீந்த்³ராணாம் ஹ்ருʼத் கைரவ விகஸனோத்³யோக³ ஜனனீ
ஸ்பு²ரந்தீ காமாக்ஷ்யா: சரணருசிஸந்த்யா விஜயதே 7

தாமரை மலர்களின் ஒளியை மங்கச்செய்வதும், அனத்து திசைகளிலும் செம்மை நிறமாய் நிரவுவதும், அரைச் சந்திரனைப்போல ஒளிர் நகங்கள் பதிக்கப்பட்டதும், சிறந்த கவிகளின் இதயத் வெண்டாமரையை மலரச் செய்ய முனைப்புள்ளதும், ஒளி மிக்கத்துமான காமாக்ஷியின் திருவடியாகிய மாலை நேரம் விளங்குகிறது!

தாமரைப் பூவொளி தாழும்; திசையெலாம் தாம்சிவக்கும்;
சோமன ரைப்போல் சொலிக்கும் நகங்கள் சுடர்ந்தமையும்;
தாமரை உள்ளமும் தாம்பூக் குமுயர்ந் தகவிகட்கு;
காமாட்சீ பாதத்தின் காந்திமா லைநேர காட்சியிலே


சோமனரை-அரைச்சந்திரன்; தாழும்-குறையும்; அமைதல்-பதிதல்;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...