ஜூன் 28, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 18

कुण्ठीकरोतु विपदं मम कुञ्चितभ्रू-
चापाञ्चितः श्रितविदेहभवानुरागः
रक्षोपकारमनिशं जनयञ्जगत्यां
कामाक्षि राम इव ते करुणाकटाक्षः 18

குண்டீ கரோது விபதம் மம குஞ்சித ப்ரூ-
சாபாஞ்சித: ஶ்ரிதவிதேஹ பவானுராக: |
ரக்ஷோபகாரமனிம் ஜனயஞ்ஜகத்யாம்
காமாக்ஷி ராம இவ தே கருணாகடாக்ஷ: ||18||

ஹே! காமாக்ஷி! உன்னுடைய கருணைமிக்க கடைக்கண்ணானது, ஸ்ரீராமன் கையிலுள்ளதுபோல், வளைந்த புருவங்களாகிற வில்லையுடையதாயும், தன்னை அண்டியுள்ள மன்மதனிடத்தில் (வைதேகி) எப்போதும் அன்பு பூண்டும், எப்போதும், உலகை இரட்சிப்பது/இராக்கதர்களுக்கு தண்டிப்பது என்பவற்றை செய்வதாயும் விளங்குகிறது. அவை எனக்கு விளையும் இடர்களை நீக்கட்டும். வைதேகியாம் சீதையையும் - உடலிழந்த மன்மதனையும் (விதேஹபவா என்ற சொல்லால்), உலகை இரட்சிப்பது/அவுணரை தண்டிப்பது (ரக்ஷோபகாரம்) என்று, இப்பாடலில் சிலேடையாகச் சொல்லியிருக்கும் நயம் அழகானது! அவுணரைத் தண்டிப்பதே உலகை இரட்சிக்கத்தான்!

கருணை குழையுன் கடைவிழி காகுத்தன் கையுளபோல்
புருவம் குழைந்து புனைந்த தனுவேந்தும்; பூணுமன்பை,
விரும்பியே அண்டும் விதேகிக்கு; வீழ்த்துமாம் வீணவுணர்;
ஒருக்க அவையான் உறுமிடர் போக்கட்டும் ஓடிடவே


குழை - நெகிழ், வளை; தனு-வில்; விதேகி- வைதேகி; தேகம் விட்டவன் (மன்மதன்); ஒருக்க-எப்போதும்; காகுத்தன் - இராமன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...