ஜூன் 27, 2016

மூகபஞ்சசதீ - கடாக்ஷ சதகம் - 17

कामद्रुहो हृदययन्त्रणजागरूका
कामाक्षि चञ्चलदृगञ्चलमेखला ते
आश्चर्यमम्ब भजतां झटिति स्वकीय-
सम्पर्क एव विधुनोति समस्तबन्धान् 17

காமத்ருஹோ ஹ்ருதயயன்த்ரணஜாகரூகா
காமாக்ஷி சஞ்சலத்ருகஞ்சலமேகலா தே |
ஶ்சர்யமம்ப பஜதாம் ஜடிதி ஸ்வகீய-
ஸம்பர்க ஏவ விதுனோதி ஸமஸ்தபன்தான் ||17||

காமாக்ஷி தாயே! காமனின் எதிரியாம் சிவனின் உள்ளத்தை கட்டுவதில் விழிப்புடன் இருக்கும் நூற்கயிறாம் உனது அலையும் கடைகண் பார்வையே, உன்னை வணங்குபவர்களின் வாழ்க்கைப் பிடிப்புகளாம் கட்டுக்களை விரைவாக நீக்கிவிடுகிறதே! இது விந்தையன்றோ? [கடந்த சில ஸ்லோகங்களில், காமாக்ஷியின் பார்வையை, அலைகின்ற கண்களாகக் மூககவிக் குறிப்பிடுவது ஏனென்று சிந்தித்தால், அன்னையின் அருட்பார்வை அனைத்துயிர்களைப் பார்த்துக்கொள்ளவேண்டிய பார்வையென்பதனால் என்று புரியும்]

காமாட்சீ அன்னையே காமனின் வைரியாம் கண்ணுதலோன்
காமாரி உள்ளத்தைக் கட்டும் கயிராகக் கண்விழிப்பாய்
தாமலை யுன்றன் தயைக்கண் கடைக்குத் தலைவணங்க
பூமாயக் கட்டெலாம் போம்விந்தை என்னே! புகலுவனே


பூமாய - பூவுலகின் மாய

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...