பிப்ரவரி 28, 2015

குறளின் குரல் - 1045

28th Feb 2015

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.
                    (குறள் 1039: உழவு அதிகாரம்)

செல்லான் - தன்னுடைய நிலத்தில் அன்றாடம் பாடுபடச் செல்லாது இருப்பான்
கிழவன் இருப்பின் - நிலக்கிழானாகிய விவசாயி
நிலம் புலந்து -  நிலமானது வெறுத்து பயிரிடுதற்கு ஏற்பிலாது தரிசாகி விடும்
இல்லாளின் - எப்படி எனில், மனைவியின் விருப்பிற்கு இயலாத, இணங்காத கணவனை எவ்வாறு
ஊடி விடும் - மனைவி கோபங்கொண்டு வெறுத்து விடுவாளோ அது போல.
தன்னை கவனிக்காத கணவனிடம் எவ்வாறு மனைவி கோபங்கொண்டு விலகியிருப்பாளோ, அதே போன்றே, தன்னை அன்றாட கவனித்து, பாடுபடாத நிலக்கிழானாகிய உழவனிடம் நிலம் வெறுப்புற்று, அவனுக்கு உதவாது தரிசாகி விடும், என்பது இக்குறளின் கருத்து.

அதாவது பாடுபடாத நிலம் மும்மாரி பொழிந்தாலும், முப்போகம் விளையக்கூடியதாயிருந்தாலும், மெல்ல அருகி இறுதியில் பாழாகி தரிசு நிலம் போன்றே ஆகிவிடும்.

Transliteration:

chellAn kizhavan iruppin nilampulandu
illALin Udi vidUm

chellAn – does not go and work in his land
kizhavan iruppin – if the farmer remains so
nilam pulandu – His land will detest (his lethargy) and will become barren
illALin – like a wife (who is not attended to)
Udi vidUm – will get upset and detest too.

Like how a wife who is not attended to by her husband will detest his ways and finally him also, a land which is not attended to by its farmer through his regular work, will slowly become useless and barren, metaphorically equal to the land detesting the land lord.

Even if the land was otherwise very fertile to give three cycles of bounty earlier, because of being unattended by its owner, the farmer, it would slowly turn barren, shrinking in its output.

“Like how a wife detests and turns away from the unattentive husband,
if a farmer does attend to it regularly barren in bounty turns the land”


இன்றெனது குறள்:

நிலமே பிணங்கும் மனைபோல் புழங்கா
திலங்க விளைச்சலரு கும்

nilamE piNangum manaipOl puzhngA
dilanga viLaichchalaru gum

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...